
பள்ளிவாசல்களை மதஸ்த்தலங்களை உடைத்தார்கள் என்று ஏன் பொய் சொல்கிறார்கள்.- மஹிந்த
பள்ளிவாசல்களும், கத்தோலிக்க ஆலயங்களும் உடைக்கப்படுவதாக சில கட்சிகளும், சமய ரீதியான கட்சிகளும் பாரியளவிலான பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றன. எங்கே, எவ்வாறு உடைக்கப்பட்டுள்ளன..? இந்த போலி பிரச்சாரங்கள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்,
01. 2011செப்டம்பர்: அநுராதபுரம் மாவட்டம்,ஒட்டுப்பள்ளம் பகுதியிலிருந்த பல நூற்றாண்டு பலமைவாய்ந்த முஸ்லிம்களுக்கச் சொந்தமான இஸ்லாமிய பெரியாரின் அடக்கஸ்தலம் உள்ளிட்ட நினைவு சின்னங்கள் பொலிஸாரின் பாதுகாப்புடன் பௌத்த மதகுருமார்களின் தலைமையில் இடித்து தகர்க்கப்பட்டது.
02. 2012 எப்ரல் 20: மாத்தளை மாவட்டம், தம்புள்ள நகரில் அமைந்துள்ள ஹைரியா ஜும்ஆப் பள்ளிவாசல் தாக்குதலுக்கு உள்ளானது. தம்புள்ள ரங்கிரி ரஜமகா விகாரையின் தலைமை மதகுரு இனாமலுவ சுமங்கள தேரரின் தலைமையிலான குழுவொன்று பேரணியாக வந்து இத்தாக்குதலை நடத்தியது.
03. 2012 மே 25: கொழும்பு மாவட்டம், தெஹிவளை கல்விஹாரை வீதியில் உள்ள தாருர் ரஹ்மான் பள்ளிவாசலை அகற்றுமாறு கோரி பௌத்த மதகுருமார்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டதோடு பள்ளிவாசலை தாக்கும் முயற்சியும் மேற் கொள்ளப்பட்டது.
04. 2012 மே 28 : குருநாகல் மாவட்டம், ஆரிய சிங்களவத்தையில் அமைந்துள்ள உமர் இப்னு கத்தாப் குர்ஆன் மதரஸாவில் தொழுகை நடத்துவதை நிறுத்துமாறு பௌத்த மதகுருமார்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டதோடு அங்கு தொழுகை நடத்துவது நிறுத்தப்பட்டது,
05. 2012 ஜுலை 24: குருநாகல் மாவட்டம், தெதுரு ஓயாகம தாருல் அக்ரம் தக்கியாவில் இரவு நேரத் தொழுகையை நிறுத்துமாறு பௌத்த மதகுருமார்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டதோடு தொழுகை நடத்தவது நிறுத்தப்பட்டது.
06. 2012 ஜுலை 26: கொழும்பு மாவட்டம், தெஹிவளை பீரிஸ் மாவத்தையிலுள்ள தாருல் அக்ரம் குர்ஆன் மத்ரஸாவில் தொழுகை நடாத்தவதை அரசாங்கம் உத்தியோக பூர்வமாக நிறுத்தியது.
07. 2012 ஜுலை 29: கொழும்பு மாவட்டம், ராஜகரிய ஒபே சேகரபுரயிலுள்ள ஜாமிஉத் தாருல் ஈமான் பள்ளிவாசலில் இரவு நேரத் தொழுகை நடாத்துவதற்கு பௌத்த மதகுருமார்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டதோடு அங்கு தொழுகை நடத்துவது நிறுத்தப்பட்டது,
08. 2012 ஆகஸ்ட் 30: கொழும்பு மாவட்டம், வெல்லம்பிட்டி ,கொகிலா வத்தை பள்ளிவாசலினுள் நுழைந்த சில பௌத்தர்கள் பள்ளிவாசலை தாக்கப் போவதாக எச்சரித்தனர்.
09. 2012 ஒக்டோபர் 27: அநுராதபுரம் மாவட்டம், மல்வத்து ஓயா லேன் பள்ளிவாசலுக்கு பௌத்த தீவிர வாதிகளினால் தீவைக்கப்பட்டது.
10. 2012 நவம்பர் 30: கொழும்பு மாவட்டம்,மஹரகம நாவின்ன ரஜமகா விகாரையில் முஸ்லிம்களுக்கு எதிரான பேரணியொன்று இடம்பெற்றது.கிழக்கில் முஸ்லிம் தீவிர வாதிகளினால் பௌத்த மரபுச் சின்னங்கள் அழிக்கப்படுவதாகக் கூறியே இப்பேரணி இடம்பெற்றது.
