Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

28 September 2014

இன்றைய ஆடைக் கலாச்சாரமும் இஸ்லாமிய ஆடைக்கலாச்சார அவசியமும்..!!

 இஸ்லாம் பெண் அடிமைத்துவ மார்க்கம் என  மாற்று மதத்தைச் சேர்ந்த பலரும் விமர்சிப்பதுண்டு.உண்மையில் இஸ்லாம் எங்கு?எப்படி? எவ்வாறு? ஒரு பெண்ணை கண்ணியப் படுத்த வேண்டுமோ அங்கு அவ்வாறு அப்படி பெண்ணை கண்ணியப் படுத்துகிறது என்பது தான் உண்மை.

இஸ்லாம் பெண் அடிமைத்துவ மார்க்கம் என நிரூபிக்க விளையும் பலர் இஸ்லாமிய ஆடைக்கலாச்சாரத்தில் ஒரு கண் வைத்துக் கொண்டுதான் இருப்பார்கள்.இஸ்லாமிய ஆடையில் பழக்கப்பட்ட ஒரு பெண்ணை இன்னுமொரு ஆடைக் கலாச்சாரத்தை பின்பற்ற அழுத்தம் பிரயோகித்தால் எந்த ஒரு உண்மையான  முஸ்லிம் பெண்ணும் விரும்பமாட்டாள்.அது எவ்வாறான சந்தர்ப்பமாக இருந்தாலும் சரியே!

அந்த விரும்பாமையை தெளிவாக உலகமே பார்க்கும் வன்னம் இம்முறை கொரியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நடுவர் ஹிஜாப் அணிந்து விளையாட அனுமதி வழங்காததால் தாம் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு அரங்கைவிட்டு வெளியேறி இருக்கிறது  கட்டார் பெண்கள் அணி.
சத்தியத்தின் முன் அசத்தியம் நிற்காது என்பதை இது தெளிவு படுத்துகின்றதல்லவா??
வெளியேறிய அணி உலக மக்களுக்கு விடுக்கும் செய்தி "நாங்கள் அற்ப விளையாட்டிற்காய் இஸ்லாத்தை பணயம் வைக்க தயாரில்லை என்பதே!


இவ் ஆடைக் கலாச்சாரத்தின் மூலம் விளையாடுபவர்களினது  விளையாட்டுத் திறன் அதிகரிக்கவோ எதிரணிகளுக்கு தொந்தரவாகவோ ஒரு போதும் அமையப் போவதில்லை.அப்படி இருக்க இவ் அணியை இஸ்லாமிய ஆடைக் கலாச்சாரத்தை காட்டி ஏன் வெளியேற்ற வேண்டும்? இத் தடைகள்  ஒன்றும் முஸ்லிம் பெண்களுக்குப் புதியது அல்ல.பாடசாலைகளில் பல்கலைக்கழகங்கலில்இபொது இடங்களில் இஸ்லாமிய ஆடைக்கலாச்சாரத்திற்கான தடைகள் வலுப்பது யாவரும் அறிந்ததே.ஏன்?இலங்கையின் இலத்திரனியல்  தேசிய அடையாள அட்டையில் கூட இஸ்லாமிய ஆடைக் கலாச்சாரத்திற்கு தடை விதிக்கப் பட்டிருந்தது.எனினும் இத் தடைகள் பலதை தகர்த்தெறிந்து சாதனைகள் பலதையும் எம் முஸ்லிம் பெண்கள்  தன்னகப்படுதிய பல வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

இதில் நகைச்சுவை என்ன வென்றால் இத் தடை விதிப்பு முஸ்லிம் பெண்களின் நலனுக்கே என காரணம் காட்டிய சில சந்தர்ப்பங்களும் உள்ளன. பத்தோடு பதினொன்றாக முஸ்லிம்களும் இருக்க வேண்டும் என்பதே  அவர்களினது  கொள்கை .வேறு அவர்கள் செய்வது சரியா? பிழையா? என்பதை சிந்தனை கொள்வதை விட்டும் அவர்கள் பின்பற்றும்  மதமும் இன்றைய நாகரீகம் என்ற பெயரில் அணியப்படும் ஆடைகளும் தடுக்கின்றன.

எவ்வாறான நாகரீகம் மிகைத்த ஒருவராக இருந்தாலும் சரி இன்று விளையாட்டுக்களின் போது அணியப்படும் ஆடையை  சாதாரணமாக அணிந்து கொண்டு உலா வர மாட்டார்கள்.சாதாரணமாக அணிய வெட்கிக்கும்இகேவலமாக அணியும் ஆடையை  விளையாட்டுக்களின் போது அணிவது மாத்திரம் கேவலம் இல்லையா?? ஏன் சிந்திக்க மறுக்கின்றீர்களோ?

இவ்வாறான ஆடைக்குறைவுக் கலாச்சாரம் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதை இவ்வாறானவர்கள்  சிந்திக்கவோ ஏற்கவோ  தயாரில்லை?இஸ்லாம் காட்டிய ஒரு வழி முறையை புறக்கணித்தால் ஒரு போதும் அதற்கு மாற்று வழிகள் தீர்வாகப் போவதில்லை.மாறாக பல எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை வரலாற்றுச் சான்றுகள் பல எமக்கு நிரூபணம் செய்கிறது.

அண்மையில் உலக அரங்கில் பிரபலமான ஒரு செய்திதான் இங்கிலாந்து இளவரசியின் குட்டைப் பாவாடை நிகழ்வொன்றின் போது  பறந்து பர பரப்பை ஏற்படுத்தி இருந்தது.இதன் பின்னர் இங்கிலாந்து ராணி எலிஸபத்இவில்லியம் இன் மனைவி கேட் மேட்டில்டன் இற்கு நீளமான பாவாடைகள் அணியும் பணி அறிவுறுத்தி இருந்தமை இங்கே கோடிட்டு காட்ட வேண்டிய மேலுமொரு விடயமாகும்.

இஸ்லாமிய வழி முறையை இவ் இளவரசி பின்பற்றி இருந்தால் இவ் அவமரியாதை இவ் இளவரசிக்கு ஏற்பட்டிருக்குமா?

சீனா,இங்கிலாந்து சுவிஸ்சிலாந்து உகண்டா ஆகிய நாடுகளில் விபச்சாரம் அநாச்சாரம்,கலாச்சார சீர்கேடுகள் போன்றவை நடப்பதை  தடுக்க குட்டைப் பாவாடையை தடை செய்துள்ளார்கள்.

நாம் எமது உடலை மறைப்பதன் மூலம்  எமது மானம் காக்கப்படுவது மாத்திரமின்றி அதன் மூலம் விளைவாக்கப்படும் அனாச்சாரங்களும் தடுக்கப்படுகின்றன.அவ்வாறான  ஆடைக் கலாச்சாரம் இடத்திற்கு இடம் மாறுபடுவதன் மூலம் மானம்  காக்கப் படும் அளவு அளவு மாறுபடுவது  நகைப்பிற்கு உரியது.

வெற்றிக்காய் மானத்தை சிறிது  இழப்பதில் தவறில்லை என்று யாராவது கூறுவார்களாக இருந்தால் மானத்தை பணத்திற்காய் விற்கும் வேசிக்கும்  இவர்களுக்கும் என்ன தான் வேறு பாடு உள்ளது?

Popular Posts

FACEBOOK COMMENTS BOX