Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

27 October 2014

உங்களது கூந்தல் அதிகமாக கொட்டுகின்றதா

கூந்தலைப் பராமரிப்பதற்கு உதவும் பொருட்கள் ஒன்று தான் வெங்காயம். வெங்காயத்தின் நாற்றம் மற்றும் அதனை உபயோகித்தால் வெளிவரும் கண்ணீரை பலர் வெறுக்கலாம். இருப்பினும், வெங்காயம் கூந்தலுக்கு மிகவும் நல்லது.

ஏனெனில் வெங்காயத்தை கூந்தல் பராமரிப்பில் பயன்படுத்தினால், கூந்தல் பிரச்சனைகளான பொடுகுத் தொல்லை, கூந்தல் உதிர்தல் மற்றும் முடி வெடிப்பு போன்றவை குறையும். ஏனெனில் வெங்காயத்தில் சல்பர் என்னும் பொருள் அதிகம் உள்ளது. இந்த பொருள் கூந்தலின் வேர்களை வலுவாக்கி, கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதில் பெரிதும் உதவியாக உள்ளது.

அதுமட்டுமின்றி, வெங்காயத்தில் ஆன்டி-பாக்டீரியல் பொருள் அதிகம் இருப்பதால், ஸ்கால்ப்பில் எந்த ஒரு தொற்றும் வராமல் இருக்கும். மேலும் வெங்காயத்தைக் கொண்டு பலவாறு ஹேர் மாஸ்க்குகள் போடலாம். இவ்வாறு வெங்காயத்தை பல பொருட்களுடன் சேர்த்து கூந்தலுக்கு மாஸ்க் போடுவதால், கூந்தல் உதிர்தல் குறைவதோடு, கூந்தலும் நன்கு பட்டுப் போன்று மென்மையாக பொலிவோடு காணப்படும். சரி, இப்போது அந்த வெங்காயத்தைக் கொண்டு எப்படியெல்லாம் ஹேர் மாஸ்க் போடலாம் என்று பார்ப்போம்.

வெங்காய சாறு

வெங்காயத்தை அரைத்து, அதனை ஸ்கால்ப்பில் தடவி, ஒரு ஈரமான துணியை தலையில் சுற்றி, 25-30 நிமிடம் ஊற வைத்து குளித்தால், மயிர்கால்கள் நன்கு வவிமையாக இருப்பதுடன், ஸ்கால்ப்பில் ஏற்படும் பிரச்சனைகளையும் போக்கலாம்.

வெங்காயம் மற்றும் தேங்காய் எண்ணெய்

வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, அதில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து கல்நுது, கூந்தலுக்கு தடவி மசாஜ் செய்து, சுடுநீரில் நனைத்து பிழிந்த துணியை தலையில் சுற்றி 15-20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், ஸ்கால்ப்பில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, கூந்தலின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

வெங்காய சாற்றுடன் பீர்

வெங்காய சாற்றில் சிறிது பீர் சேர்த்து கலந்து, கூந்தலுக்கு தடவி மசாஜ் செய்து குளித்தால், கூந்தல் உதிர்தல் குறைந்து, அதன் வளர்ச்சி அதிகரிக்கும். அதிலும் இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

வெங்காயம் மற்றும் தேன்

கூந்தலின் வளர்ச்சியை அதிகரிக்கும் மாஸ்க்குகளில் இது மிகவும் சிறந்தது. அதற்கு வெங்காயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து, தலையில் தடவி மசாஜ் செய்து குளித்தால், சொட்டையாக உள்ள இடத்திலும் கூந்தல் நன்கு வளரும்.

வெங்காயச் சாறு மற்றும் ரம்

இரவில் படுக்கும் போது, வெங்காயம் ஒன்றை ஒரு கப் ரம்மில் ஊற வைத்து, காலையில் எழுந்து, அந்த ரம்மை கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து குளித்து வந்தால், கூந்தலின் வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் தெரியும்.

வெங்காயம் மற்றும் எலுமிச்சை

பொடுகுத் தொல்லை அதிகம் இருந்தால், எலுமிச்சை சாற்றினை வெங்காய சாற்றில் சேர்த்து கலந்து மசாஜ் செய்தால், நல்ல பலன் கிடைக்கும். மேலும் இந்த முறையால் ஸ்கால்ப் சுத்தமாவதோடு, கூந்தலின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

வெங்காயத்துடன் தயிர்

வெங்காய விழுதில், சிறிது தயிர் சேர்த்து நன்கு அடித்து, அந்த கலவையை கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பில் தடவி ஊற, மசாஜ் செய்து, 45 நிமிடம் ஊற வைத்து, ஷாம்பு போட்டு குளிக்கலாம்.

வெங்காயம் மற்றும் முட்டை வெள்ளைக்கரு

கூந்தலுக்கு முட்டை மிகவும் நல்லது. அத்தகைய முட்டையின் வெள்ளைக்கருவை வெங்காயச் சாற்றுடன் சேர்த்து நன்கு அடித்து, ஈரமான கூந்தலில் தடவி, 25-30 நிமிடம் ஊற வைத்து குளித்தால், கூந்தல் வளர்ச்சி அதிகரிப்பதோடு, கூந்தலும் நன்கு பட்டுப் போன்று இருக்கும்.

தலைமைத்துவம் (Leadership)

நாளைய தலைவர் நீங்கள்

சிறந்த தலைவரின் செயற்பாடு...
ஒரு குழுவின் தலைவர் அர்ப்பணிப்பு, முன்மாதிரிகை, விசுவாசம், நேர்மை, மனிதத்துவம் போன்ற ஆளுமைக்கூறுகள் உடையவராக இருத்தல் வேண்டும்.
ரு தலைவரில் இருந்து பல தலைவர்கள் தோன்றலாம். அத்துடன் தலைவர் எடுத்துக்காட்டுவதற்குரியவராக அமைதல் அதன் சிறப்பம்சமாகும்.
தனது குழு அங்கத்தவர் செயற்பாட்டை ஊக்குவிப்பவராகவும், பொருத்தமான பொறுப்புகளையும் வழங்குபவராகவும் முன் கூட்டியே நடவடிக்கைகளை மேற்கொள்பவராகவும் (Be proactive) பகிர்ந்து கொள்பவராகவும் இருப்பது தலைமைத்துவத்தின் சிறந்த பண்புகளாகும்.
கட்டளையிடுவதைத் தவிர்த்து வேண்டுகோள் விடுப்பவராக இருத்தல் விரும்பத்தக்கது. இன்னொரு விதத்தில் கூறின் தலைவர் ஒரு வாயில் காப்போனாக, ஒவ்வொரு செயலுக்கும் செயற்பாட்டுக்கும் பொறுப்புடையவராக இருக்க வேண்டும்.
தலைவர் எப்போதும் வேண்டுகோள்களை (கட்டளை விதிப்பவர் அல்ல) விதிப்பவராக இருப்பதோடு அனைத்து வேண்டுகோள்களையும் (கட்டளைகளையும் அல்ல) முதன் முதலில் செயற்படுத்துபவராக இருப்பார்.
தலைமைத்துவத்தின் சிறப்பு        
தலைமைத்தவத்தின் சிறப்பானது தனதும் தன்னைப் பின்பற்றுவோரதும் விழுமியங்களையும் (Values) ஊக்கங்களையும் (Motivation) நோக்குகின்ற பார்வையில் தங்கியுள்ளது எனலாம்.ஒகியோ பல்கலைக்கழகம் (ஐ.அமெரிக்கா) ஆய்வில் தலைமைத்துவத்தின் நடத்தைகளில் நான்கு முக்கிய காரணிகள் குறிப்பிடப்படுகின்றன.

1. பிறர் நலச் சிந்தனை (Consideration)
2. குழு அமைப்பினைத் தொடக்கி வைத்தல் (Initiating Structure)
3. உற்பத்திக்கு வலியுறுத்தல் (Production Emphasis)
4. சமூக நுண்ணுணர்வு (Social awareness)

தலைமைத்துவம் என்பது சவால்கள் நிறைந்த ஒரு விளையாட்டு எனலாம். வெற்றி தோல்விகள் தலைவரில் தங்கியுள்ளது.

 தலைமைத்துவத்தின் வகைகள்
பின்வரும் வகையில் தலைமைத்துவ வகைகள் உளவியலாளரால் முன் வைக்கப்படுகின்றன.

1. நிறைவேற்றுத் தலைவர் (Administrator Leader)
2. நிர்வாகத் தலைவர் (Bureaucrat Leader)
3. கொள்கை வகுப்புத் தலைவர் (Policy Maker Leader)
4. துறைசார் நிபுணத் தலைவர்(Expert Leader)
5. இலட்சியத் தலைவர் (Ideologist Leader)
6. கவர்ச்சித் தலைவர் (Charismatic Leader)
7. அடையாளத் தலைவர் (Symbolic Leader)
8. தந்தைவழித் தலைவர் (Father Figure Leader)
9. சமயத் தலைவர் (Religious Leader)

இவ்வாறாகத் தலைமைத்துவம் அமைகிறது. ஒருவிதத்தில் கூறப்போகின் “தலைவர்கள் பிறக்கின்றனர் உருவாக்கப்படுவதில்லை”. (“Leaders are born not made”) என மக்ஸ்வெபர் என்பவர் கூறுகின்றார். தலைவர்கள் உருவாக்கப்படுகின்றனர். பெற்றெடுக்கப்படுவதில்லை எனவும் ஒருசாரார் கூறுவர். பொதுவாக சந்தர்ப்பங்கள் வழங்கப்படும் போது தான் தலைமைத்துவப் பண்புகளும் வளர்க்கப்படுகின்றன. ஒருவர் மேலெழுந்து வர செயற்படுத்த வேண்டிய செயலும் வழிநடத்த வேண்டிய அமைப்பும் முக்கிய இடம் வகிக்கின்றன என சமூக உளவியலாளர் கருத்துத் தெரிவிக்கின்றனர். “பதவிகளும் ஒருவரைத் தலைவராக்குகின்றது எனவும் கூறுவர். (“Office makes the man”)

பொதுவாக விலங்குகள், பறவைகளை நோக்கின் உடற்பலரீதியில் ஒன்று இன்னொன்றின்மீது ஆதிக்கம் செலுத்துவதையும் அடிபணிந்து போதலையும் அவதானிக்கலாம். ஆனால் மனிதன் உடற்பலமின்றி அறிவுத்திறன், செயல்திறன், ஆளுமைத்திறன், பிரச்சினைகளை அணுகி ஆராயும் திறன், உள்ளத்திறன், மனோதிடத்திறன் என்கின்ற அடிப்படைக் காரணிகள் மனிதனில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

தலைமைத்துவப் பண்புகள்
1. குழுவின் மதிப்பைப் பெறல் (Like ability)
தலைவர் தன் குழு அங்கத்தவரின் விருப்பத்துக்கும் மதிப்புக்குமுரிய முக்கிய பண்புகளைக் கொண்டிருத்தல் வேண்டும். குழுவின் மதிப்புகள் தலைமைத்தவத்தை பாதிக்கும்.

2. தன்பணிகளில் வெற்றிபெறல் (Task Success)
தலைமைத்தவமானது தான் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியீட்டும் வல்லமைகளைக் கொண்டிருத்தல் வேண்டும்.
பணிகளில் ஏற்படும் வழுக்காரு, முயற்சிகள் தோல்வியடைதல் தலைமைத்துவத்தைப் பெரிதும் பாதிக்கின்றன. சாதிக்கும் திறன் மிக மிக அவசியம்.

3. ஆளுமைக் கூறுகள் (Personality Traits)
ஒரு குழுவின் தலைவர் அர்ப்பணிப்பு, முன்மாதிhரிகை, விசுவாசம், நேர்மை, மனிதத்துவம் போன்ற ஆளுமைக்கூறுகள் உடையவராக இருத்தல் வேண்டும். ஒரு தலைவரில் இருந்து பல தலைவர்கள் தோன்றலாம். அத்துடன் தலைவர் எடுத்துக்காட்டுவதற்குரியவராக அமைதல் அதன் சிறப்பம்சமாகும்.

தான் அங்கம் வகிக்கும் குழுவில் ஆளுகைப் பண்புகள் உடையவராக இருத்தல் சிறப்பானதாகும். அதுமட்டுமல்ல தனது குழுவில் செல்வாக்குடைய ஒருவராக, மதிப்புப் பெற்றவராக இருப்பின் (Dominancy) சிறந்த தலைவராக அமையலாம். மகாத்மா காந்தி அடிகள் தனது அகிம்சை வழியில் வெற்றி பெற அவர் தன் குழுவில் பெற்ற செல்வாக்கும் மதிப்புமே காரணமாகும்.

4. சிறந்த பயிற்றுநர் (Coach)
தனது குழு அங்கத்தவர் செயற்பாட்டை ஊக்குவிப்பவராகவும், பொருத்தமான பொறுப்புகளையும் வழங்குபவராகவும் முன் கூட்டியே நடவடிக்கைகளை மேற்கொள்பவராகவும் (Be proactive) பகிர்ந்து கொள்பவராகவும் இருப்பது தலைமைத்துவத்தின் சிறப்பு பண்புகளாகும். கட்டளையிடுவதைத் தவிர்த்து வேண்டுகோள் விடுப்பவராக இருத்தல் விரும்பத்தக்கது. இன்னொரு விதத்தில் கூறின் தலைவர் ஒரு வாயில் காப்போனாக, ஒவ்வொரு செயலுக்கும் செயற்பாட்டுக்கும் பொறுப்புடையவராக அமைய வேண்டும்.

