Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

04 March 2014

முஸ்லிம்கள் அஞ்சத் தேவையில்லை, அவர்கள் ஒருபோதும் நாட்டுக்கு துரோகமிழைக்கவில்லை - கோதா

Photo: முஸ்லிம்கள் அஞ்சத் தேவையில்லை, அவர்கள் ஒருபோதும் நாட்டுக்கு துரோகமிழைக்கவில்லை - கோதா

பாகிஸ்தான் உட்பட முஸ்லிம் நாடுகளினதும் சீனாவினதும் உதவியும், ஒத்துழைப்பும் கிட்டியதன் காரணமாகவே யுத்தத்தை வெற்றிகொள்ள முடிந்ததாகவும்,  இலங்கை முஸ்லிம்களும் அரசுக்கு அளித்துவரும் ஆதரவை குறைத்து மதிப்பிட முடியாது எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ச சுட்டிக் காட்டியுள்ளார்.

முஸ்லிம் வர்த்தக சமூகத்தின் குழுவொன்று வர்த்தக பிரமுகர் ரிபாய் ஹாஜியாரின் இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே பாதுகாப்புச் செயலாளர்  இவ்வாறு தெரிவித்திருக்கிறார். இச்சந்திப்பில் அமைச்சர் பௌசியுடன் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, சர்வதேச வை.எம்.எம்.ஏ.தலைவர் அஷ்ரப் ஹுசைன், கொழும்பு மாநகர முதல்வர் ஏ.ஜே. எம். முஸம்மில், முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் உட்பட வர்த்தகப் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

அண்மைக் காலத்தில் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுவரும் நெருக்கடிகள் குறித்து பிரஸ்தாபிக்கப்பட்டபோது பதிலளித்த பாதுகாப்புச் செயலாளர், சிறுகுழுக்கள் ஆட்டம் போடுகின்றன அதனை நாம் அடக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்பட இடமளிக்க மாட்டோம். எதிர்ப்புச்சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். முஸ்லிம் சமூகம் அஞ்சத் தேவையில்லை.

முஸ்லிம் சமூகம் ஒருபோதும் நாட்டுக்கு துரோகமிழைக்கவில்லை. அவர்கள் அரசுக்கு விசுவாசமாகவே இருக்கின்றனர். இதனை நாம் ஒருபோதும் மறவோம். இறுதிக்கட்ட யுத்தத்தின்போது எமது படைக்கு பாகிஸ்தானும், வேறு சில முஸ்லிம் நாடுகளும் தாராளமாக உதவியுள்ளன. அதேபோன்று சீனாவும் உதவியது. 

இறுதி நேரத்தில் உள்ளகப் பிரச்சினை காரணமாக சீனா பின்வாங்கிய நிலையில், பாகிஸ்தானும் முஸ்லிம் நாடுகளும் இறுதிவரை உதவியளித்தன. அந்த உதவி கிட்டாதிருந்தால் இறுதி யுத்த வெற்றி கிட்டி இருக்குமா என்பது சந்தேகத்திற்கிடமானதாகும்.

இந்த நன்றியை அரசு ஒருபோதும் மறவாது. முஸ்லிம்களை அரசு ஒருபோதும் கைவிடப்போவதில்லை. முஸ்லிம் சமூகத்திற்கு நாம் அநீதி இழைக்கப் போவதில்லை. உங்கள் உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படும் எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.

Popular Posts

FACEBOOK COMMENTS BOX