“சுதந்திரமாகப் பிறந்த மனிதன் சுதந்திரமாகவே வாழ வேண்டும்” எனும் கருத்தினை மனித சுதந்திரத்தைப் பற்றிக் கருத்து வெளியிட்ட தத்துவஞானியான ‘ஜீன் ஜக் ரூஸோ’ கூறுகிறார்.
மனிதன் தன்னுடைய வாழ்வை ஒழுங்கமைத்துக்கொள்வதற்கு அவனுக்குத்தேவையான அனைத்தும் அடிப்படை உரிமைகளாகும். மனித உரிமையில் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது சிறுவர் உரிமையாகும்.
உலகில் வாழ்கின்ற மக்களில் 1/3 பகுதியினர் சிறுவர்களாக காணப்படுகின்றனர்.
சிறுவர்களுக்கு அன்பு காட்டாதவர்கள் என்னைச் சார்ந்தவர்கள் அல்ல என முஹம்மது நபி (ஸல்) அவர்களும்;, சிறுவர்கள் என்னிடம் வருவதற்கு இடமளியுங்கள் என இயேசுவும், நல்லவைகள் அனைத்தையும் சிறுவர்களுக்கே அளியுங்கள் என லெனினும் கூறிய கருத்துக்கள் சிறுவர் உரிமை சாசனம் வரையப்படாத நாட்களிலேயே அங்கீகரிக்கப்பட்ட உரிமைகளாகும்.
சிறுவர் உரிமை சாசனம்:
ஐ.நா. சபையானது 1948ம் ஆண்டில் மனித உரிமைகள் பிரகடனம் ஒன்றினை வெளியிட்டது. இதில் உயிர் வாழும் உரிமை, கல்வி கற்கும் உரிமை, சுதந்திரமாக தமது கருத்துக்களை வெளியிடும் உரிமை இவ்வாறான பல மனித உரிமைகள் பற்றி பேசப்பட்டது. இதனை அடிப்படையாகவும், மூலாதாரமாகவும் கொண்டுதான் 1959ம் ஆண்டில் சிறுவர்கள் உரிமை பிரகடனப்படுத்தப்பட்டது. இதன் நோக்கத்தினை இரத்தினச் சுருக்கமாக கூறுவோமாயின் ‘மானிட சமூகம் சிறுவர்களுக்குரிய உரிமைகளை வழங்குவது அவர்களின் கடமை’ என்பதாகும்.
இதன்படி சிறுவர்களை தொழில்களில் ஈடுபடுத்துவதும்; அவர்களை வேலைக்கமர்த்துவதும் தடை செய்யப்பட்டது. மேலும், அவர்களையும் இச்சமூகத்தின் ஓர் அங்கமாக மதித்து அவர்களின் கருத்துக்களுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டியது எமது கடமையாகும் என்பது இதன் மூலம் எதிர்பார்க்கப்பட்டது. இதன் பின்னர்; தான் 1979ம் ஆண்டினை உலக சிறுவர் ஆண்டாக பிரகடனம் செய்யப்பட்டது. சிறுவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியளிக்கும் விடயமாக உலக அரங்கில் இது நோக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஐ.நா சிறுவர் உரிமை சமவாயம் 1989ம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சிறுவர் தினம்:
சிறுவர்களை மகிழ்விக்கும் நோக்கில் அவர்களுக்கென்று ஒரு தினமும் வகுக்கப்பட்டு உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றது. அதுதான் சர்வதேச சிறுவர் தினமாகிய அக்டோபர் 1ம் திகதியாகும். 1954ஆம் ஆண்டில் சிறுவர் தினம் சர்வதேச ரீதியாக கொண்டாடப்பட வேண்டியதன் அவசியத்தை ஐ.நா வலியுறுத்தியது. ஐக்கிய நாடுகள் சமவாயத்தின் மூலம் சர்வதேச ரீதியாக சிறுவர்கள் எனப்படுவோரில்; 18 வயதிற்குக் குறைந்த சகலரும் உள்ளடங்குவர்.
