அழகான தோல் வேண்டும் என்று விரும்பாதவர்களே இருக்க முடியாது. அந்தத் தோலை பாதுகாக்க என்னென்னவோ செய்கின்றனர். சிறிது சுருக்கம் விழுந்துவிட்டால் போதும், அயயோ போச்சே என்று கவலை அடைகின்றனர். அவர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.
தோல் சுருக்கத்தை குறைக்க அல்லது அப்படியே காணாமல் போகச் செய்ய, நிறைய தண்ணீர் குடித்தால் போதுமாம். அவ்வாறு குடித்தால் தோல் சுருக்கம் மறைவதோடு, தோலுக்கு ஈரப்பதமும் கிடைக்கிறது. இதனால் இளமையாகத் தோன்றலாம்.
இதற்கான ஆராய்ச்சியில் கலந்து கொண்ட பெண்களை 8 வாரங்களுக்கு தினமும் 1 1/2 லிட்டர் தண்ணீர் குடிக்கச் செய்துள்ளனர்.
இதில் ஒரு பிரிவினர் குழாய் நீரையும், மற்றொரு பிரிவினர் வில்லோ நீரையும் குடித்துள்ளனர். வில்லோ நீர் என்பது இங்கிலாந்தில் உள்ள லேக் மாவட்டத்தில் கிடைக்கும் இயற்கையான மினரல் வாட்டராகும் (நம்மூரில் கேன்களில் வைத்து கொடுக்கின்றனரே, அதுபோல டுபாக்கூர் வாட்டர் அல்ல).
இதில் உள்ள சாலிசின் செமித்த பிறகு சாலிசிலிக் ஆசிடாக மாறுகிறது. சாலிசிலிக் ஆசிடைத் தான் பெரும்பாலான ஸ்கின் கிரீம்களில் பயன்படுத்துகின்றனர் என்பது இங்கு ஒரு உபரிச் செய்தி. அதாவது, செயற்கையான சரும கிரீம்களில் பயன்படுத்தப்படும் சாலிசிலிக் ஆசிடை தண்ணீர் குடித்து இயற்கையாகவே நாம் பெறுவதால்தான் தோல் சுருக்கம் காணமல் போகிறது.
இதில் கலந்து கொண்ட பெண்களை ஆராய்ச்சிக்கு முன்பும், பின்பும் புகைப்படம் எடுத்துள்ளனர். இதில் ஆராய்ச்சிக்குப் பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்களில் பெண்கள் இளமையாகத் தோன்றியுள்ளனர்.
சாதாரணத் தண்ணீர் குடித்தவர்களுக்கு 19 சதவிகிதமும், வில்லோ தண்ணீர் குடித்தவர்களுக்கு 24 சதவிகிதமும் சுருக்கம் மறைந்திருந்ததாம்.
பிறகென்ன, பக்கெட் பக்கெட் தண்ணீரை வைத்துக் கொண்டு படபடவென்று குடித்து தோல் சுருக்கத்தை மடமடவென்று விரட்ட வேண்டியதுதானே….!
அளவுக்கு மிஞ்சினால் தண்ணீரும் நஞ்சு: நிபுணர் எச்சரிக்கை
லண்டன்: தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் உடல் நலத்திற்கு கேடு உண்டாகும் என்று இங்கிலாந்தைச் சேர்ந்த உடலியல் நிபுணர் ஜி.பி. மார்க்கரட் தெரிவித்துள்ளார்.
அதிக அளிவில் தண்ணீ்ர் குடிப்பதால் தோல் இளமையாக இருக்கும், நினைவுத் திறன் அதிகரிக்கும், உடல் எடை குறையும், சிறுநீரக பாதிப்புகள் வராது என்று ஏற்கனவே நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவித்துள்ளன. ஆனால் தேவையில்லாமல் எதற்கெடுத்தாலும் தண்ணீர் குடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று இங்கிலாந்தைச் சேர்ந்த உடலியல் நிபுணர் ஜி.பி. மார்க்கரட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
உடலுக்கு பொதுவாக நாள் ஒன்றுக்கு 1 முதல் 2 லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படும். எனவே, அந்த அளவு குடித்தால் போதும். உடலுக்கு தண்ணீர் தேவைப்படுகையில் தாகம் எடுக்கும். அப்படி தாகம் எடுக்கையில் தண்ணீர் குடித்தால் போதும்.
தேவைக்கு மேல் தண்ணீர் குடிக்கக்கூடாது. அதிகமாக தண்ணீர் குடிப்பதால் உடல் உறுப்புகள் கூடுதல் பணிகளை செய்ய வேண்டியிருக்கும். இதனால் உடல் நலம் பாதிக்கப்படும். உடலில் கலோரியை எரிக்கவும், நீர்ச்சத்தை அதிகரிக்கவும் தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே, தேவைக்கு ஏற்ப தண்ணீர் குடிக்க வேண்டும்.
உடலுக்கு தண்ணீர் தேவைப்படும் போது தாகம் எடுக்கும் அதற்கு தகுந்தார்போல் தண்ணீர் குடிக்க வேண்டும்.
உடலில் நீர்ச்சத்து குறைந்தால் தலைவலி ஏற்படும். எனவே, தலைவலி ஏற்பட்டால் தண்ணீர் குடிப்பது நல்லது. பாட்டலில் அடைத்து வைக்கப்படும் தண்ணீரைக் குடிப்பது ஆரோக்கியமானதன்று என்றார்.