Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

12 February 2014

பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இஸ்லாத்திற்கு மாறியுள்ளார்

இஸ்லாம் மதத்தை பின்பற்றுவதில் தான் பெருமையடைவதாகவும் மூன்றாவது திருமணம் செய்து கொள்ளவில்லை எனவும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இஸ்லாத்திற்கு மாறியுள்ளார். இந்நிலையில் நடிகர் சிம்பு யுவனுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இசைஞானி இளையராஜாவின் மகனும், பிரபல இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா இஸ்லாத்திற்கு மாறியதாக பேசப்பட்டது. இந்நிலையில் இதை அவரே ட்விட்டரில் நேற்று உறுதி செய்தார்.

ஆமாம் நான் இஸ்லாத்தை பின்பற்றுகிறேன். அதற்காக பெருமைப்படுகிறேன் என்று ட்விட்டரில் தெரிவித்திருந்தார். யுவனின் இந்த ட்வீட்டைப் பார்த்த நடிகர் சிம்பு அவருக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இது குறித்து சிம்பு யுவனிடம் ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது, என்னவாக இருந்தாலும் சரி உங்களுக்கு எனது அன்பும், ஆதரவும் எப்பொழும் உண்டு என்று தெரிவித்துள்ளார். பதிலுக்கு யுவன் நன்றி பிரதர் என்று தெரிவித்துள்ளார்.


யுவனை தொடர்ந்து இஸ்லாமை தழுவப்போகும் 2 இளம் ஹீரோக்கள்?


தமிழ் சினிமா ரசிகர்களை பரபரப்புக்குள்ளாக்கிய யுவன் சங்கர் ராஜா, சமீபகாலமாக எந்த விழாக்களிலும் தலை காட்டுவதில்லை என்று கூறப்படுகிறது. சமீபத்தில் அவரது இசையில் உருவாகிக் கொண்டிருக்கும் ‘தரமணி’ படத்தின் செய்தியாளர் சந்திப்பிற்கும் அவர் வரவில்லை. காரணம்? மீடியாக்கள் கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டுமே?
அப்படியே மற்றொரு காரணம் அவர் புதிதாக தாடி வளர்த்து வருகிறாம். இதனால் இனி அவர் முழு இஸ்லாமியராக தோற்றமளிக்கப்போகிறாராம். தற்

 போது இவரை தொடர்ந்து தமிழ் திரையுலகத்தில் மேலும் சில நடிகர்கள் இஸ்லாமியத்தை தழுவப் போகிறார்களாம். இவர்கள் அத்தனை பேரும் யுவனின் நண்பர்கள் என்றும் சினிமா வட்டாத்தில் தகவல்கள் கசிந்துள்ளன.
அதில் இரு ஹீரோக்களைப் கிசுகிசுவாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்பாவின் செல்லப் பிள்ளை என்று செல்லமாக அழைக்கப்படுகிறவர். இவரது முதல் படமே ஜெயமானதால் இன்றைய கோடம்பாக்கம் கொண்டாடும் நடிகர். அப்பா முஸ்லீமாக இருந்தாலும், அம்மா இந்து. அதன் காரணமாக இந்துவாகவே வளர்க்கப்பட்டவர் இவர். தனது பெயரை விரைவில் மாற்றிக் கொண்டு முழு இஸ்லாமியராக மாறப் போகிறாராராம்.
இவரை தொடர்ந்து இன்னொரு ஹீரோவும் தன்னை இஸ்லாத்துக்குள் இணைத்துக் கொள்ள தயாராகி வருகிறாராம். இரண்டெழுத்து ஹீரோவான இவரை சிம்புவுக்கு போட்டியாக சில காலம் மீடியாக்க்ள் சித்தரிந்து வந்தன. இவர்கள் இருவருமே யுவனின் இந்த மாற்றத்தையும் அவரது தைரியத்தையும் நேரில் பாராட்டியதுடன், ‘நாங்களும் உங்களை பின்பற்ற நினைத்திருக்கிறோம்’ என்று கூறிவருகிறார்களாம். கோடம்பாக்கத்தில் இன்னும் எத்தனை மாற்றங்கள் நிகழப்போகிறதோ?


யுவன் பாணி தொடர்கிறது….

இஸ்லாமுக்கு மாறவிருக்கும் இளம் ஹீரோக்கள்
உலக தமிழர்களையெல்லாம் பரபரப்புக்குள்ளாக்கிய யுவன், எந்த விழாக்களிலும் தலை காட்டுவதில்லை. அண்மையில் அவரது இசையில் உருவாகிக் கொண்டிருக்கும் ‘தரமணி’ படத்தின் பிரஸ்மீட்டிற்கும் அவர் வரவில்லை. காரணம்? மீடியாக்கள் கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டுமே?

