
இன்று அனேகமானவர்கள் சிறு, சிறு குற்றங்களுக்காக கைது செய்யப்படுவதும், தடுப்புக்காவலில் வைக்கப்படுவதும் சாதாரண விடயமாகிறது. இத்தகைய ஒரு சம்பவம் ஏற்பட்டதும் நமதூர் சகோதரர்கள் குறிப்பாக பெண்கள் செய்வதறியாது பல இடங்களில் அலைந்து திரிகின்றனர். பெருந் தொகைப் பணங்களை இதற்காக செலவிடுகின்றனர். இதற்கு சட்டம் பற்றிய ஆரம்ப அறிவை அவர்கள் அறிந்திருக்க வேண்டும். நெருங்கிய சொந்தம் அல்லது நண்பராக இருந்தாலும் பிணை எடுப்பதில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
ஒரு ஜனநாயக நாடொன்றில் சட்ட ஆட்சி (Rule of
Law) மிகவும் செல்வாக்குச் செலுத்துகிறது. அனைத்து மக்களும் சட்டத்தினாலேயே ஆளப்படுகின்றனர். சட்டம் என்பது ஒரு சமுகத்தை ஆளும் விதிகளின் தொகுப்பாகும். ஆனால் சில பிரதேசங்களில் சமுதாயச் சட்டம் இருக்கின்றது. இதற்குக் கட்டுப்படவில்லை என எவரும் வழக்குத் தொடர முடியாது.
குற்றம் சாட்டப்பட்ட எவரும் தனது பக்க நியாயத்தை எடுத்துரைக்க நியாயமான சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும். அவ்வாறின்றி அவரைப் பாதிக்கும்
முடிவு எதனையும் நீதி வழங்குவோர் எடுக்க முடியாது.
நியாயமான காரணங்களுடன் ஒருவரை கைது செய்து தடுப்புக் காவலில் வைக்கும் அதிகாரம் பொலிசாருக்கு உண்டு. ஒருவர் கைது செய்யப்பட்டு 48 மணி நேரம் வரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட முடியும். ஆனால் விசாரணையின் போதோ அல்லது வேறு எந்த சந்தர்ப்பத்திலோ எத்தகைய தண்டனைகளையும் தடுப்புக் காவலில் உள்ளவருக்கு வழங்க முடியாது.
ஒருவர் தடுத்து வைக்கப்பட்டால் அவரை எவ்வாறு பிணையில் எடுப்பது என்ற ஏற்பாடுகளை அவர்களோ அல்லது அவர்களது உறவினர்களோ அறியாமல் இருப்பதுவும், அது பற்றிய தகவல் கிடைக்கும் போது அதனை செவிமடுக்காமல் இருப்பதையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தம் எனக் கருதுகிறேன். ஆகவே விளக்க மறியலில் உள்ள ஒருவரை எவ்வாறு பிணையில் எடுக்கலாம் என்பதை தெரிந்து வைத்திருப்பது எம் வாசகர்களுக்கு பெரிதும் உதவும் என நம்புகிறேன்.
பிணை ஏற்பாடுகள் சட்டத்திற்குச் சட்டம் வேறுபடுகின்றது.
எமது நாட்டில் சட்டத்தை இயற்றுகின்ற அதிகாரம் பாராளுமன்றத்திற்கு
உரியது. அச்சட்டங்களின் கீழ் கைது செய்யப்படுபவர்கள், எவ்வாறு பிணையில் விடப்படலாம் என்று கூறுவதுண்டு. இதனால் பிணை ஏற்பாடுகள் சட்டத்திற்குச் சட்டம் வேறுபடுகின்றது. உதாரணமாக இலஞ்சம் வாங்கிய குற்றத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டால் விளக்க மறியலில் வைக்கப்படும் போது சட்டமா அதிபரின் அனுமதியின்றி அவரை பிணையில் எடுக்க முடியாது. இதே போன்று அவசர காலச் சட்டத்தில் கைது செய்யப்பட்டோர், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோர், அந்தந்த சட்ட ஏற்பாடுகளுக்கமைவாகவே பிணை வழங்க முடியும்.
