Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

10 November 2014

இன்ஷா அல்லாஹ் கல்வி வளர்ப்போம்.! ஒற்றுமையாய் கரங்களை பற்றிப்பிடிப்போம்!

ஒரு காட்டில் ஒரு சிங்கம் ராஜாவாக இருந்ததுஅந்த ராஜா சிங்கத்தை ஒரு முயல் ஏமாற்றிகிணற்றில் தள்ளிவிட்டது என்ற கதையையும்ஒரு நதியில் ஒரு முதலை இருந்தது அந்தமுதலையை ஒரு நாவல் மரத்தில் இருந்த குரங்கு ஏமாற்றியது என்ற கதையையும் பள்ளிகளில்இளம் வகுப்புகளில் படித்து இருக்கிறோம்

 எவ்வளவு வலிமை பொருந்தியவர்களாக இருந்தாலும்தனது அந்த வலிமையை உணராவிட்டால் உண்மையிலேயே அவர்களுக்கு வலிமை இல்லைஎன்பது வெள்ளிடைஅதேபோல உலகில் மாபெரும் சமுதாயமாக இருக்கும் இஸ்லாமியசமுதாயம் தனது பலத்தை தான் உணரவில்லைஅதனால் யானை படுத்துவிட்டால் ஈக்களும்எறும்புகளும் கூட மேலே ஏறி மொய்க்கத்தான் செய்யும்.

அண்மையில் எடுக்கப்பட்ட புள்ளி விபரப்படி உல்கில் இன்று முதன்மை சமுதாயமாகஉருவெடுக்கும் வகையில் - கிறிஸ்தவ மதத்தை பின் தள்ளி வளர்ந்துவிட்ட மார்க்கம் நாம் சார்ந்துஇருக்கும் நம்முடைய இஸ்லாம் மார்க்கம் என்று – நெஞ்சு நிமிர்த்தி – மகிழலாம்.
உலக அளவில் அன்றாடம் ஆயிரக்கணக்கானோர் நம்மை நோக்கி படையெடுத்து வந்து தங்களைஇந்த அமைதி மார்க்கத்தின்பால் இணைத்து வருகிறார்கள்சொந்த அனுபவத்தைக் கூறிசுட்டிக்காட்ட வேண்டுமானால் நான் துபையில் வேலை செய்யும் குழுமத்தில் 2006 முதல்இன்றுவரை 24 பேர் இஸ்லாத்தை தழுவி இருக்கிறார்கள்மாஷா அல்லாஹ்அனைவரும் ஆப்ரிக,எகிப்தியஜோர்டானியபிலிப்பினிய நாட்டை சேர்ந்த பெண் கிறிஸ்தவர்கள்ஒரு கர்நாடக மாநிலஇந்து சகோதரர்.

புள்ளி விபரங்கள் இப்படி பேசுகின்றன.

உலக மக்கள் தொகையில் 14 மில்லியன் யூதர்கள் மட்டுமே உள்ளனர்அதில் ஏழு மில்லியன்அமெரிக்காவிலும்ஐந்து மில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும்இரண்டுமில்லியன் ஐரோப்பாவிலும்ஒரு லட்சம் பேர் ஆப்ரிக்காவிலும் சிதறிப்போய் உள்ளனர்.

உலக மக்கள் தொகையில் 1.5 பில்லியன் முஸ்லிகள் உள்ளனர்அதில் ஒரு பில்லியன் ஆசியாமற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும்நானூறு மில்லியன் ஆப்ரிகாவிலும், 44 மில்லியன்ஐரோப்பாவிலும்ஆறு மில்லியன் அமெரிக்காவிலும் உள்ளனர்.

உலகில் வாழும் ஒவ்வொரு ஐந்து மனிதர்களில் ஒருவர் முஸ்லிம்!.

ஒரு ஹிந்துவுக்கு சமமாக உலகில் இரண்டு முஸ்லிம்கள்!.

ஒரு புத்தனுக்கு சமமாக உலகில் இரண்டு முஸ்லிம்கள்!.

