Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

17 September 2014

பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்க்கும் விடயங்கள்

பெண்களுக்கு எப்படிப்பட்ட ஆண்களை பிடிக்கும் என்று பல கருத்து கணிப்புகள் நடத்தி உள்ளனர். ஒவ்வொன்றிற்கும் ஒரு நல்ல காரணம் இருக்கும்.. இந்த கால பெண்கள் எப்படிபட்ட ஆண்களை விரும்புகின்றனர். திருமணம் என்று வந்ததும் பெண்களின் கனவு அதிகமாகிறது. தனக்கு வரும் கணவன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்கின்றனர். இது வரவேற்கத்தக்க விசயம். இவர்கள் எதிர்பார்ப்பது சில…

1. பெண்கள் ஆண்களிடம் முதலில் எதிர்பார்பது மரியாதையைத்தான். மனைவி என்றால் தனக்கு அடிமைபோல சேவை செய்ய வந்தவள் என்ற எண்ணம் இன்றும் ஆண்கள் மத்தியில் நிலவுகிறது. பெண்களது கருத்துகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.

2. பாராட்டு அவர்களை பாராட்ட பாரட்டத்தான் அவர்களுக்கு ரொம்ப பிடிக்கும். உதாரணத்திற்கு மனைவி வைத்த குழம்பில் உப்பு இல்லை என்றாலும் நல்லா செய்திருக்கிறாய் என்ற பாராட்டும் போது பிடிக்கும்.

3. அவர்கள் செய்யும் ஒவ்வொரு நல்ல விசயத்தையும் ஊக்குவிக்க வேண்டும். கார் ஓட்ட பழகுகிறார்கள் என்றால் கிண்டல் அடிக்காமல் பக்குவமாக சொல்வதை விரும்புவார்கள்.

4.ஆண்களின் உடை, பேசும் பேச்சு போன்றவற்றில் அவர்களுக்கு பிடித்த மாதிரியே அனைத்தையும் பேச வேண்டும். பெண்கள் எந்த மாதிரியான விசயங்க பேச ஆரம்பிக்கிறார்களே அதைப்பற்றியான தெளிவான பார்வையில் இருக்க வேண்டும் ஆண்களின் பேச்சு.

5.சமயத்திற்கு ஏற்றபடி சாமர்த்தியமாக நடந்து கொள்ளும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். சரியான வேளையில் சரியான வழிகளைச் சொல்லும் ஆண்களை பெண்கள் மெச்சுவார்கள்

6.பெண் என்றால் பொன் முட்டையிடும் வாத்து என்று ஆண்கள் நினைக்கிறார்கள். அவர்களின் தேவைக்காக நெருங்கி வருதல், வேண்டிய பணத்தை பெற்றுச் சென்று ஊதாரித்தனமாக செலவு பிடிக்காத ஒன்று.

7. மதுக்கு அடிமையாக உள்ள ஆண்களை வெறுக்கின்றனர் ஆனால் அளவாக சாப்பிடுங்கள் என்றும் சொல்பவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்து விட்டது.

8. அடிக்கும் ஆண்களை அறவே வெறுக்கிறார்கள். கூடவே திருப்பித் தாக்கவும் செய்வார்கள். மென்மையாக கண்டிப்பது அவர்களுக்கு பிடித்த விசயம்.

9. பெண்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டும். புரிந்து கொள்ளும் ஆண்களை அதிகம் விரும்புகின்றனர்.

10.காதலிக்கும் போது எப்படி பெண்களிடம் உருகி உருகி பேசுகிறார்களோ அதே போல் திருமணத்திற்கு அப்புறமும் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

11.புத்திசாலி ஆண்களை ரொம்ப புடிக்கும்.

12. அழகான ஆண்களைத்தான் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. பெண்களுக்கு அழகு ஒரு பொருட்டல்ல.

ஆண்கள் எப்படி இருந்தாலும் ஒரு பெண்ணுக்கு அவனை பிடித்து விட்டால் யார் என்ன சொன்னாலும் அவன் தான் கணவன் என்று முடிவு செய்து யாரையும் எதிர்க்க தயங்கமாட்டார்கள்…

ஒவ்வொரு பெண்ணும் தாங்கள் விரும்பும் ஆண்கள் பல விடயங்களை தமக்காக செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அவர்கள் எதிர்பார்ப்பது போல் ஆண்களின் செயற்பாடுகள்  அமையும் போது பெண்களின்  மகிழ்விற்கு அளவேயிருப்பதில்லை. ஆனால் எதிர்பார்ப்புக்கு முரணான விடயங்கள் நடைபெறும்போதுதான் குடும்ப வாழ்வில் பூகம்பங்கள் எழுகின்றன.
பெண்கள் எதிர்பார்க்கும் விடயங்கள் அனைத்தையும் அவர்கள் சார்ந்த ஆண்களால் செய்ய முடியாதபோதிலும் செய்யக் கூடிய விடயங்களையாவது நிறைவேற்றினால் அது குடும்ப வாழ்வின் மகிழ்வுக்கு வேர் விடுகின்றது என்பதை ஒவ்வொரு ஆண்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
சரி, ஆண்களிடமிருந்து பெண்கள் பொதுவாக எதிர்பார்க்கும் விடயங்கள் என்ன?