குற்றவியல் நடவடிக் கோவையின் கீழ் பிணை ஏற்பாடுகள்
இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோர் மறியலில் தடுத்து வைக்கப்பட்டதும் அவர்களுக்கான பிணை ஏற்பாடுகளும் அச்சட்டத்திலேயே கூறப்பட்டுள்ளது. அச்சட்டக் கோவையின் கீழ் குற்றங்களை பிணையில் விடக்கூடிய குற்றங்கள் எனவும், பிணையில் விடமுடியாத குற்றங்கள் எனவும் இரு வகைப்படும். பிணையில் விடக்கூடிய குற்றங்களின் கீழ் கைது செய்யப்படுபவர்களை எந்த வித தாமதமுமின்றியும், சிரமங்கள் இன்றியும் பிணையில் எடுக்கலாம்.
பிணையில் விடத் தகாத குற்றங்கள் என்பது எப்போதும் பிணையே இல்லாத குற்றங்கள் என்பது பொருளல்ல. சில கட்டுப்பாடுகளின் கீழ் பிணையில் செல்லக்கூடிய குற்றங்கள் என்பதே அதன் விளக்கமாகும்.
ஒருவர் பிணையில் செல்வதற்கு தயாரான நிலையில் கவனிக்க வேண்டிய இன்னுமொரு முக்கிய அம்சம் வழக்கு கால கட்டமாகும். காலத்திற்கேற்றவாறு
பிணை எடுக்கும் முறையும் வித்தியாசப்படுவதால் மூன்று வகையான கட்டங்களை அறிவது அவசியமாகும்.
1.
புலன் விசாரணைக் கட்டம்
2.
நீதிமன்ற விளக்க கட்டம்
3.
மேன் முறையீட்டு கால கட்டம்
புலன் விசாரணைக் கட்டம்:
புலன் விசாரணைக் கட்டமானது பொலிசாரினால் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டதிலிருந்து தொடங்குகிறது. ஒருவரால் செய்யப்பட்ட குற்றங்கள் பற்றிய வாக்கு மூலங்களைப் பதிதல், சாட்சிகளை தேடல் மற்றும் குற்றத்துடன் தொடர்பான விடயங்களை புலனாய்வு செய்தலைக் குறிப்பிடலாம்.
நீதிமன்ற விளக்க கட்டம்:
ஒருவருக்கான குற்றப் பத்திரிகை வாசி;க்கப்பட்டதும் நீதிமன்ற விளக்கம் தொடர்கிறது. நீதவான் ஒருவர் அல்லது மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவர் விடயத்திற்கேற்றாற்
போல் ஏதாவது விசாரணையில் அல்லது விளக்கத்தின் போது பிணை வழங்க முடியாத தவறொன்றி;ற்காக குற்றம்சாட்டப்பட்ட எவரேனும் ஆளை அவரது தற்துணிவின்; பெயரில் பிணையில் விடலாம். தற்துணிவு என்பது தன்னிச்சையான என்பது பொருளல்ல
சட்டப்படியான காரணங்களி;ன் கீழ் என்பது பொருள்படும். எனவே குறித்த நபருக்கு பிணை கொடு;ப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்கின்ற நீதிமன்றம் கீழ்வரும் விடயங்களைக் கருத்திற் கொள்ளும்
1.
சந்தேக நபரை பிணையில் விட்டால் அவர் தலைமறைவாகக் கூடியவரா?
2.
சந்தேக நபர் சாட்சி;க்காரர்களை அச்சுறுத்தக்கூடியவரா?
3.
சந்தேக நபர் வெளியில் சென்று மேலும் குற்றம் புரிய வாய்ப்பு உண்டா?
இத்தகைய எந்தவொரு காரணங்களையும் குற்றம் சாட்டப்பட்டவர் செய்யமாட்டார் என்ற நம்பி;க்கை வரும் என்றால் அவரை பிணையில் விட நீதிமன்றம் கட்டளையிடும். இல்லையேல் பிணை நிராகரிக்கப்படும்.
பொதுவாக பொலிசாரின் அபிப்பிராயம் இவ்விடயத்தில் கேட்கப்படும். பிணை மறுக்கப்பட்டால் அதற்குரிய காரணத்தை நீதிமன்றம் தெரிவிக்க வேண்டும்.
மேன் முறையீட்டு காலம்:
மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவருக்கு பிணை வழங்கப்படமாட்டாது.
ஆயினும் மேன்முறையீட்டு தீர்ப்பு வழங்கும் வரை அவர் தூக்கில் இடப்படமாட்டார். ஏiனைய குற்றங்களுக்கு நீதிமன்றம் பிணை பற்றி தீர்மானிக்கலாம். எனவே பிணைகளில் காசுப் பிணை, சரீரப் பிணை அல்லது இரண்டும் வழங்கப்படலாம்.