ஒரு யூதருக்கு சமமாக உலகில் 107 முஸ்லிம்கள்!.

ஆனாலும் உலக அரசியல் அரங்கில் நடப்பது என்னசிங்கத்தை முயல் வெல்வதுபோல்,முதலையை குரங்கு ஏமாற்றியது போல் , யானையை எறும்பு மொய்ப்பதுபோல் யூதர்களையும்ஏனையோரையும் எதிலும் வெல்ல முடியாமல் இஸ்லாமிய உலகம் ஏமாந்து நிற்பதுதான் கசப்பானஉண்மைதற்கால சரித்திரம்.   

மக்கள் தொகையில் அதிகமாக இருந்தும் ஏன் இஸ்லாமிய உலகம் முன்னேறவில்லைஏன் பின்தங்கி இருக்கிறதுஏன் சக்தியற்று இருக்கிறது?

மக்கள் தொகையில் குறைவாக இருந்தும் ஏன் மற்றவர்கள் முன்னேறி இருக்கிறர்கள்தொழில்வளர்ச்சியிலும்இராணுவம் உட்பட்ட சக்தி களையும் பெற்று பெருபான்மையை நடுங்க வைக்கவும்,விரும்புகிறபடி அரசியல் சதுரங்கம் விளையாடவும் , ஆட்சி அமைப்புகளை மாற்றவும்,அநியாயமாக படை எடுக்கவும்அதிகாரங்களை கைப்பற்றவும் ,ஆட்சி செய்தவர்களைதூக்கிலடவும்துரத்தி அடிக்கவும் எப்படி முடிகிறது?

நம்மிடையே கல்வியறிவு இல்லாமை,  நமக்குள் ஒற்றுமை இல்லாமை.

நம்மை விட ஏன் யூதர்களும்கிறிஸ்தவர்கள் சக்தி மிகுந்தவர்களாக இருக்கின்றனர்?. யூதர்களின்மேல் உள்ள வெறுப்பினால்யூதர்களின் பொருட்களை வாங்காதே என்ற கோசத்தை மட்டும்முன்வைக்கிற நாம்இவர்களின் இந்த அசுர வளர்ச்சிக்கு வித்திட்டஅடிப்படை விசயங்களையும்,அவர்களின் கட்டமைப்புகளையும் ஆராய மறந்து விடுகிறோம் மறுத்து விடுகிறோம்யூதர்கள்,மற்றும் கிறிஸ்தவர்கள் கல்விவேலை வாய்ப்புதொழில் ஆகியவற்றில் சிறந்து விளங்குவதற்குகாரணம் என்ன?. முஸ்லிம்களை விட அறிவுஜீவிகளாக தங்களை அவர்கள் வளர்த்துக் கொள்ளகாரணம் என்ன?.

காரணம் ஒன்றே ஒன்றுதான் அதுதான்அவர்களின் கல்வி வளர்ச்சி.

இதோ இந்த புள்ளி விபரத்தையும் பாருங்கள்

அமெரிக்காவில் மட்டும் 5,758 பல்கலைகழகங்கள் உள்ளன.

இந்தியாவில் மட்டும் 8,407 பல்கலைகழகங்கள் உள்ளன.

ஆனால் பரிதாபமாக உலகில் உள்ள 57 முஸ்லிம் நாடுகளில் மொத்தமாக 500  பல்கலைகழகங்கள்மட்டுமே உள்ளன.  உலகின் தலை சிறந்த பல்கலைகழகங்கள்ஓன்று கூட இஸ்லாமிய நாடுகளில்இல்லை

உலக கிறிஸ்தவர்களில் கல்வியறிவு பெற்றோர் 90%;   ஆனால் இஸ்லாமியர்கள் 40% மட்டுமே.

முழுக்க முழுக்க கிறிஸ்தவர்களை பெரும்பான்மையாக கொண்ட நாடுகளில் அவர்கள் 100%கல்வியறிவு பெற்ற நாடுகள் 15.  ஆனால் முஸ்லிம்களை அதிகமாக கொண்டுள்ள நாடுகளில் ஓன்றுகூட இல்லை.

