Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

24 July 2014

டெங்கு எனும் ஆட்கொல்லி நோய்:

டெங்கு காய்ச்சல் கடந்த நூற்றாண்டின் ஆரம்பித்திலிருந்தே இலங்கையில் பரவத்தொடங்கி விட்டது.
  • 1962 களில் இரத்தப் பரிசோதனைகள் மூலம் டெங்கு நோய் தொற்றி இருப்பது உறுதி செய்யப்பட்டது.
  • 1965 ம் ஆண்டளவில் ஏற்பட்ட சிக்குன் குனிய தாக்கத்தின் பின்னர் நாடு பூராகவும் பரவிய டெங்கு நோயின் தாக்கம் 1965 ல் தொடங்கி 1968 ம் ஆண்டுவரை நீடித்தது.
  • இதன் போது 51 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதுடன் 15 இறப்புகளும் சம்பவித்தன.
  • நாட்டின் அதிகமான நகரங்களில் நோயின் தாக்கம் காணப்பட்டாலும் தென் கரையோரப் பிரதேசங்களில்தான் அதிக நோயாளர்கள் இனங்காணப்பட்டனர்.
அதிலும் கொழும்பு பகுதியில்தான் மிக அதிகமான தாக்கம் காணப்பட்டது. இந்த காலங்களில்தான் டெங்கு குருதிப்பெருக்கு நோயாளிகள் இருவர் கண்டு பிடிக்கப்பட்டனர். அதன் பின்னர் அங்கும் இங்குமாக டெங்கு நோயினால் சிலர் பாதிக்கப்பட்டாலும் 1990 ம் ஆண்டுதான் பெரும் எண்ணிக்கையானோர் இந்த நோயின் தாக்கத்திற்கு ஆளாகினர். ஒன்றுக்கு மேற்பட்ட வைரஸ் கிருமி வகையராகாளினால் இந்த நோய் உண்டாகாபடுவதாக ஆய்வுகளின் பின்னர் கண்டு பிடிக்கப்பட்டது. இலங்கையினைப் பொருத்தவகையில் பருவ மழை காலங்களில் இந்நோயின் தாக்கம் அதிக வீச்சில் காணப்படுகிறது.
  • 5 தொடக்கம் 9 வயது வரையிலான சிறார்களிடையே மிக அதிக டெங்கு நோய் தாக்கம் அவதானிக்கப்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி குன்றிய இளவயதினர் மற்றும் வயோதிபர்களிடையே இன் நோயின் தீவிரத்தன்மை அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக அதிக சனச் செறிவுள்ள இடங்களில் இந்நோய் வேகமாக பரவுகின்றது.
பல்வேறுபட்ட நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் இன் நோயின் தாக்கத்திலிருந்து நாம் விடுபட்ட பாடில்லை. அரசின் சுகாதார இயந்திரம் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினர் இந்நோயின் தாக்கத்திலிருந்தும் தமது அன்புக்குரியவர்களை இந்நோய்க்கு காவு கொடுப்பதிலிருந்தும் பாதுகாக்க பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆயினும் நாம் அனைவரும் எமது பங்களிப்பையும் பொறுப்புணர்வோடு நிறைவேற்ற வேண்டிய கடமைப்பாட்டினை மறந்துவிடக் கூடாது. இந்நோய் பற்றிய அடிப்படை அறிவை சகலரும் பெற்றிருப்பதும் அதன் அடிப்படையில் செயற்படுவதும் நம்மையும் நமது நாட்டு மக்களையும் பாதுகாக்க உதவும் என்ற அடிப்படையில் டெங்கு நோய் தொடர்பான அடிப்படை விடயங்களை இக்கட்டுரையில் விளக்க முற்பட்டுள்ளோம்.
டெங்கு: இது ஒரு வைரஸ் நோய். இந்த வைரஸில்DEN1, DEN2, DEN3, DEN4  என 4 வகைகள் (Serotype) உண்டு. ஒரு வைரஸின் தாக்கத்தின் பின்னர் இன்னொரு வைரஸ் தாக்கும் போது நோயின் தீவிரம் அதிகமாகும்.
டெங்கு தொற்றல் எவ்வாறு ஏற்படும்?
ஈடிஸ்(Aedes ) சாதி பெண் நுளம்பு நோய்வாய்ப்பட்ட மனிதரைக்கடித்து சுகதேகியான ஒருவரின் உடலினுள் டெங்கு வைரஸ், நுளம்பினால் உட்செலுத்தப்படுவதால் தொற்று ஏற்படும்.
