26 September 2014
ஆண்கள், பெண்கள் செக்ஸ் உறவை தவிர்க்க வேண்டிய தருணங்கள் எவை? கர்ப்பமாக இருக்கும் போது உறவில் ஈடுபடலாமா?
குழந்தை பேறு என்ற ஒன்று இல்லாததால் ஆண்கள் செக்ஸ் உறவை தவிர்க்க வேண்டிய தருணங்கள் என்று எதுவும் இல்லை, மனதும் உடலும் ஒத்துழைத்தால் வயது ஒரு பிரச்சினையே இல்லை, செக்ஸ் உறவில் ஈடுபடலாம், ஆனால் பிரசவம் குழந்தை பேறு என்ற ஒன்று பெண்களுக்கு இருப்பதால் பெண்கள் சில காரனங்களுக்காக செக்ஸ் உறவை தவிர்க்க வேண்டியுள்ளது.
ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது செக்ஸ் உறவில் ஈடுபடக் கூடாது என்று சொல்லப்படுவதுண்டு, ஆனால் இது முழுவதும் உண்மையல்ல, பொய்யுமல்ல.
கர்ப்பமாக இருக்கும் போதும் முதல் மூன்று மாதங்களை தவிர்த்து விட்டு 4ம் மாதத்திலிருந்து 7ம் மாதம் வரை மிதமான செக்ஸ் வைத்துக் கொள்ளலாம். பொதுவாக இந்திய பெண்கள் கர்ப்பமான பின் உடலுறவை வயிற்றில் உள்ள சிசுவுக்கு பிரச்சினை ஆகிவிடும் என்ற பயத்தால் தவிர்ப்பது உண்டு, இது தேவையற்ற பயம் என்றாலும் கர்ப்பிணி மனைவியைக் கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொண்டால், அவளது உடல் மற்றும் மனம் பாதிக்கப்படும்.
பிரசவத்திற்குப் பிறகு உடனே செக்ஸ் உறவை மேற்கொள்ள கூடாது, குறைந்த இரண்டு மாதங்கள் ஆனால் தான் உடலுறவுப் பாதையில் பிரசவத்தின் போது ஏற்பட்ட காயங்கள் ஆறியிருக்கும், மேலும் சுகப் பிரசவமா அல்லது சிசேரியனா என்று பார்த்து அதற்கேற்றார் போன்று தான் செக்ஸ் உறவில் ஈடுபட வேண்டும்.
சாதாரணமாக குழந்தைப் பேற்றுக்குப் பிறகு ஒரு பெண்ணின் கருப்பை சுருங்கி இயல்பு நிலையை அடைய ஆறு வாரங்களாகும். இது தோராயக் கணக்குதான். சில பெண்களுக்கு அவரவர் உடல்நிலையைப் பொறுத்து இந்தக் கணக்குக் கூடலாம். எனவே அப்பெண்ணின் உடல்நலம் சீராக இருப்பதாக மருத்துவர் உத்தரவாதம் கொடுத்த பிறகே உறவு கொள்ள வேண்டும்.
கணவனுக்குத் தொற்றும் வகையில் ஏதேனும் நோய் இருந்தால், அது முற்றிலும் குணமாகிற வரை மனைவி அவனுடன் உறவைத் தவிர்க்க வேண்டும்.
பிரசவத்திற்குப் பிறகு பெண்ணின் உடல்நலம் முற்றிலும் சரியாகி விட்ட போதிலும், அவளுக்கு உறவில் விருப்ப மில்லை என்று தெரிந்தால், அதற்குக் கட்டாயப் படுத்துவது கூடாது.
உறவில் ஈடுபடும் போது உடலுறவுப் பாதையில் கடுமையான எரிச்சலோ, வலியோ இருந்தால், அதை உடனடியாகத் தவிர்ப்பது நல்லது.
கருச் சிதைவுக்குள்ளானவர்களும், குறை மாதப் பிரசவத்துக்கு ஆளானவர்களும் மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே உறவைத் தொடங்க வேண்டும்.
