தங்காலை : எவனொருவன் ஹலாலான பொருளிலிருந்து அல்லாஹ்வை வணங்கும் ஒரு வீட்டை கட்டிக்கொடுப்பானாகில் அவனுக்காக அல்லாஹ் சுவர்கத்தில் முத்துக்கள்இரத்தினங்களிலான ஒரு வீட்டை அமைத்துக்கொடுப்பான்.(தபரானி)
ஒரு முஸ்லிம் இறந்துவிட்டால் மூன்று கருமங்களில் இருந்தல்லாது அவனுடைய கிரிகைகள் நின்றுவிடும்.அவையாவன சதகதுள் ஜாரியா எனப்படும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தர்மம் அல்லது பயன் பெற்றுக்கொள்ளப்படும் அறிவு அல்லது அவனுக்காக பிரார்த்தனை புரியும் ஸாலிஹான பிள்ளைகள்.
அன்புடையீர்
அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்)
தங்காலை முகிதீன் ஜூம்ஆ பள்ளிவாயல் நிர்வாக சபைபள்ளிவாயலின் புதிய கட்டட நிர்மாணம் தொடர்பாக இக்கடிதம் மூலம் தங்களை தொடர்பு கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றது. உலகில் வாழும் காலங்களில் நன்மையான விடயங்கள் நாம் ஈடுபடுவதும்நன்மையான விடயங்கள் நடைபெருவதட்காக நாம் எம்மால் முடிந்த அனைத்து உதவிகளை செய்வதும் அல்லாஹ் எமக்களித்த பெரும்பாக்கியமாகும். அந்த வகையில் எமது பள்ளிவாயலின் புதிய கட்டட நிர்மானத்திட்காக உதவக்கூடிய பெறுமதிமிக்க ஒரு அறிய சந்தர்பம் எமக்கு கிடைத்துள்ளது.
எமது பள்ளிவாயல் ஊரின் மிக முக்கியமான இடத்தில் அமைந்துள்ளது என்பது யாவரும் அறிந்த விடயமாகும். எனவேஅதன் பயன்பாடு அதிகமாக காணப்படுகிறது. இப்பள்ளிவாயல் மஹல்லாவாசிகள் மட்டுமன்றி பிரயாணிகள்பிரதான வீதிக்கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள்கடைகளுக்கு வரும் பொது மக்கள் என்று பல்வேறுபட்ட மக்கள் தொழவரக்கூடிய ஒரு இடமாக இப்பள்ளிவாயல் காணப்படுகிறது. அதுமட்டுமன்றி தூரப் பிரயாணம் மேற்கொள்ளும் பெண்கள் தொழுவதற்காக இப்பள்ளிவாயலை நாடி வருகின்றனர். பெண்களுக்கு என தனியான வசதிகள் எதுவும் இல்லாத காரணத்தினால் இவ்வாறு வருகின்ற பெண்கள் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந்நிலை எமதூருக்கு தலைகுனிவான விடயமட்டுமன்றிஇவர்களது தேவைகளை பூர்த்தி செய்வது எமக்கு மார்க்க கடமையாகும்.
எமதூரில் மிகப்பழமை வாய்ந்த பள்ளிவாயல்களில் இப்பள்ளிவாயலும் ஒன்றாகும்.தற்போதைய கட்டடம் சுமார் 90 வருடம் பழமை வாய்ந்ததாகும். எனவே இப்பள்ளிவாயலை பல்வேறு தரப்பினரதும் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியதாக பெண்கள் தொளுகையரைகுரான் மத்ரசா பாலர் பாடசாலை என்பவற்றைஉள்ளடக்கியதாக முற்று முழுவதும் புனர்நிர்மாணம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. பல வருடங்களுக்கு முன்னரே இது உணரப்பட்டு புதிதாக அமைக்க எமது நிர்வாக சபை முயற்சிகள் மேற்கொண்ட போதும் வீதி அபிவிருத்தி கரணமாக எம்மால் அதை நிறைவேற்ற முடியவில்லை. தற்போது எமது பிரதான வீதி எல்லை நிர்ணயிக்கப்பட்டு சுவர் கட்டப்பட்டுள்ளதால் எமது நிர்வாக சபை இப்பள்ளிவாயலை தாமதமின்றி புணர் நிர்மானம் செய்ய ஏகமானதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு தேவைகளை கருத்திற்கொண்டு இப்பள்ளிவாயலை மாடிக்கட்டடமாக அமைக்கப்படவுள்ளது. இதற்காக பெருந்தொகைப்பணம் தேவைப்படுகின்றது. இவ்வாறு தேவைப்படும் பணத்தில் கணிசமான தொகையை இப்பள்ளிவாயல் மகல்லாவாசிகளைடமிருந்தும்எமதூர் வெளியூர் மக்களிடமிருந்தும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று எமது நிர்வாக சபை பெரிதும் விரும்புகின்றது.
அன்பு இஸ்லாமிய சகோதரர்களே! அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான பள்ளிவாயல்களை அமைப்பதில்அல்லாஹ்வுக்காக என்ற மனத்தூய்மையுடனும்மனவிருப்பத்துடனும் எம்மால் முடியுமான அனைத்து விடயங்களையும் உதவிகளையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வுலகில் சில காலம் வாழும் வீட்டை அமைப்பதற்காக எவ்வளவோ முயற்சிகளை மேட்கொள்கின்றோம்.அதிக தொகைப்பணம் செலவிடுகிண்றோம்.எமது உலக வாழ்விலும்சுவர்க்க வாழ்விலும் அதிக நன்மையை பெற்றுத்தரக்கூடியதான பள்ளிவாயல் கட்டும் பணியில் எங்களால் முடியுமான அதிக முடியுமான அதிகூடிய தொகையை பெற நாம் உறுதி கொள்வோமாக.
குறிப்பு நீங்கள் குறிப்பிடும் தொகையை கட்டட வேலைகள் ஆரம்பித்துள்ளதால் உங்கள் வசதிக்கேற்ப முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ வழங்க முடியும்.
மேலதிக தொடர்புகளுக்கு,
தலைவர்: செயலாளர்: பொருளாளர்:
Alhaj M.Wazeer Alhaj M.Sanun Nawshad Ahamed
Tel:0777855258 Tel:0777254565 Tel:0777911414
Email: tmws_info44@yahoo.com