சிறுவர்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். அவர்களது கருத்துக்களுக்கு செவிசாய்க்கப்பட வேண்டும் என்ற நோக்கிலேயே சிறுவர் தினம் சர்வதேச ரீதியாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிறுவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதில் சர்வதேச சிறுவர்தினக் கொண்டாட்டங்களின் பங்கினை மறுப்பதற்கில்லை.
சர்வதேச ரீதியில் சிறுவர்களுக்குரிய உரிமைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளவை
பின்வருமாறு அமைகின்றன.
> வாழ்வதற்கும் முன்னேறுவதற்குமான உரிமை
> பிறப்பின்போது பெயரொன்றையும் இன அடையாளத்தையும் பெற்றுக்கொள்ளும் உரிமை
> பெற்றோரைத் தெரிந்துகொள்வதற்கும் அவர்களது பாதுகாப்பைப் பெற்றுக் கொள்வதற்குமான உரிமை.
> பெற்றோரிடமிருந்து தம்மைத் தனிமைப்படுத்தப்படாதிருப்பதற்கான உரிமை.
> கருத்தை வெளிப்படுத்தும் உரிமை.
> சிந்திப்பதற்கும் மனச்சாட்சிப்படி நடப்பதற்கும் சமயமொன்றை பின்பற்றுவதற்குமான உரிமை
> சமூக உரிமைஇ தனியுரிமைஇ சுகாதார வசதிகள் பெறும் உரிமை
> போதிய கல்வியைப்பெறும் உரிமை
> பொருளாதார சுரண்டல்களிலிருந்து பாதுகாக்கும் உரிமை
> பாலியல் வல்லுறவுகளிலிருந்து பாதுகாக்கும் உரிமை
> சித்திரவதைஇ குரூரமாக நடத்துதல் போன்ற தண்டனைகளிலிருந்து தவிர்த்துக்கொள்ளும் உரிமை.
> சாதாரண வழக்கு விசாரணைக்குள்ள உரிமை.
> சுதந்திரத்திற்கும் பாதுகாப்பிற்குமான உரிமை.
இவ்வாறு பல்வேறு உரிமைகள் சிறுவர் உரிமை தொடர்பில் பட்டியலிடப்பட்டுள்ளன.
சிறுவர் துஷ்பிரயோகம்:
சிறார்கள் மிகவும் முக்கியத்துவமிக்கவர்களாக சமூகத்தில் இருக்கின்றனர். இதனை நாம் உணர்கின்ற மறுகணம் சிறார்கள் மீதான இம்சைகள், மற்றும் துஷ்பிரயோகங்கள் பற்றிய செய்திகள் தினந்தோறும் பத்திரிகைகளில் வந்து கொண்டிருப்பதையும் காணக்கூடியதாக உள்ளது மிகவும் துரதிஷ்டமாகும். இவ்வாறான நிலைமையிலிருந்து சிறுவர்களை எவ்வாறு பாதுகாப்பது மற்றும் துஷ்பிரயோக நடவடிக்கைகள் எவை என்பன பற்றிய விடயங்களை நாம் கண்காணிக்க வேண்டும்.
“எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒரு பிள்ளையினது நலன் பேணப்படாமல் இருத்தல் அல்லது அவர்கள் மீது பிரயோகிக்கப்படும் உடல், உள ரீதியான தாக்கங்கள் அனைத்தும் சிறுவர் துஷ்பிரயோகம்” எனலாம். குறிப்பாகக் கூறுமிடத்து அனைத்து வகையான சிறுவர் உரிமை மறுப்பானது சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு வித்திட ஏதுவாக அமைகிறது.
சிறுவர்களுக்கெதிரான வன்முறைகள்:
1. மோசமான வார்த்தைப் பிரயோகத்தை அவர்களுக்கெதிராக பாவித்தல்.
2. சிறுவர்களை புறக்கணிpத்தல்.
3. சிறுவர் உழைப்பு
4. பாலியல் துஷ்பிரயோகம்
5. யுத்தத்தினால் பாதிப்படைதல் (அகதி வாழ்க்கை)
6. விபச்சாரத்திற்கு அமர்த்துதல்
7. சித்திரவதை
8. போதைப் பொருள் கடத்தலுக்காக இவர்களைப் பாவித்தல்
9. இளவயதுத்திருமணம்
இவ்வாறான பல வன்முறைகள் இன்று உலக அரங்கில் சிறுவர்களுக்கெதிராக நடைபெற்று வருவதை எம்மால் அவதானிக்க முடியும்.
