பள்ளிவாசல்
என்பது ஒரு புனித தலமாகும். அதன் பொறுப்புக்கு புண்ணியவான்களே ஏற்ற வர்களாவர்.
சன்மார்க்க விதி முறைகளைப் பேணுவதே ஒருவனைப் புனிதனாக்குகின்றது என்பதை நாம்
அறியவேண்டும். அல்லாஹ்வைப் பற்றிய சம்பூர்ண அச்சமும் தியாக மனமும் கொண்டவர்களே இறை
அருள் பெற்றவர்கள், நேர் வழி கண்டவர்கள்.
அதனால்
தான் அல் குர்ஆனின் 9வது அத்தியாயம் 18 வது வசனம் பின் வருமாறு கூறுகின்றது.
إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ
اللَّهِ مَنْ آَمَنَ بِاللهِ وَالْيَوْمِ الْآَخِرِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ
وَلَمْ يَخْشَ إِلَّا اللهَ فَعَسَى أُولَئِكَ أَنْ يَكُونُوا مِنَ الْمُهْتَدِينَ
(9:18)
“எவர்கள் அல்லாஹ்வையிம் இறுதி
நாளையும் விசுவாசித்து, தொழுகையையும் கடைபிடித்து, ஸகாத்தும் கொடுத்து வருவது டன்,
அல்லாஹ்வை யன்றி மற்றெவருக்கும் பயப் படாமலும்
இருக்கின்றனர்களோ, அவர்கள் தாம் அல்லாஹ் வுடைய பள்ளிகளை பரிபாலனம் செய்யும் தகுதி யுடையவர்கள்.
(முஃமினான) இத்தகையவர்ளே நேரான வழியியிலிருப்பவர்கள்.” (குர்ஆன் 9;18)
இவ்வசனத்தின் பிரகாரம் மேற்கண்டோரா லேயே ஒரு பள்ளி நிர்வாகம் சீராக நடைபெற முடி கின்றது. அல்லாஹ்வின் வீட்டுக்கு பொறுப்பாக, பரிபாலகராக
வருபவர் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாக நடக்கவும்,
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறைக்கு முரணாக செயல்
படவும் முடியாது. எனவே பரிபாலன வேலைக்கு தெரிவாகின்றவர் சன்மார்க்க அடிப் படைகளான
குர்ஆன், ஹதீஸுக் கு மதிப்பளித்து, அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்
பண்பாளராகத் திகழ வேண்டும்.
அல்லாஹ்வை அஞ்சியோரது அழகிய இலட்சணம் தொழுகையை நிலை நாட்டுவதும், சகாத்
கொடுத்து வருவதும், உடலாலும் பொருளாலும் தியாகம் புரிவதுமாகும். அத்தகை யோரே பள்ளி
நலனைக் கருத்திற் கொண்டு சகல தியாகங்களுக்கும் தம்மை அர்ப்பணிப்பவராக இருக்க
முடியும். அல்லாஹ்வின் ஹக்கைப் பேணி நடப்போரே பொதுச்சொத்தில் மிகவும் பொறுப் போடு
நடந்து கொள்வர். அல்லாஹ்வுக்காக நிறைவேற்ற வேண்டிய ஹக்கான தொழுகை, ஸக்காத்
என்பவற்றில் குறைவும், களவும் செய்பவன் பொதுச் சொத்தான பள்ளிச் சொத்தில் கையாடல்
செய்வதில் சிறிதும் பயப்பட மாட்டான்.