அடிப்படைக்கல்வியை பூர்த்தி செய்துள்ள கிறிஸ்தவ நாடுகள் 98%.    ஆனால் இஸ்லாமிய நாடுகள்50% கூட தேறவில்லை

உயர் படிப்புக்கு செல்கின்ற கிறிஸ்தவர்கள் 40% ஆனால் நாமோ 2% கூட உயர் படிப்புக்குசெல்வதில்லை.

ஒரு மில்லியன் கிறிஸ்தவர்களுக்கு 5000 பேர் அறிவியல் ஆய்வாளர்களாக உள்ளனர்.

ஆனால ஒரு மில்லியன் முஸ்லிம்களுக்கு 230 அறிவியல் ஆய்வாளர்கள் மட்டுமே உள்ளனர்.

ஒரு மில்லியன் கிறிஸ்தவர்களில், 1000 பேர்கள் தொழில்நுட்ப வல்லுனராக உள்ளனர்ஆனால் ,ஒரு மில்லியன் முஸ்லிம்களில்வெறும் 50  பேர்கள் மட்டுமே தொழிற்நுட்ப வல்லுனராகஉள்ளனர்.

கிறிஸ்தவ நாடுகள் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு மொத்த வருவாயில் ஒதுக்கும்தொகை 5% ஆகும்.ஆனால் இஸ்லாமிய நாடுகள் இதற்க்கு வெறும் 0.2% சதவிகிதத்தையேஒதுக்குகின்றனர்.

கடந்த 105 வருடங்களில், 14 மில்லியன் யூதர்களில்இதுவரை 180 பேர்கள் நோபல் பரிசைபெற்றுள்ளனர்.

ஆனால் 1.5 பில்லியன் மக்கள் தொகையினை கொண்ட முஸ்லிம்களில்இதுவரை வெறும் 3 (மூன்றுமுஸ்லிம்கள் மட்டுமே இந்த நோபல் பரிசை வென்றுள்ளனர்.

இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம்கல்வியை பொருத்தவரை மிகவும் பின்தங்கி அதில்முனைப்புக்காட்டாமல் வெற்றுகூப்பாடு போட்டுக்கொண்டு இருக்கிறோம்ஆனால் இறைவனின்நிந்தனைக்கு ஆளானோர்அவன் தந்த நன்நெறிவிட்டு அகன்றோர் கல்வியில் மேம்பட்டு நம்மைஉலகெங்கும் ஆட்டிப்படைக்கின்றனர்கல்வி நிலையங்களைத் தங்களின் கைகளுக்குள்வைத்திருக்கிறார்கள்ஏன் நாம் கூட நமது பிள்ளைகளை பாஸ்டன் பள்ளியிலும் , புனித சேவியர்,பீட்டர்அந்தோனியார் பள்ளிகளில் தானே சேர்க்கிறோம்அல்லது சேர்க்கத்தானே பிரியப்படுகிறோம்

தமிழகத்தை பொருத்தவரை கடவுள் மறுப்பு கொள்கை வைத்திருக்கும் தி. கட்சி கூட தனக்காகஒரு பல்கலைக்கழகம் வைத்து இருக்கிறதுஅதேபோல் இந்து மத கோட்பாடுகளை பின்பற்றும்மடாலயங்கள் சாஸ்தா போன்ற பல்கலைக்கழகங்களை வைத்திருக்கின்றனஅலிகர் முஸ்லிம்பல்கலை கழகத்தையும் , ஹைதராபாத் உஸ்மானிய பல்கலைக்கழகத்தையும் தவிர இந்தியாவில்நமக்கு பெயர் சொல்ல ஏது வேறு பல்கலைக்கழகம்இந்தியாவை பல ஆண்டுகள் கட்டித்தான்ஆண்டோம்கல்வியை ஆளவில்லையே.!  ஆனால் ஆண்ட ஆண்டுகளில் எத்தனை கல்விநிலையங்களை ஆங்கில கிறிஸ்தவ ஆட்சி இந்தியாவில் உருவாக்கி இருக்கிறதுதமிழ்நாட்டில்எத்தனையோ பெரிய இயக்கங்கள் செயல்பாட்டில் இருந்தாலும்எதாவது ஒரு இயக்கம் இதுவரைபேர் சொல்லும்படி ஒரு மருத்துவம்பொறியியல் மற்றும் உயரிய படிப்பைக் கொண்டபல்கலைகழகத்தை தொடங்கி சேவை மனப்பான்மையில் நடத்த துணிந்ததுண்டா? .