தலைமைத் தெரிவு
பல்வேறு விதமாகத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள்.
1. நியமித்தல்(appointing)
2. தெரிந்தெடுத்தல் (Electing)
3. சமூகத் தலைமை (Social leader)

தான் சார்ந்திருக்கும் குழுவுக்கு வெளியே இருந்து ஒருவர் தலைவராக நியமிக்கப்படின் அது நியமித்தல் தெரிவாகும். அரச நிர்வாக சேவைகளை இதற்கு காரணமாக கூறலாம் தான் சார்ந்த குழுவினால் தெரிந்தெடுக்கப்படின் அது தெரிந்தெடுத்தல் முறையாகும். தெரிந்தெடுக்கப்படாமலும் நியமிக்கப்படாமலும் குழு ஒருங்கிணைப்பாளராக அன்றேல் பராமரிப்பவராக உள்ள தலைவர் சமூகத் தெரிவுக்குட்பட்டவர். உதாரணமாக பஞ்சாயத்துத் தலைவர் போன்றோரைக் குறிப்பிடலாம்.

தலைமைத்துவ அதிகாரம்
1. கவர்ச்சிகரமான அதிகாரம் (Charismatic Authority)
இது விதிவிலக்கிற்குட்பட்ட தலைவரிடம் காணப்படுவதாகும். (ளுரிநச hரஅயn) மனித ஆற்றலுக்கு மேற்பட்டவர் உணர்வு ரீதியாகத் தன்னைப் பின்பற்றுவோரை வழிநடத்துபவர்களின் அதிகாரம் இதற்குதாரணமாகும். காந்திமகான், மகா அலக்சாண்டர், பிடல் காஸ்ரோ இத்தகையோராவார்.

2. மரபுரீதியான அதிகாரம் (Traditional Authority)
காலாகாலமாக உறுதி செய்யப்பட்ட வழமையான மரபுகளை இதற்குதாரணமாகக் குறிப்பிடலாம். (Inherited Leadership) இது மரபுரிமையில் பெறப்பட்ட தலைமைத்துவமாகும். பரம்பரையாக வரும் மன்னர்கள், பிரபுக்கள் மன்னர்கள் அதிகாரங்கள் இதற்குதாரணமாகும்.

3. சட்டவரம்பிற்குட்பட்ட நேரறிவான அதிகாரம் (Rational – Legal Authority)
மேற்கூறப்பட்ட இருவகையான அதிகாரங்களையும் சாராத தனிமனிதன் சாராத கூட்டு விதிகள் கொண்டது நேரறிவான சட்டவரம்பிற்குட்பட்ட அதிகாரங்களாகும். (Set of impersonal rules) நீதிபதி, இராணுவத்தளபதி போன்றோரின் தலைமைத்துவம் அதிகாரங்கள் இதற்குதாரணமாகும்.

ஆக்கச்சிந்தனையும் தலைமைத்துவமும்
தலைமைத்துவத்தை நோக்கின் நலிவான சிந்தனையுடனான தலைமைத்துவம் முக்கியமாகத் தோல்விக்கே இட்டுச் செல்லும். நலிவான சிந்தனைகளை வெற்றி கொள்வதற்கு ஆக்க பூர்வமான சிந்தனைகள் துணையாக அமையும். ஆக்கபூர்வமான சிந்தனை என்பது “கற்பனை செய்வது முதல் கனவுகாணலாகும்” அது புதிய கருத்துக்கள் பிறப்பிக்கப்படுவதற்கும், யாதாயினும் ஒன்றை ஆக்கபூர்வமாக நோக்குவதற்கும் முன்னர் தொடர்குளைக் காண முடியாமல் போனவற்றைப் புதுப்பித்து தொடர்புகளைக் காணவும் துணையாக அமையும். அது விடுசிந்தனை (Divergent Thinking) ஆகும். எனவே ஆக்கச் சிந்தனை தலைமைத்தவத்தை வளர்ப்பதற்கும் பொதுவாகக் கூறின் தான் சார்ந்துள்ள குழு அங்கத்தவர்களின் சிறப்பான செயற்பாடுகளும் எடுக்கப்படும் முயற்சிகளின் வெற்றி தோல்வியும் சிறந்த தலைமைத்தவமே காரணமாக அமைகின்றது எனலாம்.
தலைவராவதற்கு எல்லோருக்கும் ஆசைதான். ஆனால் தலைமை தாங்குவது எளிதான விஷமல்ல. ஒரு பெரும் சுமையை லாவகமாகத் தூக்கிச் சுமக்கும் திறன். தலைமைப் பண்புகள் என்பவை என்ன. அவற்றை எப்படி வளர்த்துக்கொள்வது. 

ஒரு நல்ல தலைவரின் பொறுப்புகள் என்னென்ன. நாட்டை வழி நடத்துபவர் தேசத் தலைவர், குடும்பத்தை வழி நடத்துபவர் குடும்பத் தலைவர், பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவியரை வழி நடத்துபவரை மாணவர் தலைவர் என்கிறோம். அவர்கள் மற்றவர்களை வழிநடத்தும் தலைமைப் பண்பை பெற்றிருப்பதால் தலைவராக இருக்கிறார்கள்.

வெறும் அறிவு மட்டுமே இருந்தால் ஒருவருக்கு தலைமைப் பண்பு இருக்கின்றது என்று கருத முடியாது. அறிவு அனுபவம் மனிதர்களை மதித்து நடந்துகொள்ளும் பண்பு ஆகியவற்றையும் கொண்டவரையே தலைமைப் பண்பு கொண்டவர் என்று கூறலாம். ‘விளையும் பயிர் முளையிலே தெரியும்’, என்பார்கள். 

சந்திரகுப்தர் குழந்தைப் பருவத்தில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அவரை கவனித்துக்கொண்டிருந்த சாணக்கியர், சந்திர குப்தரிடம் அரசராகும் தலைமைப் பண்புகள் இருப்பதாக கணித்துக் கூறினார்.
ஒவ்வொருவரும் அவரவருக்குள் இருக்கும் தலைமைப் பண்பை உணரத் தொடங்கும்போது அவர் தலைவராவதற்கான முதல் படிக்கட்டில் ஏறிவிட்டார் என்று கருதலாம். புத்திசாலித்தனமாக அல்லது விவேகத்துடன் நடந்துகொள்ளுவது சிறந்த தலைவருக்குத் தேவையான ஒன்று ஆகும். வழி நடத்தும் பொறுப்பில் இருப்பதால் தலைவருக்கு அனுபவ அறிவு மிகவும் இன்றியமையாதது. 

அதுவும் அனுபவம் சார்ந்த புரிதலுடன் கூடிய அறிவே சிறந்தது. தலைவர் என்பவர் காலமாற்றங்களுக்கேற்ப புதிய உத்திகளையும், அணுகுமுறைகளையும் துணையாகக் கொண்டு முடிவுகளை எடுத்து வழிநடத்துபவராக இருக்க வேண்டும். ஆனாலும் மாண்புடன் நடந்துகொள்ளும் குணநலன்களில் எந்த மாற்றமும் இருக்கக்கூடாது.
சிறந்த தலைவராக செயல்பட தேவையான குணநலன்களாவன.

பயிற்சியாளர்
நல்ல தலைவர் என்பவர் ஒரு சிறந்த பயிற்சியாளர். குழு உறுப்பினர்கள் தங்களது திறமையை முழுமையாக பயன்படுத்த வாய்ப்பளித்து தங்களது நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் செயல்பட உதவுபவரே சிறந்த தலைவர். தங்களுக்கு கீழ் உள்ளவர்கள் புதிதாக ஒரு முயற்சியில் இறங்கும்போது ஏதாவது தடை அல்லது இடர்பாடுகளை எதிர்கொண்டால் அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஆலோசனை வழங்கி வழி நடத்துபவரே தலைவர்.

இயக்குனர்
தலைவர் ஒரு இயக்குனர் போன்றவர். எந்த நோக்கத்துடன் எந்த இலக்கை நிர்ணயித்துக்கொண்டு செயல்பட வேண்டும் என்பதை குழுவை வழி நடத்தும் தலைவர் தெளிவாக புரிந்து வைத்திருக்க வேண்டும்.

எந்தவொரு தடையும் இல்லாமல் அல்லது தடைகள் வந்தாலும் அவற்றையும் எதிர்கொண்டு இலக்கை அடையும் வாய்ப்புகள் உள்ளன என்று உறுதியுடன் செயலை தொடங்குபவராக நல்ல தலைவர் இருப்பார். 

குழு உறுப்பினர்களுக்கு தெளிவாக நோக்கத்தை புரிய வைத்து இலக்கை அடைய வழி வகுப்பவராக இருப்பார். தேவைப்பட்டால் தானே நேரடியாக அனுபவ களத்தில் இறங்கி செயல்பட்டு முன்மாதிரியாக நடந்துகொண்டு வழி நடத்துவார்.

தாக்கத்தை உருவாக்கும் ஆற்றல்
சிறந்த தலைவரானவர் பிறரது மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி திறமையாக செயல்பட வைக்கும் ஆற்றல் உள்ளவர்களாக இருப்பார். இதுவரை வெளிப்படுத்தாமலிருந்த திறமைகளையும் குழு உறுப்பினர்களிடம் இருந்து வெளிக்கொணரும் வகையில் இவர்களது செயல்பாடு அமையும். இவர்களது அணுகுமுறையும், செயல்பாடுகளும் பிறரையும் சிறப்பாக செயல்பட தூண்டும் வகையில் இருக்கும்.

அதிகாரியாக செல்படுதல்
மற்றவர்கள் பாராட்டும் வகையில் திறமையுடன் செயல்படும் திறன், அதிகாரம் செலுத்தி பிறரை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் திறன், ஒருமுறை முடிவெடுத்து செயல்படத் தொடங்கிவிட்டால் சற்றும் தயக்கம் காட்டாமல் முயற்சியிலிருந்து பின்வாங்காமல் உறுதியுடன் செயல்படுதல், எந்தவித பாகுபாடும் இல்லாமல், பய உணர்ச்சியுமில்லாமல் நடந்துகொள்ளுதல், செயல்களுக்கு பொறுப்பேற்றுக்கொண்டு செயல்படுதல், வெற்றி என்றாலும் சரி, தோல்வி என்றாலும் சரி அதற்கு பொறுப்பேற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் போன்ற தலைமைப் பண்புகள் மற்றவர்கள் மத்தியில் மதிப்பையும் மரியாதையையும் அளிக்கும்.

தொலைநோக்காளர்
நீண்ட நாட்களுக்கு பயணளிக்க வேண்டும் என்று தொலை நோக்குடன் செயல்படுபவரே தலைவர். எதிர்கால விளைவு களை ஓரளவு அனுமானிக்கும் ஆற்றல் கொண்டவராக இருத்தல், பெரிய விஷயங்களை நன்கு கவனித்து செயல்படுத்தும் அதே வேளையில் சின்ன விஷயமாக இருந்தாலும் அக்கறை செலுத்தி கவனத்துடன் செயல்படும் பாங்கு.

மேலாளர்:
அனைத்து மேலாளர்களும் சிறந்த தலைவர்கள் கிடையாது. ஆனால் அனைத்து தலைவர்களும் சிறந்த மேலாளர்களே ஆவர். மேலாண்மை என்பது ஒரு விஞ்ஞானம். மேலாண்மைத் திறன் என்பது ஒவ்வொரு தலைவரிடம் உள்ள பண்பாகும்.

மேலாண்மைத் திறன் இல்லாத தலைவர் பிறர் பார்வையில் ஏளனத்திற்குரியவராக காட்சி அளிப்பார். ஒரு சிறந்த தலைவர் பிற மேலாளர்களையும், உதவியாளர்களையும் துணையாகக் கொண்டு திறம்பட மேலாண்மை செய்தாலும் தனக்கென்று தனி மேலாண்மைத் திறன் கொண்டவராகவே இருப்பார்.
தலைமைத்துவம் என்பது பலராலும் உச்சரிக்கப்படுகின்ற ஒரு பதமாக இன்று மாறியுள்ளது. பலர் இணைந்து நிறை வேற்றப்பட வேண்டிய ஒரு காரியம் வெற்றிகரமாக நிகழ அங்கு தலைமைத்துவம் இன்றியமையாததாக அமைகிறது. பாடசாலை வாழ்க்கைதொழில் வாழ்க்கைகுடும்ப வாழ்க்கை,விளையாட்டு மற்றும் பிரயாணம் போன்ற சந்தர்ப்பங்களை இதற்கு உதாரணங்களாகக் குறிப்பிடலாம்.

இங்கு குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மேற்கொள்ளப்படவேண்டிய விடயங்களை நிர்ணயித்து, ஒழுங்குபடுத்தி அவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றத் தேவையான திட்டங்களைத் தீட்டி அத்திட்டங்களை அமுலாக்க தம்மோடுள்ள பலரையும் ஆர்வத்தோடு பங்குபற்றச் செய்வதற்கும் குறித்த செயற்பாடுகளின்போது ஏற்படக்கூடிய முரண்பாடுகள், சிக்கல்களுக்குத் தீர்வுகளைப் பெறும் வழிகளைக் காட்டிக் கொடுப்பதற்கும் தலைவர் ஒருவர் இருக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

அந்த வகையில் பாடசாலை வாழ்க்கையிலும் பிற்பட்ட சமூக வாழ்க்கையிலும் சிறந்த தலைவர்களாக விளங்க மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படையான அம்சங்களை பின்வரும் தலைப்புகளில் நோக்குவோம்.

1. தலைமைத்துவம் என்றால் என்ன?
2. செயற்திறன் மிக்க தலைமைத்துவம் என்றால் என்ன?
3. தலைமைத்துவத்தின் வகைகள்.
4. மாணவர்களும் தலைமைத்துவத் திறன்களின் அவசியமும்.
5. பாடசாலையில் தலைமைத்துவத் திறன்களை விருத்தி செய்வதற்கான சந்தர்ப்பங்கள்.
6. தலைவர் ஒருவரிடம் காணப்படவேண்டிய முக்கிய பண்புகள்.

