Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

18 February 2014

குளிப்பாட்டி கபனிடுதல் செயல் முறை விளக்கம் .......

மனிதன் உலகில் பிறந்தவுடன் அவனுக்கு மரணம் நிச்சயம் என்பது இறைவனால் வகுக்கப்பட்ட நியதி. ஜனாஸா என்றவுடனேயே நம் அனைவருக்கும் மனசுக்குள் ஒரு பதட்டமும் பயமும் வந்து விடுகின்றது. ஜனாஸா குளிப்பாட்டுவதற்கென்றே ஒருவரை கூலி கொடுத்து பல ஊர்களில் வைத்து இருக்கின்றார்கள். ஒரு இஸ்லாமிய சகோதரி நமக்கு முன்னால் சென்று விட்டார் நாம் பிறகு ஒரு நாள் செல்ல இருக்கின்றோம் என்பதை மறந்து விட்டு இருக்கின்றோம். மய்யித் என்ற அந்த புனித உடலை நாம் ஒரு பயந்த சூழ்நிலையில் அணுகிக் கொண்டு இருக்கின்றோம். ஆனால் ஒவ்வொரு முஸ்லிமும் இந்த இபாதத்தான காரியத்தை கூலிக்காக அல்லாது இறைவனின் திருப்பொருத்தத்தை பெறுவதற்காக செய்ய வேண்டும். இது நம் அனைவர் மீதும் விதிக்கப்பட்டுள்ள பர்ளு கிஃபாயா என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஒருவர் மரணித்து விட்டால் அந்த மைய்யத்திற்கு செய்யப்பட வேண்டிய கடமைகளான குளிப்பாட்டுதல், கபனிடல், போன்ற கடமைகள் நம்மில் பலர் புரிந்து செய்ய முற்படுவதில்லை. இந்த செயல் முறை நிகழ்ச்சியை உங்களுக்கு காட்டுவதின் நோக்கம், நம் வீட்டில் யாரேனும் மவுத்தாகி விட்டால் அந்த மவுத்துடைய வாரிசுதார்கள் தான் குளிப்பாட்டுவது சுன்னத்தானது.

'ஒரு ஜனாஸாவை குளிப்பாட்டுவதில் பங்கு கொள்வோருக்கு அல்லாஹ்விடத்தில் மகத்தான கூலியுண்டு அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு அன்று பிறந்த பாலகனைப் போல ஆகி விடுகிறார்கள். அதனை அவர்கள் அல்லாஹ்வுக்காக மேற்கொள்வதோடு அந்த ஜனாஸாவில் அவர்கள் காணும் குறைகளை வெளிப்படுத்தாமலும் இருக்க வேண்டும்' ( ஆதாரம் : ஹாகிம் , பைஹகி )

கூலிக்கு ஆள் வைத்து செய்வது கூடாது. என்னுடைய குடும்பத்தில் யாரேனும் மவுத்தாகி விட்டால் நான் நின்று குளிப்பாட்ட வேண்டும். தெரியாது என்று சொல்லக் கூடாது அவசியம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்படியே செயல் முறை தெரியாதவர்கள் கூட விபரம் தெரிந்த வேறு ஆள் வைத்து குளிப்பாட்டினாலும் வாரிசுதார்களாகிய அவர்கள் உடன் இருந்து குளிப்பாட்ட தண்ணீர் அள்ளி கொடுப்பது போன்ற ஒத்தாசைகளை செய்ய வேண்டும். இந்த செயல் முறைகளை பார்த்து நாம் அனைவரும் குளிப்பாட்டுவது எப்படி என்று கற்றுக் கொண்டு நம் குடும்பத்தில் யாராவது மவுத்தாகி விட்டால், நாம் பயப்படாமல் முன் வந்து குளிப்பாட்ட வேண்டும் என்பதற்காகவே இந்த செயல் முறையை உங்கள் முன் செய்து காட்டுகின்றோம்.

அதனால் அந்த செயல் பாட்டை நம் சகோதரிகள் அனைவரும் தெரிந்து வைத்து இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த செயல் முறை விளக்க நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கின்றோம்.

