இந்தியாவை பொறுத்த வரையில் கர்ப்பபை வாய் புற்றுநோய்க்கு அடுத்தபடியாக மார்பக புற்று நோய் பெண்களை அதிக அளவில் தாக்குகிறது. அமெரிக்க உணவு பழக்க வழக்கங்கள் இந்தியாவிலும்
கடைபிடிக்கப்பட்டு வருவதால் அமெரிக்காவை போல் இங்கும் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் புற்றுநோய் தாக்கம் அதிகமாகும் என கண்டறியப்பட்டுள்ளது.
பெண்களுக்கு மார்பகத்தில் கட்டி, வலி, தடித்திருத்தல், காம்பில் கசிவு அல்லது மார்பக அளவில் மாற்றங்கள் இதில் ஏதாவது இருந்தால் புற்றுநோய் தாக்கப்பட்டு இருக்கிறது என உணரலாம். 40 வயதிற்கு மேல் உள்ள பெண்கள் வருடம் ஒரு முறை அல்லது 2 வருடத்திற்கு ஒருமுறையாவது மெமோ கிராம் சோதனை செய்து கொள்ள வேண்டும்.
மார்பகத்தை எக்ஸ்ரே படம் எடுக்கும் சோதனையே இந்த மெமோ கிராம் சோதனையாகும். குறிப்பாக இந்த நோய் குடும்பத்தில் தாய், மகன், சகோதரி யாருக்கேனும் தாக்கி இருந்தால் முதல் குழந்தை 30 வயதுக்கு மேல் கருத்தரித்தாலோ, 11 வயதுக்கு முன்பு மாத விலக்கு ஏற்பட்டாலோ, 55 வயதுக்கு மேல் மாதவிலக்கு நிற்காமல் இருந்தாலோ, குழந்தை இல்லாமல் இருந்தாலோ, ஹார்மோன் மாத்திரைகள் அதிக நாட்கள் உட்கொண்டாலோ, கொழுப்பு சத்துக்கள் நிறைந்த உணவு பொருட்களை அதிகம் சாப்பிட்டாலோ மார்பக புற்றுநோய் தாக்கும் அபாயம் உண்டு.
இவர்கள் கண்டிப்பாக மெமோகிராம் சோதனை எடுத்து கொள்ள வேண்டும். மேலும் பெண்கள் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை பெற்றால் 100 சதவீதம் குணப்படுத்த முடியும். இதற்கான அனைத்து நவீன கருவிகளும் எங்கள் மருத்துவமனையில் உள்ளது. ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க சுயபரிசோதனை முக்கியம்.
இந்த நோய் தொற்று நோய் அல்ல. நோயில் இருந்து தங்களை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்றால் அதிக கொழுப்பு சத்து மிகுந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். அதிக எடை இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். மாதவிடாயை மாற்றக்கூடிய மாத்திரைகளை அதிகமாக பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவை சரியாக கடைபிடித்தால் இந்நோயின் தாக்கம் இருக்காது
பெண்கள் மார்பக புற்று நோய்:- இந்தியாவில் பெங்களூருக்கு முதலிடம்
ஒவ்வொரு நாளும் விஞ்ஞானம் முன்னேறி வரும் நிலையில் சுவாசப்பை புற்று நோயை தவிர மற்ற புற்றுநோய்கள் உண்டாவதற்க்கான உண்மைக் காரணங்கள் என்ன என்பது பற்றி ஆராய்ச்சியாளர்களால் முடிவாக எதுவும் சொல்ல முடியாமல் இருக்கிறது.
பெண்களை மார்பு மற்றும் கருப்பை வாசல் புற்றுநோய்கள் தான் அதிக அளவில் தாக்குகிறது. அதில் மார்பகப் புற்றுநோயை உடனே கண்டறிந்து உரிய காலத்தில் உரிய பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலமாக தடுக்க முடியும். குறிப்பாக மார்பகத்தின் பாலகான்களிலும் சுரப்பிச்சோனைகளிலும், அதிகளவில் புற்று ஏற்படுகின்றது.
கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர், கர்பப்பை புற்றுநோய் அதிக அளவில் காணப்பட்டது என்றும் இதை தடுக்கும் விதம் மற்றும் சுகாதாரம் பற்றி விழிப்புணர்வு உண்டாக்கியதால் கர்பப்பை புற்றுநோய் குறைந்துள்ளது என்றும் எனினும் தற்சமயம், இந்தியாவில் மார்பக புற்றுநோய் அதிக அளவில் இருக்கிறது எனவும் நம்பபடுகிறது.
