அல்-ஹிக்மா
பாலர் பாடசாலையின் சிறுவர் சந்தை ஆசிரியை M.S.M.Safna
and M.M.M.Zahara அவர்களின் ஏற்பாட்டில் பாலர் பாடசாலை வளாகத்தில்
அண்மையில் ( 13.05.2014 ) வெகு விமர்சையாக இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு
பிரதம விருந்தினராக தங்காலை முஸ்லிம் நலன்புரி சங்கத்தின் உறுப்பின M.M.M.Riyas அவர்கள்
கலந்துகொண்டு சிறுவர் சந்தையை ஆரம்பித்துவைத்ததுடன்
தேவையான பொருட்களையும் கொள்வனவு செய்திருந்தார்.
சந்தை ஆரம்பித்து வைத்ததைதொடர்ந்து தங்காலை பிரதேசத்தில்
உள்ள பொதுமக்கள் வந்து மரக்கறி வகைகள், உடைகள், தேங்காய், பாணங்கள், ஆடைகள், உணவு வகைகள்,
பழங்கள் என தேவையான பொருட்களை கொள்வனவு செய்தனர்.
சிறுவர் சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்ட பொருட்கள் பெரும்பாலும்
கிருமி நாசினி பானையில்லாத மரக்கரிவகைகள் அதிகமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததுடன்
அவை குறைந்தவிலையிலும் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முன்பள்ளி சிறுவர்களின் பாடத்திட்டத்தில் சிறுவர்கள் சந்தையில்
உள்வாங்கப்படுகின்றமை அதனூடாக சிறுவர்களும் விற்பனை மற்றும் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளை
நேரில் கண்டு அதனூடாக அவர்களின் பாடத்திட்டத்தில் தெளிவுபடுத்துகின்ற தன்மையை வெளிக்காட்டி
நிற்பதாக நலன்புரி சங்கத்தின் உறுப்பின M.M.M.Riyas தெரிவித்தார். இந்நிகழ்வில் பெற்றோர்கள்,
நலன் விரும்பிகள் இன்னும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர். பார்வையாளர்களை பரவசப்படுத்தும் வகையில்
காட்சிப்பொருட்கள் அமைந்திறுந்தன.
“அல்ஹம்துலில்லாஹ்”