
"பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்டால் நிரூபியுங்கள் "
என சாவால் விட்ட ஜனாதிபதி அதன் பின் இன்னுமொன்றையும் கூறியுள்ளார்.
"பள்ளிவாயலுக்கு சொந்தமில்லாத இடத்தில் பள்ளிவாயல்கள் அமைக்க முடியாது வீடுகள் பள்ளிவாயல்களாய் மாற்றப்பட்ட முடியாது என அல்குர்ஆனிலே கூறப்பட்டுள்ளது"
என்றும் கூறுயுள்ளார்.
என்னடா முட்டிக்கும் முழங்காலும் தொடர்பு போடுகிறார் என பார்க்கிறீங்களா?
அவரின் இவ் இரு கருத்துக்களையும் வைத்துப் பார்க்கும் போது அவர் சொல்ல வருவது என்ன தெரியுமா?
"பள்ளிவாயல் உடைக்கப்படவில்லை நீங்கள் பள்ளிவாயலாய் நினைத்துக்கொண்டிருப்பதே உடைக்கப்பட்டுள்ளது.பள்ளி வாயல் உடைக்கப்படுகிறது என நீங்கள் கூறிக்கொண்டிருப்பது எல்லாம் வீடுகள் பள்ளிவாயல்களாக மாற்றப்பட்டதும் பள்ளிவாயலுக்கு சொந்தமில்லாத இடத்தில் அமைக்கப்பட்டதுமே.அவைகளுளைத் தானே அல்-குர்ஆன் தடை செய்கிறதே அப்படியானால் அது எப்படி பள்ளிவாயல் என்ற அந்தஸ்தை பெறும்?"
எனவே நாம் பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்டுள்ளது என நிரூபிக்க செய்ய வேண்டிய விடயம் உடைக்கப்பட்ட பள்ளிவாயல் அமைக்கப்பட்ட இடங்கள் பள்ளிவாயலுக்கு சொந்த மானதே என்பதும் வீடுகளில் பள்ளிவாயல் அமையப்பெறலாம் என்பதுமே.
எனது இதற்கான நிறுவல் வெகு விரைவில்.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்