பேஸ்புக்கினை தடை செய்யக்கூடாது - ரணில் விக்கிரமசிங்க சொல்கிறார்
பேஸ்புக் இணைய தளத்தை தடைசெய்ய இடங்கொடுக்க போவதில்லை என்று எதிர் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஹங்வெல்ல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
எந்தவித பிரச்சினையும் இன்றி அரசாங்கம் குறித்த தகவல்களையோ அல்லது ஊழல் அச்சமற்ற நிலையில் வெளியிடம் சாதனமாக பேஸ்புக் தற்போது செயற்படுகிறது.
கணினி நுட்ப அறிவை பெற்றுள்ள இளைஞர்கள் பேஸ்புக் மூலம் சகல விடையங்களையும் அலகுவாக அறியக் கூடியதாக இருக்கின்றது.
இந்த நிலையில் பேஸ்புக் மூலம் வெளியிடப்படும் தகவல்களை அரசாங்கம் மூடிமறைக்கும் நோக்கில் பேஸ்புக்கை தடைசெய்யும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்க விரும்புகிறேன்.
இந்த நிலையில் பேஸ்புக்கை இடைநிறுத்த நாம் அனுமதி வழங்க போவதில்லை என்பதை நாம் உறுதியாக கூறுகிறோம்.
அதனையும் மீறி அரசாங்கம் செயற்படுமானால் பாரிய ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் நீதிமன்றம் செல்லவும் நாம் தயாராக உள்ளோம்.

இலங்கையில் பேஸ்புக் தடைசெய்யப்பட்டால் anchorfree மென்பொருள் மூலம் பேஸ்புக்கை பயன்படுத்தலாம்.
Igi rizvi 4:30 PM Computer TipsFacebook
பேஸ் புக் சமூக வலையமைப்பு மற்றும் இணையத்தை பிழையாக பயன்படுத்துவதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே, நாட்டின் இளைய தலைமுறையினரை பாதுகாக்கும் நோக்கில் பேஸ்புக்கை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இலங்கையில் பேஸ்புக் தடைசெய்யப்பட வாய்ப்புக்கள் அதிகமாகவே கானப்படுகிறது, அவ்வாறு தடை செய்யப்பட்டாலும் தொடர்ந்து பேஸ்புக்கை பாவிக்க கீழ் உள்ள லிங்கில் உள்ள anchorfree எனும் சொப்ட்வேரை உங்கள் கனனியில் இன்ஸ்ரோல் செய்து கொள்ளுங்கள்.
பின்னர் அதனை செயற்படுத்தி அதனுடாக தடைசெய்யப்பட்ட பேஸ்புக் தளத்ததை பாவிக்க முடியும்.
இப்பவே இந்த சொப்ட்வேரை டவுன்லோட் பன்னிவச்சிக்கங்க..
****************************************************************************