ஈடிஸ் நுளம்புகளை எவ்வாறு அடையாளம் காணலாம்?
இந்நுளம்புகளின் உடலில் வெண்ணிற வளையங்கள்(rings) காணப்படும். இவற்றில் இரு இனங்கள் உண்டு. அவை டெங்கு
வைரஸை காவும் காவிகளாக(vector) செயற்படுகின்றன. அவையாவன
  •   Aedes aegypti –Primary vector
  •  Aedes albopictus- Secondary vector
இந்நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்கள் எவை?
இவை தெளிவான சுத்தமான, மாசடையாத நீர்தேங்கியுள்ள இடங்களில் உற்பத்தியாகும். டயர்,சிரட்டை, யோகட்கோப்பை, கூரை பீலிகள், திறந்த போத்தல்கள், டின்கள், பொலிதீன் பைகள்,பிளாஸ்டிக் போத்தல்கள், குளிர்சாதன பெட்டிகளின் பின்புறம ;நீர் சேரும் தட்டு, நீர் தாங்கிகள், வாழை மர இலை அடியிலுள்ள இடைவெளி, திறந்த தயிர் சட்டி, ஓடாத சலனமில்லாத நீர் நிலைகள் போன்றநீர் தேங்கி நிற்கும் எல்லா இடங்களிலும்பெண் நுளம்பு முட்டை இட்டு இனப்பெருக்கம் செய்யும்.
ஒரு ரூபாய் நாணயத்தின் தடிப்பும் அகலமும் உள்ள நீர் தேங்குமிடம் இன் நுளம்புகள் உற்பத்தியாக போதுமானதாகும் இந்நுளம்பின் வாழ்கை வட்டம் எத்தகையது?
இது 4 பருவங்களை கொண்டது. அவையாவன முட்டை, குடம்பி, கூட்டுப்
புழு, நிறையுடலி. முதல் 3 பருவங்களும்நீரில் காணப்படும.;
முட்டை :
ஒரு முறையில் பெண் நுளம்பு 100-200 வரையான முட்டைகள் இடும்.இம்முட்டைகள் நீர் மட்டத்திற்கு சற்று மேலால் நீர் தாங்கியின் சுவரில்ஒட்டியவாறு காணப்படும். இவை 12 மாதங்கள் உயிர்பிழைக்ககூடியது.முட்டையிலிருந்து நுளம்பு விருத்தியடைந்து வெளிவர சுமார் 7 நாட்கள் செல்லும்.
ஈடிஸ் நுளம்பு(டெங்கு நுளம்பு) :
இந்நுளம்புகள் பகலிலே கடிக்ககூடியது (Day time biters) காலையில் 7 – 10 மணி வரையும் , மாலையில் 3– 5 மணி வரையும் இதன் கடிக்கும் தன்மை உச்சமமாகும். இவை 3- 4 வாரங்கள் உயிர் வாழும்.
தங்குமிடங்கள்:
  • வீட்டினுள்(Indoor):  தளபாடங்களுக்குகீழால், தொங்கும் பொருட்களில்(ஆடைகள்) , வீட்டு திரைகள்(உரசவயin), சுவர்கள்.
  • வீட்டின் வெளியே (Outdoor):    மரம், செடி, தாவரங்கள், மற்றும் பாதுகாப்பான இடங்கள்
  • பறக்கும் தூரம் :ஏறத்தாள 500மீற்றர் பறக்ககூடியது
டெங்கு தொற்று ஏற்பட்டதற்கான அடையாளங்கள்; யாவை?
  1. டெங்கு காய்ச்சல்(Dengue Fever-DF)
  2.  டெங்கு குருதி கசிவு காய்ச்சல் (Dengue Hemorrhagic Fever-DHF)
  3.  Dengue Shock Syndrome
நோய் அடையாளங்களும் அறிகுறிகளும்: 
1.டெங்கு காய்ச்சல்(DF):  இலேசானஃகடுமையான காய்ச்சல்,கண்களுக்கு பின்னால் கடுமையான,வலி(Retro orbital pain) கடுமையான தலைவலி ,தசைவலி, மூட்டுவலி(Muscular & joint pain) ,Rash(தோல் சிவத்து தடித்தல்) , வாந்தி( Vomiting)
2. டெங்கு குருதி கசிவு காய்ச்சல்( DHF) : கடுமையான காய்ச்சல், வலிப்பு , தோலில் சிவப்பு, ஊதா நிற புள்ளிகள் அல்லது அடையாளங்கள், வாய், மூக்கு, முரசு என்பவற்றில் இரத்த கசிவு, இரத்த வாந்தி அல்லது, கோப்பி மண்டிநிற வாந்தி, கருப்பு நிற மலம்
3. டெங்கு தீவிர தாக்கு நிலை Dengue Shock Syndrom(DSS)  : DSS ஏற்பட்டு நோய் உக்கிரமடைந்து குருதி சுற்றோட்டம் செயலிழந்து DSS நிலைக்குச் செல்லும். இந்நிலை ஏற்பட்டு 12-24 மணித்தியாலங்களில் நோயாளி இறந்து விடுவார்.