1. தலைமைத்துவம் என்றால் என்ன?
தலைமைத்துவம் என்பது, “வற்புறுத்தல், வலுக்கட்டாயமில்லாத வழிமுறைகளினூடாக மக்களைச் செயற்பட ஊக்குவிப்பதன் மூலம் ஒரு திட்டமிட்ட திசையில் நகர்த்திச் செல்லும் செயன்முறையாகும். அத்திசை நீண்ட கால குறிக்கோளை நோக்கியதாகவோ அல்லது குறுகிய கால குறிக்கோளை நோக்கியதாகவோ அமையலாம்.”

ஒரு குழுவின் தலைவர் என்பவர், ஒரு குறித்த அந்தஸ்து வழங்கப்பட்டு, அதற்குப் பொருத்தமான முறையில் செயற்படவேண்டும் என எதிர்பார்க்கப்படும் அங்கத்தவராவார். அத்தோடு, தமது குழுவின் இலக்குகளை அமைப்பதிலும் அவற்றை நிறைவேற்றிக் கொள்வதிலும் செல்வாக்குச் செலுத்த வேண்டிய ஒருவராகவும் இருக்கிறார்.

2. செயற்திறன் மிக்க தலைமைத்துவம் என்றால் என்ன?
செயற்திறன் மிக்க தலைமைத்துவம் என்பது தூரநோக்கு ஒன்றை உருவாக்கி, அதை அடைவதற்கான செயல் நுணுக்கத்தை விருத்தி செய்து, பிறரின் ஒத்துழைப்பைத் திரட்டி, தூர நோக்கை அடைந்து கொள்வதற்கான செயற்பாட்டை ஊக்குவிக்கின்ற ஒரு செயல்முறை ஆகும். செயற்றிறன் மிக்க தலைவரானவர்…

  • எதிர்காலம் பற்றிய தூர இலக்கை உருவாக்குவார்.
  • அத்தூர இலக்கை நோக்கி இயங்குவதற்கென அறிவுபூர்வமான செயல் உபாயங்களை விருத்தி செய்வார்.
  • அவ்வாறு இயங்குவதற்கு அவசியமாகின்ற ஒத்துழைப்பையும் இணக்கத்தையும் குழு முயற்சியை வழங்கக்கூடிய முக்கியமான கூட்டத்தினரின் ஆதரவையும் திரட்டுவார்.
  • செயல் உபாயங்களை அமுல்படுத்தும் விடயத்தில் முக்கிய பங்கெடுத்துத் தொழிற்படக்கூடிய ஆட்களை நல்ல முறையில் ஊக்குவிப்பார்

3. தலைமைத்துவத்தின் வகைகள்
பல்வேறுபட்ட தலைமைத்துவ வகைகள் பற்றி ஆய்வு செய்வதற்காக 1939ஆம் ஆண்டு கேட் லீவின் என்ற உளவியலாளரின் தலைமையின் கீழ் ஒரு குழு நியமிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் 3 வகையான தலைமைத்துவ வகைகள் வெளியிடப்பட்டன. இந்த ஆய்வு பாடசாலைச் சிறுவர்கள் மத்தியிலேயே மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

1) ஏகாதிபத்திய தலைமைத்துவம்

ஏகாதிபத்திய தன்மை கொண்ட தலைவர்கள் என்ன வேலை, எப்போது, எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்ற தெளிவான எதிர்பார்ப்பை முன்வைக்கக்கூடியவர்களாக இருப்பார்கள். தலைவருக்கும் அவரைப் பின்தொடர்கின்றவர்களுக்கும் இடையில் மிகத் தெளிவான வேறுபாடு காணப்படும். இத்தகைய தலைவர்கள் தம்முடன் இணைந்து பணியாற்றுகின்ற ஏனைய உறுப்பினர்களின் கருத்துக்களை செவிமடுக்காது சுதந்திரமாக தீர்மானங்களை எடுப்பவர்களாகக் காணப்படுவர்.

இத்தகைய தலைமைத்துவத்தினால் எடுக்கப்படும் தீர்மானங்கள், புத்தாக்கம் குறைந்ததாகவே காணப்படும் என்பது ஆய்வாளர்களின் முடிவு.

ஒரு குழு ஒன்றிணைந்து ஒரு தீர்மானத்தை எடுப்பதற்குப் போதிய அவகாசம் இல்லை என்ற சந்தர்ப்பத்திலும், குறிப்பிட்ட ஒரு குழுவுக்குத் தலைமை தாங்கும் ஒருவர், அக்குழுவில் தன்னை விட அறிவார்ந்தவர் யாருமில்லை என்ற நிலையிலும் இத்தகைய சர்வதிகாரத் தலைமைத்துவம் மிகச் சிறப்பாக பயனளிக்கும் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

2) பங்கு கொள்ளும் அல்லது ஜனநாயகவாத தலைமைத்துவம்

கேட் லீவினால் முன்வைக்கப்பட்ட இவ்வகைத் தலைமைத்துவம் பொதுவாக தாக்கம்மிக்க ஒன்றாகக் காணப்படுகின்றது. ஜனநாகயவாதத் தலைவர்கள் தமது குழு உறுப்பினர்களுக்கு வழிகாட்டல்களை வழங்குகின்றனர். மட்டுமன்றி தாங்களும் அக்குழுவில் ஒருவராகப் பங்கு கொள்வதோடு தமது குழுவில் உள்ள ஏனைய ஊழியர்களின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்கின்றனர்.

லீவினின் இந்த ஆய்வின்படி, இத்தலைமைத்துவப் பண்பைக் கொண்ட குழுவில் இருந்த மாணவர்கள் முந்திய குழுவைவிட செயற்திறன் குறைந்தவர்களாகக் காணப்பட்டனர். எனினும் இக்குழுவின் பங்களிப்பு மிக உயர்ந்த தரத்தைக் கொண்டிருந்தது.

பங்கு கொள்ளும் அல்லது ஜனநாயகப் பண்பைக் கொண்ட தலைவர்கள் தமது தலைமைத்துவச் செயன்முறையில் ஏனைய உறுப்பினர்களும் பங்கு கொள்ளும் வகையில் ஊக்குவிப்பு வழங்கினாலும் தீர்மானம் எடுக்கும் செயன்முறையில் இறுதி அதிகாரத்தை தம்மிடம் வைத்துக் கொள்வர்.

3) பகிர்ந்தளிக்கும் தலைமைத்துவம் கட்டுப்பாடற்ற நிலை

இத்தலைமைத்துவத்துவப் பண்பைக் கொண்ட தலைவர்கள், தமது தலைமைத்துவத்தின் கீழ் உள்ளவர்களுக்கு மிகக் குறைந்தளவு வழிகாட்டல்களை வழங்கக்கூடியவர்களாக அல்லது அறவே வழிகாட்டாதவர்களாக இருப்பர். தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை தமது குழு உறுப்பினர்களிடம் கொடுத்து விடுவர்.

குழு உறுப்பினர்கள், குறிப்பிட்ட விடயத்தில் துறைசார்ந்தவர்களாக இருக்கும் பட்சத்தில் இவ்வகையான தலைமைத்துவம் தாக்கமுள்ளதாக இருக்கும். எனினும் ஊக்கம், சுறுசுறுப்பு என்பன குறைந்ததாகவே காணப்படும்.

இம்மூன்று வகையான தலைமைத்துவங்களிலும் இரண்டாம் வகையான தலைமைத்துவம் சிறப்பானது எனினும், ஏனைய இரு வகையான தலைமைத்துவங்களும் சிற்சில சந்தர்ப்பங்களில் பயனளிக்கத்தக்கன என்பது குறிப்பிடத்தக்கது.

4. மாணவர்களும் தலைமைத்துவத் திறன்களின் அவசியமும்

பாடசாலை, பள்ளிவாசல், நலன்புரி மன்றங்கள், இளைஞர் கழகங்கள் போன்ற சமூக நிறுவனங்களில் கடமையாற்றுகின்றவர்களிடம், “பாடசாலை மாணவர்கள் எத்தகைய விடயங்களைப் பெற்றிருக்க வேண்டும் என நீங்கள் கருதுகிறீர் கள்?” என்று வினவினால் பெரும்பாலானோர், “தலைமைத்துவத் திறன்களையும் பண்புகளையும் பெற்றுக் கொள்ள வேண்டும், அப்போதுதான் அவர்களால் தங்கள் சமூகத்திற்கு உதவி செய்திட முடியும்” எனப் பதிலளிப்பதைக் காணலாம்.

இன்னும் ஆச்சரியமூட்டத்தக்க விடயம் என்னவெனில், அதிகமான தொழில் நிறுவனங்கள்கூட தமது ஊழியர்களாக இத்தகைய தலைமைத்துவத் திறன்களைக் கொண்ட பட்டதாரிகளையே எதிர்பார்ப்பதாகும்.

உண்மையில் இன்றைய மாணவர்கள்தான் நாளை நாம் முன்னோக்கிக் கொண்டிருக்கும் எதிர்காலத்தின் தலைவர்களாக இருக்கின்றனர். நாளைய சமூகத்தை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்லும் பொறுப்பும் கடமையும் இவர்களையே சாரும் என்பதால், பாடசாலைக் காலங்களிலேயே தலைமைத்துவப் பண்புகளையும் திறன்களையும் ஒரு மாணவன் பெற்றுக் கொள்வது அவசியமாக அமைகிறது.

குறித்த ஒரு சமூகம், கல்வி கற்ற ஒரு மேதைக்குப் பின்னால் செல்வதைவிட, கல்வியோடு தலைமைத்துவப் பண்புகளையும் திறன்களையும் கொண்ட ஒருவருக்குப் பின்னால் செல்வதையே விரும்புகின்றது. அதையே பாதுகாப்பானது எனவும் நம்புகின்றது. அந்தவகையில் பாடசாலைக் காலங்களிலேயே தலைமைத்துவப் பண்புகளையும் திறன்களையும் பெற்றுக் கொள்வது இன்றியமையாததாகக் காணப்படுகிறது.

5. பாடசாலையில் தலைமைத்துவத் திறன்களை விருத்தி செய்வதற்கான சந்தர்ப்பங்கள்
  1. விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகள்
  2. மாணவர் மன்றம்
  3. காலை ஆராதனை நிகழ்ச்சிகள்
  4. பாடசாலைச் சிரமதானங்கள்
  5. மாணவர் பாராளுமன்றம்
  6. பாடசாலை நிகழ்ச்சிகள்
  7. மாணவர் தலைமைத்துவம்
  8. VIII.சாரணர் பயிற்சி முகாம்
  9. சுற்றுலா
  10. முதலுதவிப் பிரிவு
  11. இசை, வாத்தியப் பிரிவு
  12. பாடசாலைக் கழகங்கள்
இதுபோன்ற இன்னும் பல நிகழ்ச்சிகள் மாணவர்களின் தலைமைத்துவத் திறன்களை வளர்க்கும் சந்தர்ப்பங்களாக அமைகின்றன. இவை தவிர ஆசிரியர்களால் திட்டமிட்டு ஏற்பாடு செய்கின்ற விஷேட நிகழ்ச்சிகளும் மாணவர்களின் தலைமைத்துவத் திறன்களையும் பண்புகளையும் விருத்தி செய்வதற்கான சந்தர்ப்பங்களாக அமைகின்றன.

6. தலைவர் ஒருவரிடம் காணப்பட வேண்டிய முக்கிய பண்புகள்

மாணவர்களாயினும் சரி, ஏனையவர்களாயினும் சரி ஒருவர் சிறந்த தலைவராக மாறுவதற்கு அதற்கே உரிய பண்புகளை அவர் தன்னகத்தே கொண்டிருப்பது அவசியமாகும்.

அந்தவகையில் ஒரு தலைவரிடம் காணப்பட வேண்டிய மிக முக்கியமான பண்புகளை பின்வருமாறு பட்டியற்படுத்தலாம்:

1) உண்மைத் தன்மை நம்பகத்தன்மை
2) தூரநோக்கான சிந்தனை
3) தொடர்பாடற் திறன்
4) ஏனையவர்களுடன் சுமுகமான உறவு
5) செல்வாக்குச் செலுத்தும் தன்மை
6) நெகிழ்வுத் தன்மை
7) குழுவாகச் சேர்ந்து வேலை செய்யும் பண்பு
8) பயிற்சியளித்தலும் விருத்தி செய்தலும்
9) தீர்மானிக்கும் ஆற்றல்
10) திட்டமிடல்
11) கலந்துரையாடல்

இவை தவிர இன்னும் பல பண்புகளும் காணப்படுகின்றன. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் முழு வாழ்க்கையும் தலைமைத்துவத் திறன்களும் தலைமைத்துவப் பண்புகளும் நிறைந்ததாகவே காணப்படுகிறது. முஹம்மத் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்தான் எங்களுடைய முன்மாதிரிமிக்க தலைவர் என்ற வகையில் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைப் படிப்பதனூடாக அத்தகைய தலைமைத்துவப் பண்புகளையும் திறன்களையும் தேடியறிந்து நமது பாடசாலை வாழ்க்கைக் காலத்திலேயே அவற்றைச் செயற்படுத்துவதனூடாக சமூகத்தின் சிறந்த தலைவர்களாக மாற்றுவதற்கு முயற்சிப்போம்,

நாளைய தலைவர்களாக வரவேண்டிய இளைஞர்களிடம் இருக்க வேண்டிய சிந்தனைத் தெளிவுகள் என்ன...?
இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் என்று பொதுவாக எல்லோரும் அழைப்பார்கள். ஆம் நாளைய தலைவர்களாகவுள்ள இன்றைய இளைஞர்கள் எத்தகைய தலைமைத்துவத்தை முன்னெடுக்க வேண்டும். அந்த தலைமைத்துவம் என்ன? 

