அல்லாஹ்வின் பக்கம் அழைக்கும் அழைப்பாளர்களின் கவணத்திற்கு!
* எல்லா இடங்களைக் காட்டிலும் அல்லாஹ்வுக்கு விருப்பமான இடம் பள்ளிவாசல்...
* பூமியில் அல்லாஹுதஆலாவின் வீடுகள் மஸ்ஜிதுகள்...
* பூமியில் உள்ளோர்க்கு நட்சத்திரங்கள் மின்னுவது போல் வானில் உள்ளவர்களுக்கு பள்ளிகள் மின்னுகின்றன...
* அல்லாஹுதஆலாவை நினைவுகூரக்கூடிய பள்ளியொன்றை எவரொருவர் கட்டுவாரோ, அவருக்காக அல்லாஹுதஆலா சுவனத்தில் மாளிகை ஒன்றைக் கட்டுகிறான்...
* எவர் காலை மாலை பள்ளிக்கிச் செல்கிறாரோ, அவருக்கு சொர்க்கத்தில் விருந்து உபசாரம் செய்ய அல்லாஹுதஆலா ஏற்பாடு செய்கிறான்...
* காலை மாலை பள்ளிக்குச் செல்வது அல்லாஹுதஆலாவின் பாதையில் தியாகம் செய்வதைச் சார்ந்தது...
* எவர் பள்ளியை நேசிக்கிறாரோ அவரை அல்லாஹுதஆலா நேசிக்கிறான்...
* பள்ளிவாசல் ஒவ்வொறு பயபக்தியாளர்களின் வீடு...
* எவருடைய வீடு பள்ளியாக இருக்குமோ அவருக்கு சுகத்தைக் கொடுக்கவும், ரஹ்மத்தைக் கொடுக்கவும், சிராத்துல் முஸ்தகீம் பாலத்தைக் கடப்பதை எளிதாக்கவும், தன் பொருத்தத்தை அளிக்கவும் சொர்க்கத்தை தரவும் அல்லாஹுதஆலா பொருப்பேற்றுள்ளான்...
*அல்லாஹுதஆலாவின் மீதும், மறுமை நாளின் மீதும் ஈமான் கொண்டவர்களே பள்ளிகளை செழிப்பாக்கி வைப்பார்கள்...
* மஸ்ஜிதுகளுக்கென முளைக்கம்புகள் உள்ளன, எம்மக்ககள் பள்ளியில் ஒன்று கூடுவதை வழமையாக்கி கொள்கிறார்களோ அவர்கள் பள்ளியின் முளைக்கம்புகள், அவர்களுடன் மலக்குகள் அமர்கின்றார்கள், பள்ளியில் அவர்கள் இல்லையென்றால் மலக்குகள் அவர்களை தேடுகின்றனர், அவர்கள் நோயுற்றால் மலக்குகள் அவர்களை சுகம் விசாரிக்கின்றனர்...
* பள்ளியில் இருப்பவர்கள் மூன்று பலன்களில் ஏதேனும் ஒன்றை அடைந்து கொள்கின்றனர்..
1 - (இஸ்லாமிய) சகோதரரைச் சந்தித்து மார்க்க பலன் அடைந்துக் கொள்கின்றனர்.
2 - மார்க்க ஞானத்தை கேட்டும் பெறுகின்றனர்.
3 - ஒவ்வொறு முஸ்லிமும் எதிர் பார்க்கும் அல்லாஹ்வின் அருள் கிடைக்கிறது.
* அதிகமாகப் பள்ளிக்குச் செல்பவரைக் கண்டால் அவர் ஈமான் உள்ளவர் என்று சாட்சி சொல்லுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்...
மேலான கண்ணியமிக்க சகோதரர்களே! நாமும் அதிகமாக பள்ளிக்குச் சென்று பள்ளியுடன் தொடர்பே இல்லாமல் இருக்கும் மற்ற சகோதரர்களையும் பள்ளிக்கு அழைத்து அல்லாஹுதஆலாவின் பொருத்தத்தை பெருவோமாக!