Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

17 March 2014

மலேசியா விமானம் போன்றே மாயமான சில விமானங்கள்!!!

தற்போது உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் தான் மார்ச் 8 ஆம் தேதி காணாமல் போன மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் MH370. 239 பயணிகளுடன் சென்ற அந்த விமானமானது திடீரென்று மாயமாகிவிட்டதோடு, இன்று வரை அதற்கான உண்மையான காரணம் எதுவும் கிடைக்கவில்லை. வரலாற்றில் இந்த ஒரு சம்பவம் மட்டும் நடந்ததில்லை. இதுப்போன்று நிறைய விமானங்கள் காணாமல் போயுள்ளன. இங்கு வரலாற்றில் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த மற்றும் இன்று வரை கண்டுபிடிக்கப்படாமல் உள்ள மாயமான விமானங்களை பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

அமெலியா இயர்ஹார்ட் சென்ற விமானம்
அமெரிக்காவை சேர்ந்த பெண் பைலட் அமெலியா இயர்ஹார்ட், சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உலகைச் சுற்றி பார்க்க 1937 ஆம் ஆண்டு முயற்சிக்கும் போது, பசிபிக் பெருங்கடல் வழியே பறந்து சென்றார். அப்போது லேசான மேக கூட்டத்தில் சென்றவர், மாயமாகிவிட்டார். அதிலும் அவர் பசிபிக் பெருங்கடல் வழியே சென்ற பகுதியில் சோதனை செய்த போது, அப்பகுதியில் அவரது உடலோ அல்லது அவர் சென்ற விமானத்தின் சிறு பாகம் கூட கிடைக்கவில்லை.

விமானம் 739 1962

ஆம் ஆண்டு இராணுவ விமானம் ஒன்று மாயமானது. இந்த விமானத்தில் 93 இராணுவ வீரர்களும், 3 தெற்கு வியட்நாம் மக்களும் பயணித்தனர். இந்த விமானமானது மேற்கு பசிபிக் பெருங்கடலின் வழியே செல்லும் போது திடீரென்று மாயமாகிவிட்டது. ஒருவேளை வெடித்திருக்குமோ என்று பார்த்தால், அதற்கான ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை. ஆகவே இதுவும் வரலாற்றில் காணாமல் போன விமானங்களில் ஒன்றாக உள்ளது.  

ஏர் பிரான்ஸ் விமானம் 447
இந்த விமானத்தைப் பற்றி சொல்ல வேண்டுமானால், ஏர் பிரான்ஸ் விமானம் 447 ஆனது பிரேசிலிய வான்வெளியில் இருந்து பறந்து, செனகல் வான் எல்லைக்குள் நுழையும் போது, திடீரென்று விமான போக்குவரத்து கட்டுப்பாட்டுடன் கொண்டிருந்த அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுவிட்டது. இன்று வரை அது ஏன் நடந்தது என்று யாருக்கும் தெரியாது. இருப்பினும் 5 நாள் விசாரணைக்கு பிறகு, அந்த விமானமானது அட்லாண்டிக் பெருங்கடலைக் கடக்கும் போது வெடித்திருக்கும் என்று எண்ணி சாதாரணமாக விட்டுவிட்டனர்.

பெர்முடா முக்கோணம்
பெர்முடா முக்கோணம் என்றாலே அனைவருக்கும் பயம் ஏற்படும். ஏனெனில் அந்த பகுதியை கடக்கும் எந்த ஒரு பொருளும் மாயமாகிவிடும் என்பதால் தான். அதுமட்டுமல்லாமல், உண்மையிலேயே விமானம் 19, பெர்முடா முக்கோணத்தை கடக்கும் போது மாயமாகிவிட்டது. இதுப்போன்று 5 விமானங்கள் இந்த பகுதியை கடக்கும் போது மாயமாகியுள்ளன. இன்று வரை இதற்கான காரணத்தை யாரும் கண்டறியவில்லை.

ஸ்டார் டஸ்ட் விமானம்
இந்த கதையைக் கேட்டால் உண்மையிலேயே ஆச்சரியப்படுவீர்கள். ஏனெனில் இதுப்போன்று வரலாற்றில் எந்த ஒரு விமானமும் காணாமல் போனதில்லை. அது என்னவென்றால், ஸ்டார் டஸ்ட் விமானமானது ஆண்டிஸ் மலைத்தொடரை கடக்கும் போது, எந்த ஒரு தடயமும் இல்லாமல் காணாமல் போய்விட்டன. ஆனால் அதை பற்றி சோதனை செய்யும் போது, ஒரு வித்தியாசமான யாரும் புரிந்து கொள்ள முடியாத தந்திக்குறிப்பு ஒன்று மட்டும் கிடைத்தது. ஆனால் அதை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை.

மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் MH370

மர்மமாக காணாமல் போன விமானங்களில் ஒன்று தான், மார்ச் 8 ஆம் தேதி மாயமான மலேசியா ஏர்லைன்ஸ் விமானம். இந்த விமானம் 239 பயணிகளுடன் மலேசியாவில் இருந்து சீனாவுக்கு சென்று கொண்டிருந்த போது, சீன கடற்பகுதியில் மாயமானது. ஒரு வாரம் ஆகியும் இன்னும் அந்த விமானம் என்ன ஆனது, அதில் உள்ளவர்கள் என்ன ஆனார்கள் என்பது இதுவரை புரியாத புதிராக உள்ளது. மேலும் இதனை கண்டுபிடிக்க உலக நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து தேடிக் கொண்டிருக்கிறது. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

Popular Posts

FACEBOOK COMMENTS BOX