தலைவர்கள் ஒரு இலக்கு நோக்கி சமூகத்தை வழிநாடாத்துபவர்கள். எந்த இலக்கு நோக்கி இன்று தலைவர்கள் மனிதர்களை வழிநாடாத்துகிறார்கள்? இன்றைய அவர்களது இலக்கு என்ன? நாளைய தலைவர்களாக வரவுள்ள எமது முஸ்லிம் இளைஞர்களின் இலக்கு என்ன? ஒரு முஸ்லிம் தலைமையிடம் இருக்க வேண்டிய இலக்கு என்ன?

ஒரு முஸ்லிம் அவனது இஸ்லாமிய அகீதாவின் அடிப்படையில் தமது இலக்கை தீர்மானிக்கவேண்டும். அந்த இலக்கு இஸ்லாமிய சரீஆ வரம்புகளை பாதுகாப்பதாகவும் சரீஆவை உலகில் நிலைநாட்டக் கூடியதாகவும் அமையவேண்டும்.

ஆனால் இன்று இளைஞர்களது இலக்குகளை மேற்கினது முதலாளித்துவ தலைமை வடிவமைக்கிறது. அதன் மதஒதுக்கல் சிந்தனையின் அடிப்படையில் வாழ்வியல் விவகாரங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் எனும் தலைமைத்துவப் பயிற்சியை இளைஞர் சமூகத்திற்கு வழங்குகிறது.

ஒரு முஸ்லிம் தனது இலக்கை ஷரீஆ அடிப்படையில் ஒழுங்குபடுத்த கடமைப்பட்டுள்ளான். ஆனால் இன்று அவனது இலக்கை துள்ளியமாக வடிவமைக்கும் இஸ்லாமிய அரசு இல்லாததால் அவன் வேரொறு அகீதாவில் பிறந்துள்ள உலக தலைமையினால் வழிநடாத்தப்படுகிறான். இந்நிலை மிகவும் ஆபத்தான போக்கு. அதனால்தான் அவனுக்கு இஸ்லாம் ஒரு சீரியசான விடயமாக தோனவில்லை. அவனது சிந்தனையில் தெளிவு இல்லை.

ஆகவே, அவனது சிந்தனை சீர்செய்யப்பட வேண்டும். அவனது இலக்குகள் இஸ்லாமிய அடிப்படையில் நெறிப்படுத்தப்படவேண்டும். அவ்வாறு நெறிப்படுத்தப்பட்டு பண்படுத்தப்பட்ட இஸ்லாமிய தலைமையாக மாறும் இளைஞர் சமூகம் நாளைய முஸ்லிம் உம்மத்தை வழிநாடாத்தும் தலைமைகளாக வரவேண்டும். அவர்கள்தான் நாளைய இஸ்லாத்தின் தூதுவர்கள். பாதுகாவலர்கள். தலைவர்கள் என்பதனை உணரக் கடமைப்பட்டுள்ளோம்.
 
எந்த ஒரு மனிதனின் நடத்தை மற்றவர்களின் நடத்தையின் மாறுதலை தன்னில் ஏற்படுத்தும் மாற்றத்தை விட அதிகமாக ஏற்படுத்துகின்றதோ அந்த நடத்தையே தலைமைத்தன்மையாகும். தலைவன் தன் நடத்தையால் குழுவின் நடத்தையில் ஒரு மாற்றத்தை விளைவிக்கிறானேயன்றி குழுவின் நடத்தையால் தன் நடத்தையில் ஒரு மாற்றத்தையோ அல்லது குழுவின் செயல்களுக்கேற்பத் தன்னை அவர் மாற்றிக் கொள்வதோ தலைமைத்துவம் அல்ல. Burn Zchoes Selznick என்னும் உளவியலாளர் பின்பற்றுவோரைச் செயற்படத் தூண்டும் செயற்பாடு தலைமைத்துவமாகும் என்கின்றார்.

இன்ஷா அல்லாஹ்.

26 October 2014

பள்ளி நிர்வாகச் சீர்கேடு – குற்றவாளிகள் யார்?

கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழி வந்ததா என்பதைவிட அறிவுள்ள ஒரு மனிதன் கோழியும் முட்டையும் எங்கிருந்து வந்தது என சிந்தித்தால் விடை கிடைக்கும்.

பள்ளிவாயில் நிர்வாகம் சரி இல்லை என்று ஒரு சாராரும், பள்ளிவாயிலில் பணிபுரியும் மெளலவி சரி இல்லை என்று ஒருசாராரும் கூறுவது  பலகாலமாக நடந்து வருவம் சர்ச்சையாகும். 

இவர்கள் இருவரும் சரியில்லாமல் போனதற்கு அடிப்படைக்காரணமே திருவாளர் ஜமாத்தார்கள் (பொதுமக்கள்) தான். என்பதை என்றைக்காவது யாராவது சிந்தித்ததுண்டா? அல்லது இதற்கான நடைமுறை சாத்தியமான தீர்வுகளை யாரேனும் முன்வைத்ததுண்டா? அல்லது தீர்வுகளை முன்வைத்தால் அதனை நடைமுறைப் படுத்தும் பணியில் யாராவது தங்களை இனைத்துக் கொள்ளத் தயாரா?
ஒரு மெளலவியின் கண்ணீர்: யார் குற்றவாளி? என்ற சமரசம் பத்திரிக்கையில் வெளியான கட்டுரையின் புலம்பலையும் அதில்  நடைமுறை சாத்தியமான தீர்வுகள் இல்லாததையும் கண்டேன்.  அது சம்பந்தமான இரண்டு கடிதங்களையும் பார்த்தபின் இவர்கள் பிரச்சனையின் ஊற்றுக்கண்ணை விட்டுவிட்டு , கடிதம் மூலம் இரங்கற்பாவும், கிண்டல்கேலியும் செய்திருப்பது வேதனைக்குரியது என்பதையும் உணர்ந்தேன்.

முஸ்லிம் சமுதாயத்தின் மத்திய நரம்புமண்டலமாகவும் (central nervous system) அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வுகானும் கேந்திரமாகவும் விளங்கிய பள்ளிவாயில்கள் சடங்குரீதியான தொழுகையை நிறைவேற்றக்கூட சில இடங்களில் தகுதியை இழந்திருப்பது வேதனைக்குரிதாகும்.

புன்னகை பூப்பதும் ஒரு தர்மம் என சொன்ன நபி (ஸல்) அவர்கள் கண்கள் சிவந்து கோபமுற்ற நேரங்களும் உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள்.

சில வருடங்களுக்குமுன் முஹம்மது கான் பாக்கவி அவர்கள் சமரசத்தில் இமாமத்தையும், தர்ஸ் எனப்படும்  மார்க்க போதனையையும் சேவையாகச் செய்யவேண்டும் என்றும் தங்களது தேவைகளுக்கு உழைத்துச் சாப்பிட வேண்டுமென்றும் நடைமுறை சாத்தியமான தீர்வுகளை முன்வைத்தார்கள். ஆனாலும் அதனை எதிர்த்தும் விமர்சனம் செய்தும் பலர் அப்போதே எழுதியிருந்தார்கள். இந்தப்புலம்பலுக்கு பதிலாக அந்தக்கட்டுரையை மறுபடி பிரசுரம் செய்தால் கூட போதும். ஆனாலும் (ஜமாத்தார்கள்)  எனும் குற்றவாளிகளின் பிரதிநிதியாக நான் வேறோரு கோணத்தில் இப்பிரச்சனையை அனுகினால் புதிய கசப்பான உண்மைகளும் வெளிவரும்.

இது ஒரு தொடர்கதையாக தொடர வேண்டுமா? அல்லது முற்றுப்புள்ளி வைக்கமுடியுமா? என்பது, கசப்பான உண்மைகளை நாம் ஜீரணிக்கத் தயாரா? என்பதைப் பொருத்தும் களத்தில் இறங்கி வேலை செய்ய நாம் தயாரா என்பதைப் பொருத்தும்  உள்ளது.
இப்பிரச்சனையை ஒரு செயல்படும் அறிஞன் எவ்வாறு அனுகுவான் என்பதைப் பார்ப்போம்:

பிரச்சனை: 
பெரும்பாலான பள்ளிவாயில்களின்  நிர்வாகமும், ஜமாத்தை வழி நடத்துவர் என எதிர்பார்க்கப்படும்   மெளலவிகளும்  தகுதிகள் இல்லாதிருப்பதன்  மூலம் இந்த சமுதாயம் மிகப்பெரும் சோதனையை சந்தித்து வருகின்றதே இதற்கு விடிவே இல்லையா?

பிரச்சனைகளை விளக்கிச் சொல்லுதல்:
1.நிர்வாகிகள் எவ்வாறு நிர்வாகம் செய்யவேண்டுமோ அவ்வாறு நிர்வகிப்பதில்லை.
2.மெளலவிகள் எவ்வாறு சமுதாயத்தை வழி நடத்தவேண்டும் என எதிர்பார்க்கிறோமோ அவ்வாறு நடப்பதில்லை.
3.ஜமாத்தார்கள் எவ்வாறு தாங்கள் நடந்து கொள்ளவேண்டுமோ அதைப்பற்றி சிறிதும் அக்கறை இல்லை.பொதுமக்கள், நிர்வாகிகள், மெளலவிமார்கள் இவர்கள் எல்லோருமே தத்தம் கடமைகளை செய்யாமல் எந்தப்பிரச்சனையாக இருந்தாலும் மற்றவரை நோக்கிவிரலை நீட்டி குற்றம் சுமத்துவதிலேயே குறியாக உள்ளனர்.

இதன் காரணகாரியங்களை ஆராய்ந்து விருப்பு வெறுப்பின்றி தீர்வுகளைமுன் வைத்தால் தூய எண்ணத்துடன் செயலாற்ற விரும்பும் சில சகோதரர்களுக்கேனும் உபயோகமாய் இருக்கலாம் என எண்ணுகிறேன்.

பிரச்சனைகளை பகுப்பாய்வுசெய்தல்:
முதலாவதாக இங்கே நாம் பொதுமக்கள், நிர்வாகிகள், மெளலவிமார்கள் என்று சுட்டிக்காட்டுவது பெரும்பாலானவர்களைக் குறிக்கும். ஏனென்றால் சில இடங்களில் நல்லவிதமாக பணிகள் நடந்துவருவதையும், அதற்கான முயற்ச்சிகளில் ஈடுபட்டிருப்பவர்களையும் விதிவிலக்காகக் கொள்ளவேண்டும்.

தலைமை: சுமார் 300 பேர்களுக்கும் அதிகமாக, பள்ளிவாயில் பொறுப்பாளர்கள் / தலைவர்கள் என நிதி கேட்டு என்னிடம் பலகால கட்டங்களில் வந்தபோது அவர்களிடம் நான் கேட்ட முதல் கேள்வி “பள்ளிவாயிலை யார் நிர்வகிக்க வேண்டும் என அல்லாஹ் சொல்லியுள்ள வசனம் தெரியுமா?” என்பதுதான். ஒருவருக்குக்கூட பதில் தெரியவில்லை என்பது கசப்பான உண்மை. அடுத்து இவர்கள் கோடிக்கணக்கில் பட்ஜட் போட்டு நன்கொடை வேண்டும் என்பார்கள். ஏற்கனவே உள்ள பள்ளிவாசல்கள் போதுமானதாக இருந்தாலும் அறியாமையின் காரணமாக ஜில்லாவிலேயே  உயரமான மினரா, பளிங்குத்தரை, தேவைக்கு அதிகமான பெரிய கட்டிடம், அலங்காரம் இப்படி முடிவுகளை எந்த முன்மாதிரியும் இன்றி எடுப்பார்கள். ஆனால் நல்ல மெளலவிக்கு போதுமான சம்பளம் கொடுக்கத் தயாரில்லை. நன்கொடை என்றபெயரில் கடன்பட்டு சிரமப்படுபவர்களையும் வற்புறுத்தி கட்டாய தர்மம் வாங்குவார்கள் இப்படி இவர்கள் செயலுக்கு ஒரு எல்லையே இல்லை.  எவ்வாறு நிர்வகிக்கவேண்டும் என தங்களுக்குத் தெரியாது என்பதுகூட தெரியவில்லை . இவர்கள் எப்படி நல்ல பன்பாடுள்ள, மார்க்க ஞானம் உள்ள மெளலவியை தேர்வுசெய்யும் தகுதியை பெற்றிருப்பார்கள்.

மெளலவிமார்: சிங்கப்பூரிலுள்ள பள்ளிவாயில்களுக்கும் , அமைப்புகள் நடத்தும் மதரஸாவிற்கும் 100க்கும் மேற்பட்ட மார்க்க ஆசிரியர்களை (mudharris) நேர்முகத் தேர்வுக்கு அழைத்துப் பரீட்சித்த அனுபவம் எனக்கு உண்டு. இஸ்லாம் பற்றி எளிமையான அடிப்படை கேள்விகளுக்குக்கூட சரியாகப் பதில் தெரியாதவர்களே ஏராளம். இங்கே இண்டர்வியூவில் சிங்கப்பூர் முப்தி சர்டிபிகேட்டை வாசிக்கச்சொன்னால் சரியாக வாசிக்க முடியாத பரிதாபம். அரபியில் எளிமையாக கேள்விகள் கேட்டால்கூட புரியாமல் பள்ளிப்பிள்ளைகளைப்போல் விழிக்கும் பரிதாபம். கடைசியாக சர்ட்டிபிகேட்டில் அரபி எழுத பேச தெரியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதே என்று என்னைப்பார்த்துக் கேட்க நம் மதராசாக்களைப் பற்றி நான் எதுவும் சொல்லமுடியாமல் தலைகுனிய வேண்டிய சூழ்நிலை. சல்லடை போட்டுச் சலித்தே இப்படி என்றால் பிறரைப்பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை.
ஜமாத்தார்: தவறான தலமையை தேர்வுசெய்துவிட்டு அவர்களை குற்றமும் சொல்வது நியாயமா?.”உங்களின் வாழ்க்கை நிலை எப்படி இருக்கிறதோ அப்படியே உங்களின் மீது தலைமை திணிக்கப்படும்” என நபி(ஸல்) கூறியதை வசதியாக மறந்துவிட்டீர்களா? உங்களைத்தான் முதலில் நீங்கள் திருத்தவேண்டும் என்பது இப்போதாவது புரிகின்றதா? நீங்கள் தலைமை பதவிக்கு அல்லாஹ் சொன்ன தகுதி இல்லாமல் பதவி ஆசை மட்டும் உள்ளவனை தேர்ந்தெடுப்பதே நபிவழிக்கு நேர் எதிரானதல்லவா?. “பதவிக்கு ஆசைப்படுவதே தகுதியின்மை அல்லவா. பதவியை விரும்பாத தகுதியான நேர்மையான நல்லவர்களை தேடி பதவி தரப்பட வேண்டும் என்றல்லவா சொல்லி இருக்கிறார்கள். குருடனைப் பிடித்து ராஜ பார்வை பார்க்கச் சொல்வது குருடனின் குற்றமா? உங்கள் குற்றமா.
இப்போது பிரச்சனையின் ஊற்றுக்கண், எல்லோரையும் குற்றம் பிடிக்கும்,  பிறருக்கு மார்க்கத்தை சொல்ல விரும்பும்,  அதேசமயம் தன் அளவில் கற்றுக்கொள்ள, திருந்த, பின்பற்ற தயாரில்லாத ஜமாத்தினர்தான் என்பதைப் புரிந்திருப்பீர்கள்.