குறிப்பாக விஞ்ஞான மாற்றங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையினுடைய தென்னகத் தலைநகரம் என கூறப்படும் பெங்களூர் நகரில் தான் தற்சமயம் இந்த புற்று நோயின் தாக்குதல் கூடுதலாக இருக்கிறது.
இந்தியாவில் மும்பை நகருக்கு அடுத்தபடியாக பெங்களூர் நகரில் தான் கணினி, தகவல் தொழில்நுட்பத் துறைகள் வேகமாக வளர்ச்சியை அடைந்தன. அதுபோல் மக்கள் தொகையின் அடிப்படையில் புற்றுநோய் பதிவு அகத்தின் 2013-ம் ஆண்டிற்கான அறிக்கையின்படி இந்தியாவிலேயே பெங்களூர் நகரில் தான் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்றுநோய் கூடுதலாகி உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
கூடுதலாகும் ஒவ்வொரு லட்சம் மக்கள் தொகைக்கும் 36.6 புதிய மார்பகப் புற்று நோயாளிகள் தென்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. வாழ்க்கை முறையில் உண்டான மாறுதல்களே இந்த நோய்கள் அதிகரிக்க காரணம் என மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
பெங்களூருக்கு அடுத்தபடியாக திருவனந்தபுரம் 35.1 புற்று நோயாளியுடன் 2வது இடத்திலும், சென்னை 32.6 என்ற எண்ணிக்கையின் அடிபடையில் 3வது இடத்திலும் இருப்பதாக ஆய்வறிக்கை கூறுகிறது. மொத்தம் 11 நகர கணக்கெடுப்பில் புனே 23.3 என்று கடைசியாகவும், அதற்கு முன் கொல்லம் 25.8 எனும் எண்ணிக்கையை கொண்டு இருப்பதாகவும் அந்த அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
காலம் தாமதமான கல்யாணம், குறைவான குழந்தை பிறப்பு, குழந்தைகளுக்குத் தாய்ப்பால் தவிர்க்கும் போக்கு மாற்றம் போன்றவை தான் இந்த புற்று நோய்க்குக் காரணங்களாகக் கருதப்படுகின்றன. உடற்பருமனும் இந்த நோய்க்கான ஒரு காரணமாக உள்ளது.
மேலும், உணவுப் பழக்கங்களின் மாற்றங்களினால் பெண்கள் மிக சிறிய வயதினிலேயே பூப்பெய்துபோவது, காலம்கடந்த மாதவிடாய் நிறுத்தமும் இந்த சுழற்சிக்கான காலகட்டத்தையும் அதிகப்படுத்துகின்றது. பத்து வருடங்களுக்கு முன்னால் 45-55 வயதில்தான் இந்த நோய்த்தாக்கம் ஏற்படும் என்றிருந்தது மாறி தற்போது 18 வயதிலேயே மார்பகப் புற்று நோயாளிகளைக் காண நேரிடுகின்றது.
இதற்கிடையில் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கண்டிப்பாக சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் தவறாமல் செய்ய வேண்டும். குறிப்பாக மாதவிலக்கு நிற்கும் நாட்களில் செய்வது சிறப்பானது. மார்பகப் புற்றுநோயில் வலி பெரும்பாலும் தோன்றுவதில்லை.
இதனால் வலியில்லை என்று அலட்சியம் செய்யக்கூடாது. பெரும்பாலும் வலியில்லாமல் காணப்படும் கட்டிகள் தான் இதன் அறிகுறியாக உள்ளது. மற்ற அறிகுறிகள் வருமாறு
1. மார்பகங்கள் அல்லது அக்குளில் புதிய அல்லது வழக்கத்துக்கு மாறான கட்டி, அல்லது தடித்து இருத்தல்
2. மார்பகத்தின் அளவு மற்றும் வடிவத்தில் மாற்றம்
3. மார்பக தோலில் சிவப்பு தடுப்புகள் போல தொரிவது
4. மார்பு காம்புகளில் இருந்து தானாகவே ரத்தம் வடிதல்
5. மார்பு காம்புகள் உள்ளிழுத்துக் கொள்வது
6. மார்பகங்களில் வலி இது
போன்ற சந்தேகங்கள் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் செல்வது நல்லது.