இறுதி நிமிடங்களில் செய்ய வேண்டியவை
ஒருவர் மரண படுக்கையில் அதாவது சக்ராத் நிலையில் இருக்கும் போது நாம் என்ன செய்ய வேண்டும்? கலிமா சொல்லிக் கொடுக்கலாம். கலிமா சொல்ல சொல்லி அவரை நாம் வற்புறுத்தக் கூடாது. ஒரு வேளை அவர் மாட்டேன் என்று சொல்லி விட்டால் அது குப்ராகி விடும். ஆகவே நாம் அவர் காதில் விழும் படியாக கலிமா ஓதலாம். யாஸின் சூரா ஓதலாம். அபூதாவூதில் வந்துள்ள ஒரு ஹதீஸில் நபி(ஸல்)சொல்லி இருக்கிறார். 'மரண படுக்கையில் இருக்கும் போது யாஸின் ஓதினால் அவர் தாகமில்லாமல் மௌத்தாகுவார், தாகமில்லாத நிலையில் கபரில் வைக்க படுவார், தாகமில்லாத நிலையில் எழுப்ப படுவார்'.என்று. ஆகவே அந்த நேரத்தில் யாஸின் சூரா ஓதுவது விரும்பதக்கது. வடக்கே தலையை வைத்து தெற்கே கால் நீட்டி படுக்க வைத்து முகத்தை கிப்லா பக்கமாக திருப்பி படுக்க வைக்க வேண்டும்.அல்லது இன்னொரு முறை. கிப்லா பக்கம் கால் வைத்து கிழக்கே தலை வைத்து தலை யை சற்று உயர்த்தி வைத்து படுக்க வைப்பது இன்னொரு முறை யாகும். இரண்டில் எந்த முறையிலும் செய்யலாம்.

மௌத்தான உடனேயே கண்ணை மூட வேண்டும். கண்ணை மூடும் போது பிஸ்மில்லாஹி, வ அலா மில்லத்தி ரஸூலில்லாஹி என்று ஓத வேண்டும். (இதற்கு அர்த்தம்: அல்லாஹ்வின் பெயராலும் ரசூல் (ஸல்) அவர்களின் மார்க்கத்தின் மீதும் இவருடைய கண்ணை மூடுகின்றேன்) அதை தொடர்ந்து அல்லாஹூம்ம யஸ்ஸிர் அலைஹி amrahu வ ஸஹ்ஹில் அலைஹி மா பஹ்தஹூ வ ஆஸ்பிலஹு பி லிக்காயிக்க வஜ்ஹல் மா கரஜ இலைஹி வஜ்ர மிம்மா கரஜ மின் ஹூ (இதன் அர்த்தம் யா அல்லாஹ் இவருடைய காரியத்தை எளிதாக்கி வைத்து விடு, இதற்கு பின்னால் உள்ள விஷங்களையும் அவருக்கு லேசாக்கி வைப்பாயாக உன்னுடைய சந்திப்பின் பாக்கியத்தை வழங்கிடுவாயாக, இவர் புறப்படும் இடத்தை விட இனி சேரும் இடத்தை சிறந்ததாக ஆக்கி வைப்பாயாக)

அடையாளங்கள்
உயிர் பிரிந்து விட்டதை அறிய சில அடையாளங்கள் உள்ளன. 1.மேல் தாடையுடன் ஒட்டி இருக்கும் கீழ் தாடை எலும்புமூட்டு தொய்ந்து வாய் பிளந்து விடுவது ஒரு அடையாளமாகும். 2.இரன்டாவதாக இறந்தவரின் கண் திறந்து இருக்கும். தன்னுடைய உயிர் பிரிந்து செல்வதை பார்ப்பதால் கண் திறந்து சற்று மேல் நோக்கியவாறு இருக்கும் இது இரண்டாவது அடையாளமாகும். இதனால் தான் நபி(ஸல்) அவர்கள் கண்ணை மூடிவிடும் படி சொல்லி இருக்கிறார்கள். 3.மய்யித்தின் கை தூக்கி நிறுத்தினால் துவண்டு விழுந்து விடுவது மூன்றாவது அடையாளமாகும். 4.நாலாவதாக கரன்டை கால் மூட்டு துவண்டு பாதம் நேராக நிற்காமல் துவண்டு விடுவதாகும். நாடி துடிப்பு இல்லாமல் போவது, கண்ணில் டார்ச்சு அடித்தால் கண்விழி பாப்பா சுருங்காமல் அப்படியே இருப்பது போன்றவையும் ஒருவர் இறந்து விட்டதற்கு அடையாளமாக இருக்கும்.