நாம் இப்போது தீர்வுகளுக்குப் போவதற்கு முன்னால் ஒரு சில உண்மைச் சம்பவங்களையும், நாம் பயன்படுத்தும் வார்த்தைகளின் உண்மையான அர்த்தங்களையும், நமது உயிருக்கும் மேலான நபி (ஸல்) காலத்திலும் அதன் பிற்பகுதியிலும் எவ்வாறு பள்ளிவாயில் நிர்வாகம் நடந்தது என்பதையும் தெரிந்து கொண்டால் நீங்கள் கசப்பாக இருந்தாலும் நபி வழிதான் சரியான வழி அதைவிட்டால் நமக்கு இழிவு தான் என்பதைப் புரிந்து கொள்வீர்கள். 

சம்பவங்கள்:

பள்ளிவாயில் நிர்வாகம்
1. சாராயக்கடைக்கு NO OBJECTION LETTER கொடுத்தவர் ஒரு பள்ளியின் முத்தவல்லியாக இருக்கும் பரிதாபம் (மது அருந்துவது சைத்தானின் அருவருக்கத்தக்க செயல் என அல்லாஹ் கூறுகிறான். மது பாவங்களின் தாய் என நபி ஸல் கூறுகிறார்கள்)
2.  சமூகத்தில் பிரச்சனை ஏற்படுகின்றபோது சம்பந்தப் பட்டவர்களுக்கிடையே சமாதானம் செய்து வைக்கக்கூடது என தீர்மானம் போட்டு நிறைவேற்றிய பள்ளிவாயில் நிர்வாகம். ( இருவருக்கிடையே சமாதானம் செய்வதை தொழுகையை விட நோன்பை விட சிறந்த செயல் என நபி ஸல் கூறுகிறார்கள்)
3. முத்தவல்லி வட்டி வியாபாரி என தெரியாமல் வட்டியை பற்றி பேசிய மெளலவி நீக்கம். ( வட்டி வங்குபவன் அல்லாஹ்வுக்கு எதிராக போர் செய்பவன் என  நபி (ஸல்) நமக்கு அறிவுறுத்துகின்றார்கள்)
4. நம்மிடமே கெஞ்சி பணம் நன்கொடையாக வாங்கி பள்ளிவாசல் கட்டிவிட்டு நம்மையே (முஸ்லிம்களில் ஒரு சாராரை) வரக்கூடாது என எழுதிப்போடும் கொடுமை [பிறருக்கு அழைப்பு கொடுக்கவேண்டிய முஸ்லிம்கள் இருப்பவரை விரட்டுவது எத்தகைய படுபாதகச் செயல்]
5. பிச்சை எடுக்க வருபவர்களை பயான் செய்து உங்கள் ஹக்கை வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு அசத்தியத்தை பேசவிட்டு வேடிக்கை பார்ப்பது, சத்தியத்தைப் பேச சந்தர்ப்பம் கேட்டால் மனுக்கொடுங்கள் என்று சொல்லி தட்டிக் கழிப்பது. [ இது அறியாமையின்/அநியாயத்தின் உச்சக்கட்டம் இல்லையா.]
இன்னும் ஏராளம் ஏராளம் ஏராளம்....

மெளலவி:
1. புதுக்கோட்டையில் ஒரு பள்ளிவாயிலின் நாலாபுறமும் ஒலிபெருக்கி.  வெள்ளிக்கிழமை அன்று ஜும்ஆ பயான். அப்பகுதியில் உள்ள எல்லோரும் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். இமாம் என அழைக்கப்படுபவர் “அல்லாஹ் முதன் முதலில் மனிதனைப் படைக்க  களிமண்ணை  அழைத்ததாகவும் அது வர மறுத்ததாகவும்”  கற்பனை கதை சொல்கிறார். இவருக்கும் பெயர் மார்க்க அறிஞர்.
2.குமர் காரியம் என்று ஒன்று இல்லாத இஸ்லாத்தில், நபி (ஸல்) ஆணுக்கு வரதட்சனை எனும் பிச்சை கொடுப்பதை ஆதரித்து பயான். இவருக்கும் பெயர் மார்க்க அறிஞர்..
3. சென்னையில் ஜும்ஆ தொழுகைக்குவந்த ஒரு ஆப்பிரிக்கரை தொப்பி போடாததன் காரணமாக வெளியே போகச் சொன்ன   அநியாயக்காரர். இவருக்கும் பெயர் மார்க்க அறிஞர்.
4.பள்ளிவாசலுக்குள் தாயத்து, தகடு ஸ்டாக் வைத்துக் கொண்டு மோகினிப் பேயை விரட்டுகிறேன் என பெண்களை தொட்டு கேவலப்பட்டு அடிவாங்குதல். நல்ல நேரம் குறித்துக் கொடுத்தல் ( இத்தகைய காரியங்களில் ஈடுபடுபவன் முஹம்மதுக்கு அருளிய மார்க்கத்தை நிராகரித்து விட்டான் என்றும், நேரம் காலம் பார்ப்பவன் என்னைச் சார்ந்தவன் இல்லை என்றும் நபி (ஸல்) கூறியுள்ளது  இவர்களுக்குத் தெரியாதா?.)
5.இஷா முதல் பஜ்ர் வரை மனைவியை தொடாமல் இறைவனுக்காக தியாகம் செய்தவரிடம், இறைவன் கீழ் வானத்திற்கு வந்து, எனது அடியானே, எனக்காக நீ செய்த தியாகத்திற்கு உனக்கு நான் என்னசெய்யவேண்டும் என அல்லாஹ் கேட்டதாக புருடா கதை. மனைவியோடு உடலுறவு கொள்வதும் ஒரு தர்மம் என நபி (ஸல்) கூறியிருக்க அதற்கு நேர்மாறாக யாரோ பிதற்றியதை மார்க்கம் என சொல்லுவதை கேட்டு ரத்தம் கொதிக்கவேண்டாமா? நான் இதை எடுத்துச் சொல்லியும் மக்கள் பாராமுகமாக சென்றனர். அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டால் அவர்கள் இதயம் நடுங்கிவிடும் என குர்ஆன் உண்மை மூமின்கள் குறித்துக் கூறுகின்றது. இவர்களுக்கு இதயமே இல்லை போலும்.

இதுபோன்ற எண்ணற்ற கட்டுக் கதைகள் தாங்கமுடியாமல் பலர் தமிழ் மொழி அல்லாத பயான் உள்ள பள்ளிகளை தேடிச்செல்வதுண்டு.

பொதுமக்கள்
தீயவன் என்று தெரிந்தும் உறவினன், கடன் கொடுத்தவன், கடன் தரும் பணக்காரன், குறுக்குவழியில் காரியம் சாதிக்க உதவும்  அரசியல்வாதி, பினாமி பெயரில் மதுக்கடை வைத்திருக்கும் குண்டர், இப்படிப்பட்டவர்களை  குறுகிய கால நலனுக்காக தலைமைப் பொறுப்புக்கு தேர்வு செய்வதன் மூலம்,   சஹாபாக்கள் செய்த தியாகத்தை சிறுமைபடுத்தும் நாம் தான் தவறு செய்கிறோம்.  நாம் தெரிந்தும் தொட்டிலை ஆட்டிவிட்டு பிள்ளையையும் கிள்ளி விடுபவர்கள். நல்லவிதமாக வருமானம் ஈட்டிக் கொடுப்பார் , களவாடமாட்டார் என்று மார்க்கத்தில் பூஜ்யமாகவோ அல்லது மார்க்க விரோதமாகவோ இருந்தால் பரவாயில்லை என தேர்வு செய்வது.

வார்த்தை பிரயோகம்.

யார் ஆலிம்? 
ஆலிம் என்ற வார்த்தைக்கு அறிஞர் என்று சாதாரணமாக பொருள் படும். ஆனால் மார்க்க அடிப்படையில் அதற்கான விளக்கத்தை அல்லாஹ்வும் அவனது தூதரும் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

அல்லாஹ்வை அதிகமாக அஞ்சுபவரே ஆலிம் என குர்ஆன் கூறுகின்றது.

தான் (மார்க்கத்தை) அறிந்ததற்கேற்ப செயல்படுபவரே அறிஞர் என்பதாக நபி (ஸல்) கூறுகிறார்கள்.
மேலும் அறிஞர்களே நபிமார்களின் வாரிசு என்பதாகவும் கூறுகின்றார்கள்.

சர்ட்டிபிகேட் வைத்திருப்பவர்கள் அல்ல வாரிசுகள். நபிமார்களின் ஞானத்திற்கும், நற்பண்புகளுக்கும், பயபக்திக்கும்தான் அவர்கள் வாரிசுகள் என்பதை இப்போதாவது புரிந்துகொள்ளுங்கள்.
அறியாமையில் இருப்பவர் வேறு. ஆனால் தெரிந்தும் மறைத்தால் அது அறிவு/ அமானத் மோசடி இல்லையா.

அகில உலக அளவில் பிரசித்திபெற்ற ஷேக் யூஸ¤ப் அல் கரளாவி (அகில உலக மார்க்க அறிஞர் பேரவையின் தலைவர்), ஷேக் தந்த்தாவி ( அஸ்ஹர் பல்கலை கழகத்தின் முதல்வர், எகிப்து) அஷ்ஷேக் அகார் முஹம்மது ( உதவி முதல்வர் ஜாமியா நளீமியா, இலங்கை) இவர்கள் எல்லோரும் தங்களை ஆலிம் என்று அழைத்துக் கொள்வது இல்லை , ஷேக் என்ற பட்டத்தோடுதான் இருக்கிறார்கள்.

ஆனால் அறியாமையின் மொத்த உருவமாகவும், அல்லாஹ்வைப் பற்றிய அச்சம் சிறிதும் இல்லாதவரையும், எந்த பாடதிட்டத்திலும் கட்டுப்படாத ஒரு சர்ட்டிபிகேட் வைத்திருப்பவரை ஆலிம் எனக்குறிப்பிடுவது கேலிக்கூத்து இல்லையா?. 
கலீபா மாமூன் குர்ஆன் படைக்கப்பட்டதா அருளப்பட்டதா என்றகேள்விக்கு அருளப்பட்டது என பதில் சொன்ன அவ்வளவு பேரையும் சிறையிலிட்டு சித்திரவதை செய்தான். சித்திரவதை தாங்காமல் படைக்கப்பட்டதுதான் என்று சொல்லி அனைவரும் வெளியேறிவிட இமாம் ஹன்பல் அவர்கள் மட்டும் அருளப்பட்டது தான் என்று சொல்லி சொல்லனா சித்திரவதை அனுபவித்தார்கள். இவர்களைத்தான் அக்காலகட்டத்தில் இஸ்லாத்திற்கு புத்துயிர் அளித்தவர் என மெளலானா அபுல் ஹஸன் அலி நத்வி தனது இஸ்லாத்திற்கு புத்துயிர் அளித்த்வர்கள் எனும் புத்தகத்தில் குறிப்பிடுகின்றார். இவர்தான் அல்லாஹ்வின் பார்வையில்  நபி (ஸல்) வழிமுறையில் ஆலிம். ஏனென்றால் இவர்தான் அக்கால கட்டத்தில் அல்லாஹ்வை அதிகமாக அஞ்சியவர்.

சிங்கப்பூரில் கூட சிங்கப்பூர் இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் (SINGAPORE ISLAAMIC TEACHERS ASSOSIATION) என பெயர்சூட்டி இருக்கிறார்களேயொழிய ஆலிம்-உலமா-அறிஞர்-SCHOLAR என்ற பதத்தை பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள ஆசிரியர்கள் எகிப்திலுள்ள அஸ்கரிலும், மதீனாவிலுள்ள பல்கலைகழகத்திலும், இதுபோன்ற இன்னும் சிறந்த மதராசாக்களிலும் பயின்றாலும் இவர்களை உஸ்தாத் என்று தான் அழைக்கிறார்கள். ஆலிம் என்று ஒருபோதும் சொன்னதில்லை.

ஒரு நாள் என் சகோதரர் தன் பிள்ளைகள் இவ்வாறு தன்னிடம் கேட்பதாகக் கூறினார். கிருத்துவப் பாதிரியார்கள் அன்பாகவும், இனியமுகத்துடனும், சரியான  இலக்கணத்துடனும் உச்சரிப்புடனும் தமிழிலில் பேசவும் எழுதவும் செய்கிறார்கள். நமது ஆலிம்சாக்கள் மட்டும் இறுக்கமானமுகமும், கடினசுபாவமும், தவறான தமிழில் பேசுபவர்களாகவும் உள்ளனர் எனக் கேட்கிறார்கள். 