* பெண்கள் ஏதேனும் ஒரு விடயம் குறித்து ஆண்களிடம் மனம் விட்டு பேசும்போது அதை ஆண்கள்  மிக கவனமாக கேட்டுக் கொண்டிருப்பதை விரும்புகின்றார்கள். இவ்வாறு கேட்டுகொண்டு அதற்கு ஏற்றாற்போல நடந்துகொண்டால் அவளது மன உணர்வை ஆண்கள்  புரிந்துக் கொண்டதாக பெண்கள் நினைக்கின்றார்கள்.

* பெண்களின்  கோப, எதிர்மறையான எல்லா உணர்வுகளும் அவர்களின் மாதவிடாய் காலத்துடன் தொடர்பானவை அல்ல என்பதை புரிந்துகொள்பவர்களாக ஆண்கள் இருக்க வேண்டும்.

* ஆண்கள் இரக்க உணர்ச்சியை முன்னேற்றிக்கொண்டால் நல்லது. ஆனால் அதற்காக கண்ணீர்விட்டு அழ வேண்டும் என்பதில்லை. தனது துணையுடன் மேலும் உணர்வுபூர்வமாக நடந்துகொள்ள வேண்டும்.

* பெண்களைப் பொறுத்தவரை தொடர்பாடாலானது முக்கியமானது. அதனால் அடிக்கடி பெண்களிடம் பேச வேண்டும்.

* தனது கணவர் ஒரு மாதத்திற்கு ஒருதடவையேனும் தமக்கு சமைத்துக் கொடுக்க வேண்டும் என பெண்கள் விரும்புவர். இது பொதுவாக வழக்கத்துக்கு மாறானதுதான். ஆனால்,  இவ்வாறான ஆச்சர்ய மூட்டும் விடயங்களினால் ஆண்களிடம் பெண்கள் அதிகம் விருப்பத்துக்குரியவர்களாக மாறுகின்றார்கள். அதேவேளை இவ்வாறான செயற்பாடுகள் பெண்களை மகிழ்ச்சியடைய செய்கின்றன.

* ஆண்களே, உங்கள் துணிச்சல் நீங்கள் வாகனம் செலுத்தும் வேகத்தில்தான் தெரிய வேண்டும் என்றில்லை. தாறுமாறாக ஒழுங்கீனமாக வாகனம் செலுத்தும் போது பெண்களை அதிகமாக தாக்குகிறது. அதனால் மிகவும் மிருதுவாதாக வாகனத்தை செலுத்துங்கள்.

* பெண்களுக்கு பாதுகாப்பாக இருங்கள். ஆனால் அவர்களை சொந்த உடமைகளாக கருதாதீர்கள்.

* தமது ஆண் எப்போதும் தங்களிடம் தங்களது காதலை வெளிப்படுத்துவதை பெண்கள் விரும்புகின்றார்கள். ஆண்களை விட்டு பெண்கள் நீங்கும் தருணங்களில் அந்த அன்பை  வித்தியாசமான வழிகளில் வெளிப்படுத்த வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

* ஆண்கள் விரும்பும் பெண்களை மிக வேகமாக இழப்பதற்கு ஒரு வழி பொய் சொல்வது. ஆண்கள் மிக நேர்மையாக இருப்பதையே பெண்கள் அதிகமாக விரும்புகின்றார்கள்.

* வாழ்த்துக்களையும்,  பாராட்டுக்களையும் ஆண்களிடமிருந்து பெண்கள் அதிகமாக எதிர்பார்க்கின்றார்கள்.

* விடுமுறை நாட்களில் கணவர் வீடுகளில் இருக்கும்போது வேலைகளை பகிர்ந்து கொண்டு செய்வதை பெண்கள் அதிகமாக விரும்புகின்றார்கள்.

வேலைக்கு போவதும், பணத்தை சம்பாதித்து கொட்டுவது மட்டுமே ஆண்களின் வேலை அல்ல. மகிழ்ச்சியான ஒரு இனிய இல்லறத்திற்கு அதற்கு அப்பாலும் பல விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் இன்றைய பரபரப்பான உலகில் எத்தனை ஆண்கள் அதை புரிந்துகொண்டு நடக்கிறார்கள் என்று தெரியாது.

ஒரு மனைவியானவள் கணவனிடம் உண்மையில் எதிர்பார்க்கும் பல விஷயங்கள் எளிமையானவை, இனிமையானவை, யதார்த்தமானவை! எல்லாவற்றுக்கும் மேல் சுலபமாக நாம் நிறைவேற்றக்கூடியவை.
நண்பர் கோபாலகிருஷ்ணன் ராமகிருஷ்ணன் என்பவர் தன்னுடைய முகநூலில் பகிர்ந்திருந்ததை இங்கு தருகிறோம். யார் இவற்றை பின்பற்றுகிறார்களோ இல்லையோ ரைட்மந்த்ரா வாசகர்கள் அனைவரும் பின்பற்றி, தங்கள் இல்லறத்தை இனிமையாக மாற்றிக்கொள்ளவேண்டும்.

இவற்றை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து, அதன் கீழே உங்கள் கையெழுத்தை போட்டு, உங்கள் கண்ணில் படுவது போல ஒட்டிவைத்துக் கொள்ளுங்கள். இல்லறம் சிறக்க, நல்லறம் தழைக்க வாழ்த்துக்கள்.

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?
1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
2. மனது புண்படும்படி பேசக் கூடாது.
3. கோபப்படக்கூடாது.
4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
5. பலர் முன் திட்டக்கூடாது.
6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
17. ஒளிவு மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை’ என்று ஒதுங்கக் கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.

Popular Posts

FACEBOOK COMMENTS BOX