அடுத்து ஒற்றுமை இன்மை

உலக அரங்கில் காலம் காலமாக பாலஸ்தீனியர்களின் துயரம் தொடர்ந்துகொண்டே போகிறது.இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றுவதோடு சரிகாகிதகண்டனத் தீர்மானங்கள் கண்ணீரைத் துடைக்குமாகாகிதப்பூ மணக்குமா?  அநியாயமாக ஈராக்ஆக்ரமிக்கப்பட்டபோதும்ஆப்கானிஸ்தானில் அரசியல் அத்துமீறல்கள் நடந்தபோதும்லிபியாவில்உள்நாட்டு பிரச்னையை ஐரோப்பிய வல்லரசுகள் தூண்டிவிட்டபோதும் சரி எங்கே எது நடந்தாலும்தனக்கு ஆபத்து இல்லாமல் இருந்தால் சரி என்று ஒதுங்கி இருக்கும் தத்துவம்தான் இஸ்லாமியநாடுகளுக்கிடையே நிலவி வருகிறதே தவிர ஒன்றுபட்டு தீமையை எதிர்ப்பதில்லை.  அரசுகள்அதற்கு தயாராக இல்லைமுக்கிய காரணம் ஒற்றுமை இன்மைஊர் இரண்டுபடுவதுகூத்தாடிகளுக்கு கொண்டாட்டமாகிவிடுகிறதுதட்டி கேட்க ஆள் இல்லாமல் சின்னஞ்சிறு இஸ்ரேல்சிலம்பாட்டம் ஆடி வருகிறது.  

யூதர்களுக்கும்கிருத்துவர்களுக்கும் இயல்பாகிப்போன சூழ்ச்சியும் நரித்தனமும்தாரகமந்திரங்களாக இருந்தாலும்முஸ்லிம்களை போன்று அவர்களுக்கிடையே பகிரங்கமாகமோதி சண்டையிட்டுக் கொள்வது கிடையாது..  கிறிஸ்தவர்கள் ஒரு வேதத்தையேபலபிரிவுகளாக்கி கொண்டவர்கள் ஆயிரம் பிளவுகளும் பிரிவுகளும் இருந்தாலும் காழ்ப்புணர்ச்சியுடன்கடும் சொல் பேசி . வசைமாரி பொழிந்து கொள்வது கிடையாதுஎதிர்த்து போஸ்டர்கள் ஓட்டுவதுகிடையாது

ஒரே இறை வேதத்தைக் கொண்ட இஸ்லாத்தில் நூற்றுக் கணக்கான ஜமாத்கள்-. இயக்கங்கள்-.பிரிவுகள்-. மற்றும் பிரிவினைகள்ஒரு இயக்கத்தை எதிர்த்து மற்ற இயக்கங்கள் தினம் ஒருபோராட்டம்கல்வியில் அறிவை வளர்க்க வேண்டிய ஒரு சமுதாயம் வழக்குநீதிமன்றம் என்றும்,அடித்துக் கொண்டும்போராட்டம் நடத்திக்கொண்டும் தங்களின் வாழ்வாதாரங்களை வீனடித்துக்கொண்டு இருகின்றது