எமது நாட்டில் நடைபெறும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்:
எமது நாட்டைப் பொறுத்தளவில் சிறுவர்களது உரிமைகள் பேணப்படுவது மற்றும் அவர்களை பராமரிப்பது போன்ற விடயங்களில் நீண்ட கால பாரம்பரியத்தை கடைப்பிடித்து வருகின்றமையானது ஒரு சிறப்பம்சமாகும். எனினும் எவ்வாறான சட்டங்கள் இருந்திட்ட போதிலும் அவற்றைத் தாண்டி சிறுவர் மீதான துஷ்பிரயோகங்கள் பரவலாக நடைபெற்று வருகின்றமை வேதனைதரும் விடயமாகும்.
இலங்கையில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையால் (NஊPயு) 2005ம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்களின்படி பதியப்பட்ட வழக்குகளில் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுவர்கள் 196 பேரும்இ உடல்ரீதியான துஷ்பிரயோகத்திற்குட்பட்ட சிறுவர்கள் 44 பேரும்இ கடத்தப்பட்டவர்கள் 27 பேரும்இ புறக்கணிக்கப்பட்ட சிறுவர்கள் 19 பேரும்இ தண்டனைக்குட்படுத்தப்பட்டவர்கள் 15 பேரும் சிறுவர் தொழிலாளர் 8 பேரும் மற்றும் உணர்வு ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் 6 பேருமாக சிறுவர் துஷ்பிரயோகத்திற்குள்ளானவர்கள் மொத்தமாக 315 பேர் காணப்பட்டனர். இவை பதியப்பட்ட வழக்குகள் மட்டுமே. பதியப்படாத வழக்குகள் எவ்;வளவோ காணப்படுகின்றன.
இலங்கையைப் பொறுத்தவரை ருNஐஊநுகு ஆல் வழங்கப்பட்ட றறற.வயஅடைறநநம.உழஅ ஆல் வெளியிடப்பட்ட இணையத் தகவல்களின்படி ஏறக்குறைய 40,000 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்படுகின்றனர். அத்துடன் 35இ000 பேர் சிறுவர் தொழிலாளர்களாகவும் காணப்படுகின்றனர். மலையக சிறுவர்களில் சுமார் 10,000 பேர் சிறுவர் தொழிலாளர்களாக உள்ளனர். இலங்கையின் சட்டப்பிரகாரம் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படக் கூடாது. எனினும் பல சிறுவர்கள் உழைப்பில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
சிறுவர் உரிமைகள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன?
சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்குடன் 2008 ஜுன் மாதம் 12ம் திகதி சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. சிறுவர்கள் ஒரு சமுதாயத்தின், நாட்டின் அச்சாணி என்பது நாம் அறிந்த விடயம். ஒரு சமூகத்தினது தூண்களாகவும், ஒரு நாட்டினது முதுகெலும்பாகவும் செயற்பட இருப்பவர்களும் இவர்களேதான். இவர்கள் அனைவரும் பாதுகாக்கப்பட்டு நல்வழிப்படுத்தப்படுவார்களேயானால் அந்த சமூகம் அந்த நாடு தலை நிமிர்ந்து நிற்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
சிறுவர்களின் உரிமைகளை பாதுகாக்க அவர்களை நல்வழிப்படுத்த உள்நாட்டு, சர்வதேச ரீதியாக பல நிறுவனங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவர்களையும் மீறிய செயற்பாடாகத்தான் இந்த அட்டூழியங்கள், சிறுவர்களுக்கெதிரான வன்முறைகள் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன.
இன்று சிறுவர்கள் தொடர்பான சட்ட ஒழுங்குகளை ஒவ்வொரு நாடும் கொண்டிருப்பது போன்று சர்வதேச ரீதியாக ஐடுழு, றுர்ழு, ருNநுளுஊழு, ருNஐஊநுகு போன்ற பல நிறுவனங்கள் சிறுவர்களின் நலன்களை பாதுகாப்பது தொடர்பில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
சிறுவர்களுக்கான முதலாவது உச்சிமாநாடு 1990ம் ஆண்டு செப்டம்பர் 30ம் திகதி நடைபெற்றது. இது சிறுவர் சம்பந்தமான முக்கிய தினமாகும். அன்று சிறுவர் இறப்பினையும் போஷாக்கின்மையினையும் 2000 ஆண்டளவில் நீக்குவதற்கான தீர்வு எடுக்கப்பட்டது.
