Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

22 September 2014

கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்..

1. எண்ணங்கள் வெவ்வேறாக இருந்தாலும், ஒருவர் எண்ணத்திற்கு ஒருவர் மதிப்பு தந்து சொல்வதை காதில் வாங்க வேண்டும்.

2. கணவன் மட்டுமே வேலைக்கு செல்லும் வீட்டில், தன்னால் தான் குடும்ப பொருளாதாரம் இயங்குகிறது என்பதை எப்போதும் கணவன் வார்த்தைகளில் வெளிப்படுத்தக் கூடாது.

3. மனைவியும் வேலைக்கு செல்லும் வீட்டில், நானும் தான் வேலைக்கு போறேன் என்ற வார்த்தையை மனைவி அடிக்கடி சொல்லக் கூடாது.

4. இவரிடம்/இவளிடம் இதைச் சொன்னால் பெரிய பூகம்பமே வெடிக்குமோ என்ற பயத்தை ஒரு போதும் மனைவிக்கு கணவனும், கணவனுக்கு மனைவியும் தரக்கூடாது. பொய்யின் ஆரம்பமே பயம் தான்.

5. எவ்வளவு பெரிய சண்டை என்றாலும் உங்கள் இருவர் பற்றி மட்டும் தான் பேச வேண்டும். கணவன் குடும்பத்தாரை பற்றி மனைவியும், மனைவியின்
குடும்பத்தாரை பற்றி கணவனும் பேசவே கூடாது.தவறுகளில் மிகப்பெரிய தவறு இது.

6. மனைவியை தன்னில் ஒரு பாதியாக பார்க்காவிட்டாலும் வேலைக்காரியாய் பார்க்காமல் இருப்பது கணவனுக்கு அழகு.

7. மனைவியை ஏற்றது போல் அவள் குடும்பத்தையும் முழுமனதாய் கணவன் ஏற்க வேண்டும்.கணவனை ஏற்றது போல் அவன் குடும்பத்தையும் முழுமனதாய் மனைவி ஏற்க வேண்டும். (இப்படி வாழ்ந்தால் முதியோர் இல்லங்கள் நிச்சயம் குறையும்)

8. கணவன் நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு நேரம் கழித்து வீடு வருவது. மனைவியை மட்டும் வீட்டுக்குள்ளே ஆயுள் கைதி ஆக்குவது, அவளை வெளியுலகம் அறியவிடாமல் செய்வது தவறு. படிப்பறிவில்லா பெண்களை சில ஆண்கள் இப்படித்தான் நடத்துகின்றனர்.

9. கணவனும் மனைவியும் தனித் தனியே வெளியில் சென்றால் நேரமாய் வீடு திரும்ப வேண்டும். அப்படி நியாயமான காரணத்திற்காக தாமதம் ஏற்பட்டால் ஒருவர் சொல்லும் காரணத்தை ஒருவர் நம்பி ஏற்றக் கொள்ளவேண்டும்.

10. அம்மாவின் சமையல் பக்குவத்தை எதிர்பார்த்து மனைவியின் சமையலை சாப்பிட்டு, ஏமாற்றம் என்றதும் அவளை திட்டக் கூடாது. அப்படி திட்டுவேன் தான் என்றால் அதற்கு முன் ஒன்றை யோசியுங்கள். திருமணம் ஆன புதிதில் உங்க அம்மாவும் இப்படித் தான் உங்க அப்பாவிடம் திட்டு வாங்கி இருப்பார்கள்
சமையலுக்காக. பக்குவம் பார்த்ததும் வந்து விடக்கூடியதல்ல. பல வருட அனுபவத்தில் வருவது.

நரகமாய் இருக்கும் வீடு சொர்க்கம் ஆவதும், சொர்க்கமாய் இருந்த வீடு நரகம் ஆவதும் கணவன் மனைவி நடந்து கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது...


ஆண்கள் கவனத்துக்கு !!!

1. முட்டாள் கணவன் மனைவியிடம் வாயை மூடு என்பான், புத்திசாலிக் கணவனோ கண்ணே உன் உதடுகள் சேர்ந்திருந்தால் நீ தேவதையாய் தெரிகிறாய் என்பான்.

2. மதுவை நிறுத்துவதற்கு எளிய வழி இது தான். திருமணத்துக்கு முன் எப்போதெல்லாம் சோகமாய் இருக்கிறாயோ அப்போது மது அருந்து. திருமணத்துக்குப் பின் எப்போதெல்லாம் ஆனந்தமாய் இருக்கிறாயோ அப்போதெல்லாம் மது அருந்து.

3. விரைவான தகவல் தொடர்புக்கு செய்தியை பெண்ணிடம் சொல். அதி விரைவு சேவைக்கு ‘இதை யாரிடமும் சொல்லாதே’ என்னும் அடைமொழியுடன் சொல்.

4. ஒரு பொண்ண சந்தோஷபடுத்த BEAUTIFUL னு சொல்லனும்.... ஒரு ஆண சந்தோஷபடுத்த ஒரு FULL னு சொன்னா போதும்...

5. ஒரு மாபெரும் தவறு செய்கையில் உலகமே வாழ்த்துமெனில் அதை திருமணம் என்க.

6. லைஃப் ல ஒரு அழகான பொண்ண லவ் பன்றத விட நம்ம லைஃப்ப அழகா வச்சிருக்கிற பொண்ண லவ் பன்றது தான் ரொம்ப நல்லது...

7. எல்லா ஆண்களுடைய ஆசைகளில் ஒன்று..."தன்னுடன் மட்டுமே எல்லா பெண்களும் பழக வேண்டும்." என்று.!!!

8. எல்லா பெண்களுடைய ஆசைகளில் ஒன்று.."தன்னை மட்டுமே எல்லா ஆண்களும் ரசிக்க வேண்டும்." என்று.!!

9. கல்யாணமான புதுசுல பொண்டாட்டி விதவிதமா சமைச்சி போடுறதோட அர்த்தம் என்னான்னு தெரியுமா? அய்யே தெரிய்லையே புருஷனை குண்டாக்கிட்டா.. அந்த சனியன எந்த பிகரும் திரும்பி பாக்காதுங்கிறதுதான்....!!! உசாரய்யா உசாரு.. .

10. ஏன் அரசு ஆண்கள் இரண்டு பெண்களைத் திருமணம் செய்யக் கூடாது என்கிறது ? அடப்போப்பா… ஒரு தப்புக்கு இரண்டு தண்டனை வழக்கத்தில் இல்லை !

Popular Posts

FACEBOOK COMMENTS BOX