உலகமெங்கும் இறைவனின் மார்க்கமான இஸ்லாத்தை நோக்கி மனிதக்கூட்டம் இணைந்துகொண்டிருக்கும் இந்தவேளையில் - இந்த வளர்ச்சியைப் பார்த்து மகிழும் நிலையில் நாம் வாழும்தமிழகத்தில் நமது நிலை என்ன என்று பார்த்தோமானால் கண்ணீர் விட்டு கதற வேண்டிய நிலயில்இருக்கிறோம் என்பதை எந்த நடுநிலையாளரும் மறுக்க இயலாது

புதிய இயக்கங்கள் தோன்றியதன் மூலம் ஒரு புத்துணர்வு தோன்றியதையும் ஒரு மறுமலர்ச்சியும்உத்வேகமும் ஏற்பட்டதையும் நாம் ஏற்றுக்கொள்வோம்.  அதேநேரம் இந்தக் கருத்துக்களைமுன்னெடுத்து சென்றவர்களின் சுயநலப்போக்கும்சொத்துகுவிக்கும் பேராசையும்தான் என்றஆணவமும்சுயவிளம்பர  தம்பட்டங்களும்முன்வரிசை தலைவர்களின் பதவி ஆசையும்மிககுறுகிய காலத்தில் வெட்டவெளிச்சமாகி நீ பெரியவனா நான் பெரியவனா என்று இயக்கங்கள்ஒன்று இரண்டாகிஇரண்டு நான்காகி போட்டி இயக்கங்களாகி நமது முக்கிய நோக்கங்களைச்சிதைத்துஇன்று நமது போட்டியாளர்கள் நாம் போடும் சண்டையைப் பார்த்து எள்ளி நகையாடும்நிலைமைக்கு தள்ளிவிட்ட்துதலைவர்கள் என்று கொண்டாடப்பட்டவர்களின் தன்னலம் வெட்டவெளிச்சத்துக்கு வந்துவிட்டதால் பிரிந்து செல்லும் இயக்க சொந்தங்களை பினைத்துவைக்கும்தகுதியை இழந்து நின்றனர்கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் தலையைதொங்கப்போட்டார்கள்.., கோபப்பட்டார்கள்இதனால் சிந்திக்கும் திறனற்ற சில தேர்ந்தெடுத்தஇளைஞர்களை மூளை சலவை செய்து ஆட்டுவித்தார்கள்..

சுயநல தலைவர்களின் பின் சென்ற இந்த சிறிய சமுதாயத்தின் முத்கெலும்பாக திகழ வேண்டியஇளைஞர்கள் திக்காலுக்கு திக்கால் பிரிந்து நின்று மார்க்கம் போதித்த முறைகளுக்கு மாறாகஒருவரை ஒருவர் மனம் புண்பட பேசுவதும் , ஏசுவதும் ஊடகஙகளில் வசை பாடிக்கொள்வதும்வாடிக்கையாகிவிட்ட்து

மாற்று மதத்தினவர் நம்முடைய சகோதரத்துவம் சார்ந்த சமூக வாழ்வையும் நமது அன்புஅறம்,ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் பண்பையும் கண்டு வியந்து நம்மை நோக்கி வந்து நம்மைதழுவினார்கள்இன்றோ சந்தி சிரிக்கிறது நமது சகோதரத்துவம்.! எதிரிகள் எள்ளிநகையாடுகின்றனர்!. இதற்கு நாமே இடம் கொடுத்து விட்டோம்!

