Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

23 March 2014

வில்வம்… ஓர் அதிசய மரம்…!


அடிமுதல் நுனி வரை அத்தனையும் பயனுள்ள மருத்துவ குணங்களை வைத்துள்ள கற்பக விருட்சம் வில்வம். வில்வ வேரை நன்றாகப் பொடிசெய்து தண்ணீரில் சேர்த்துக் கொதிக்க வைத்து பசும்பாலுடன் தினசரி காலையில் குடித்தால் ஆண்மை அதிகரிக்கும்.
வில்வ மரத்தின் இலைகளுக்கு நுரையீரல் சம்பந்தமான நோய்களைத் தீர்க்கும் மருத்துவக் குணம் இருக்கிறது.
நாள் பட்ட இருமல், சளி, நெஞ்சில் கபம் சேருதல், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு ஆளானவர்கள் தினமும் காலையில் எழுந்தவுடன் ஆகாரம் சாப்பிடுவதற்கு முன்னர் ஏழெட்டு விலவ இலைகளை நன்கு மென்று உட்கொண்டால் நல்ல குணம் தெரியும். உடல் உறுப்புகளுக்கு ஆக்ஸிஜனைச் சுமந்து செல்லும் ஹீமோகுளோபின் என்ற வேதியல் பொருள் சிவப்பணூக்களில் இருக்கிறதல்லவா? அந்த சிவ[ப்பணுக்களை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் விலவத்துக்கு உண்டு. செரிமானக் கோளாறுகள், வாயுத் தொல்லை போன்றவையும் வில்வ இலைகளை உட்கொள்ளுவதன் மூலம்
கட்டுப்படும்.
விலவப் பழத்தின் மேல் தோல் ஓடு போல இருக்கும். அதை நெருப்பில் காட்டிப் பின்னர் அதைத் தலையில் வழுக்கை உள்ள இடத்தில் பூசி வந்தால் நல்ல பலன் தெரியும்.வில்வப் பழத்தை ஸ்ரீபலம் என்றும் அழைப்பார்கள். வில்வ பழத்தில் . புரதச்சத்து, தாது உப்புக்கள், மாவுச் சத்து, சுண்ணாம்பு இரும்பு,மற்றும் கொழுப்புச் சத்துக்கள் ஆகியன இருக்கின்றன.. மேலும் பாஸ்பரஸ், நியாசின் ஆகிய சத்துக்களும் இருக்கின்றன. சுவையாகவும் இருப்பதால் இதை ‘அப்படியே’ சாப்பிடலாம். வயிற்றுப் போக்கு மற்றும் சீத பேதி ஆகியவற்றுக்கு வில்வப் பழம் சிறந்த மருந்து.
பழத்தின் உள்ளிருக்கும் கூழ் போன்ற பசையை நல்லெண்னையில் ஊற வைத்து உடலில் தேய்த்துக் குளித்து வந்தால் சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் கட்டுப் படும்,. தோல் பளபளப்பாகவும் விளங்கும். வில்வப் பழத்திலிருந்து ஜாம், பழச் சாறு, பழக் கூழ், பானங்கள், இனிப்புகள், போன்றவற்றைத் தயாரித்தும் பயன்படுத்தலாம். வில்வப் பழ விதைகளில் இருந்து ‘வில்வத் தைலம்’ என்ற எண்ணெயும் தயாரிக்கலாம். இதுவும் முடி வளர உதவும். காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் . நெஞ்சு வலி மற்றும் மூச்சடைப்பு ஆகியவற்றைக் குணப்படுத்தும்

Popular Posts

FACEBOOK COMMENTS BOX