இலங்கையில் சிறுவர் உரிமைகள் பாதுகாக்கப்படும் விதம்:
1989ம் ஆண்டு நவம்பர் 20ம் திகதி ஐ.நா. சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறுவர் உரிமைகளின் மூலமாக பாதுகாப்புஇ சிறந்த உடல் வளர்ச்சிஇ போசாக்கு வளர்ச்சிஇ பாராமரிப்பு போன்றவற்றினை மேலும் உறுதிப்படுத்துவதற்காக இலங்கை அரசும் இச்சாசனத்தை 1990ம் ஆண்டு ஜூலை12ம் திகதி ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டுள்ளது. எமது நாட்டுப்பிள்ளைகள் அனைவரையும் பாதுகாத்து வழிநடத்துகின்ற பாரிய பொறுப்பினையும் ஏற்றுள்ளது.
இலங்கையில் அண்மைக் காலம் தொட்டு சிறுவர்களுக்கும், அவர்களது உரிமைகளுக்கும் முக்கியத்துவமளிக்கப்பட்டு வருவது கண்கூடு. அந்த வகையில் தனியார் நிறுவனங்கள் பலவும் அரச நிறுவனங்கள் பலவும் சிறுவர்களுக்கென பல செயற்றிட்டங்களை செயற்படுத்தி வருகின்றன.
சிறுவர்களுக்கென பாடசாலை ரீதியாக கற்றல்இ கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. தனியார் நிறுவனங்கள் பாடசாலை சிறுவர்களுக்கு பல்வேறு பொருட்களை வழங்குவதுடன், சிறுவர் நிகழ்ச்சிகளை, விழிப்புணர்வு சார்ந்த விடயங்களை வானொலி, பத்திரிகை மூலம் வெளிப்படுத்துவதுடன் சிறுவர்களுள் இருக்கின்ற திறமைகளை வெளிக்கொணரும் வகையில் சிறுவர் சஞ்சிகைகளை வெளியிடல் போன்ற நல்ல செயற்பாடுகளை எமது நாட்டில் நடாத்தி வருகின்றன. சிறுவர் பாதுகாப்பு விடயத்தில் நாடளாவிய ரீதியில் பல்வேறு நிறுவனங்களும் அமைச்சு மட்டத்தில் திணைக்களங்களும் செயலாற்றி வருகின்றன. இதில் குறிப்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை (NஊPயு) யின் பங்கு மகத்தானது.
சட்டங்கள் சிறுவர்களது விடயத்தில் கடுமையான தண்டனை வழங்கி சிறுவர்களைப் பாதுகாத்து வருகின்ற அதேவேளை தற்போது கிராமங்கள தோறும் சிறுவர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான அமைப்புகளும் இயங்கி வருகின்றன.
சிறுவர்களுக்கும் வளர்ந்தோரைப் போன்று பேச்சுச் சுதந்திரம்;, மத கலாசார சுதந்திரம்இ தன் மொழியைப் பேசும் சுதந்திரம், கூடிப்பேசும் சுதந்திரம் போன்றவை இருக்கின்றமை எமது அரசியல் அமைப்பில் கூறப்பட்டுள்ள சில சுதந்திரங்களாகும். இலவலசக் கல்வி, சுகாதாரம், அநாதரவான குழந்தைப் பராமரிப்புஇ சட்டத்தில் சில சலுகைகள் என்பன சிறுவர்களுக்காக வழங்கப்பட்டுள்ள இன்று நடைமுறையிலுள்ள பொதுவான சில சுதந்திரங்களாகும்.
