Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

28 August 2014

சுட்டி குழந்தைக்கு பல் முளைக்கிறதா? இதோ சந்திக்கும் பிரச்சனைகள்


செல்லக்குழந்தைகளுக்கு பற்கள் வளர ஆரம்பிக்கும்போது பல்வேறான பிரச்சனைகளை அவர்கள் சந்திக்கின்றனர்.

அவர்களின் ஈறுகளில் அரிப்புக்கள் மற்றும் வலி ஏற்படுவதால் கையில் கிடைப்பவைகளை எல்லாம் கடிப்பார்கள்.

இந்த சமயங்களில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.


வயிற்றுப்போக்கு
குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் போது, வயிற்றுப்போக்கு ஏற்படக்கூடும்.

அப்படி உங்கள் குழந்தைக்கு வயிற்றுப்போக்கானது திடீரென்று ஏற்பட்டால், அவர்களுக்கு உடனே ORS கொடுங்கள். இல்லாவிட்டால், குழந்தைகளின் உடலில் நீர்ச்சத்து விரைவில் குறைந்துவிடும்.

தொடர்ச்சியான அழுகை

குழந்தைகள் தொடர்ந்தோ அல்லது அவ்வப்போதோ காரணமின்றி அழ ஆரம்பித்தால், அவர்களுக்கு பற்கள் முளைக்க ஆரம்பிக்கிறது என்று அர்த்தம்.

அப்போது அவர்களின் கவனத்தை திசைத்திருப்பும் வகையில் தொட்டிலை ஆட்டிவிட்டோ அல்லது தாலாட்டு பாடவோ செய்யலாம்.

இல்லையெனில், உங்கள் கைகளை நன்கு சுத்தமாக நீரில் கழுவிவிட்டு, பின் அவர்களின் ஈறுகளை மசாஜ் செய்துவிடலாம்.

காய்ச்சல்
குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் போது, அவர்கள் கண்ட கண்ட பொருட்களை வாயில் வைப்பதால், வயிற்றில் தொற்றுகள் ஏற்பட்டு, சில சமயங்களில் காய்ச்சலுக்கு கூட உள்ளாவார்கள்.

எனவே அப்போது அவர்களுக்கு மருத்துவர் பரிந்துரைத்த காய்ச்சல் மாத்திரையைக் கொடுங்கள். ஒருவேளை காய்ச்சல் அளவுக்கு அதிகமாக இருந்தால், மருத்துவரிடம் உடனே அழைத்துச் செல்லுங்கள்.
ஏற்படும் விபத்துக்கள்

குழந்தைகளுக்கு பற்கள் முளைக்க ஆரம்பிக்கும் நேரத்தில், அவர்கள் கைகளுக்கு எது கிடைத்தாலும், அது உடனே அவர்களின் வாய்க்கு தான் செல்லும். அதிலும் அவர்கள் கடினமான பொருட்களைக் கூட கடிக்க நேரிடுவதால், சற்று கவனமாக இருக்க வேண்டும்.

மேலும் அவர்களுக்கு தேன் நிரப்பப்பட்ட டீத்திங் ரிங்ஸை கைகளில் மாட்டிவிட்டால், அவர்கள் அதை வாயில் போட்டு மென்று கொண்டிப்பார்கள்.
உணவுகளைத் தவிர்ப்பார்கள்

பற்கள் முளைக்க ஆரம்பிக்கும் காலத்தில், குழந்தைகள் உணவுகளை உட்கொள்ளாமல் தவிர்ப்பார்கள்.

ஆகவே அப்போது, அவர்களுக்கு வெதுவெதுப்பான பால் நிரப்பப்பட்ட பால் பாட்டிலை குழந்தைகளுக்கு கொடுத்தால், வெதுவெதுப்பான பாலானது, குழந்தைகளின் ஈறுகளில் உள்ள வலியை தணித்து, அவர்கள் பால் பாட்டிலின் நிப்புளை மெல்லவும் வசதியாக இருக்கும்.

இரவில் தூங்கமாட்டார்கள்

பல் முளைக்கும் காலத்தில் குழந்தைகள் இரவில் படுக்கவே மாட்டார்கள். அழுது கொண்டே இருப்பார்கள்.

இருப்பினும் அவர்களை உங்களின் அருகில் படுக்க வைத்து அணைத்து, அவர்கள் வாயில் போட்டு மெல்வதற்கு ஏற்றவாறு மென்மையான டீத்திங் ரப்பரை கையில் கொடுத்துவிடுங்கள்.

Popular Posts

FACEBOOK COMMENTS BOX