
சிங்களவர்களை பாதுகாக்க விசேட திட்டம் - 5 பிள்ளைகளுடைய குடும்பத்திற்கு பிரான்ஸிலிருந்து நிதி
சிங்கள இனத்தின் எதிர்காலத்தை பாதுகாக்க விசேட திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது. ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை உடைய சிங்களக் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட உள்ளது.
2013ம் ஆண்டின் பின்னர் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட பிள்ளைகளைக் கொண்ட சிங்களக் குடும்பங்களுக்கு மதாந்தம் உதவு தொகையாக ஐயாயிரம் ரூபா வழங்கப்பட உள்ளது. இந்த தொகை தொடர்ச்சியாக பதினேழு ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
பிரான்ஸ் நாட்டின் பௌத்த விகாரையின் மஹாநாயக்கர் பரவாஹெர சந்திரரத்ன தேரர் இந்த நிதி உதவியை வழங்கி வருகின்றார். நாளுக்கு நாள் சிங்கள இனம் அழிவடைந் செல்வதனால் இவ்வாறான ஓர் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரையில் 14 குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன.
இதேவேளை, நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக சிறிய குடும்பம் பொன்னானது என்ற கோட்பாட்டை சிங்களவர்கள் பின்பற்றி வருகின்றனர் என இளம் பௌத்த பிக்கு ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது துரதிஸ்டவசமானது. தேசத்தையும் இனத்தையும் கட்டியெழுப்ப அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியமாகின்றது. எதிர்காலத்தில் முஸ்லிம் அல்லது தமிழர்கள் பெருபான்மையினத்தவர்களாக மாறக்கூடிய சாத்தியம் ஏற்பட்டுள்ளது.
எமது மக்கள் பிழையாக வழிநடத்தப்படுகின்றனர். குடும்பக் கட்டுப்பாட்டு சத்திரசிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். சிங்கள இனத்தை கட்டியெழுப்ப அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியமாகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.