11. 2012 டிசம்பர் 03: கண்டி மாவட்டம், குண்டகசாலை விவசாய கல்லூரி யில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்களுக்கு பன்றி இறைச்சி கறி பரிமாறப்பட்டது.
12. 2012 டிசம்பர் 08: கண்டி மாவட்டம்,கண்டி மாநகரத்தில் முஸ்லிம் வியாபாரிகளுக் கெதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதோடு கைபேசிகள் வழியாக குறுங் செய்திகளும் அனுப்பப் பட்டன.
13. 2012 டிசம்பர் 23,24: இரத்தினபுர மாவட்டம், எம்பிலிபிட்டியவில் இரு முஸ்லிம் வர்த்தகர்கள் பௌத்த தீவிர வாதிகளினால் தாக்கப்பட்டனர். அதே இடத்தில் 24ஆம் திகதி முஸ்லிம்களுக்கெதிராக ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றது.
14. 2012 டிசம்பர் 24: பதுளை மாவட்டம்,மஹியங்கனையில் அமைந்தள்ள பள்ளிவாசலை மீள் நிர்மாணம் செய்ய வேண்டாம் என்று பௌத்த தீவிர வாதிகளினால் சுவரொட்டி ஒட்டப்பட்டதோடு துண்டுப் பிரசுரமும் வெளியீடு செய்யப்பட்டது.
15. 2013 ஜனவரி 07: அநுராதபுரம் மாவட்டம், மல்வத்து ஓயா லேனில் நீண்ட காலமாக வாழ்ந்து வரும் முஸ்லிம்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்றுமாறு பௌத்த மதகுருமார்களின் தலைமையில் ஆர்பாட்டம் செய்யப்பட்டது.
16. 2013 ஜனவரி 07: கொழும்பு மாவட்டம், சட்டக் கல்லுhpக்கு தெரிவான முஸ்லிம் மாணவர்கள் தொடர்பில் கொழும்பு சட்டக்கல்லூரி க்கு முன்னாள் ஆர்பாட்டம் பௌத்த மதகுருமார்களின் தலைமையில் இடம்பெற்றது.
17. 2013 ஜனவரி 19: கொழும்பு மாவட்டம், மஹரகம நகரில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான ‘நோலிமிட்’ வர்த்தக நிலையத்தை மூடுமாறு பௌத்த மதகுருமார்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது. அதனை தாக்கி அழிப்பதற்கும் முயற்சி மேற் கொள்ளப்பட்டது.
18. 2013 ஜனவரி 20: அநுராதபுர மாவட்டம், புதிய நகரத்தில் முஸ்லிம்களுக்கெதிரான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதோடு,துண்டுப்பிசுரமும் வெளியிடப்பட்டது. முஸ்லிம் ஹோட்டல்களில் சிங்களவர்களக்கென தயாரிக்கப்படுகின்ற உணவுகளில் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் இரசாயனம் சேர்க்கப்படுவதாகவும் ஆதலினால் முஸ்லிம் ஹோட்டல்களில் உணவருந்துவதை அவசியம் நிறுத்துமாறும் அதில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
19. 2013 ஜனவரி 22: கொழும்பு, புதிதாக நிர்மாணிக்கப்படும் அனைத்துப் பள்ளிவாசல்களும் ஜிஹாதின் பாசறைகளென பொது பலசேனா அமைப்பினால் எச்சரிக்கப்பட்டது.
20. 2013 ஜனவாp 23: களுத்துறை மாவட்டம், பேருவளையில் அமைந்துள்ள முஸ்லிம் ஹோட்டலில் பௌத்த குருமார் தாக்குதலை மேற்கொண்டு சேதப்படுத்தினர்.
21. 2013 ஜனவரி 24: குருநாகல் மாவட்டம், குளியாபிட்டியில் முஸ்லிம்களுக் கெதிரான ஆர்பாட்டம் ஒன்று இடம் பெற்றது. இதன் போது நபிகளாரை கேவலமாக சித்தரித்து எழுதப்பட்டசுலோகங்கள் எடுத்துச் செல்லப்பட்டது.
22. 2013 பெப்ரவரி 01: கண்டி மாவட்டம், கண்டி, சித்தி லெப்பை மாவத்தை ( பெயர் பலகை மைபூசி அழிக்கப்பட்டு) ‘வித்தியார்த்த மாவத்தை’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
23. 2013 பெப்ரவரி 07: 2013ஆம் ஆண்டை‘ஹலால்’ ஒழிப்பு ஆண்டாக பிரகடனப் படுத்தியுள்ளதாக பொது பலசேனா அமைப்பு அறிவித்தது. தமது செயற்பாட்டை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுவதற்கு இலங்கை ஜனாதிபதி ஆசிர்வாதம் வழங்கியதாகவும் தெரிவித்தது.