அடி கழுகுதல்
ஒருவர் மௌத்தான உடனேயே குளிப்பாட்டி கஃபனிட்டு அடக்கம் செய்து விடவேண்டும். ஆனால் இறந்தவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் யாரேனும் தூரமாக இருந்து அவர்கள் வந்து பார்க்கும் வரை வைத்து இருந்து குளிப்பாட்ட வேண்டிய சூழ்நிலை இருந்தால் மய்யித்துக்கு அடிக் கழுகி வைக்கின்றோம். அடி கழுகுதல் என்பது நாம் மய்யித்தை தாமத படுத்தி அடக்கம் செய்வதால் நாமாகவே ஏற்படுத்திக் கொண்டதாகும். மவுத்தான உடனே குளிப்பாட்டி அடக்கம் செய்யதான் மார்க்கத்தில் சொல்லப் பட்டுள்ளதால் அடி கழுகுதல் என்பது கிதாபுகளில் சொல்லப் படவில்லை. மௌத்தான உடனேயே குளிப்பாட்டுவதை பற்றிதான் குறிப்பிடபட்டுள்ளது. அடிக் கழுகுதல் அல்லது கசபு மாத்துதல் என்பதை பார்ப்போம். ஆண் பெண் அனைவருக்கும் உயிர் பிரியும் போது அதன் முன் பின் துவாரங்களிலிருந்து கழிவுகள் வெளியாகும். அத்தகைய நஜீஸ்களை கழுகுவதைதான் கசபு மாத்துதல் அல்லது அடி கழுகுதல் என்று நாம் சொல்கின்றோம். மய்யித்து உடுத்தி இருந்த உடையை கழட்டி விட்டு; மறைவிடங்களில் முன் பின் துவாரங்களில் வெளியாகி இருக்கும் நஜீஸ்களை நம் கய்யில் ஒரு உறை போன்று துணியை சுற்றிக் கொண்டு தண்ணீர் ஊற்றி துடைத்து கழுக வேண்டும். மய்யித்தின் வயிற்றை அழுத்தி வயித்திலுள்ள நஜீஸ்களை வெளியாக்கி விட்டு மீண்டும் மறைவிடங்களில் தண்ணீர் ஊற்றி கழுக வேண்டும். மய்யித்தின் கழுத்தில் கைய்யை வைத்து தூக்கி மய்யித்தை உட்கார வைப்பது போல சற்று தூக்கி வைத்து வயித்தை அழுத்த வேன்டும் இவ்வாறு செய்வதால் வயித்திலுள்ள நஜீஸ்கள் எல்லாம் வெளியாகி விடும். பிறகு தண்ணீர் உற்றி மறைவிடங்களை கழுக வேண்டும். இடுப்புக்கு கீழே நன்கு கழுகிய பிறகு வேறு உடை உடுத்தி விட வேண்டும். கழுகும் போதும் உடை மாற்றும போதும் மறைவிடங்கள் வெளியாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு துணியில் கல் உப்பை மூட்டையாக கட்டி வயித்தின் மீது வைக்க வேண்டும். இது வயிறு உப்பாமல் இருக்கவும் மய்யித் உடல் கெடாமல் இருக்கவும் செய்கிறோம்.

குளிப்பாட்டுவதற்கு முன்பு மய்யித்துக்கு அருகில் உட்கார்ந்து குர் ஆன் ஓதுவது மக்ரூஹ் சற்று தள்ளி அமர்ந்து ஓதலாம். மௌத்து ஏற்பட்டுள்ள வீட்டில் கேட்கப் படும் துஆவுக்கு மலக்கு மார்கள் ஆமின் சொல்கிறார்கள். சாபமிடுவது போன்ற வார்த்தைகளை சொல்லக் கூடாது. ஒப்பாரி வைத்து அழக் கூடாது. உனக்கு இரக்கம் இல்லையா? வாழ வேண்டிய வயசில் இவரை கூப்பிடுவதற்கு பதிலாக என் உயிரை வாங்கி இருக்கலாமே என்றெல்லாம் சொல்லி அழக் கூடாது நல்ல வார்த்தைகளை சொல்லி துஆ கேட்க வேண்டும். இறந்தவருக்கு மன்னிப்பை வழங்க வேண்டும்;; சொர்க்கத்தை வழங்க வேண்டும் என்பது போன்று துஆ செய்யலாம்.

