Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

23 March 2014

சிசேரியனுக்குப் பிறகு பெண்கள் கடைபிடிக்க வேண்டியவை ?

தாயின் உடல் நிலையைப் பொறுத்து நான்கிலிருந்து ஆறு நாட்கள் வரை மருத்துவமனையில் இருக்க வேண்டும். மருத்து வமனையிலிருந்து வீடு திரும்பியதும் மெல்ல உங்கள் வழக்கமான எளிய பணிகளைத் தொடக்கலாம். சிசேரியன் அறுவை சிகிச்சை முடிந்து ஒரு மாதத்திற்குள்ளேயே உங்களுடைய எல்லா வேலைகளையுமே செய்ய இயலும்.
ஆபரேஷன் முடிந்து ஓரிரு நாட்களில், நீங்கள் சாதாரண உணவை உட்கொள்ளலாம். சிசேரியனுக்கு உணவுக் கட்டுப்பாடுகள் கிடையாது. சமச்சீரான உணவு வகைகளைச் சாப்பிடுவது நல்லது. உணவில் புரதச்சத்து கொஞ்சம் அதிகம் இருக்கட்டும்.
நெய் போன்ற கொழுப்புச்சத்து நிறைந்த பொருட்களைத் தவிர்க்கவும். காரணம், கர்ப்ப காலத்தின்போது உடல் எடை கூடியிருக்கும். அதைக் குறைப்பதற்கு இந்தக் கொழுப்பு உணவுகள் எந்தவகையிலும் உதவாது.
ஆறு வாரங்களுக்கு அதிக எடையுள்ள பொருட்களைத் தூக்குவதைத் தவிர்க்கவும். அதே போல் தாம்பத்திய உறவையும் ஆறு வாரங்களுக்குத் தவிர்த்து விடுங்கள்.
நான்கிலிருந்து ஆறுவாரங்களுக்குப் பிறகு, அடிவயிற்றுத் தசைகளுக்கான உடற் பயிற்சிகளைத் தொடக்கலாம். தவிர சிசேரியனுக்குப் பிறகு வேறென்ன செய்ய வேண்டும்… எப்போதெல்லாம் பரிசோதனைக்கு வரவேண்டும் என்பதையெல்லாம் உங்கள் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள். சிசேரியனால் ஆபத்து உண்டா?
பொதுவாக, சிசேரியன் அறுவை சிகிச்சை ஆபத்தில்லாதவை. மிகச் சில சமயங்களில் பிரச்சினைகள் வருவதுண்டு. ஆனால் எல்லா அறுவை சிகிச்சைகளிலும் அந்த ஆபத்து உண்டு. ஏதாவது தொற்றுநோயோ அல்லது இரத்தக்கசிவோ ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
மிக அரிதாக கர்ப்பப்பையை வெட்டிய இடம் மிகப் பலவீனமாக மாற வாய்ப்பிருக்கிறது. இது குடலிறக்கத்துக்கு வழி வகுத்து விடுகிறது. முதல் பிரசவம் சிசேரியன் என்பதால், அடுத்த பிரசவமும் சிசேரியனாக இருக்கும் என்ற கவலை வேண்டாம். உங்களது அடுத்த பிரசவம் இயல்பாக பெண்ணுறுப்பின் வழியே நிகழ வாய்ப்பிருக்கிறது.
ஆனால், உங்களுக்கு சிசேரியன் எந்தக் காரணங்களுக்காகச் செய்யப்பட்டது என்பதைப் பொறுத்து, அடுத்த பிரசவமும் சிசேரியனாக அமையும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

Popular Posts

FACEBOOK COMMENTS BOX