தொழில் புரியும் பெண்களுக்கு குழந்தையின் நலனைக் கருத்திற் கொண்டு மகப்பேற்றுக்காக 84 வேலை நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் தந்தைக்கும் பிள்ளையின் பெயர் பதிவுக்காக 3 நாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
பொதுவாக எமது நாட்டை எடுத்துக் கொண்டால் சிறுவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு சிறுவர் இல்லங்கள், அநாதை இல்லங்கள், சிறுவர் பாடசாலைகள் போன்றன அமைக்கப்பட்டுள்ளன. இந் நிறுவனங்களும் சிறுவர் உரிமைகளை சிறந்த முறையில் பேணுகின்றன. அதற்குக் காரணம் ஒவ்வொரு சிறுவரும் சிறந்த முறையில் பேணப்படுவது மட்டுமல்லாது சிறந்த பிரஜையாகவும் உருவாக்கப்பட வேண்டுமென்பதே. இவ்வாறு ஒவ்வொரு சிறுவரையும் சிறப்பான நிலைக்குக் கொண்டுவந்தால் சிறுவர் எதிர்காலம் போற்றப்படும். எத்தனையோ மகான்கள் சிறுவர் உரிமைக்காக இரத்தம் சிந்தினர். இதற்கு எமது இலங்கையும் எடுத்துக் காட்டாகும்.
மாணவர்களுக்கு இழைக்கப்படும் தண்டனைக்கெதிரான சட்டங்கள்:
இலங்கையில் மாணவர்களுக்கு இழைக்கப்படுகின்ற கொடுமைகளுக்கெதிராக பின்வரும் சட்டங்கள் பாதுகாப்பளிக்கின்றன.
1. இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் யாப்பின் 3வது பிரிவின் 2வது பந்தி மற்றும் 13வது பிரிவின் 126வது பந்தியின் பிரகாரம் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கொன்றை பதியலாம்.
2. 1995ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க தண்டனை சட்டக்கோவையின் (திருத்தப்பட்ட) 3வது பந்தி மற்றும் பிரதான சட்டக் கோவையின் 308(அ) பந்தியின் கீழ் பிள்ளைகளை கொடுமைக்கு ஆளாக்கும் குற்றம் ஒன்றை எதிர்நோக்கலாம்.
3. இன்னும் மாணவர்கள் தண்டிக்கப்படுவதை தடுக்க கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படும் ஒழுக்காற்று விசாரணைகளின் மூலமாகவும் மாணவர் துஷ்பிரயோகங்களைத் தடுக்கலாம்.
4. அதேபோல் கல்வி அமைச்சின் இலக்கம் 2005ஃ17 கொண்ட சுற்றறிக்கையானது மாணவர்களுக்கு சரீர மற்றும் உளரீதியான தண்டனைகள் வழங்குவதை தடைசெய்துள்ளது.
5. 1994 ஆம் ஆண்டு 22ம் இலக்கம் கொண்ட சித்திரவதைகளை தடுப்பதற்கான சட்டம்.
இவ்வாறான சட்டங்கள் இருந்தும் பாடசாலைகளில் பரவலாக பல தண்டனைகள் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. மேலும் சில பாடசாலைகளில் மாணவர்கெளுக்கெதிராக அதிபர்கள், ஆசிரியர்கள் வழங்கும் தண்டனைகளும் அளவுக்கதிகமாக காணப்படுகின்றன.
எனவே, தண்டனைகள் மூலமன்றி ஒழுங்கான நிர்வாக முறைகளும் பொருத்தமான கல்வி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். ஜோன் டூயி எனும் கல்வி உளவியலாளர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். “பிள்ளைகள் தாம் கற்றவற்றை செய்வதில்லை. அவர்கள் செய்வனவற்றையே கற்கின்றனர்”.