நான் பதில் கூறினேன். “முதலாவதாக மெளலவிமார்  உன்னையும் என்னையும் போல் மனிதர்கள் சிலசமயங்களில் அவர்களில் சிலர் பொருளாதாரவசதி யின்மையின் காரணமாகவும், சிலர் பள்ளிக்கூடங்களுக்குச் செல்ல மறுத்ததாலும், பள்ளிக்கூடங்களில் வெற்றிகரமாக தேர்வுபெறாததாலும் மதராசாவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் சமுதாய மாற்றத்திற்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டவ்ர்கள் அல்லர். கான் பாக்கவி போன்ற சிலர் விதிவிலக்காக தங்களது சொந்த முயற்சியின் காரணமாக சிறப்பாக பிரதினிதிப்பவர்கள்.
அடுத்ததாக இஸ்லாத்தில் புரோகிதம், பூசாரி, பாதிரியார் என்று இடைத்தரகர்கள் கிடையாது. இன்றைக்கும் மலேசியா சிங்கப்பூரின் பலபகுதிகளில் சுராவ் எனப்படும் சிறிய பள்ளிவாயில்களில் தொழவருபவர்கள் தாங்களே பாங்குசொல்லி தொழவைப்பது தினசரி  நடக்கின்றது. நானும் பலமுறை தொழவைத்திருக்கிறேன். நாமாக அவ்வாறு முடிவு செய்தால் அவர்கள் மேல் தவறு இல்லை. இஸ்லாத்தில் அறிஞர்கள் மட்டுமே உள்ளனர். எனவே ஒவ்வொரு முஸ்லிம் தாய் தகப்பனும் தங்களது வாழ்வில் இஸ்லாத்தை பேச்சிலும் , பழக்கவழக்கங்களிலும் கடைப்பிடித்தால் அதுவே பிள்ளைகளுக்குப் போதுமானது. இதற்கு உவமானம் ஒரு M.B.B.S. டாக்டரைப்போல. படித்து பட்டம் பெற்று ஹவுஸ் ஸர்ஜன் பயிற்சியும் பெற்ற பின்புதான் அவர் டாக்டர். அதைப்போல் நீயும் நானும் இருக்கவேணும் என்பதுதான் இஸ்லாம் நமக்கு கற்றுத்தருகின்றது. மார்க்கத்திற்கு தங்களை உண்மையில் அர்ப்பணித்துக் கொண்டு வாழும் சிலரை நாம் ஸ்பெசலிஸ்ட் டாக்டருக்கு ஒப்பிடலாம்.  கிருத்தவப் பாதிரி முதலாவதாக  தேர்வு செய்யப்படுகிறார், பின்பு முறையாக பயிற்றுவிக்கப் படுகிறார். எனவே எதற்காக பயிற்றுவிக்கப் பட்டாரோ அச்செயலை சரியாகச் செய்கிறார். நமது மெளலவிகளுக்கு  நுழைவுத்தேர்வும் இல்லை, முறையான பயிற்சியும் இல்லை, உலகத்தரம் வாய்ந்த பாடதிட்டமும் இல்லை. தமிழகத்தில் யாரும் ஆரம்பித்து, எப்படியும் நடத்தி, புரிந்துணர்வை பரீட்சிக்காமல் இஷ்டப்படி சர்ட்டிபிகேட் கொடுக்கும் ஒரே ஸ்தாபனம் நமது மதராசாக்கள் தான். பங்களாதேசிலிருந்து நூற்றுக்கணக்கில் குர்ஆனை மனனம் செய்த ஹாபிள்கள் சிங்கை வந்து கட்டிடப்பணியாளர்களாக, மரவேலை செய்யும் தச்சர்களாக, இப்படி பல வேலைகள் செய்து உழைத்துச் சாப்பிடுகின்றனர். பகுதி நேரமாக பள்ளிவாயில்களில் சேவை செய்கின்றனர். பள்ளியைகழுவுவது, கஞ்சிகாச்சுவது, தொழுகைவைப்பது, ஓதிக்கொடுப்பது இவை அனைத்தையும் சேவையாகச் செய்கிறார்கள். ஆனால் தமிழகத்திலிருந்து ஹாபிள் என்றும், மெளலவி என்றும் கூறிக்கொண்டு இந்த நாட்டில் வந்து பிச்சை எடுத்து சட்டத்தைமீறி கைதுசெய்யப்பட்டு தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட காட்சியை நாம் மறக்கமுடியாது. ஒரு முஸ்லிமுக்கு சுயமரியாதை இருக்கின்றது என்ற நபி மொழியை மெய்பித்தது பங்களாதேஷ் மெளலவிகள். பொய்ப்பிக்க முயலுவது  நமது தமிழகத்தைச் சேர்ந்த சிலர்.

இல்ம்/கல்வி
மதரஸாக் கல்விதான் சிறந்தது என ஒருசாராரும், உலகக்கல்விதான் மனிதனுக்கு கண்ணியத்தைக் கொடுக்கும் எனவே நபி (ஸல்) சொன்னது இதைத்தான் என வாதிடுகின்றனர். நபி(ஸல்) காலத்திலிருந்து வெள்ளைகாரர்கள் இந்த நாட்டை பிடித்து ஆட்சி செய்யும் வரை நம்மிடம் இருந்தது ஒரு கல்விதான். அது தான் பயனுள்ள கல்வி எனவேதான் நபி (ஸல்) பயனில்லாத கல்வியிலிருந்து பாதுகாப்பு தேடியிருக்கிறார்கள். அதை கோடாரி போட்டுப் பிளந்தது வெள்ளையரின் ஆட்சியில்தான். லார்ட் மெக்காலே என்பவன் அறிமுகப்படுத்திய இந்த கல்வித்திட்டம் நம்மிடையே குட்டி மெக்காலேக்களை உருவாக்கத்தான் பயன்படுகின்றது. அவர்கள் லஞ்சம், வட்டி, வரதட்சினை என்பதெல்லாம் தீமைகள் என அறிவுறுத்தப்பட மாட்டார்கள். பணத்திற்கும், புகழுக்கும், பதவிக்கும் விலை போய்விடுவார்கள். இந்த கல்வி நிலையங்கள் அளிக்கும் சான்றிதழைத்தான் மரண சான்றிதழ் என மெளலான அபுல் அ·லா மவ்தூதி கூறுகிறார். நீங்கள் இப்போது சிந்தித்தாலும் எவ்வளவு பொருத்தமான வார்த்தை என விளங்கும். எனவே பயன் உள்ள கல்வி தான் இஸ்லாமிய கல்வி என்பதையும் அது குர்ஆன், நபிவழியோடு மனிதனுக்குப் பயன்தரும் அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கியது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். 

நபி ஸல் காலத்தில் பள்ளிவாயில் நிர்வாகம்
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மண்சுவர் , ஓலைக்கூரை தான் பள்ளிவாயில். ஆட்சிப் பொறுப்பும், பள்ளி நிர்வாகமும், இமாமத்தும் அவர்களிடம் தான் இருந்தது. இது தான் இஸ்லாத்தின் பொற்காலம். அடுத்து இஸ்லாம் பரவவும் பலபகுதிகளிலும் பள்ளிவாயில்கள் கட்டப்படவும் நிர்வாகமும் இமாமத்தும் ஒரே நபரிடம் இருந்தது. அப்போது நிர்வாகி சம்பளம் வாங்கவில்லை, சத்தியத்தை சொல்ல அவருக்கு தடையும் இல்லை. பிற்காலத்தில் நிர்வாகி வேறாகவும், இமாமத் செய்பவர் வேறாகவும் சம்பளத்துக்கு செய்யும் இதரவேலைகளைப்போலவும் இமாமத் ஆகிவிட்டது. சேவையோடு பணத்தையும் பிழைப்பையும் சம்பத்தப்படுத்திய போதுதான் பிரச்சனைகள் உருவானது. இன்றைக்கும் சுயமரியாதையை இழக்க விரும்பாத பல மெளலவிகள் வேறு துறைகளில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். மேலும் பள்ளிவாயில்கள் படிப்பு, பயிற்சி, நியாயம் வழங்குதல், உதவி செய்தல், என மொத்தத்தில் மனிதனுடைய அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீத்வுகாணும் மையமாகத் திகழ்ந்திருக்கின்றது. ( இன்ஷா அல்லாஹ் எனது பள்ளிவாயில்களின் பயன்பாடு எனும் கட்டுரையில் பல நிகழ்கால உதாரணங்களை பார்த்தால் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்) 

தீர்வுகள்
1.இஸ்லாத்தின் ஆரம்பகாலம் தான் நமக்கு சரியான வழிகாட்டும் பொற்காலம் (REDISCOVER ISLAAM):
எந்தக் காலத்தையும் விட நபி (ஸல்) காலத்திலுள்ள வழிகாட்டுதல் தான் தீர்வுகளை சரியாக  முன்வைக்கமுடியும். “ஒரு காலம் வரும் தீனில் நிலைத்திருப்பது கைகளில் நெருப்புக்கங்கை ஏந்தி இருப்பது போன்றிருக்கும்” என நபி (ஸல்) கூறியுள்ளார்கள். லேசாக அனல் அடித்தால் கூட தாங்காதவர்கள் தான் நம்மிடையே அதிகம். தங்களை வழிகெட்ட கூட்டம் என்று சொல்லிவிடுவார்களே என ஹலாலை ஹராம் என்றும், ஹராமை ஹலாலென்றும் சொல்பவர்கள் இருக்கும் வரை நாம் ஒரு அடி கூட நகரமுடியாது.
2.நல்லவர்கள் ஒன்றிணைவது
நீங்கள் நிர்வகியாக இருக்கலாம், மெளலவியாக இருக்கலாம், பொதுமக்களாய் இருக்கலாம் . அறிவுபலமும், தக்வாவும், போர்க்குணமுள்ள நல்லவர்கள் சேர்ந்து மாதிரிப் பள்ளிவாயில்களை  நிர்வகிக்கலாம். சம்பளம் வாங்காமல் சேவையாய் நாமே தொழுகை நடத்தவேண்டும். இதன் மூலம் இது சாத்தியமே என பிறரும் உணர்ந்து இணைவார்கள்.
3. தொண்டூழிய அமைப்புகள் இச்செய்திகளை அறிவுப்பூர்வமாக மக்களுக்கு விளக்கி அறிவூட்ட வேண்டும்.
4.மாற்றம் மக்களிடமிருந்துதான்:
குறை சொல்வதை விட்டுவிட்டு உங்களின் எதிர்கால சந்ததிகளின் நன்மைகருதி இத்தகைய நற்பணிகளில்  ஈடுபடுவோருக்கு உதவவேண்டும், ஒதுங்கிவிடக்கூடாது.
5. சத்தியத்தை சொல்வதற்கு சர்ட்டிபிகேட் வேண்டும் என ஒதுங்குவது தவறு.”உங்களில் சிறந்தவர் குர்ஆனை கற்றுக் கொள்பவரும் கற்றுக் கொடுப்பவருமாவார்.” என்மூலம் ஒரு விஷயம் தெரிந்தாலும் பிறருக்கு எத்திவைக்கவும்.” என்ற நபி மொழிகளெல்லாம் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஆகும். நமக்குத் தெரிந்ததை சொல்லித்தராமல் போனால் உங்கள் பிள்ளைகள் தவறை சரி என்று பின்பற்ற வாய்ப்பு இருக்கின்றது.
6. உண்மையை சொன்னால் சொல்லடியும் கல்லடியும் மிரட்டலும் வரும் . இதை பொறுமையோடு ஏற்றுக் கொள்பவரே உண்மையான தவ்ஹீத், சுன்னத் வல் ஜமாத், உண்மையான முஸ்லிம். (பத்வா பாக்கியாதுஸ் ஸாலிஹாத்தை வெளியிட்ட கான் பாகவி அவர்களையும் இவ்வறு தான் படுத்தினர்கள்)

இதோ சில மாடல்கள்

பங்களாதேஷ்:
வறுமையான நாடாக இருந்தாலும்இங்கே பல மதரஸாக்கள் மார்க்கக் கல்வியோடு தச்சுத் தொழில்,  நர்சிங் , ப்ளம்பிங், வயரிங் இப்படி பல தொழிற்பயிற்சிகளை அளிக்கின்றனர். இவர்கள்  நமது ஊர் ஹாபிஸ் மற்றும் மெளலவிகள் போல்  குமர் காரியம் என்றோ, தர்மம் வேண்டும் என்றோ கேட்டு அவமானங்களைச் சந்திப்பதில்லை. மாறாக சுயமரியாதையோடும் கண்ணியத்தோடும் உழைத்து உண்கின்றனர். இவர்கள் உண்மையில் நபி (ஸல்) அவர்களை மதிக்கவேண்டிய விதத்தில் மதிக்கின்றனர்.ஏனென்றால்:

1.“நீங்கள் உண்ணும் உணவில் உழைத்து உண்ணும் உணவே சிறந்தது”
2.“யார்  ஒருவன் தனக்காகவும், தன் மனைவி மக்களுக்காகவும், தன் அண்டை வீட்டாருக்ககவும் உழைக்கின்றானோ அவன் அல்லாஹ்வின் பாதையில் இருக்கிறான்”
3.”உழைக்காமல் யார் இரந்து உண்கின்றார்களோ அவர்கள் முகத்தில் தசை இன்றி முகம் கரிந்த நிலையில் மறுமையில் எழுப்பப் படுவார்கள்” என்று அறிந்து இம்மையிலும் மறுமையிலும் தனது கண்ணியத்தைக் காப்பாற்றிக் கொள்ளுதல்
இப்படிப்பட்ட நபி மொழிகளை உண்மையில் மதிப்பதால் தான் இமாமத்தையும் தொழிலாக ஏற்றுக்கொள்ளவில்லை. 

