Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

25 August 2014

பதிவு செய்யப்படாதுள்ள மஸ்ஜித்துக்களை பதிவு செய்துகொள்ளுமாறு வேண்டுகோள் – வக்பு சபை

இலங்கை வக்பு சபையில் பதிவு செய்யப் படாதிருக்கும் மஸ்ஜித்துக்கள் , மத்ரஸாக்கள் மற்றும் ஸாவியாக்கள் (ஐவேளை தொழுகை நடாத்தப்படுபவை) அனைத்தையும் தாமதமின்றி பதிவு செய்துகொள்ளுமாறு வக்பு சபை நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது
பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மற்றும் ஸாவியாக்கள் ஆகியன அமையப்பெற்ற காணி உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் அவற்றினது பெயரிலேயே இருக்க வேண்டும். அவ்வாறானவை மாத்திரமே பதிவுக்காக ஏற்றுக்கொள்ளப்படும் என வக்பு சபை தலைவர் அஹ்கம் உவைஸ்குறிப்பிட்டுள்ளார் .
தனிநபர்களதும், தனியார் நிறுவனங்கள், அமைப்புகளினதும் பெயர்களில் இருக்கும் எந்தவொரு பள்ளிவாசலும் மத்ரஸாவும், ஸாவியாவும் பதிவுக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. வக்பு சபையில் பதிவு செய்வதாயின் அவை அமைந்திருக்கும் காணி உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் அவற்றின் பெயரிலேயே இருக்க வேண்டும்.
பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மற்றும் ஸாவியாக்களுக்கு காணி உள்ளிட்ட சொத்துக்களை வக்பு செய்பவர்கள் அவற்றை சட்ட ரீதியாக அவற்றின் பெயரிலேயே வக்பு செய்துவிட வேண்டும். இதில் ஒவ்வொவரும் கூடிய கவனம் செலுத்துவது அவசியம்.
ஏனென்றால் நம்பிக்கை அடிப்படையில் பள்ளிவாசலொன்றுக்கு வக்பு செய்யப்பட்ட காணியை வக்பு செய்தவரின் பேரப் பிள்ளைகள் நீதிமன்றத்தின் ஊடாக உரிமை பெற்று அக்காணியை விற்பனை செய்துள்ளனர்.
இதேவேளை சிலர் தங்களது பெயர்களில் பள்ளிக்குரிய காணியையும் சொத்துக்களையும் வைத்துன் கொண்டு இருக்கின்றனர். பள்ளிவாசலுக்குரிய சொத்துக்களையும் அவர்களது பெயர்களிலேயே கொள்வனவு செய்துள்ளனர். என தெரிவித்துள்ளார்.


இலங்கை வக்பு சபையில் பதிவு செய்யப் படாதிருக்கும் பள்ளிகள் மத்ரஸாக்களை பதிவு செய்துகொள்ளுமாறு வேண்டுகோள். 

இலங்கை வக்பு சபையில் பதிவு செய்யப் படாதிருக்கும் பள்ளி வாசல்கள், மத்ரஸாக்கள் மற்றும் ஸாவியாக்கள் (ஐவேளை தொழுகை நடாத்தப்படுபவை) அனைத்தையும் தாமதமின்றி பதிவு செய்துகொள்ளுமாறு வக்பு சபையின் தலைவர் அஹ்கம் உவைஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்


பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மற்றும் ஸாவியாக்கள் ஆகியன அமையப்பெற்ற காணி உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் அவற்றினது பெயரிலேயே இருக்க வேண்டும். அவ்வாறானவை மாத்திரமே பதிவுக்காக ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை வக்பு சபையின் புதிய தலைவராகப் பதவியேற்றிருக்கும் அல்ஹாஜ் அஹ்கம் உவைஸின் தலைமையில் சபை உறுப்பினர்கள். முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்கள மண்டபத்தில் கூடினர்.

அதனைத் தொடர்ந்தே அவர் மேற்படி வேண்டுகோளை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், தனிநபர்களதும், தனியார் நிறுவனங்கள், அமைப்புகளினதும் பெயர்களில் இருக்கும் எந்தவொரு பள்ளிவாசலும் மத்ரஸாவும், ஸாவியாவும் பதிவுக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. வக்பு சபையில் பதிவு செய்வதாயின் அவை அமைந்திருக்கும் காணி உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் அவற்றின் பெயரிலேயே இருக்க வேண்டும்.

பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மற்றும் ஸாவியாக்களுக்கு காணி உள்ளிட்ட சொத்துக்களை வக்பு செய்பவர்கள் அவற்றை சட்ட ரீதியாக அவற்றின் பெயரிலேயே வக்பு செய்துவிட வேண்டும். இதில் ஒவ்வொவரும் கூடிய கவனம் செலுத்துவது அவசியம்.

ஏனென்றால் நம்பிக்கை அடிப்ப¨,டயில் பள்ளிவாசலொன்றுக்கு வக்பு செய்யப்பட்ட காணியை வக்பு செய்தவரின் பேரப் பிள்ளைகள் நீதிமன்றத்தின் ஊடாக உரிமை பெற்று அக்காணியை விற்பனை செய்துள்ளனர்.

இதேவேளை சிலர் தங்களது பெயர்களில் பள்ளிக்குரிய காணியையும்.. சொத்துக் களையும் வைத்துன் கொண்டு இருக்கின் றனர். பள்ளிவாசலுக்குரிய சொத்துக்களையும் அவர்களது பெயர்களிலேயே கொள்வனவு செய்துள்ளனர்.

அண்மையில் இருவர் என்னைச் சந்தித்து தாம் இருபது வருடங்களாகப் பள்ளிவாசலை நடாத்தி வருவதாகவும், அதனைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் கலந்துரையாடினர். அப்போது வக்பு சபையில் பள்ளிவாசலொன்றைப் பதிவு செய்வது தொடர்பான ஒழுங்கு விதிகளை நான் அவர்களிடம் கூறியபோது, பள்ளிக்குரிய காணி தமது பெயரில் இருப்பதாகவும், பள்ளிவாசலின் வருமானத்திற்கென தமது பெயரில் இரண்டு கடைகளைக் கொள்வனவு செய்து இருப்பதாகவும் கூறினர்.

அப்போது அவற்றை சட்டப்படி பள்ளிவாசலின் பெயருக்கு மாற்றி விட்டு பதிவுக்கு வருமாறு கூறியபோது அப்படியாயின் வேறு ஆட்கள் நிர்வாக சபைக்கு வருவார்களே என்றனர். அப்போது பள்ளி சொத்து பள்ளி பெயரிலேயே இருக்க வேண்டும். என்று நான் உறுதியாக கூறினேன்.

இவ்வாறு நிறைய உதாரணங்கள் இருக்க முடியும். அதனால் பள்ளிவாசல், மத்தரஸா, சாவியா ஆகியவற்றுக்கான காணி சொத்துக்கள் அவற்றின் பெயரி லேயே இருக்க வேண்டும். அவற்றுக்கு சொத்துகளை வக்பு செய்பவர்கள் சட்ட ரீதியாக வக்பு செய்து விடுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்

Popular Posts

FACEBOOK COMMENTS BOX