Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

26 August 2014

தங்காலை பள்ளிவாசல் சொத்துக்களில் மோசடி !!!

இதனை நாம் பதிவது யாரையும் புண்படுத்தவல்ல எமது ஊர் ஜமாஅத்தினரின் நல்லதோர் எதிர்கலத்திட்காக மட்டுமே

இலங்கையின் ஹம்பாந்தொட மாவட்டத்தின் தங்காலை ஜும்ஆப் பள்ளிவாசலின் சொத்துக்களின் மோசடி தொடர்பாகவும், இதனை மையமாக வைத்து உருவாகியுள்ள நிர்வாக சபை முறைகேடுகள் மற்றும் நிர்வாக சபையின் நிரந்தரமில்லா தன்மை ஆகியவை குறித்தும் எமது ஊர் ஜமாஅத்தினர் மற்றும் நலன்விரும்பிகள் இது தொடர்பாக தனது கவனத்தை செலுத்துமாறு வேண்டிக்கொள்கிறோம்.

எமது பள்ளியில் அமைக்கப் பட்ட தற்காலிக நிர்வாக சபையின் பதவி காலம் காலாவதியான இச்சந்தர்ப்பத்தில், அடுத்து அமையவிருக்கும் நிர்வாக சபையை கை சுத்தமான, இறையச்சமும்,சமூக சிந்தனையும் கொண்ட, இயக்க சார்பற்ற புத்திஜீவிகளை கொண்டு அமைத்துத் தருமாறு முதற்கண் அன்பு வேண்டுகோள் விடுக்கிறோம்.

அதிக வாடகைக்கு கொடுக்கப் படக் கூடிய கடைகள், மிகக் குறைந்த வாடகைக்கு வழங்கப்பட்டு, பள்ளிவாசலுக்கு மிகக் குறைந்த வாடகையை வழங்கிவிட்டு, கடை உரிமையாளர்களிடம் இருந்து பெருமளவு பணம் நிர்வாக சபை உறுப்பினர்களால் லஞ்சமாக பெறப்படுகின்றது.

சுமார் 15 000 - 20 000 ரூபாய் மாதாந்த வாடகைக்கு வழங்கப்படக் கூடிய பள்ளிவாசலுக்குச் சொந்தமான முக்கிய இடங்களில் அமைந்துள்ள பெறுமதியான கடைகளின் வாடகையாக இதுவரை நிர்வாக சபைகள் பள்ளிவாசலுக்காக அறவிடுவது வெறும் 1000 - 2000 ரூபாய் வாடகையே. அதாவது மிகக் குறைந்த தொகைக்கு பற்றுச் சீட்டு (ரசீட்) வழங்கிவிட்டு,

இன்னும் சில கடைகளை பள்ளி நிர்வாகத்தில் இருப்பவர்கள் நேரடியாகவும், வேறு நபர்கள் (உறவினர்கள், நண்பர்கள்) மூலமாகவும் குறைந்த வாடகையில் நடாத்தி வருவதாகவும் அறிய முடிகின்றது.

இன்னும் சில நிர்வாகிகள் மிகக் குறைந்த தொகைக்கு பள்ளிவாசலிடம் இருந்து கடைகளை வாடகைக்கு பெற்று, பெரிய தொகைக்கு வேறு ஆட்களுக்கு (3rd பார்ட்டி) கைமாற்றி வருகின்றனர்.

சுருக்கமாக சொன்னால் "அல்லாஹ்வின் பெயரால் முடிந்தவரை அடிப்போம் கொள்ளை" என்கின்ற தாரக மந்திரத்துடனேயே நிர்வாக சபைகள் செயற்பட்டு வருகின்றன.

இப்பள்ளி நிர்வாக சபைக்குள் ஒருசிலர் நுழைவதற்கு கடும் முயற்சிகளில் ஈடுபடுவதற்கான காரணம் அதன் சொத்துக்கள் தான் என்பது ரகசியமல்ல. ஏற்கனவே சிறிய வாடகைக்கு பள்ளிக் கடைகளில் வர்த்தகம் செய்வோர் சுய லாபம் கருதி பெரிய வாடகைக்கு வேறு நபர்களுக்கு கைமாற்றி விடுகிறார்கள். இதன்போது லட்சக் கணக்கான பணம் பரிமாறப் படுகிறது. அதன் ஒரு பங்கு திறை மறைவில் டிரஸ்டிகளுக்கும் போய் சேர்ந்து விடுகிறது. பேராசைப்பிடித்தவர்கள் நிர்வாக சபைக்குள் நுழைவதற்கு இதுவே முக்கிய காரணம். இந்நிலை மாற வேண்டும் என்பதுவே எமது பிரார்த்தனையும் வேண்டுகோளுமாகும்.

பள்ளிவாசலுக்கு சொந்தமாக எத்தனை கடைகள் இருக்கின்றன?

குறிப்பு: சுமார் முன்று வருடங்களுக்கு முன்பிருந்த நம்பிக்கையாளர் சபைக்கு ஜமாஅத்தார் சார்பில் வெளியிடப் பட்ட வேண்டுகோள் இதுவரை நிறைவேற்றப் படவில்லை என்பதை கவலையுடன் அறியத் தருகிறோம். 

எனவே குறிப்பிட்டதொரு ஜூம்மா தினத்தில், ஜமாஅத்தார்களின் நேரடி அனுமதி யோடு, வக்பு சபையின் நேரடி கண்காணிப்பில் பொருத்தமான ( கை சுத்தமான, இறையச்சமும், சமூக சிந்தனையும் கொண்ட, இயக்க சார்பற்ற ) புத்திஜீவிகளை கொண்ட நிர்வாக சபையொன்றை தெரிவு செய்து தருமாரு வேண்டிக் கொள்கிறோம்.

வஸ்ஸலாம்.

Popular Posts

FACEBOOK COMMENTS BOX