இன்றைக்கும் ஆயிரக் கணக்கில் இங்கு தனது தேவைக்கு உழைத்து உண்டு சேவையை இலவசமாக  செய்துகொண்டு  இருக்கிண்றனர்.

இலங்கை ஜாமியா நளீமியா
நளீம் ஹாஜியார் என்பவர் தனது உழைப்பினால் சம்பாதித்ததைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஸ்தாபனம். இங்கு படிப்பவர்கள் மார்க்கக்கல்வியில் காலத்திற்கேற்ப சிறந்த பயிற்றுவிக்கப் படுகின்றனர். அதோடு தாங்கள் கண்ணியத்தோடு வாழ பல துறைகளிலும் உதாரணமாக: பொருளாதாரரம், வணிகம் போன்ற பல துறைகளில் தேர்ச்சிபெற்று உலகெங்கும் பணியாற்றி கண்ணியத்தோடு வாழ்ந்து வருகின்றனர்.

மாறாக நாம் எதீம்களை மொட்டைபோட்டு, ஜிப்பா மாட்டி, பிடிக்காததை யெல்லாம் படிக்கச் சொல்லி, அடையாளப்படுத்தி பணம் வசூல் செய்கிண்றனர். நம் பிள்ளைகள் கிராப் வெட்டி நன்கு உடையணிந்து பள்ளிக்கூடங்களுக்கு செல்வதைப் பார்த்து மனம் வெதும்பி ஏங்கித் தவிக்கின்றனர். என்னிடமே பல எத்தீம்கள் அழுது புலம்பியுள்ளனர்.

நிறைவாக.. 
நிர்வகிப்பவர், மெளலவிமார், ஜமாத்தார் போன்றோரை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

1. ஒரளவு மார்க்க ஞானம் உள்ளவர், எந்தசெயலை செய்வதற்கு முன்பும் மார்க்கம் அனுமதித்திருக்கின்றதா என பத்வாவை விலைக்குவாங்காமல் தக்வாவின் அடிப்படையில் நடப்பார். தன்னளவில் மட்டும் நல்லவராக வாழாமல் , நன்மையை ஏவி தீமைக்கு எதிரகப்போரடுவார். இத்தகையவர் மிக மிக அரிதாகவே இருப்பர். ஆனால் இப்போதும் வாழ்ந்து வருகின்றனர்.
2. மார்க்கம் அதிகம் தெரிந்திருக்கும், பேசவும் செய்வர், செயல்படவும் செய்வர். ஆனால் நன்மையை ஏவி தீமையை விளக்க அவசியம் இல்லை என்பார். செயல் என்று வந்தால் இவர்களை முழுவதுமாக முன்னுதாரணமாகக் கொள்ளமுடியாது.
3. மார்க்கம் ஓரளவு விளங்கி இருப்பார் அல்லது நன்கு அறிந்தும் இருப்பார். ஆனால் தன்னளவிலும் செயல்படமாட்டார். பிறருக்குச் சொல்லவும் தயங்குவார். கேட்டால் நிர்பந்தம், மக்களை, நிர்வாகத்தை, அடியாட்களை அட்ஜஸ்ட் செய்யவேண்டும் என்பார்.
4. மார்க்கம் தெரியாது. ஆனால் இயற்கையாக நன்மைவிரும்பியாக இருப்பார். சொன்னால் விளக்கினால் ஏற்றுக்கொள்வார். பெரும்பாலும் இவர் மார்க்கத்தை பேசி, செயலில் இல்லாத வேடதாரிகளைப் பார்த்து வெதும்பிப்போய் மார்க்கத்தில் தீர்வுகளை தேடமாட்டார்.
5. மார்க்கம் பற்றி அக்கறை இருக்காது , வெளிப்படையாகப் பாவங்கள் புரிவார். எவ்வளவு சொன்னாலும் இந்த உலக ஆசையின் காரணமாக கபுருக்கு செல்லும் வரை பாவதிலிருந்து விடுபடமாட்டார்.

ஆக முதலாமவரும் நான்காவது நபரும் முதலில் ஒன்றிணையவேண்டும். அடுத்து இரண்டாமவரை அணுகவேண்டும். பின்பு மெதுவாக மதில் மேல் பூனையாக உள்ளவர்கள் வருவார்கள். அவர்களுக்காக நாம் ஒருபோதும் காத்திருக்கக் கூடாது. பெரும்பாலும் நல்லவர்களை நாம் விட்டுவிட்டு , மார்க்க அறிவு இருந்தால் போதுமென முடிவெடுத்து ஏமாந்து போகிறோம்.

இன்னும் எத்தனை காலத்திற்கு நாம் தீர்வுகளை கையில் வைத்துக் கொண்டு ஒருவரை ஒருவர்

குற்றம் சாட்டுவது.
நமக்கு போட்டிபோட்டுக் கட்டும் மிக உயரமான மிணாராக்கள் தேவை இல்லை

போட்டிபோட்டு அலங்கரிக்கப்பட்ட பள்ளிவாயில்கள் தேவை இல்லை

பளிங்குத்தரைகள் தேவை இல்லை
நிதிதிரட்ட ஊர் ஊராய் அலைந்து அவமானப்பட வேண்டியதில்லை
வசூலிப்பவருக்கு 30% கமிஷன் கொடுத்து பல பொய்களை சொல்லவைக்க வேண்டியதில்லை
தவறான வழியில் பொருளீட்டும் பணக்காரனையும், லஞ்சத்தில் ஊறிய அரசியல்வாதிகளையும் கெஞ்சவேண்டியதுமில்லை. அவர்களை தலமைப்பதவிக்கு அமர்த்தி அல்லாஹ்விடம் மறுமையில் குற்றவாளியாகவும், இம்மையில் தோல்விகளைத்தழுவ வேண்டியதுமிலை.

நபி (ஸல்) காலத்தில் எதிரிகளின் மனதில் திகிலூட்டவும், உறுதியான ஈமானை பெறவும், உடல் பொருள் ஆவி ஆகியவற்றை தியாகங்கள் செய்ய காரணமாயிருந்த குடிசைப்பள்ளிவாயிலான அந்த மஸ்ஜித் நபவி போன்ற பள்ளிவாயில்களே போதும். 
பணத்திற்கு முன்னுரிமை கொடுக்காமல் , நல்ல மனிதர்களுக்கு முன்னுரிமை கொடுப்போம். மற்றவை தானாக மாறும்.
அபூதர் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அறிவுரை வழங்கியாபோது “ எப்போதும் ஏழைகளோடும் (poor) ,தேவையுடையோர்களோடும் (needy) இருப்பீராக என்றார்கள்”, உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரலி) அவர்களிடம் “ நீங்கள் என்னோடு மறுமையில் சேர்ந்திருக்க வேண்டுமானால் ஏழைகளோடு இருங்கள் என்றார்கள். ஆனால் இன்று நாம் இதை பின்பற்றுகிறோமா?.

சகோதர சகோதரிகளே, இஸ்லாமிய பணிகளில் பணத்தையும், தீமைகளில் ஈடுபடும் அதிகாரவர்க்கத்தையும், முன்நிறுத்தாமல் , ஈமானில் பலம் உள்ள நல்லமனிதர்களை முன்னிறுத்துங்கள். பலமாற்றங்கள் தானே ஏற்படும் 

இன்ஷாஅல்லாஹ்.  

கல்விக் கடன் எப்படி வாங்கலாம்? முழுமையான தகவல்கள்!!!

பன்னிரண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம், எந்தத் துறையைத் தேர்வு செய்யலாம் என்று மாணவர்களும் பெற்றோர்களும் பரபரப்பாக இயங்கி வருகிறார்கள்.
உடனடியாக வேலை கிடைக்கக்கூடிய படிப்பு நல்ல கல்லூரியில் கிடைக்குமா என்கிற கவலை ஒருபக்கம்… அப்படி கிடைத்துவிட்டால் படிப்புச் செலவுக்கான பணத்துக்கு எங்கே போவது என்கிற கவலை இன்னொரு பக்கம்… மகன்/மகளின் கல்லூரிப் படிப்புக்கென கொஞ்சம் பணம் சேர்த்தவர்களை விட்டுவிடலாம். அப்படி எதுவும் சேர்க்காதவர்களுக்கு ஆபத்பாந்தவனாக இருப்பது வங்கிகள் தரும் கல்விக் கடன்தான்.

