வெற்றி பெற்றவனை சிறந்தவனாக பார்க்கும் உலகம் தோல்வி அடைந்தவனை பற்றி சிந்திக்க மறந்தது உலக நியதி அதே போலதான் கல்வியிலும் குறிப்பாக பாடசாலைகளும் தனது பாடசாலையில் இருந்து சிறந்த பெருபேற்றுடன் வெளியாகும் மாணவர்களை உயந்த நிலையில் போற்றிப்புகளவும் தனக்குதானே தம்பட்டம் அடித்து பெருமைப்பட்டுக்கொள்ளும் பாடசாலைகள் அதே நேரம் பரீட்சையில் தோல்வியடைந்து எதிர்காலம் கேள்விக்குறியாகிய மாணவர் சமூகத்தை பற்றி சிந்திப்பது கிடையாது இதற்க்கு எத்தனையோ வரலாறுகள் உள்ளது.
இதன் காரணத்தால் பரீட்சையில் தோல்வியடைந்த மாணவர்கள் சமூகத்தின் முன் கூனிக்குறுகி என்ன செய்வது என்று தெரியாது எதிர்கால வாழ்கையை தொலைத்து நிர்கதியாக நிற்கும் அவலம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்காக பாராட்டுவிழா நடத்தும் பாடசாலைகள் தோல்வி அடைந்து உள ரீதியில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக என்ன செய்தது !! எதிர்கால கல்வி வழிகாட்டல், தொழில் வழிகாட்டல், போன்றனவற்றை ஆரம்பித்தது உண்டா? அல்லது நினைத்துப்பார்த்தது கூட உண்டா?? நிச்சயமாக ஒருபோதும் இல்லை.
ஆனால் மேற்க்கத்தைய நாடுகளில் இது போல் அல்ல ஒரு குழந்தை என்று பாடசாலையில் சேருகின்றதோ அன்றிலிருந்து அக்குழந்தை எதிர்கால வாழ்வுக்காக எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடிக்கும் பக்க பலமாக அந்தந்த பாடசாலைகள் சகலவிதமான வழிகாட்டலையும் செய்கின்றது என்பது நிதர்சனமான உண்மை.
கல்வியில் தோல்வி அடைந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் திறமைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஏற்றால் போல் தொழில்வாய்ப்புகள் எதிர்கால வழிகாட்டல் போன்றவற்றை திறம்பட ஏற்ப்படுத்திக்கொடுத்ததன் விளைவு அந்த நாடுகளில் நலிவடைந்த இளைஞ்சர் சமூதாயம் உருவாகாமல் ஆற்றல் மிக்க ஒரு இளைஞ்சர் சமூகம் உருவாகி அந்த நாடுகளின் அபிவிருத்தியையும் ஆற்றலையும் உயந்த நிலைக்கு கொண்டு சென்றது.
ஆனால் குறிப்பாக எமது பிரதேச பாடசாலைகளோ பரீட்சை முடிவுகளை வைத்து தனக்கு தானே தம்பட்டம் அடித்துக்கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை மட்டும் போற்றிப்புகழ்ந்து கொண்டு பல்வேறு காரணங்களினால் தனது எதிர்காலத்தை இழந்து கல்வியை இழந்து நிர்கதியாக நிற்கும் எமது மாணவர்களை கவணத்தில் கொள்ளாததன் விளைவு ..!
அற்பனிப்பில்லாத குறிக்கோள் அற்ற நலிவடைந்த ஒரு இளைஞ்சர் சமூதாய உருவாக்கத்திற்கு முதல் பங்குதாரர் ஆக இருக்கின்றது.
அதே நேரம் பெற்றோர்களும் தனது குழந்தைகளில் அதீத கவனம் செலுத்துவது குறைவு பரீட்சையில் தோல்வியடைந்தால் அவன் வாழ்கையில் தோல்வியடைந்தவன் அல்ல என்பதை உணர்ந்து தமது பிள்ளைகளுக்கு அவர்களது திறமைகளுக்கு ஏற்ப வழிகாட்டுதல் வேண்டும்.
எமது சமூகமே இதை இப்படியே விட்டுவிடுவதா??
நாம் சிந்திப்பதில்லையா?? நாம் எப்போது சிந்திப்பது.!!