'........உயிர் இழப்பைக் கொண்டு நாம் சோதனை செய்வோம். ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்( அதாவது இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்) என்று கூறுவார்கள'(2:156)

பொருள்கள்
முதலில் குளிப்பாட்டுவதற்கு தேவையான பொருள்கள் என்ன என்று பார்ப்போம்.இங்கே உங்கள் முன்னால் மேஜை மீது வைக்கப் பட்டிருக்கும் பொருள்கள் மய்யித்தை குளிப்பாட்ட உபயோகப்படுத்தப்படும் பொருளாகும். மய்யித்தை குளிப் பாட்டுபவர்கள் இங்கே காட்டப் பட்டது போன்ற ஒரு கைஉறை போட்டுக்கொள்ள வேண்டும். அது எந்த துணியாலும் தைக்கப் பட்டிருந்தாலும் பரவா இல்லை. ஒருவர் இறந்து விட்டால் அவருடைய உடலின் தோல் மிகவும் மென்மையாகி விடுகின்றது. ஆகவே அதை சுத்தப் படுத்த நார், பிரஸ் (ளுர்ழுறு) போன்ற சொரசொரப்பான பொருள்களை பயன்படுத்தக் கூடாது. அத்தகைய பொருள்கள் ஏதேனும் காயங்களை ஏற்படுத்தி விடக் கூடும். மய்யித்தின் உடலுக்கு அத்தகைய ஊறு ஏற்படாமல் குளிப்பாட்டுவது முக்கியம். அழுக்கை தேய்க்கும் போது மிகவும் மெதுவாக நளினமாக தேய்க்க வேண்டும்.
குளிப்பாட்ட பயன்படுத்தும் தண்ணீரில் இலந்தை மர இலையைபோட்டு அந்த தண்ணீரை கொண்டு குளிப்பாட்ட வேண்டும். அந்த காலத்தில் நாம் தற்காலத்தில் பயன்படுத்தும் சோப் போன்ற பொருள்கள் இல்லை. ஆகவே அவர்கள் இலந்தை இலை போட்ட தண்ணீரைக் கொண்டுதான் சுத்தப் படுத்தினார்கள். இது இலந்தை இலை. (Demo) இது இலந்தை இலையை பொடியாக்கிய பவுடர். இதை தண்ணீரில் கலந்தும் குளீப்பாட்டலாம்.
கடைசியாக ஊற்றும் தண்ணீரில் கற்பூரத்தை கலந்து கழுகினால் நல்லது.(ளுர்ழுறு)கற்பூரத்தை உபயோகித்தால் உடலை கிருமிகள் சீக்கிரம் அனுகாது. உடல் கெட்டுப் போகாது.

அடுத்து இது மய்யித்துக்கு பயன்படுத்தும் அத்தர், மற்றும் பன்னீர் எனப்படும் ரோஸ் வாட்டர். (Show)
இது மய்யித்துக்கு உடுத்த பயன் படுத்தும் கபன் துணி(Show). கபன் துணி வெண்மை நிறத்தில் இருக்க வேண்டும். இது உடல் தெரியும் அளவுக்கு சன்னமாக இருக்க கூடாது.காடா அல்லது மேட்டூர் மல். 56 இஞ்ச் பன்னா அகலம் உள்ள மேட்டூர் மல் வாங்கினால் கபன் துணி உடலை சுற்றி கட்ட சரியாக இருக்கும் அது கிடைக்க விட்டல் 36 இஞ்ச் உள்ள துணியை வாங்கி நாம் இரண்டை ஒன்று சேர்த்து மெஷினில் தைத்து மூட்டிக் கொள்ளலாம். (ளுர்ழுறு) பெண்களுக்கு மொத்தம் 5 வித துணிகளைக் கொண்டு கபனிட பட வேண்டும் என்பது பெரும்பாலான புகஹாக்களின் கருத்து. 1.இடுப்புக்கு கீழ் கட்டும் ஆடை.2.கமீஸ் 3.மக்கன்னா4ரூ5. இரண்டு கபன் துணிகள். காடா மேட்டூர் மல், பாப்புலின், கேம்பிரிக் போன்று எந்த துணியாகவும் இருக்கலாம். ஆனால் மிகவும் விலை அதிகமானதாக இருக்க கூடாது.