ஐம்பது குடும்பங்கள் இருக்கும் ஒரு சிறிய ஊரில் கூட ஒரே பள்ளியில் நாம் ஒன்று சேர்ந்துதொழமுடியாமல் போனோம்நூற்றண்டுகளாக ஊர் நடுவே இருந்துவரும் பள்ளிவாசல்களில்ஒன்று சேர்ந்து தொழ முடியாமல் ஊருக்கு வெளியே ஓலைக்குடிசைபோட்டு தொழுது வருகிறோம்.குடும்பங்களில்  வாப்பா ஒரு இயக்கம்தம்பி மறு இயக்கம்மகன் வேறொரு இயக்கம் என்றுபிரிந்து பெருநாள்களைக்கூட ஒரு குடும்பம்ஒரு ஊர்ஒரு ஜமாத் ஒரே நாளில் கொண்டாடி கட்டிதழுவி சலாம் கூறும் பண்பு கூட பாழ்பட்டுப்போனது. (சில வீடுகளில் மூன்று நாள் வட்டிலப்பம்,கடப்பாசி  வைக்க வேண்டி இருக்கிறது.) பிறை கண்டால் பெருநாள் என்பது எல்லாம் பழங்கதை.இயக்கங்கள் ஒலிபெருக்கியில் அறிவித்தால்தான் அன்று பெருநாள் என்பது புதுக்கதை.திருமணங்களில் ஊர் ஒன்று கூடி வாழ்த்த முடியவில்லை.. ஒன்றாக பழகிய நண்பர்கள் இந்தபாகுபாட்டால் ஒரே ஊரில் முகம் திருப்பிப்போகும் மூமின்களாக (?) காட்சி தருகின்றனர்சிற்றூர் ,பேரூர் எங்குமே இன்னிலையாரும் மறுக்கமுடியாத நிலை - இன்றைய அவல நிலைஒரேமரத்தில் ஒன்பது கொடிகள் பறக்கின்றனஅதனால் அந்த மரமும் பட்டுப்போகிறதுநமதுமார்க்கமும் எள்ளி நகையாடப்படுகிறது

அரசியல் களத்தில் பொது எதிரிகளை வீழ்த்த வேண்டிய நாம் அந்த எதிரிகளின் கூடாரத்தை முட்டுகொடுத்து தாங்கும் அவலநிலைக்கும் ஆளானோம்பொதுதேர்தல்களில் ஒட்டுமொத்தசமுதாயத்துக்காக பேரம் பேசும் தகுதியை ஒற்றுமையின்மையினால் இழந்து அவர்கள்போட்டதைப் பெற்று பெருமை பேசினோம்நம சொந்தங்களை நாமே தோற்கடித்து வாழ்த்துசுவரொட்டி ஒட்டும் அளவு நமது வன்மம் காட்டிக்கொண்டோம்நமது ஆதிக்கத்தில் இருந்தசென்னை துறைமுகத்தில் முஸ்லிம் தோழன் தோற்க நாமே  காரணம் ஆனோம்சேப்பாக்கத்தில்நமது இளம் மைந்தன் தோற்கவும்  நாமே காரணம் ஆனோம்இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாகவாழும்  வாணியம்பாடியில் நாம் தோற்கவும் நாமே  காரணம் ஆனோம்நமக்குள் வாக்குகளைபிரித்துக்கொண்டு முத்துப்பேட்டையிலும்மேட்டுப்பாளையத்திலும் பேரூராட்சி மற்றும் நகரமன்றங்களை இழந்தோம்.  

தற்போது சொத்துக்களுக்காக பங்காளிகள் சண்டையை அரங்கேற்றவும் முஷ்டி மடக்கிதயாராகிவிட்டோம்நமது சொந்தங்களை நாம் அழைக்கும் பெயர்களைக் கேட்டால் வெட்கி தலைகுனியவேண்டி வரும் . “மாமா கட்சி” , “ பொய்யன் ஜமாத்” “ டவுச்ர் ஜமாத்” “ அண்ணண் ஜமாத்” “வாத்யார் கட்சி” “ ஹஜரத் கட்சி” என்றும் “ போடாவாடா என்றும்சொல்லக்கூசும் வார்தைகளால்பொதுத்தளங்களில் அர்ச்சனை செய்துகொள்கிறோம்திருவிடச்சேரியில் நம்மை நோக்கி நாம்துப்பாக்கியால் சுட்டு உயிர்பலி கொண்ட வழக்கு நீதிமன்றத்தில் என்பது தலைகுனிய வேண்டியவெட்ககேடுஇதையா இஸ்லாம் சொல்லித்தந்ததுஇதற்கா இரசூலுல்லா கண்ணீர் சிந்திரத்தம்சிந்தினார்கள்இந்த செயல்களில் பெயருக்குகூட மனித நேயமும் தென்படவில்லை-முஸ்லிம்களை முஸ்லிம்கள் காயப்படுத்தாமல் கண்ணியப்படுத்தும் தவ்ஹீதும் இல்லை