அப்படியே இன்னுமொரு காரணமும் இருக்கிறதாம் அதில். அவர் புதிதாக தாடி வளர்க்க ஆரம்பித்திருக்கிறார். இனிமேல் அவர் வெளியில் காட்சியளிக்கும்போது நிறைந்த தாடியுடன் ஒரு முழு இஸ்லாமியராகதான் தோற்றமளிப்பாராம். சரி… இருக்கட்டும். நாம் சொல்ல வருவது இதையெல்லாம் விட முக்கியமான விஷயம். யுவனை தொடர்ந்து தமிழ் திரையுலகத்தில் மேலும் சில நடிகர்கள் இஸ்லாமியத்தை தழுவப் போகிறார்களாம். இவர்கள் அத்தனை பேரும் யுவனின் நண்பர்கள் என்பதுதான் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

அதில் இரு ஹீரோக்களைப் பற்றி நேரடியாக சொல்ல முடியாவிட்டாலும் கிசுகிசுவாக சொல்லிவிடுகிறோம். புரிந்து கொள்வது எளிதுதான். அப்பா பிள்ளை என்று செல்லமாக அழைக்கப்படுகிறவர். இவரது முதல் படமே ஜெயம் அடைந்ததால் இன்றைய தேதியில் கோடம்பாக்கம் கொண்டாடும் நடிகர். அப்பா முஸ்லீமாக இருந்தாலும், அம்மா இந்து. அதன் காரணமாக இந்துவாகவே வளர்க்கப்பட்டவர் இவர். தனது பெயரை விரைவில் மாற்றிக் கொண்டு முழு இஸ்லாமியராக மாறப் போகிறாராம். இவருக்கு நம்பிக்கை கொடுத்து நகர்த்தி வருவது யுவன்தான் என்கிறது ரகசியமான தகவல் ஒன்று.

இவரை தொடர்ந்து இன்னொரு ஹீரோவும் தன்னை இஸ்லாத்துக்குள் இணைத்துக் கொள்ள தயாராகி வருகிறார். இரண்டெழுத்து ஹீரோவான இவரை சிம்புவுக்கு போட்டியாக சில காலம் மீடியா சித்தரிந்து வந்தது. இவர்கள் இருவருமே யுவனின் இந்த மாற்றத்தையும் அவரது தைரியத்தையும் நேரில் பாராட்டியதுடன், ‘நாங்களும் உங்களை பின்பற்ற நினைத்திருக்கிறோம்’ என்று கூறிவருகிறார்களாம்.

காலம் இன்னும் எத்தனை மாற்றங்களை சந்திக்க தயாராக இருக்கிறதோ?






யுவன் ஷங்கர் ராஜா இஸ்லாத்திற்கு மாறியது ஏன்…? இயக்குநர் அமீர் விளக்கம்!

இசைஞானி இளையராஜாவின் 2வது மகனும், தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா, தான் இஸ்லாம் மதத்தை தழுவியுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். யுவனின் இந்த டுவிட்டர் அறிவிப்பு கோலிவுட்டையே அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் உண்டாக்கியுள்ளது. இதற்கிடையே யுவனுக்கு, இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை இயக்குநர் அமீர் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுப்பற்றி அமீரை நாம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் பதில்கள் வருமாறு…