சகோதரிகளே இதுவரை குளிப்பாட்ட பயன்படுத்திய பொருள்களை தங்களுக்கு காண்பித்தோம். அடுத்து ஒரு சகோதரியை மய்யித்து மாதிரி படுக்க வைத்து எப்படி குளிப்பாட்டுவது என்ற செயல் முறையை காட்டுகின்றோம்.

மரணமானவர், தன்னை இன்ன நபர்தான் குளிப்பாட்ட வேண்டும் என்று வசிய்யத் செய்திருந்தால் குறித்த அந்நபர் குளிப்பாட்டுவதுதான் சிறந்தது. அவ்வாறு வசிய்யத் செய்திராத பட்சத்தில் ஜனாஸாவின் தாய் அல்லது தாயின் தாய் அல்லது மகள், மகளின் மகள் போன்ற நெருங்கிய உறவினர்கள் குளிப்பாட்டுவதே சிறந்தது.குளிப்பாட்டுபவர்கள் அது பற்றி நன்கு அறிந்தவர்களாகவும் நன்நடத்தை உடையவர்களாகவும் இருப்பது சாலச்சிறந்தது.

ஆண் ஜனாஸா ஆண்களாலும் பெண் ஜனாஸா பெண்களாலும் குளிப்பாட்டப்படல் வேண்டும் மனைவி இறந்து விட்டால் கணவன் மனைவியை குளிப்பாட்டக் கூடாது. வேறு பெண்கள் யாரும் இல்லை என்னும் சூழ்நிலையில் கணவன் மனைவியின் மய்யித்துக்கு தயம்மும் மட்டும் செய்து வைக்கலாம். கணவனை மனைவி வேறு யாரும் இல்லை என்னும் சூழ்நிலையில்; குளிப்பாட்டலாம்.

ஜனாஸாவின் தாய் அல்லது தாயின் தாய் அல்லது மகள், மகளின் மகள் போன்ற நெருங்கிய உறவினர்கள் குளிப்பாட்டும் வழிமுறைகளை தெரியாதவராக இருந்தால் குளிப்பாட்ட தெரிந்தவர் ஒருவரும் அவருக்கு உதவியாளர்களாக ஜனாஸாவின் குடும்பத்தவர்களில் இருவரும் இருப்பது விரும்பத்தக்கது.

ஏழு வயதிலும் குறைவான சிறுவர்களின் ஜனாஸா இரு தரப்பினராலும் குளிப்பாட்டப்படலாம்.
குளிப்பாட்டுபவர் கை, கால், மூக்கு, வாய் போன்றவற்றிற்கு பாதுகாப்பு உறை அணிந்து கொள்வது நல்லது.
ஜனாஸாவை குளிப்பாட்டுகின்ற போது ஒரு துண்டை கையில் சுற்றிக் கொள்ள வேண்டும்.
முதலில் கழுத்து பகுதியிலிருந்து கால் வரை மறைத்து உடல் உறுப்புகள் தெரியாத அளவுக்கு கனமான துணியைக் கொண்டு மூடி விட வேன்டும் கனமான துணியாக இருக்க வேண்டும். அதன் பிறகு மய்யித்தின் மூட்டுகளாகிய மணிக்கட்டு, முழங்கை, முழங்கால்இ இடுப்புமுட்டு போன்ற மூட்டுக்களை லேசாகா வளைத்து, வளைத்து அசைத்து விட வேண்டும்.(னுநுஆழு) குறிப்பாக மரணித்து பல மணி நேரத்துக்கு பிறகுதான் நாம் பார்க்கிறோம் அல்லது மறு நாள் தான் தெரிய வருகிறது என்றால் அத்தகைய மய்யித்துகளின்

மூட்டுகள் விறைத்து விட்டிருக்கும். அத்தகைய மய்யித்துக்கு இப்படி செய்வது அவசியம்.(னுநுஆழு) கழுத்து பகுதியையும் லேசாக தூக்கி அசைத்து விட வேண்டும்.(னநஅழ) மய்யித் ஐஸ் பெட்டியில் வைக்கப் பட்டிருந்தால் குளிப்பாட்டுவதற்கு முக்கால் மணி நேரத்துக்கு முன்பே அதை ஆப் செய்து விட்டு வெளியில் எடுத்து வைத்து விட வேண்டும். ஐஸ் பெட்டியில் விறைத்து போய் இருக்கும். சற்று வெளியில் வைத்தால் தான் மிருதுவாகும்.

