Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

12 August 2014

ஹஜ்ஜுப் பெருநாள் தினங்களில் உழ்ஹிய்யா கொடுப்பது தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டிய சில அறிவுறுத்தல்கள்!

தற்போதைய நாட்டின் சூழ்நிலையில் சகவாழ்வையும், சமூக நல்லிணக்கத்தையும் கருத்திற்கொண்டு எமது அனைத்து விடயங்களிலும் நிதானமாகவும், கவனமாகவும் நடந்து கொள்ள வேண்டும். அதேபோல அரச சட்ட-விதி முறைகளுக்கமை அனைத்து விடயங்களையும் முன்னெடுப்பது ஒரு முக்கிய அம்சமாகக் கருதப்பட வேண்டியுள்ளது.

அந்த வகையில் இம்முறை உழ்ஹிய்யாவின்போது பின்வரும் ஆலோசனைகளை கவனத்தில் கொள்ளுமாறு பணிவுடன் வேண்டுகிறோம்.
உழ்ஹிய்யா என்பது அதனை நிறைவேற்ற வசதியுள்ளவர்கள் செய்யும் ஓர் உயர்வான சுன்னா முஅக்கதாவாகும்.

எமது நாட்டைப் பொறுத்தவரை ஆடு, மாடு ஆகியவற்றை உழ்ஹிய்யாவுக்காகப் பயன்படுத்த முடியும். எனினும் பௌத்த, இந்து மக்களிடையே மாடு அறுப்பதற்கு எதிரான கருத்து வலுப்பெற்றிருப்பதால், முடியுமானவரை உழ்ஹிய்யாவுக்காக ஆடுகளை பயன்படுத்துவது விரும்பத்தக்கதாகும்.

அனைத்து சந்தர்ப்பங்களிலும் மிருகங்களை ஜீவகாருண்யத்துடன் நடத்தல் வேண்டும். அவற்றைக் கட்டி வைக்கும்போது உரிய இடைவெளி விடுவதுடன், அவற்றிற்கான நீர் மற்றும் தீனியை முறையாக வழங்குவது அவசியமாகும்.

விலங்குகளை வாகனங்களில் எடுத்துச் செல்லும்போது (Transportation) பின்வரும் விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியுள்ளது;
ஆடு/மாடுகளை வாங்கும் போது கிராம உத்தியோகத்தரினால்(GS) மிருகத்தின் உரிமை அத்தாத்சிப்படுத்தப்படல் வேண்டும்.

அதனையடுத்து மிருக வைத்தியரின் (Veterinary Surgeon) மிருகத்தின் உரிமைக்கான சான்றிதழ், மாட்டு விபர சீட்டு (Cattle Voucher),சுகாதார அத்தாட்சிப் பத்திரம் (Health Certificate) என்பவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு ஒரு மாட்டிற்கு 50 ரூபா செலுத்த வேண்டும்.

மிருகங்களை எடுத்துச் செல்வதற்கான அனுமதியை (Transport Permit) பிரதேச செயலகத்தில் (DS Office) பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு ஒரு மாட்டிற்கு 50 ரூபா செலுத்த வேண்டும்.

மேற்குறிப்பிட்ட சான்றிதழ்கள் மற்றும் அனுமதிப்பத்திரங்களை விலங்குகளின் உரிமையாளரை முதன்மைப்படுத்தி அவர் மூலம் பெற்றுக்கொள்வது மிகப் பொருத்தமானதாகும்.

மிருகங்களை எடுத்துச் செல்வதற்குப் பொருத்தமான வாகனத்தைப் பயன்படுத்த வேண்டும். அரசாங்க வர்த்தமானியின் படி விலங்குகளை வாகனத்தில் ஏற்றிச்செல்ல அனுமதிக்கப்பட்ட அளவு:



குர்பான் செய்வதற்குப் பொருத்தமான இடம், நேரம் என்பவற்றை முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக பிற சமயத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் உழ்ஹிய்யா செய்யப்படும் இடம் மறைவானதாக இருப்பது மிகவும் அவசியமாகும்.


வணக்கஸ்தலங்களில் விலங்குகளை அறுப்பது தொடர்பாக ஏனைய மதத்தவர்கள் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் பள்ளிவாசல்களில் ஆடு, மாடுகள் குர்பான் செய்யப்படுவதைத் தவிர்த்துக் கொள்வது நல்லது.
உங்களின் பிரதேச உள்ளூராட்சி மன்ற (மாநகர / நகர/ பிரதேச சபை) மிருக வைத்தியரை சந்தித்து குர்பானிக்கான உரிய அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
மிருக வைத்தியர்/ உள்ளூராட்சி சபையின் உரிய அதிகாரியினால் உழ்ஹிய்யா செய்யும் இடத்தைப் பார்வையிட உரிமை உண்டு.
ஒரு மிருகத்தை குர்பானி செய்யும் போது ஏனைய மிருகங்கள் காணாமலும், உணர முடியாமலும் வைத்திருப்பது அவசியமாகும்.
குர்பானி செய்யும் முன் கத்தியை நன்கு கூர்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
குர்பான் செய்யாப்பட்ட பின் விலங்குகளின் கழிவுகளை (எலும்பு, கால், இரத்தம், சாணம், தோல்) உரிய முறையில் ஆழத்தில் புதைப்பது மிகவும் அவசியமாகும்.
குர்பான் பங்கீட்டின்போது ஒழுங்கு முறைப்படியும், சாணக்கியமாகவும் நடந்து கொள்ள வேண்டும்.


போயா தினங்களில் உழ்ஹிய்யா கொடுப்பதையும், பங்கிடுவதையும், வாகனங்களில் வெளியூர்களுக்கு அனுப்புவதையும் முற்றாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
ஜீவகாருண்யத்தை பற்றியும் அயலவர்களைத் துன்புறுத்துவதைத் தவிர்க்குமாறும் பல ஹதீஸ்கள் வந்துள்ளன. உழ்ஹிய்யா கொடுக்கும் போது அவற்றை கருத்திற்கொள்ளுமாறு ஞாபகப்படுத்துகிறோம்.
குர்பானி வழிகாட்டி - 2013 இங்கே பதிவிறக்கம் (Download) செய்யலாம். 


குறிப்பு: இவ்வழிகாட்டி இலங்கையில் உள்ள அனைத்து ஜும்மா மச்ஜித்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதனை ஜும்ஆ தொழுகையின் பின்னர் வாசித்து பொது மக்களுக்கு தெளிவுபடுத்துவதுடன் அனைத்து பள்ளிவாசல் அறிவித்தல் பலகையில் பிரசுரிக்குமாறும் வேண்டப்பட்டுள்ளது.


இவ் ஆவணம் கிடைக்கப் பெறாதவர்கள் எமது இணையத்தளமான www.nationalshoora.com இலிருந்து பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.


Popular Posts

FACEBOOK COMMENTS BOX