இந்த கல்விக் கடனை எப்படி பெறுவது? எந்த வங்கிகளை அணுகலாம்?, யார் யாருக்கு இந்த கடன் கிடைக்கும், யார் யாருக்கு கிடைக்காது, எந்தெந்த கல்விக்கு கிடைக்கும், எதன் அடிப்படையில் கல்விக் கடன் தருவார்கள்? கல்விக் கடன் வாங்க வங்கியில் என்னென்ன சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்?
அவரவர் வசிக்கும் பகுதியில் உள்ள பொதுத் துறை/தேசிய அல்லது தனியார் வங்கியில் கல்விக் கடன் பெறலாம். பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் அவரவர்களுக்கு விருப்பமான, எதிர்காலத்தில் வேலைவாய்ப்புள்ள கல்விப் பிரிவை தேர்வு செய்வது கல்விக் கடனை பெறுவதற்கு அடிப்படையான விஷயம்.
பிரிவைத் தேர்வு செய்வது போல, சிறந்த கல்லூரியைத் தேர்வு செய்வ திலும் கவனம் அவசியம். கல்லூரியில் சேர்ந்த பின்னர் அருகில் இருக்கும் வங்கி மேலாளரை அணுகி கல்விக் கடன் பெறுவதற்கான விதி முறைகள் என்னென்ன என்று தெரிந்து கொண்டு, அவர்கள் தரும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
பின்னர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, கல்வி பயில சேர்ந்திருக்கும் கல்லூரி யிருந்து போனோஃபைட் என்று சொல்லப்படுகிற சேர்க்கைக் கான ரசீதையும், ஃபீஸ் ஸ்ட்ரக்சர் என்று சொல்லப் படுகிற முழுப் படிப் புக்குமான செலவு விவரம் அடங்கிய சான்றிதழ்களையும் வாங்கி வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இது தவிர, பிளஸ்டூ மதிப்பெண் சான்றிதழ், இருப்பிடச் சான்றுக்காக ரேஷன் கார்டு அட்டையின் அட்டஸ்டேட் நகல், வருமானச் சான்றிதழ் ஆகியவை சமர்ப்பிக்கப்பட வேண்டும். கல்விக் கடன் பெற விரும்பும் மாணவர்கள் முடிந்தமட்டும் பிளஸ்டூ படித்து விடுமுறையில் இருக்கும்போதே தங்களது இருப்பிடத்திற்கு அருகில் இருக்கும் வங்கிகளுக்கு பெற்றோருடன் சென்று கல்விக் கடன் குறித்து விசாரித்துவிடுவது நல்லது.
”கல்விக் கடன் பெற நீங்கள் சேமிப்புக் கணக்கு வைத்தி ருக்கும் வங்கிகளையே முதலில் அணுகலாம். சேமிப்புக் கணக்கு இல்லாத வங்கிகளையோ, அறிமுகமே இல்லாத வங்கி களையோ நாடும் போது கல்விக் கடன் கிடைக்க, நேரம் நிறைய விரயமாகலாம். சிறிய ஊர்களில் இருப்பவர்கள் லீட் வங்கிகளை அணுகி கல்விக் கடன் பெற லாம்” என்றார் ஐ.ஓ.பி. மேலாளர் கிருஷ்ணன்.
கல்விக் கடன்: யாருக்கு கிடைக்கும்?
இந்திய அரசாங்கம் கல்விக் கடன் பெற தகுதி உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கல்விக் கடன் வழங்க வேண்டும் என்கிற உத்தரவை அனைத்து வங்கிகளுக்கும் பிறப்பித்திருக்கிறது. ஏழை மாணவர்கள், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என யாராக இருந்தாலும் அவரவர் வாங்கிய மதிப்பெண்களுக்கு ஏற்ப கல்விக் கடன் கிடைக்கும்.
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் கற்றுத் தரப்படும் அனைத்து படிப்புகளுக்கும் கல்விக் கடன் கிடைக்கும்.
எதிர்காலத்தில் வேலை வாய்ப்புள்ள இளங்கலை படிப்புகள் (பி.காம்., பி.எஸ்.சி., பி.ஏ., பி.சி.ஏ. போன்ற படிப்புகள்), முதுகலை படிப்புகள் (எம்.பி.ஏ., எம்.சி.ஏ., போன்ற படிப்புகள்) மற்றும் தொழிற்கல்விகள் (பொறியியல், மருத்துவம், விவசாயம், சட்டம், மேலாண்மை போன்ற படிப்புகள்), ஐ.ஐ.டி., என்.ஐ.எஃப்.டி., ஐ.ஐ.எம். போன்ற சிறப்பு கல்வி நிறுவனங்களில் இருக்கும் படிப்புகள் மற்றும் சி.ஏ., சி.எஃப்.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ. போன்ற படிப்புகளுக்கும், டிப்ளமோ படிப்புகளுக்கும் கடன் கிடைக்கும்.
ஆனால், வேலை வாய்ப்பில்லாத படிப்புகளுக்கு கல்விக் கடன் வழங்க வங்கிகள் தயங்கவே செய்யும். அது மாதிரி தரப்படும் கடன்கள் திரும்ப வருமா என வங்கிகள் அஞ்சுவதே இதற்கு காரணம். தவிர, அங்கீகாரம் இல்லாத கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கடன் கண்டிப்பாக கிடைக்காது.
கல்விக் கடன் பெறுவதற்கு பின்வரும் தகுதிகள் அவசியமாக இருக்க வேண்டும்.
* இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.
* வேலை வாய்ப்பு அதிகம் உள்ள படிப்புகளாக கருதப்படும் கல்விகளைத் தேர்வு செய்திருக்க வேண்டும்.
* அரசின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந் திருக்க வேண்டும்.
* பிளஸ்டூ மதிப்பெண்கள் கூட்டு சதவிகிதத்தின் அடிப்படையில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினராக இருந்தால் 50%-ம், மற்ற பிரிவினருக்கு 60%-மாகவும் இருத்தல் அவசியம்.
எவ்வளவு கிடைக்கும்?
இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் உள்ள கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர் களுக்கு அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை கல்விக் கடன் கிடைக்கும். வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு அதிகபட்சம் 20 லட்சம் ரூபாய் வரை கல்விக் கடன் கிடைக்கும்.
இதற்கு அதிகமாக கல்விக் கடன் தேவை எனில், மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையிலோ, அவர்கள் தேர்வு செய்திருக்கும் படிப்பின் எதிர்காலத்தின் அடிப்படையிலோ அல்லது பெற்றோர்களின் வருமான விகிதம் போன்ற அடிப்படை விஷயங்களை சரி பார்த்து அதிக கல்விக் கடன் கேட்கும் மாணவனுக்கு கடன் கொடுக்கலாமா, வேண்டாமா என்பதை வங்கியே முடிவெடுக்கும்.
கல்விக் கடன்: உத்தரவாதம் தேவையில்லை!
கல்விக் கடன் நான்கு லட்சம் ரூபாய்க்குள் இருந்தால் எந்தவொரு உத்தரவாதமும் தேவையில்லை. இன்றைய தேதியில் தமிழகத்தில் பல மாணவ, மாணவிகளின் தேவை இதற்குள் அடங்கிவிடும் என்பதால் கல்விக் கடன் வாங்குகிற பெற்றோர்கள் எந்தவிதமான உத்தரவாதத்தையும் தரவேண்டியதில்லை.
நான்கு லட்சத்திலிருந்து 7.5 லட்சம்வரை கல்விக் கடன் என்கிறபோது பெற்றோரில் ஒருவரோ அல்லது மூன்றாம் நபரோ தனிநபர் உத்தரவாதம் தரவேண்டி வரும். ஏழு லட்சத்துக்கு அதிகம் என்கிற போது தன் வசம் இருக்கும் சொத்துக்களில் ஏதாவது ஒன்றை பிணையமாக வைக்க வேண்டும். உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும்.
எந்த செலவு அடங்கும்?
வங்கிகள் வழங்கும் கடன் தொகையில் கீழ்க்கண்ட செலவினங்கள் முழுமையாக அடங்கும்.
* கல்லூரியில் கட்ட வேண்டிய கல்வித் தொகை.
* தேர்வுக் கட்டணம், புத்தகம் மற்றும் ஆய்வகக் கட்டணம்.
* விடுதி மற்றும் சாப்பாட்டுச் செலவுகள்.
* மாணவர்களின் கல்விச் சாதனங்கள் மற்றும் சீருடைகள்.
* படிப்பிற்கான கம்யூட்டர் வசதி மற்றும் புராஜெக்ட் செலவினங்கள்.
படிப்பில் கவனம் தேவை!
கல்விக் கடன் வாங்கி படிக்கும் மாணவர்கள் படிப்பில் முழுக் கவனம் செலுத்துவது அவசியம். ஏனெனில், செமஸ்டர் தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களை ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு இடையே வங்கி மேலாளரிடம் காட்ட வேண்டும்.
ஏதேனும் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாமல் போனால், மேற்கொண்டு தர வேண்டிய கடன் தொகை நிறுத்தப்படலாம். மீண்டும் அந்த பாடத்தில் தேர்ச்சி பெற்ற பிறகே வங்கியிடமிருந்து கல்விக் கடனை எதிர்பார்க்க முடியும்.
கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்தினாலோ, ஒழுங்கீனமாக நடந்து கொள்வதன் மூலம் கல்லூரி யிலிருந்து விலக்கப்பட்டாலோ கல்விக் கடன் நிறுத்தப்படும். அப்படி நிறுத்தப்பட்டால் அதுவரை வாங்கிய கடனை வட்டியோடு திரும்பச் செலுத்த வேண்டியிருக்கும்.
கல்விக் கடனை வழங்குவதற்காக அரசாங்கமே தனியாக ஒரு வங்கியை ஆரம்பிக்க போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. கல்விக் கடனுக்கான வங்கி ஆரம்பிக்கப்படும் பட்சத்தில் இந்த வங்கியில் மட்டுமே கல்விக் கடனை பெற முடியும். மற்ற வங்கிகளில் பெற முடியாது.
கல்லூரிகளில் இருந்து மாணவர்களுக்கு தரப்படும் டிகிரி சான்றிதழில், எந்தவொரு மாணவன்/மாணவி கல்விக் கடன் வாங்கி படித்திருந்தாலும் இவர்கள் இந்த வங்கியில் கல்விக் கடன் வாங்கி படித்திருக்கிறார்கள் என்று குறிப்பிட போகிறார்களாம். இப்படி செய்யும் பட்சத்தில் கல்விக் கடன் வாங்கி படித்த மாணவன் வேலைக்குச் செல்கிற போது அந்த நிறுவனம் வங்கியைத் தொடர்பு கொண்டு கல்விக் கடன் வாங்கியிருக்கும் மாணவன்/மாணவியோ கடனை திருப்பி செலுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாம்.
கல்விக் கடன்: எப்படி திரும்பக் கட்டுவது?
கல்விக் கடனுக்கான அசலையோ அல்லது வட்டியையோ படிக்கிற காலத்திலேயே கட்ட வேண்டும் என எந்த வங்கியும் சொல்வதில்லை. படித்து முடித்து ஓராண்டு ஆனதும் அல்லது வேலை கிடைத்து ஆறு மாதம் கழித்தே வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்த ஆரம்பித்தால் போதும். முழுக் கடனையும் திருப்பிச் செலுத்த குறைந்தது ஐந்து ஆண்டுகள் அவகாசம் தரப்படும். படித்து முடித்த பிறகு வேலை செய்யும் நிறுவனத்தின் மதிப்பு, வாங்கும் சம்பளம் அடிப்படையில் அதிகபட்சம் பத்து ஆண்டுகள் வரை அவகாசம் தரப்படும். இந்த முடிவு வங்கிக்கு வங்கி மாறுபடும்.
படிக்கும்போது வட்டி கட்ட தேவையில்லை!
கல்விக் கடன் வாங்கும் மாணவர்களின் பெற்றோர்களது ஆண்டு வருமானம் 4.5 லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருந்தால் அவர்களின் வருமான சான்றிதழை வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டும். வருமான சான்றிதழை ஆரம்பத்தில் சமர்ப்பித்தால் போதுமானது. ஆண்டுக்கொருமுறை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் கிடையாது. இதனால் படிக்கும் காலத்தில் வாங்கும் கடனுக்கான வட்டியை பெற்றோர்கள் கட்ட வேண்டிய அவசியம் கிடையாது.
அந்த கடனுக்கான வட்டியை மத்திய அரசாங்கம் வங்கிகளுக்கு செலுத்திவிடும். படிப்பு முடிந்து வேலைக்குச் சென்ற பிறகு வட்டியுடன் அசலையும் சேர்த்து கட்ட ஆரம்பிக்க வேண்டும். இந்த சலுகை வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களுக்கு கிடையாது.
கடனை சீராக கட்டினால் சலுகை!
இடைவிடாமல் சரியாக கடனைத் திருப்பிச் செலுத்தும் மாணவ, மாணவிகளுக்கு ஒரு சதவிகித வட்டி சலுகை தரப்படும். பொதுவாகவே கல்விக் கடனுக்கான வட்டி விகிதத்தில் மாணவிகளுக்கு 0.5 சதவிகிதம் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. பெரும்பாலானவர்கள் கல்விக் கடனை மாதத் தவணை யாகத்தான் கட்டி வருகி றார்கள். விரைவில் கடனை அடைக்க நினைப்பவர்கள் வேலையின் மூலம் எப்போதெல்லாம் பணம் கைக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் கடனை அடைக்கலாம்.
வரிச் சலுகை என்ன?
திரும்பச் செலுத்தும் கல்விக் கடனுக்கு வட்டிக்கு மட்டும் 80-இ பிரிவின் கீழ் வரிச் சலுகை உண்டு. திரும்பச் செலுத்தும் அசலுக்கு கிடையாது. யாருக் காக கல்விக் கடன் பெறப்பட் டுள்ளதோ, அவருக்குத்தான் வரிச் சலுகை கிடைக்கும். கடனை திரும்பச் செலுத்த ஆரம்பித்து எட்டு ஆண்டுகள் வரை கல்விக் கடனுக்கான வட்டிக்கு வரிச் சலுகை பெறலாம்.
கல்விக் கடன்: கட்டாமல் போனால்..?!
மற்ற கடன்களை திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமோ, அதே நடவடிக்கைகள் கல்விக் கடனை திருப்பிச் செலுத்தாதவர்களுக்கும் பொருந்தும். காவல் துறை நடவடிக்கை, கோர்ட் நடவடிக்கை, பாஸ்போர்ட் முடக்கம் என்று எல்லா நடவடிக்கைகளையும் வங்கி எடுக்க முடியும். அவ்வளவு ஏன், கடன் திருப்பிக் கட்ட மறுப்பவர் பணி செய்யும் நிறுவனத்தைகூட வங்கி அணுகி, கடனை கட்டச் சொல்லலாம்.
வேலை கிடைக்காவிட்டால்..!
கல்விக் கடன் வாங்கி படித்த மாணவர், படித்து முடித்தபின் வேலை கிடைக்காவிட்டால், அது தொடர்பான விவரத்தை சம்பந்தப்பட்ட வங்கியில் தெரிவித்தால் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப் படும். எனவே, ஏதாவது சாக்கு போக்கு சொல்லி கடனை கட்டாமல் விடலாம் என்று நினைக்க வேண்டாம்.
முதுகலைக்கும் கடன்!
இளநிலை படிப்பை வங்கிக் கடனில் முடிக்கும் ஒருவர் முதுநிலைப் படிப்பைத் தொடர மீண்டும் வங்கிக் கடன் கிடைக்குமா எனில், நிச்சயம் கிடைக்கும். இது அனைத்து கல்விக்கும் பொருந்தும்.
இன்ஷூரன்ஸ் அவசியம்!
கல்விக் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்கள் இன்ஷூரன்ஸ் இல்லாமல் இருந்தால், வங்கி முதலில் அவர்களை இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கச் சொல்லி அறிவுறுத்தும்.
ஏனெனில், மாணவருக்கு திடீரென்று ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் அவர்கள் வாங்கியிருக்கும் கடன் தொகையை இன்ஷூரன்ஸ் இழப்பீட்டுத் தொகையிலிருந்து வங்கி எடுத்துக் கொள்ளும்.
கல்விக் கடன்: மறுக்க என்ன காரணம்?
கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் மாணவரின் தந்தையோ, பெற்றோரில் ஒருவரோ அந்த வங்கியில் ஏற்கெனவே கடன் பெற்று அதை சரிவர திருப்பிச் செலுத்தாமல் இருந்தால் (தவணை கடந்த பாக்கி) கடன் மறுக்கப்பட வாய்ப்பு அதிகம். மேலும், மாணவரின் குடும்பத்தில் ஏற்கெனவே ஒருவர் கல்விக் கடன் பெற்று அதைத் திருப்பிச் செலுத்தாமல் இருந்தாலோ, குறைவான மதிப்பெண் எடுத்திருந்தாலோ, அங்கீகரிக்கப்படாத கல்வி மற்றும் கல்வி நிறுவனங்களை தேர்வு செய்திருந்தாலோ கல்விக் கடன் மறுக்கப்படலாம்.
எல்லா சான்றிதழ்களையும் தந்த பிறகும் கல்விக் கடன் நிராகரிக்கப்பட்டால், அதற்கான காரணத்தை எழுத்து மூலமாக தரும்படி வங்கி அதிகாரிகளிடம் கேளுங்கள். அந்த காரணம் நியாயமானதாக இல்லை எனில், உங்களுக்கு கல்விக் கடன் கிடைக்க நிறைய வாய்ப்புண்டு.
யாரிடம் புகார் செய்வது?
”அதிக மார்க்குகளை எடுத்திருக்கிறேன். வங்கிகள் கேட்கும் எல்லா சான்றிதழையும் தந்துவிட்டேன். ஆனாலும், கல்விக் கடன் தர மறுக்கிறார்கள்” என்கிறவர்கள், முதலில் அந்த வங்கியின் மண்டல மேலாளரை அணுகி பிரச்னையை எடுத்துச் சொல்லலாம். உங்கள் பிரச்னைக்கு உரிய பதிலை அவர் சொல்லவில்லை எனில், வங்கித் தலைமைக்கு மின்னஞ்சல், இ-மெயில் அல்லது தபால் மூலம் உங்கள் பிரச்னையை தெரியப்படுத்தலாம். அப்போதும் சரியான தீர்வு கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் முறையிடலாம்.
எளிதில் கடன் கிடைக்க..!
கல்விக் கடன் கேட்டு தாங்கள் குடியிருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள வங்கிகளை அணுகினால் எளிதில் கல்விக் கடன் கிடைக்கலாம். அதேபோல் தாங்கள் வரவு- செலவு கணக்கு வைத்திருக்கும் வங்கிகளில் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பித்தால் சீக்கிரம் கல்விக் கடன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
கல்விக் கடன் அடைபடுவதற்கு உத்தரவாதம் இல்லை என்பதாலேயே பெரும்பாலும் தனியார் வங்கிகள் கல்விக் கடனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. கல்விக் கடன் என்பது நம்முடைய பிறப்புரிமை! அந்த உரிமையை பறிக்கவோ, பறிகொடுக்கவோ வேண்டாம்!
Thanks:-கல்வி வழிகாட்டி

Popular Posts

FACEBOOK COMMENTS BOX