24. 2013 பெப்ரவரி 09: குருநாகல் மாவட்டம், வரக்காபொலயில் பௌத்த மதகுருமார்களின் தலைமையில் முஸ்லிம்களுக்கெதிராக ஆர்பாட்டம் செய்யப்பட்டது.
25. 2013 பெப்ரவரி 10: குருநாகல் மாவட்டம், நாரம்மல, ஹொரம்பாவ பகுதியில் ஸுபஹ் தொழுகைக்காகச் சென்ற ஒருவர் தாக்குதலுக்கு உள்ளானது
26. 2013 பெப்ரவரி 11: குருநாகல் மாவட்டம், இரம்புக்கனை பிரதேசத்தில் ‘ஹலால்’ எதிர்ப்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
27. 2013 பெப்ரவரி 11: குருநாகல் மாவட்டம், நாரம்மல நகாpலுள்ள முஸ்லிம் வர்த்தகர்களுக்கு ‘பர தம்பியாவுக்கு மார்ச் மாதத்திற்குள் மரணம்’ என்னும் தலைப்பில் அச்சுறுத்தல் கடிம் கிடைக்கப்பெற்றது. இக்கடிதம் பௌத்த அமைப்புக்களின் ஒன்றியம் என்னும் பெயரில் அனுப்பப்பட்டிருந்தது.
28. 2013 பெப்ரவரி 12: கொழும்பு, சிங்கள பௌத்தர்களை ‘இறப்பர் தோட்டத்திலுள்ள’ இறப்பர் மரங்களுக்கும் சிறுபான்மை முஸ்லிம்களை அத்தோட்டத்தில் வளர்க்கப்படும் சிறிய செடிகளுக்கு ஒப்பிட்டு பொது பல சேனா கருத்து தெரிவித்தது.
29. 2013 பெப்ரவரி 13: குருநாகல் மாவட்டம், நாரம்மல பொலிஸ் பிரிவில் சியம்பலா கஸ்கொடுவ, கிளின்பொலயில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான நான்கு கடைகள் உடைக்கப்பட்டுள்ளன.
30. 2013 பெப்ரவரி 14: கொழும்பு, எதிர்வரும் புத்தாண்டிற்கு முன்பு ‘ஹலால்’ அங்கீகாரம் ஒழிக்கப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் பௌத்த புரட்சி வெடிக்கும் என அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவருமான சம்பிக்க ரணவக்கயினால் எச்சரி க்கை விடுக்கப்பட்டது.
31. 2013 பெப்ரவரி 14: கண்டி மாவட்டம், திகனப் பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கெதிரான துண்டுப் பிரசுரம் பொது பலசேனா அமைப்பினால் விநியோகிக்கப்பட்டது.
பள்ளிவாசல்களும், கத்தோலிக்க ஆலயங்களும் உடைக்கப்படுவதாக சில கட்சிகளும், சமய ரீதியான கட்சிகளும் பாரியளவிலான பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றன. எங்கே, எவ்வாறு உடைக்கப்பட்டுள்ளன..? இந்த போலி பிரச்சாரங்கள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்,
கம்பஹா மாவட்டத்தில் நடைபெற்ற பௌத்த சமய நிகழ்வில், பெரும் எண்ணிக்கையிலான பௌத்த பிக்குகள் பங்கேற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில்,
சமயத்தின் பெயராலும், இனத்தின் பெயராலும் இயங்கிவரும் கட்சிகள் எமது நாட்டுக்கு எதிராக சர்வதேசத்திற்கு தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளன. பள்ளிவாசல்களோ அல்லது தேவாலயங்களோ எங்கும் உடைக்கப்படவில்லை. நாட்டில் பள்ளிவாசல்களோ அல்லது தேவாலயங்களோ உடைக்கப்பட்டிருந்தால் அதனை நிரூபிக்கட்டும்.
பள்ளிவாசலுக்கு சொந்தமில்லாத காணியில் பள்ளிவாசல் நிர்மாணிக்க முடியாது என குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. வீடுகளில் பள்ளிவாசல்கள் இயங்கமுடியாது என்றும் குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. அப்படியென்றால் பள்ளிவாசல்களை உடைத்தார்கள், மத ஸ்த்தலங்களை உடைத்தார்கள் என்று ஏன் பொய் சொல்கிறார்கள்..?