இன்றைய எமது நாட்டில் எமது சிறுபான்மை சமூகம் அன்றாடம் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் வகையில் ஆளுமை மிக்க அறிவார்ந்த சமூதாயத்தை உருவாக்கும் கடமை முதலில் பாடசாலை சமூகத்தின் கைகளிலேயே தங்கியுள்ளது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.
வெறுமனே கல்வியை மாத்திரம் கற்றுக்கொடுப்பதற்காக இப் பாடசாலைகள் உருவாக்கப்படவில்லை ஒழுக்கமிகுந்த அர்பணிப்பு மிக்க ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்குதலின் முதற்கட்ட செயர்ப்படே பாடசாலைக்கல்விதான். வெறுமனே பரீட்சைகளின் பெறுபேறுகளை மாத்திரம் வைத்து மாணவர்களை ஒதுக்காமல் அவர்களின் திறமைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்ப்படுத்திக்கொடுப்பதும் பாடசாலைகளினதும் பெற்றோரினதும் தலையாய கடமையாகும்.
நடந்தவை நடந்து முடிந்ததாக இருக்கட்டும் ஆனால் இனி நடப்பவை சிறப்பாக அமையட்டும்.
இதன் முதற்கட்டமாக பரீட்சையில் சிறந்த பெறுபேறுகள் பெறாமல் இருக்கும் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்காக தொழில் வழிகாட்டல்,வாழ்கை திட்டமிடல் போன்ற விரிவுரைகளை வழங்கி அவர்களை எதிர்கால வாழ்வுக்காக தயார் செய்தல் வேண்டும் அதை விடுத்து அவர்களை நாம் கவணியாது விடுவோம் என்றால் பின்னடைந்த ஒரு சமூதாயத்துக்கு அடித்தளமிட்ட பெருமை பாடசாலைகளையும் ஆசிரியர்களையுமே சாரும்.
அதே நேரம் பெற்றோர்களும் தங்களது குழந்தைகளுக்கு ஏற்றால் போல் தங்களை மாற்றிக்கொண்டு அவர்களின் திறமைகளை அடையாளம் கண்டு அவர்களை வெற்றிபெற்றவர்களாக ஆக்குதல் வேண்டும் காலம் பொன்னானது இழந்த காலத்தை ஒருபோதும் மீள பெறமுடியாது வழிகாட்டல் என்பது மிக முக்கியமானதே!!
வழிகாட்டல் மூலம் சிறந்த சமூக அடைவை பெறலாம்.!!
மாணவர்கள் (இளைஞர்கள் ) எமது நாட்டின் சொத்து ஒரு நாட்டை வெற்றிப்பாதையில் கொண்டு செல்லும் கடமை ஒவ்வொரு இளைஞ்சனிடமும்உண்டு அதற்க்கு தேவை சிறந்த வழிகாட்டுதல் அதை அதை பாடசாலைகள் மூலமும் பெற்றோராகிய நாமும் சேர்ந்து வழங்குதல் மூலம் ஏற்ப்படுத்திக்கொடுக்கலாம்.
அதே நேரம் எமது சமூகத்தை பிரதிநித்திதுவப்படுத்தும் அரசியல் தலைமைகளும் சற்று சிந்தித்தல் வேண்டும் கட்டிட நிருமானம் வீதி நிருமானம் போன்றவற்ரில் மாத்திரம் கவனம் செலுத்தாது எமது இளைஞ்சர் சமூதாயத்துக்க்காகவும் சற்று அற்ப்பனிப்புடன் செயல் படுத்தல் வேண்டும்.
அவர்களுக்காக தொழில் கல்வி பெறும் அரச நிறுவனங்கள் உலக நவீன மயமாதலில் ஈடுகொடுக்கக்கூடிய கற்கை நெறிகள் தொழில் வழிகாட்டுதல் போன்றவற்றை ஏற்ப்படுத்திக்கொடுத்தல் வேண்டும் இது உங்களது கடமையாகும் வெறுமனே ஆட்சியில் இருப்பதால் சமூகத்துக்கு எந்த பயனும் இல்லை.
எல்லாம் வல்ல இறைவா !! நீயாவற்றையும் நன்கறிந்தவன் நீயே படைப்புகளின் அதிபதி எமது சமூகத்தின் உயர்வு உன்னிடமே உள்ளது எமது சமூகத்தை அபிவிருத்தி அடைந்த சமூதாயமாக உருவாக்கி வெற்றிப்பாதையில் கொண்டு செல்ல உதவுவாயாக ...
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.