கல்வி கற்கும் உரிமை:
சிறுவர் பராயமானது கள்ளங்கபடமற்ற மகிழ்ச்சியானதும் கற்றறிந்து கொள்ளும் பருவமாகவும் கொள்ளப்படுகிறது, ஆகவேதான் சிறுவர்கள் கட்டாயம் பாடசாலை சென்று கல்வி கற்க வேண்டும். 1997ம் ஆண்டில் 1ம் இலக்க சட்டத்தின் பிரகாரம் பெற்றோர் 5 வயதிலிருந்து தமது பிள்ளையை ஒரு பாடசாலைக்கு கிரமமாக சென்று கல்வி கற்பதற்கு ஒழுங்குகள் செய்தல் கடமையாகும். சிறுவர்கள் கல்வி பெறுவதற்கான உரிமை பற்றி சரத்து 28, 29களில் கூறப்பட்டுள்ளதுடன் சிறுவர் உரிமைகள் சமவாயத்தின் சரத்து 32ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு ‘தம் ஆரோக்கியம், கல்வி வளர்ச்சி என்பவற்றின் மேம்பாட்டிற்கு அச்சுறுத்தலாய் அமையக் கூடிய வேலைகளிலிருந்து பாதுகாப்புப் பெறும் உரிமை பிள்ளைகளுக்கு உண்டு. தொழிலில் அமர்த்துவதற்குரிய குறைந்தபட்ச வயதை வரையறை செய்தலும் தொழில் நிபந்தனைகளை நெறிப்படுத்தலும் அரசின் கடப்பாடாகும்’ என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
எனவே, இவ்வாறான சட்டங்களினால் சிறுவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படுகின்ற அதேவேளை சிறுவர் மீதான துஷ்பிரயோகத்தினையும் தடுக்க முடியுமானதாக அமையலாம். இதனடிப்படையில் அரசு ஒவ்வாரு மாணவனும் 5–14 வயதுவரை கற்பதை சட்டத்தின்கீழ் கட்டாயப்படுத்தியுள்ளது.
சிறுவர்களின் உரிமைகளின் அடிப்படையில் அதன் 28, 29 சரத்துக்களின் படி எல்லாப் பிள்ளைகளும் கல்வி கற்பதற்கான உரித்துடையவர்கள். ஆரம்பக் கல்வியேனும் கட்டாயமாகவும், இலவசமாகவும் கிடைப்பதை அரசு உறுதி செய்தல் வேண்டும். பிள்ளை கற்பதன் மூலம் சிறந்த ஆளுமை, திறன்கள், உடல் உள விருத்திக்கு உட்படுகின்றது.
1998ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தன. அதன் அடிப்படையில் கூறப்பட்டுள்ள பல்வேறு அம்சங்களில் ஓர் அம்சமாக கட்டாயக் கல்வி அமைந்திருந்தது. அதன் அடிப்படையில் அன்றைய (1997) காலகட்டத்தில் ஐந்து வயது முதல் பதினான்கு வயதுக்குட்பட்ட பிள்ளைகளில் சுமார் 14 வீதத்துக்கும் கூடுதலான பிள்ளைகள் பாடசாலை செல்லவில்லை என்ற உண்மை தெரியவந்தது. இதனால் கட்டாயக் கல்வியின் வயதினை வரையறை செய்து அனைத்து சிறார்களும் கல்வி கற்பது கட்டாயப்படுத்தப்பட்டு வருகின்றது.
‘இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள்’ இந்த வாசகத்தின்படி ஒரு நாட்டின் சிறுவர்கள் மதிக்கப்பட வேண்டும். அந்த வகையில் ஒரு குடும்பத்தை எடுத்தால் அந்தக் குடும்பத்தில் சிறுவர்கள் எவ்வாறு மதிக்கப்படல் வேண்டும் என்பதையும் எவ்வாறு பராமரிக்கப்படுகின்றார்கள் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
பிள்ளைகளின் உரிமைகளின் பின்னணியில் பிள்ளைகளின் வளர்ச்சியிலும் அவர்களில் தாக்கம் ஏற்படுத்துகின்ற விடயங்களிலும் பெற்றோர் கவனம் செலுத்துதல் வேண்டும். அந்த வகையில் சுற்றுப்புறச் சூழலும் பிள்ளையின் வளர்ச்சிப் போக்கில் மிக முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக அண்மைய ஐ.நா அமைப்பின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
பிள்ளையின் ஆளுமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முக்கியமான காரணிகளாக அமைவது சுற்றுப்புறச் சூழலாகும். எனவே, சிறுவர்களை துஷ்பிரயோகங்களிலிருந்து பாதுகாப்பதானால் முதலில் பெற்றோர் தமது பிள்ளைகளில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். பெற்றோர் அல்லாதவிடத்து உறவினர்கள் சிறுவர்களை அவர்களுக்குரிய பாதுகாப்பிடங்களில் விடவேண்டும்.
