“கற்றால் வைத்தியராகலாம், ஆசிரியராகலாம், பொறிலியலாளர் ஆகலாம், பத்திரிகையாளராகலாம்” என பதில். உண்மைதான் நாம் கற்கும் கல்வியின் இலக்கு அதுவாகவே இருக்கிறது. ஆனால் பின்பு நாம் கற்ற கல்வி உலகில் பண்பாடாக, ஒழுக்கமாக, மன அமைதியோடு வாழ்ந்து சுவர்க்கம் நுழைவதை இலக்காக கொண்டிருக்க வேண்டும்.
கணிதம், விஞ்ஞானம், தமிழ், ஆங்கிலம், சித்திரம் போன்ற பாடங்களைக் கற்பதனால் சந்தோஷம், மன அமைதி கிடைக்கின்றது. இவை தவிர மனிதனுக்கு பெறுமதியானதொன்று எது? ஒரு மனிதன் சம்பாதித்து விட்டு இறப்பதற்காகவாப்பிறக்கிறான்.
சகோதர, சகோதரியரே, கல்வி கற்பது வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்து விட்டு போவதற்கல்ல, மாறாக வாழ்க்கையை நல்ல முறையில் வாழ்வதற்காகும். “ மனிதன் எப்படி வாழ்ந்தால் நன்றாக வாழலாம்?” எனக்கேட்டால், அதற்கான பூரண விடை மனிதனைப்படைத்தவனுக்கே தெரியும். மனிதனைப்படைத்த இறைவன் மனிதன் நன்றாக வாழ மார்க்கத்தை (பாதையை) காட்டியுள்ளான். எனவே தான், மதமோ சித்தாந்தமோ என்று சொல்லாமல் பரிபூரண வாழ்க்கைக்கானது மார்க்கம் என்கிறோம். நாம் இறைவன் தந்த பாதையையும் அதன் ஒழுங்குகளையும் கற்று அதன்படி சென்றால் அந்த பாதையின் சரியான முடிவான சுவர்க்கத்தை அடைவோம்.
இறைவன் காடடிய பாதையை அதிகம் பேர் சரியாக கண்டுபிடித்த போதும் அந்த பாதைக்குரிய ஒழுங்குகளை அவர்கள் மீறுவதால் செல்ல வேண்டிய சுவன வீட்டை அடைவதில்லை. கல்வியின் மீதான நோக்கம் பட்டம், பதவி, பணம் அல்ல, மாறாக ஒழுக்கத்துடனும், பண்பாடுடனும், மன அமைதியுடனும் இறைதிருப்தியுடனும் வாழ கற்று அதனை செயற்படுத்தி சுவர்க்கத்தை அடைவதாகும். எம் பாடசாலைக்கல்விக்கே முழு முக்கியத்துவமும் கொடுத்தால் பணம் கிடைக்கும், தொழில் கிடைக்கும், அழகான வீடு கட்டலாம், நல்ல வாகனம் வாங்கலாம். ஆனால், வாழ்க்கையில் சந்தோஷம் இருக்காது. மனதில் கவலை இருக்கும், ஒழுக்கமாக நடந்துகொள்ள தெரியாது, சுவர்க்கத்தை அடைவதற்கான வழி தெரியாது. மார்க்க கல்விக்கு முதலிடம் கொடுத்து கற்று உலகத்துக்கான கல்வியையும் கற்று அவற்றை செயற்படுத்தி வாழ்கையை சிறந்த முறையில் வாழ்வோம். எம் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உலகத்தில் குடும்பத்தோடும், தொழிலோடும் மற்றும் பல தேவைகளையும் நடைமுறைப்படுத்தி சிறந்த வாழ்வை வாழ்ந்துக்காட்டியுள்ளார்கள். மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரையான காலத்தில் தொழில்ää, பணம், குடும்பம் என்பன சிறு பகுதியே. எம் பெருமானார் அந்தச்சிறு பகுதியான தொழில், குடும்பம் போன்றவற்றையும் எம் மரணத்தின் பின்னும் பயனளிக்க்ககூடியவாறு வாழ்ந்துக்காட்டியள்ளார்கள். இப்படிப்பட்ட கல்வியையே நாம் கற்க வேண்டும். இதுவே கல்வியின் உண்மையான இலக்கு. எனவே, நாம் பாடசாலைக்கல்விக்கும் அதன் பரீட்சைகளுக்கும் அரசாங்க பரீட்சைகளுக்கும் எமது வாழ்க்கையை செலவழிக்கும் அதே வேலை பெறும்பான்மையான காலத்தில் கல்வியின் இலக்கான சிறந்த வாழ்க்கையையும் மறுமையில் சுவனம் பெறுவதற்கான வழியை கற்று அதன்படி வாழ்வதில் செலவழிப்போம்.
இலக்கை மறந்த கல்விக்கு இதன் இலக்கை ஞாபகமூட்டுவோம்.
“எவன் அறிவைத்தேடி பயனிக்கின்றானோ சுவனத்திற்கான பாதையை அல்லாஹ் அவனுக்கு இலகு படுத்தி கொடுக்கின்றான்”