மய்யித்தின் வயிற்றிலிருந்து ஏதேனும் அசுத்தங்கள் வெளி பட்டு சந்தாக்கில் தூக்கி செல்லும் போதோ அல்லது மஸ்ஜிதில் தொழுகை நடத்தும் போதோ நஜீஸ் வெளி பட்டு விடக் கூடாது. ஆகவே அவற்றை குளிப்பாட்டும் போதே வெளியாக்கி விட வேண்டும். அதை எப்படி வெளியாக்குவது என்பதை நான் உங்களுக்கு காண்பிக்கின்றேன்.முதலில் இரண்டு கால்களையும் இவ்வாறு அகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி வயிற்று பகுதியை அழுத்துவதன் மூலம் வெளியாகி விடும். ஆனாலும் மைய்யித்தின் கழுத்தில் கையை கொடுத்து இப்படி தூக்கி உட்கார வைத்து வயிற்றை அழுத்தினால் முன் பின் துவாரங்கள் வழியாக அசுத்தங்கள் வெளிபட்டு விடும்.நம் கையில் ஒரு வெள்ளை துணியை சுற்றிக் கொண்டு ஒருவர் தண்ணீர் ஊற்றிக் கொண்டே இருக்கும் போது மைய்யித்தின் உடலில் இருந்து வெளிப்பட்ட அசுத்தங்களை துடைத்து எடுக்க வெண்டும். பிறகு அந்த துணியை கழட்டி கீழே போட்டு விட்டு வேறொரு துணியை கையில் சுற்றிக் கொண்டு மீன்டும் அதே போல சுத்தம் செய்ய வேண்டும்.இது போல அந்த இடம் சுத்தம் ஆகும் வரை துணியைமாத்தி சுத்தம் செய்ய வேண்டும். மேலும் ஒவ்வொரு முறையும் வயிற்றை அழுத்தி தடவி விட்டு சுத்தம் செய்ய வேண்டும்.இவ்வாறு ஒரு முறை இரு முறை அல்ல. சுத்தமாகும் வரை பல முறை சுத்தம் செய்ய வேண்டும். அசுத்தமான நிலையில் நாம் மைய்யித்தை கபனிடக் கூடாது. வெள்ளை துணியை பயன் படுத்துவதால் அசுத்தம் இருந்தால்நன்கு தெரியும். மேலும் கையில் உறையும் அதற்கு மேல் துணியும் சுத்தி கொள்வதால் மைய்யித்தின் உடலில் நம்முடைய நகம் பட்டு காயம் ஏற்படாது.நன்கு சுத்தம் ஆன பிறகு விரித்து வைத்து இருந்த இரண்டு கால்களையும் சேர்த்து வைத்து விட வேண்டும். அத்தோடு பல், மூக்கு போன்றவற்றை சுத்தம் செய்வதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
முன், பின் துவாரங்களைக் கழுவி சுத்தம் செய்த பின் ஒழுவின் உறுப்புகளை முதலில் கழுவி ஜனாஸாவின் வலது பக்கங்களை முற்படுத்தி குளிப்பாட்டுதலை ஆரம்பிக்க வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் தன் மகள் ஜைனப்(ரலி) மரணமடைந்த போது குளிப்பாட்டிய பெண்களிடம் மூன்று முறை கழுக சொன்னார்கள். தேவை ஏற்பட்டால் அதற்கு அதிகமாக ஒற்றைப் படை எண்ணிக்கையில் ஐந்து,அல்லது ஏழு முறை கழுக சொன்னார்கள். மேலும் உழூ செய்ய வலது பக்கம் ஆரம்பிப்பது போல ஆரம்பிக்க சொன்னார்கள்.
முதலில் வலது முன் பக்கம். பிறகு வலது பின் பக்கம்.(யுஉவழைn) பிறகு இடது முன் பக்கம் பிறகு இடது பின் பக்கம் என்று இந்த வரிசை கிரமமாக சுத்தம் செய்ய வேண்டும். தண்ணீர் ஊற்றும் போது வாய் வழியாகவோ அல்லது மூக்கு வழியாகவோ தண்ணீர் உள்ளே செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் உள்ளே சென்ற அந்த தண்ணீர் மீண்டும் வயிற்றிலுள்ள அசுத்தங்களுடன் சேர்ந்து வெளியாக வாய்ப்பிருக்கிறது. ஆகவே வாய் மூக்கு போன்ற துவாரங்களில் கை வைத்தவாறு தண்ணீர் ஊற்ற வேண்டும். மய்யித்தின் உடலை இரண்டாக பிரித்து வலது பாதியை முதலில் சுத்தப் படுத்த வேண்டும். வலது மேல் பாகத்தை கழுகிய பிறகு, இடது காலின் மேல் வலது காலை எடுத்து போட்டு பின்னிய மாதிரி வைத்து விட்டு, வலது தோள் புஜத்தை பிடித்து மிகவும் மிருதுவாக உடலை திருப்பி ஒருக்களித்த வாறு இருக்கும் படி ஒருவர் பிடித்துக் கொண்டு மற்றவர் அதன் வலது முதுகு பக்கம் கழுக வேண்டும். கழுகிய பின் பழைய நிலைக்கு படுக்க வைக்க வேண்டும். மய்யித்தை திருப்பும் போதும் பழைய நிலைக்கு கொண்டு வரும் போதும் மிகவும் கவனமாகவும் மிருதுவாகவும் செய்ய வேண்டும். மய்யித்துக்கு கஷ்டம் கொடுக்கக் கூட்டது.