கைபர் யுத்தத்திலிருந்து திரும்பிய உத்தம
ஸஹாபாக்களில் சிலர் ஒரு மனிதனை குறித்து, அவர் ஷஹீதாகி விட்டார், புனிதப் பதவியை
அடைந்து விட்டார் எனறு போற்றி பேசிக் கொண்டி ருந்தனர். இது கேட்ட நபி ஸல்லல்லா ஹு
அலைஹிவ ஸல்லம் அவர்கள், “நீங்கள் அவ்வாறு கூறாதீர்கள். குறிப்பிட்ட நபர்
யுத்தத்தில் கிடைத்த ஒரு போர்வையை கையாடல் செய்ததால் நரகத்துக் குரியவராகி
விட்டார்.” என்று கூறினார்கள். (தப்ஸீர் இப்ன் கஸீர் 1 -425)
பொதுச்
சொத்துக்களில் சம்பந்தப் படுவோர் கொஞ்ச மேனும் சநதேகத்துக்கிடமாக அமையாது தன்னைப்
பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு சமயம்
ரஸூலுல்லாஹி ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு மனிதரைப் ஸதகா திரட்டி வர
நியமித்தார்கள். ஸதகாவை சேர்த்து வந்த அந்தத் தோழர், தான் சேர்த்து வந்ததை நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம்
ஒப்படைக்கும் போது, ‘இது ஸதகாவாகத் தரப் பட்டது. இது எனக்கு கிடைத்தது’ என்று
கூறிய மாத்திரத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கோபப்பட்டார்கள். “சில
மனிதருக்கு என்ன ஏற்பட்டுள்ளதோ தெரியாது.
நாம் அவர்களை ஒரு வேலைக்கு அனுப்ப, அவர்கள் போய் வந்து, இது உங்களுக்கு, இது எனக்கு என்கிறார்களே, அப்படியானவர்கள்,
அவர்களது பெற்றோர் வீட்டில் இருந்து விடலாமே. அவர்களுக் குரியது கொடுக்கப்படுமா
என்று பார்க்கலாம்.” எனக் கூறினார்கள். (ஆதாரம் ஸுன்னுத் தாரமீ)
எனவே
பள்ளிவாசல் போன்ற பொது நிறுவனங்களில்
நிர்வாகிகளாகப் பங்கு கொள்வோர் மிகவும் கவனமாக இருத்தல் அவசியம்.
தொழுகையின்
பர்ழு, ஷர்த்து போன்ற வற்றைப் பேணி உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுபவனே
பள்ளிப் பொறுப்பை சரிவர நிறைவேற்றுவான். கொடுக்க வேண்டிய ஸக்காத் தை உரிய
பொருட்களிலிருந்து முறையோடு கொடுத்து வருபவனே அல்லாஹ்வை அஞ்சி நடப்பவனு மனாவான்.
வக்புகளை பாதுகாப்பான்.
எனவே தான் பள்ளிக்குரிய அசையும், அசையாத சொத்துக்களைப் பேணிபாதுகாத்து
ஸக்காத்தை முறையோடு கொடுத்து வருபவனே பள்ளி
வாசல் நிர்வாகத்துக்கு தகுதியுடையோன் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
மேற்
குறிப்பிட்ட ஒருவன் தன் கடமைகளில் இஹ்லாஸ் எனும் மனத் தூய்மை உடையவனாக இருந்து
வருவான். எச்செயலுக்கும் மற்றவரது
பாராட்டை எதிர் பாராது இருப்பது போலவே எந்தவொரு கருமத்திலும் அல்லாஹ்வையன்றி வேறு
எவரையும் அஞ்ச மாட்டான். நிர்வாகத்துக்கு வருபவன் ஊர் விஷயங்களிலும் தலையுட வேண்டி
வரும். அச்சமயங்களில் எவரது ஏச்சும், பேச்சும் அவருக்கு தடையாகாது பார்த்துக்
கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வின் மீது பரந்த நம்பிக்கை கொண்டு தொழுகை, ஸகாத் போன்ற கடமையளை பேணி
நடந்து வருவோரே நேர் வழியிலிருப்போர்.
எனவே நேர் வழியில் இருக்கும் அவர்கள் எவரது ஏச்சுக்கும், பேச்சுக்கும்
பயப்பட மாட்டார்கள். அத்தகைய மக்களே அல்லாஹ்வின் வீடுகளுக்குரிய பரிபாலன வேலைக்கு
தகுதியுடையோர்களாவர்.