இதோ என நண்பர் நாஞ்சில் நாட்டு கவிஞர் அபூ ஹஷீமா இப்படி கண்ணீர் வடிக்கிறார்

காபூலின் திராட்சைகளில் வடிகிறது 
தலிபான்களின் ரத்தம்!
கால்நடைகளுக்கும் உபயோகப்படாத 
கழிவுநீர்க் குளங்களாய் 
தேங்கிக் கிடக்கிறது 
குஜராத் முஸ்லிம்களின் 
களவாடப்பட்டக் கண்ணீர்!
டைக்ரீஸ் நதியின் தண்ணீரில் 
கொழுந்துவிட்டு எரிகிறது 
ஏகாதிபத்தியத்தின் நெருப்பு!
காஷ்மீரின் பனிக்குடங்களில்
கருக்கலைப்பு நடத்துகின்றன 
பாசிச ஆயுதங்கள்!
இஸ்ரேலின் சவச்சாலைகளுக்கு 
சரளைக் கற்களாய் பதிக்கப் படுகின்றன 
பாலஸ்தீனியர்களின் பிணங்கள்!

மேலைநாட்டின் 
மாய சொர்கங்களுக்காக 
ஈமானை அடமானம் வைத்து 
நரகங்களில் 
மயங்கிக் கிடக்கும் 
அரபு நாட்டுச் சீமான்கள்!
வல்லூறுகளின் வாய்ப்பட்ட 
விருந்தின் எச்சங்களாய் 
இன்னும் மிச்சமிருக்கும் 
எங்கள் கூட்டம்
எட்டாவது அதிசயம்!

மொத்தமும் அழிந்திருந்தால் 
சுன்னத் 
தௌவ்ஹீத் 
சொர்கவாதி 
நரகவாதி என்று 
எங்களை நாங்களே 
அழித்துக் கொள்ளும் 
ஒன்பதாவது அதிசயத்தை 
நிகழ்த்திக் காட்டுவது 
யார்?”
-அபூ ஹஷீமா

யாரையும் காயப்படுத்துவதோமனம் நோகச்செய்வதோஅறிவுரை பகர்வதோ இந்தப்பதிவின்நோக்கமல்லநாம் ஒன்றுபட வேண்டும்நமது சமுதாயம் ஒருங்கிணைந்து செயல்பட்டால் நமதுமக்களுக்கு வேண்டியவற்றை உத்தரவிட்டு நாம் வாங்க முடியும்.

நம்முடைய சக்தி ஆற்றல் மிக்கது . அந்த சக்தி சிறுசிறு கிளை வாய்க்கால்களாக பிரிந்து ஓடினால்ஒரு பயனும் இல்லைஒரு பெரிய பிரவாகமாகஒரு ஜீவநதியாக நாம் உருவெடுத்தால்தாழ்த்தப்பட்டபிற்படுத்தப்பட்டஒடுக்கப்பட்ட் ஏனைய சமுதாயத்தினரும் நம்மை நோக்கிவருவார்கள்அவர்களையும் நம்மோடு இணைத்துக்கொண்டு ஒரு நல்ல தலைமையை நாம் வகிக்கமுடியும்நாம் போய் மாற்றாருக்கு பூச்செண்டு கொடுக்கவும்போர்வை போர்த்தவும்வேண்டியதில்லைநம் சமுதாயத்தை தேடி அவர்கள் வரும் நாள் வரும்.  

கல்வி வளர்ப்போம்.! ஒற்றுமையாய் கரங்களை பற்றிப்பிடிப்போம்இன்ஷா அல்லாஹ்

உள் நோக்கம் எதுவும் இல்லைமனதில் பட்டதை பகிர்ந்து கொண்டுள்ளேன்

இந்த பதிவின் நோக்கத்தை அறிந்த ரப்பில் ஆலமீன் ஆகிய எல்லாம் வல்ல அல்லாஹ்நன்மையாக்கி வைப்பானாகஆமீன்.





முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள்


அஸ்ஸலாமு அலைக்கும் வாரகுமத்துல்லாஹி வாபரக்கதுஹு....

அன்பு இஸ்லாமிய சகோதரர்களே...

எனக்கு கிடைத்த் படி இந்த தகவலை உங்களுடன் பகிர்கிறேன்நீங்களும் ஏனேய இஸ்லாமிய 
சகோதரர்களுக்கும்பரப்புங்கள்அல்லாஹ் நல்லருள் புரிவானாக

வஸ்ஸலாம்.... 


தயவுசெய்து இதன் பிரதியைப்பொது இடங்களில் நிரந்தரமாய் ஒட்டிவைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வறுமையில் வாடும் பலரின் வாழ்வும் வெகு சிறப்பாய் மலரும்... இவர்களின்   உதவியால்இன்ஷா அல்லாஹ்!

1. 
ஐக்கியப் பொருளாதாரப் பேரவை ,,அலி டவர்ஸ்கிரீம்ஸ் ரோடு ஆயிரம் விளக்குசென்னை - 600 006 
தொலைபேசி: 2829 5445


2. 
இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க் ராயபேட்டைநெடுஞ்சாலை சென்னை - 14 தொலைபேசி: 94440 52530

3. 
சீதக்காதி அறக்கட்டளை, 688 , அண்ணா சாலைசென்னை - 06

4. 
ஆல் இந்தியா இஸ்லாமிக் பவுண்டேசன், 688 , அண்ணா சாலைசென்னை - 06

5. B S. 
அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட் பவுண்டேசன் மூர்ஸ் ரோடுசென்னை - 06 (ஜகாத்துக்கு உரியவர்களுக்கு 
மட்டும்)

6. 
சுலைமான் ஆலிம் சாரிடபிள் டிரஸ்ட்ஜாவர் பிளாசாநுங்கம்பாக்கம் நெடுஞ்சாலைசென்னை - 34

7. 
முஹம்மது சதக் அறக்கட்டளை 133 , நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலைசென்னை - 34

8. 
மெஜெஸ்டிக் பவுண்டேசன் 117 ஜெனெரல் பேட்டர்ஸ் சாலை ,சென்னை - 02

9. 
முஸ்லிம் பவுண்டேசன் டிரஸ்ட்ஜபார்ஷா தெருதிருச்சி.

10. 
தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம், 118 / பி வேப்பேரி நெடுஞ்சாலைசென்னை - 03

11. 
தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்க வெல்பர் டிரஸ்ட்டி - பிளாக் 10 ( 23 ) 11 வது தெருஅண்ணா நகர் - 
சென்னை 40 போன் 98400 80564

12. 
அஸ்மா காசிம் அறக்கட்டளை ,மாண்டியத் சாலைஎழும்பூர் - சென்னை – 08

13. 
ராஜகிரி பைத்துல்மால்கீழத் தெருராஜகிரி - 614 207

14. 
டாம்கோ 807, - அண்ணா சாலை, 5 வது சாலைசென்னை

15. 
ஹாஜி. அஹமது மீரான், Managing Director Professional Courier’s

16. 7 
மகாராஜா சூர்யா ராவ் ரோடுஆழ்வார்பேட்டை - சென்னை – 18

17. 
மியாசிபுதுக் கல்லூரி வளாகம்பீட்டர்ஸ் ரோடு சென்னை – 14

18. S I E T 
கே.பி. தாசன் சாலைதேனாம்பேட்டைசென்னை - 18

தயவுசெய்துஇவர்களைத் தொடர்புகொள்ளுமாறு மாணவர்க்கு தெரியப்படுத்தவேண்டுகிறேன். 

Popular Posts

FACEBOOK COMMENTS BOX