சோப்பை அப்படியே கட்டியாக உடலில் வைத்து தேய்க்க கூடாது. சிறு சிறு சீவலாக கத்தியால் சீவி அதை ஒரு பாத்திரத்தில் முன்கூட்டியே ஊற வைத்து அந்த சோப்பு தண்ணீரை தான் நுரையுடன் எடுத்து ஒரு ஸ்பாஞ்சின் உதவியால் உடலில் மிகவும் மிருதுவாக போட வேண்டும். காலை அகட்டி வைத்துக் கொண்டு கைய்யில் துணியை சுத்திக் கொண்டு மீண்டும் மறைவிடங்களில் ஏதேனும் அசுத்தங்கள் வெளிப்பட்டு இருக்கிறதா என்று பார்த்து வெளிப்பட்டிருந்தால் முன் கூறியது போல் கழுக வேண்டும்.
முதலில் சோப்பைக் கொண்டு கழுகிய பிறகு இலந்தை இலை அல்லது இலையின் தூள் கலந்த தண்ணீரைக் கொண்டு கழுக வேண்டும். இந்த முறையும் மைய்யித்தின் தலையில் கையை வைத்து சற்று உயர்த்தி(டுகைவ வாந hநயன) வயிற்றை அழுத்தி ஒரு துணியை கையில் சுத்திக் கொண்டு மறைவிடங்களில் ஏதேனும் அசுத்தங்கள் பட்டிருக்கின்றதா என்று பார்த்து விட்டு,(ளூழற hழற வழ உடநயn டில சழடடiபெ ய உடழவா ழn லழரச pயடஅ) துடைத்து கழுக வெண்டும்.
மூன்றாவதாக கற்பூரத்தை உடைத்து தூளாக்கி அதை கலந்த தண்ணிரைக் கொண்டு கழுக வேண்டும் கழுகிய பிறகு ஓரிரு கற்பூர துண்டுகள் உடலில் ஒட்டி இருந்தால் அதை அப்புறபடுத்த வேண்டாம். ஏனென்றால் அது உடலை கெடாமல் பாதுகாக்கும் தன்மை உடையது.
இப்பொழுது குளிப்பாட்டுதல் முடிந்து விட்டது. 