காய்ச்சல் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
  • அருகிலுள்ள வைத்தியரிடம் உடனடியாக சென்று ஆலோசனை பெறவும்.
  • சுயமாக வைத்தியம் செய்வதை கண்டிப்பாக தவிர்க்கவும்.
டெங்கு நோயாளி என சந்தேகிக்கப்படுபவரை எவ்வாறுவீட்டில் பராமரிக்க வேண்டும்? 
  • ஓய்வாக இருக்க செய்யவும் (Bed rest)
  • அதிகளவானநீர் பாணங்கள் வழங்கவும்
  • சிவப்புஃகருமை நிற பாணங்களை தவிர்க்கவும்
  • Aspirin/Desprin அல்லது Aspirin உள்ளடங்கிய மருந்துகள் கொடுக்க வேண்டாம்
  • வைத்தியசாலையை கண்டிப்பாக எப்போது நாடவேண்டும்?
டெங்கு குருதி கசிவு நோய்க்கான ஏதும் அடையாளங்கள், அறிகுறிகள் தென்படுதல். 
  • காய்ச்சல் குறைந்த பின்பும் சுகயீனமாக உணர்தல்.
  • காய்ச்சல் 3 நாளைக்கு மேல் இருத்தல்
நோய் பரவுவதை கட்டுப் படுத்த தினமும் பத்து நிமிடமாவது ஒதுக்குங்கள். 
  • வீட்டையும் சூழலையும் சுத்தமாக வைக்கவும். நமது வீட்டை; சுத்தமாக வைத்திருப்பதால் மாத்திரம் டெங்கிலிருந்து தப்பிக்க முடியாது இது கூட்டுப் பொறுப்பாகும் எனவே அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்;
  • குப்பைகளை எரித்து அல்லது புதைத்து விடவும். அல்லது சூழழுக்கு பாதுகாப்பான வேறு முறையில் அகற்றவும்
  • பாதை ஓரங்களில் வீச வேண்டாம்.
  • நுளம்பு உற்பத்தியாகும் இடங்களை சுத்தம் செய்து உற்பத்தியை தடுக்கவும்.
  • கூரைபீலிகளை தேய்த்து சுத்தம் செய்யவும்,
  • கொங்ரிட் தட்டில்நீர் தேங்காதவாறு அவதானித்து கொள்ளவும்.
  • நீர் தாங்கிகளை(Water Tank) நுளம்பு உட்புகமடியாதவாறு மூடி வைக்கவும்
  • நீர் தேக்கங்களில் நுளம்பின் குடம்பிகளை உண்ணும்மீன்களை வளர்க்கவும்.
  • சுகதேகிகள் மற்றும் டெங்கு நோயாளிகள், நுளம்புக் கடிக்குள்ளாவதை தடுக்கவும். ஏனெனில் தொற்றுதலுக்குள்ளான ஒருவரைகடித்து அவரிடமிருந்தே டெங்கு வைரஸைநுளம்பு பெற்று சுகதேகிகளுக்கு தொற்றச் செய்யும்.
நுளம்பில் இருந்து பாதுகாப்பு பெற
  • நுளம்பு வலைகளை பாவிக்கலாம்.
  • நுளம்புச் சுருள் பாவிக்கலாம்
  • நுளம்புகளை வெளியேற்றும் மின்குமிழ்களை பயன்படுத்தலாம்(Mosquitoe  repellent light)
  • Android மற்றும் iPhone களில் நுளம்பு விரட்டும் Apps கள் உள்ளன. இவற்றையும் செயற்படுத்தலாம். (உரிய அலைவரிசை எது வென மாற்றி மாற்றி கண்டு பிடித்துக் கொள்ளவும்)
  • வீட்டு ஜன்னல்கள் மற்றும் ஜன்னல்களுக்கு மேலுள்ள லூகஸ்களுக்கு நுளம்பை உட்புகவிடாத வலைகளை பெருத்தலாம்.
  • வீட்டை மூடிவிட்டு பிரயாணம் செல்லுமுன் யனைத்து நீர் தேங்கும் இடங்களையும் கவனித்து அகற்றி விடவும்.
  • சிறுபிள்ளைகளுக்கு ஆடை அணிவிக்கும் போது தடித்த ஆடைகளை உடலின்
  • பெரும்பகுதி மூடுமாறு அணிவிக்கலாம்
  • காலையும், மாலையும்வீட்டில் சாம்பிராணி போன்ற வாசனை புகைபிடிக்கலாம்
  • இந்த விடயங்களை கருத்தில் கொண்டு எம்மையும் எமது சமுகத்தையும் டெங்கின் அபாயத்திலிருந்து பாதுகாப்போம்.

Popular Posts

FACEBOOK COMMENTS BOX