Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

04 March 2014

முஸ்லிம்களை இலக்கு வைத்துள்ள பொதுபல சேனா,மற்றும் சிங்கள ராவய அமைப்புகளை எதிர் கொள்வதற்கு எமக்கிடையில் ஒற்றுமை இல்லை.

Photo: அடங்க மறுக்கும் துறவிகள் !!ஒரு இனக்கலவரத்துக்கு அத்திவாரம் இட போடும் ஆட்டம் !!

நான் பார்க்கும் உலகம்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.facebook.com/NanParkumUlagam
இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் பல்வேறு பிர்சசினைகளை இந்த அரசாங்கத்தின் மூலம் எதிர் கொள்வதாகவும்,இந்த நிலை தொடருமெனில் முஸ்லிம்கள் தமது அடையாளத்தை கூட இலக்க நேரிடலாம் என்ற அச்ச நிலை தோன்றியுள்ளது என்று கொழும்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பட்டியலில் போட்டியிடும் கல்விமான் இல்ஹாம் மரி்க்கார் தெரிவித்துள்ளார்.

தான் இம்முறை மேல் மாகாண சபைக்கு கொழும்பு மாவட்டத்தில் ஏன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிடுகின்றேன் என்பதை விளக்கும் அறிக்கையொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் அவ்வறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது –

இன்று எமது உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன.இது குறித்து பேசுவதற்கு பலம் வாய்ந்த எதிர்கட்சியொன்று இல்லை.எமது உரிமைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் நாம் தியாகங்களை செய்ய வேண்டும்.முஸ்லிம்களை இலக்கு வைத்து பொதுபல சேனா,மற்றும் சிங்கள ராவய என்கின்ற அமைப்புக்கள் தோற்றம் பெற்றுள்ளதை நாம் காணுகின்றோம்.இவற்றை எதிர் கொள்வதற்கு எமக்கிடையில் ஒற்றுமை இல்லை.இதனை எமக்கிடையில் உள்ளவர்களே சிதைத்துவருகின்றனர்.

இந்த நாட்டு முஸ்லிம்களின் உரிமைகள் தொடர்பிலும்,பாதுகாப்பு தொடர்பிலும் அதிகமாக பேசக் கூடிய கட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பதை நினைவுபடுத்தவிரும்புகின்றேன்.

கொழும்பு மாவட்ட சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளின் குரலாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸே இருக்கப் போகின்றது.முஸ்லிம்களின் எதிர் சக்திகளை தோற்கடிக்க எமது கட்சியின் தேசிய தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் கரத்தை பலப்படுத்த நாம் அணைவரும் தயாராகுவோம்.தற்போது எமக்கு கிடைத்துள்ள இந்த அரசியல் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளும் பயணத்தில் உங்களுடன்,உங்களில் ஒருவராக குரல் கொடுக்க நானும் தயாராக இருக்கின்றேன் என்றும் அவ்வறிக்கையில் இல்ஹாம் மரைக்கார் குறிப்பிட்டுள்ளார்.
அடங்க மறுக்கும் துறவிகள் !!ஒரு இனக்கலவரத்துக்கு அத்திவாரம் இட போடும் ஆட்டம் !!

Popular Posts

FACEBOOK COMMENTS BOX