எனவே, சிறுவர்களை கேள்விக்குறிக்குள்ளாக்காமல் அந்த சிறுவனின் எதிர்காலத்தைக்கருத்தி;ற் கொண்டு வாழ்க்கையை சீர்படுத்த வேண்டும். சிறுவர் உரிமையை பாதுகாக்காமல் அவர்களை துஷ்பிரயோகம் செய்தால் அவர்களின் மனோநிலை பாதிப்புக்குள்ளாக வேண்டிய நிலைக்கே தள்ளப்படும்.
சகலருக்கும் சகவாய்ப்புப் பற்றிய சிந்தனை துளிர் விட்டுள்ள இன்றைய காலகட்டத்தில் இந்த நாட்டில் வாழும் அனைத்து சிறுவர்களும் உள ஆரோக்கியமும், உடல் ஆரோக்கியமும் கொண்டு முழுமையாக வளர்ச்சிபெற சிறந்த போசாக்குணவும், நோய்ப்பாதுகாப்பும், சமூக வன்முறையிலிருந்து விடுதலையும், சிறந்த கல்வி அறிவும் பெறுபவர்களாக உறுதிப்படுத்துவது வளர்ந்தோர் அனைவரதும் பொறுப்பாகும்.
Popular Posts
-
“சுதந்திரமாகப் பிறந்த மனிதன் சுதந்திரமாகவே வாழ வேண்டும்” எனும் கருத்தினை மனித சுதந்திரத்தைப் பற்றிக் கருத்து வெளியிட்ட தத்துவஞானியான ‘ஜீன்...
-
தொழுகையின் ஷர்த்துக்கள் என்ன? தொழுகையின் நிபந்தனைகள் 10 அவையாவன: 1. முஸ்லிமாக இருத்தல். 2. தம்யீஸ் எனப்படும் அறிவைப் பெறுதல். 3. ஜனாபத் ...
-
நாளைய தலைவர் நீங்கள் சிறந்த தலைவரின் செயற்பாடு... ஒரு குழுவின் தலைவர் அர்ப்பணிப்பு, முன்மாதிரிகை, விசுவாசம், நேர்மை, மனிதத்துவம...
-
பாங்கு (அதான்) என்றால் என்ன? தொழுகை நேரங்கள் வந்ததும் மக்களை தொழுகைக்காக அழைக்கும் அழைப்பை, அரபு மொழியில் ‘அதான்’ என்றும் பாரசீக மொழிய...
-
அகிலங்களைப்படைத்து வளர்த்து இரட்சிக்கின்ற அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்! அவன்தான் ஒவ்வொன்றுக்கும் ஒரு நிர்ணயத்தை ஏற்படுத்தி அதற்கு வழிகாட்டினா...
-
LED බල්බ නිෂ්පාදන පාඩම් මාලාව 1 මාසිකව අසීමිතව උපයන්න..අලුත් මගක්.. led bulbs sri lanka අන්තර්ජාලය තුලින් මාසිකව අසීමිතව උ...
-
மனிதன் உலகில் பிறந்தவுடன் அவனுக்கு மரணம் நிச்சயம் என்பது இறைவனால் வகுக்கப்பட்ட நியதி. ஜனாஸா என்றவுடனேயே நம் அனைவருக்கும் மனசுக்குள் ஒரு பதட்...
-
மஸ்ஜித்கள் பூமியில் அமைந்துள்ள அல்லாஹ்வின் இல்லங்களாகும் . அவனது அருளும் அமைதியும் இறங்கும் இடங்கள் அவை . மலக்குகள் தரிசனம் கொடு...
-
இவ்வுலகில் வாழக்கூடிய அனைத்து மனிதர்களும் பாகுபாடின்றி மரணத்தை சுவைத்தே தீர வேண்டும். ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரவேணடும். (3...
-
பிறப்பு முதல் நபித்துவம் வரை நபி முஹம்மத் (ஸல்) அவர்கள், நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் பரம்பரையில் பிறந்தவர்களாவர். இது பற்றி நபியவர்களே...