யுவன் போக்கில் மாற்றம்
பாலா சாரின் நந்தா படம்பண்ணும் போது யுவன் எனக்கு அறிமுகம். அப்போது வெளிஉலகமே தெரியாத பையனாக இருந்தார் யுவன். ஸ்டுடியோவில் மியூசிக் கம்போசிங், ரெக்கார்டிங் பின்னர் அது முடிந்தால் வீடு என்று இருந்தார். பின்னர் அவரது அடுத்தடுத்த படங்கள் ஹிட்டாக அவருக்கு இயக்குநர்கள் வட்டாரம், நண்பர்கள் வட்டாரம், சினிமா வட்டாரம் என்று நட்பு பெருகியது. இரண்டு மூன்று ஆண்டுகளில் அவரது போக்கும் மாறியது. பார்ட்டி, ஆட்டம் – பாட்டு, கொண்டாட்டம் என்று திரிந்தார். அப்போது நான் யுவனிடம் வாழ்க்கையை நாம் சரியாக தேடி போகணும், நாங்கள் எல்லோரும் சினிமாவை தேடி போனோம், ஆனால் உன் விஷயத்தில் அப்படி இல்லை, சினிமா உன்னைத்தேடி வந்தது. அப்படி ஒரு வாழ்க்கை உனக்கு அமைந்தது. அதை பயன்படுத்திக் கொள் என்றேன்.
பணம், புகழ், போதை மட்டுமே வாழ்க்கை இல்லை
பொதுவாக வாழ்க்கையின் முதல்பாதியில் அமைதியாக இருப்பவர், இரண்டாம் பாதியில் ஆட்டம் போடுவார். அதுபோன்று தான் இப்போது நீயும் செய்கிறாய். என் அனுபவத்தில் சொல்கிறேன், இந்த வாழ்க்கை உனக்கு வேண்டாம். புகழ், பணம், போதை மட்டுமே வாழ்க்கை இல்லை. சினிமாவில் பாதிபேரோடு வாழ்க்கை வெறுமையாக இருக்கிறது. சினிமாவில் மிச்சமாவது இந்த வெறுமை மட்டும்தான். ஒருத்தர் சினிமாவில் எவ்வளவு ஜெயிச்சாலும் அவர்களுக்கு வாழ்க்கையில் ஏதாவது ஒரு குறை இருக்கும் என்று என்னால் முடிந்தளவுக்கு அட்வைஸ் செய்தேன்.
என் தேடுதலுக்கான விடை இஸ்லாம் மதத்தில் இருக்கிறது
ஒருநாள் என்னிடம் தான் முழுவதுமாக இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டேன் என்று யுவன் கூறினார். ஏன்? என்று கேட்டபோது என் மனதில் நிம்மதி இல்லை, அமைதி இல்லை, என்னுள் ஏகப்பட்ட குழப்பம் உள்ளது. இவை எல்லாவற்றுக்குமான விடையும், என்னுள் இருக்கும் தேடுதலுக்கான விடையும் இஸ்லாம் மதத்தில் உள்ளது. அதனால் தான் நான் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டேன் என்று கூறினார். யுவன் இப்படி கூறுவதற்கு முன்பாக அவரை நான் ஒருமுறை சந்தித்தபோது, வாழ்க்கையில் அவர் எதையோ தொலைத்து தேடுவது போன்று எனக்கு தோன்றியது என்றார்.
யுவன் ஷங்கர் ராஜா இஸ்லாத்திற்கு மாறியது ஏன்…? இயக்குநர் அமீர் விளக்கம்! இசைஞானி இளையராஜாவின் 2வது மகனும், தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா, தான் இஸ்லாம் மதத்தை தழுவியுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். யுவனின் இந்த டுவிட்டர் அறிவிப்பு கோலிவுட்டையே அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் உண்டாக்கியுள்ளது. இதற்கிடையே யுவனுக்கு, இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை இயக்குநர் அமீர் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுப்பற்றி அமீரை நாம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் பதில்கள் வருமாறு… யுவன் போக்கில் மாற்றம் பாலா சாரின் நந்தா படம்பண்ணும் போது யுவன் எனக்கு அறிமுகம். அப்போது வெளிஉலகமே தெரியாத பையனாக இருந்தார் யுவன். ஸ்டுடியோவில் மியூசிக் கம்போசிங், ரெக்கார்டிங் பின்னர் அது முடிந்தால் வீடு என்று இருந்தார். பின்னர் அவரது அடுத்தடுத்த படங்கள் ஹிட்டாக அவருக்கு இயக்குநர்கள் வட்டாரம், நண்பர்கள் வட்டாரம், சினிமா வட்டாரம் என்று நட்பு பெருகியது. இரண்டு மூன்று ஆண்டுகளில் அவரது போக்கும் மாறியது. பார்ட்டி, ஆட்டம் – பாட்டு, கொண்டாட்டம் என்று திரிந்தார். அப்போது நான் யுவனிடம் வாழ்க்கையை நாம் சரியாக தேடி போகணும், நாங்கள் எல்லோரும் சினிமாவை தேடி போனோம், ஆனால் உன் விஷயத்தில் அப்படி இல்லை, சினிமா உன்னைத்தேடி வந்தது. அப்படி ஒரு வாழ்க்கை உனக்கு அமைந்தது. அதை பயன்படுத்திக் கொள் என்றேன். பணம், புகழ், போதை மட்டுமே வாழ்க்கை இல்லை பொதுவாக வாழ்க்கையின் முதல்பாதியில் அமைதியாக இருப்பவர், இரண்டாம் பாதியில் ஆட்டம் போடுவார். அதுபோன்று தான் இப்போது நீயும் செய்கிறாய். என் அனுபவத்தில் சொல்கிறேன், இந்த வாழ்க்கை உனக்கு வேண்டாம். புகழ், பணம், போதை மட்டுமே வாழ்க்கை இல்லை. சினிமாவில் பாதிபேரோடு வாழ்க்கை வெறுமையாக இருக்கிறது. சினிமாவில் மிச்சமாவது இந்த வெறுமை மட்டும்தான். ஒருத்தர் சினிமாவில் எவ்வளவு ஜெயிச்சாலும் அவர்களுக்கு வாழ்க்கையில் ஏதாவது ஒரு குறை இருக்கும் என்று என்னால் முடிந்தளவுக்கு அட்வைஸ் செய்தேன். என் தேடுதலுக்கான விடை இஸ்லாம் மதத்தில் இருக்கிறது ஒருநாள் என்னிடம் தான் முழுவதுமாக இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டேன் என்று யுவன் கூறினார். ஏன்? என்று கேட்டபோது என் மனதில் நிம்மதி இல்லை, அமைதி இல்லை, என்னுள் ஏகப்பட்ட குழப்பம் உள்ளது. இவை எல்லாவற்றுக்குமான விடையும், என்னுள் இருக்கும் தேடுதலுக்கான விடையும் இஸ்லாம் மதத்தில் உள்ளது. அதனால் தான் நான் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டேன் என்று கூறினார். யுவன் இப்படி கூறுவதற்கு முன்பாக அவரை நான் ஒருமுறை சந்தித்தபோது, வாழ்க்கையில் அவர் எதையோ தொலைத்து தேடுவது போன்று எனக்கு தோன்றியது என்றார்.

Popular Posts

FACEBOOK COMMENTS BOX