கபன்

இனி உடலில் உள்ள ஈரத்தை ஒரு மெல்லிய துணி கொண்டு மெதுவாக ஒத்தி எடுத்து துடைக்க வேண்டும். உடலில் உள்ள ஈரத்தை துடைத்து எடுக்கா விட்டால் கபன் துணி ஈரமாகி விடும்.(ளூழற யஉவழைn hழற வழ றipந ழகக றநவ னசழிள றiவா வாந hநடி ழக ய உடழவா) கபனிடுதல்
முதலில் கபனை கட்டுவதற்காக நீளமான டேப் போல துணியிலிருந்து கத்தரித்து எடுத்த துண்டுகளை குறைந்தது மூன்றினை மேஜையில் போட வேண்டும். தலைக்கு ஒன்று, இடுப்புக்கு ஒன்று, காலுக்கு ஒன்று. தேவை பட்டால் நான்கு அல்லது ஐந்து துண்டுகள் பயன்படுத்தலாம். கபன் பிரிந்து உடல் வெளியே வராமல் இருக்க தான் இந்த கட்டு துணிகள். ஏற்கனவே சொன்னது போல 56 இஞ்ச் பன்னா அகலம் உள்ள மேட்டூர் மல் வாங்கினால் கபன் துணி உடலை சுற்றி கட்ட சரியாக இருக்கும் அது கிடைக்க விட்டல் 36 இஞ்ச் உள்ள துணியை வாங்கி நாம் இரண்டை ஒன்று சேர்த்து மெஷினில் தைத்து மூட்டிக் கொள்ளலாம். -7-
துணியை இரண்டு பக்கமும் இழுத்து கட்ட மய்யித்தின் நீளத்தை விட தலை பக்கம் ஒரு அடி கால் பக்கம் ஒரு அடி மிச்சமாக இருக்கும் படி வெட்டிக் கொள்ள வேண்டும். முதலில் விரித்து வைத்துள்ள டேப்கள் மீது துணியை விரிக்க வேண்டும். அதற்கு மேல் இன்னொரு துணியை விரிக்க வேண்டும். அதற்கு மேல் ஈரம் துடைத்த மய்யித்தை படுக்க வைக்க வேண்டும். ஜிப்பா எனப்படும் தலை புகும் அளவுக்கு ப வடிவத்தில் வெட்டி வைத்த துணியை மய்யித்தின் மீது போட்டுதலையை லேசாக தூக்கி வெட்டப் பட்ட அந்த ஓட்டை பகுதியை நுழைத்துபோட வேண்டும். பிறகு இரண்டு கால் பெரு விரலையும் சின்ன துணி துண்டை கொண்டு சேர்த்து கட்ட வேண்டும். பிறகு முதல் துணியை எடுத்து மய்யித்தை சுற்றி காலை தூக்கி அதன் மேல் வைக்க வேண்டும். இரண்டாவது துணியையும் அதே போல சுத்தி காலை தூக்கி வைத்து சிறிய டேப்களைக் கொண்டு கால் பக்கம்
இழுத்து முடிச்சு போட வேண்டும். இது போல பெண்களுக்கு மொத்தம் 5 துணிகள் கொண்டுகுபனிட வேண்டும்.
சிலர் மைய்யித்தின் கைகளை தக்பீர் கட்டி இருப்பது போல் வைத்து விடுகிறார்கள். இது தவறானது. இதற்கு எந்த வித ஆதாரமும் இல்லை. கைகளை உடலோடு ஒட்டியபடி நீட்டிய படி பக்கவாட்டில் வைத்து விடவேண்டும். மடக்கி வைத்து இருந்தால் சந்தாக்கில் அல்லது குழியில் இறக்கும் போது சிரமமாக இருக்கும்.(னநஅழ)
நெருங்கிய உறவினர்கள் மய்யித்தை தீதார் பார்த்த பிறகு தலை பக்கமும் முடிச்சுப் போட்டு கட்டிவிட வேண்டும். எளிதாக அவிழ்க்கும் படி முடிச்சு போட வேண்டும் அப்போதுதான் கபருஸ்தானில் குழியில் இறக்கிய பிறகு சிரமமில்லாமல் அவிழ்த்து முகத்தை கிப்லா பக்கம் திருப்பி வைக்கலாம்.
சகோதரிகளே நம் குடும்பத்தினரின் மய்யித்தை நாம் தான் குளிப்பாட்ட வேண்டும். கூலிக்கு ஆள் வைக்க கூடாது. அதுதான் மௌத்தாகி விட்ட நம் முன்னோருக்கு நாம் செய்யும் கடமை. பர்ளு கிபாயா வாகும். அதாவது இந்த மஹல்லாவிலுள்ள ஒரு பெண் மௌத்தாகி விட்டால் இந்த கடமை இந்த மஹல்லாவிலுள்ள அனைத்து முஸ்லிம் பெண்களின் மீதும் கடமையாகும். ஆனால் யாரேனும் சிலர் செய்து விட்டால் அனைவர் மீதும் கடமை நீங்கி விடும். யாருமே செய்யா விட்டால் அனைவர் மீதும் பாவமாகும். ஆகவே இங்கே வந்திருக்கும் அனைத்து சகோதரிகளும் இந்த கடமையை செய்ய கற்றுக் கொள்வோமாக.
இதுவரை செய்து காட்டியதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.

Popular Posts

FACEBOOK COMMENTS BOX