மாதவிலக்கு நாட்களில் உறவு கொண்டால், கருத்தரிக்காது என்று பலரும் அந்நாளில் உறவு கொள்ள நினைப்பதுண்டு. அந்நாட்களில் உறவு கொள்வதன் மூலம் கணவன்-மனைவி இருவருக்குமே தொற்று நோய்கள் பரவ வாய்ப்புகள் அதிகம்.
பெண் நோய் வாய்ப்பட்டிருந்தால் அந்நாட்களில் உறவைத் தவிர்ப்பதே நல்லது.
கைக் குழந்தையிருக்கும் போது உறவில் ஈடுபட்டால் தாய்ப்பால் இல்லாமல் போய் விடும் என்று பல பெண்கள் அதைத் தவிர்ப்பதுண்டு. ஆனால் இது வெறும் மூட நம்பிக்கையே. குழந்தை பிறந்து, குறுகிய காலத்திலேயே உறவு கொண்டால் கடுமையான வலி இருக்கும் என்ற பயத்திலேயே அதைத் தவிர்க்கச் சொல்கிறார்கள்.
பிரசவித்த பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதே கருத்தடை முறை என்று நினைத்துக் கொண்டு, தைரியமாக உறவு கொள்வதுண்டு. ஆனால் அதை நூறு சதவிகிதம் நம்ப வேண்டாம். ஏதாவதொரு காரணத்தால் பால் வற்றி விட்டால், அந்தப் பெண் கருத்தரிக்க வாய்ப்புகள் உண்டு
Popular Posts
-
“சுதந்திரமாகப் பிறந்த மனிதன் சுதந்திரமாகவே வாழ வேண்டும்” எனும் கருத்தினை மனித சுதந்திரத்தைப் பற்றிக் கருத்து வெளியிட்ட தத்துவஞானியான ‘ஜீன்...
-
தொழுகையின் ஷர்த்துக்கள் என்ன? தொழுகையின் நிபந்தனைகள் 10 அவையாவன: 1. முஸ்லிமாக இருத்தல். 2. தம்யீஸ் எனப்படும் அறிவைப் பெறுதல். 3. ஜனாபத் ...
-
நாளைய தலைவர் நீங்கள் சிறந்த தலைவரின் செயற்பாடு... ஒரு குழுவின் தலைவர் அர்ப்பணிப்பு, முன்மாதிரிகை, விசுவாசம், நேர்மை, மனிதத்துவம...
-
பாங்கு (அதான்) என்றால் என்ன? தொழுகை நேரங்கள் வந்ததும் மக்களை தொழுகைக்காக அழைக்கும் அழைப்பை, அரபு மொழியில் ‘அதான்’ என்றும் பாரசீக மொழிய...
-
அகிலங்களைப்படைத்து வளர்த்து இரட்சிக்கின்ற அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்! அவன்தான் ஒவ்வொன்றுக்கும் ஒரு நிர்ணயத்தை ஏற்படுத்தி அதற்கு வழிகாட்டினா...
-
LED බල්බ නිෂ්පාදන පාඩම් මාලාව 1 මාසිකව අසීමිතව උපයන්න..අලුත් මගක්.. led bulbs sri lanka අන්තර්ජාලය තුලින් මාසිකව අසීමිතව උ...
-
மனிதன் உலகில் பிறந்தவுடன் அவனுக்கு மரணம் நிச்சயம் என்பது இறைவனால் வகுக்கப்பட்ட நியதி. ஜனாஸா என்றவுடனேயே நம் அனைவருக்கும் மனசுக்குள் ஒரு பதட்...
-
மஸ்ஜித்கள் பூமியில் அமைந்துள்ள அல்லாஹ்வின் இல்லங்களாகும் . அவனது அருளும் அமைதியும் இறங்கும் இடங்கள் அவை . மலக்குகள் தரிசனம் கொடு...
-
இவ்வுலகில் வாழக்கூடிய அனைத்து மனிதர்களும் பாகுபாடின்றி மரணத்தை சுவைத்தே தீர வேண்டும். ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரவேணடும். (3...
-
பிறப்பு முதல் நபித்துவம் வரை நபி முஹம்மத் (ஸல்) அவர்கள், நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் பரம்பரையில் பிறந்தவர்களாவர். இது பற்றி நபியவர்களே...