
ஆனால் இன்றைய விலை உயர்ந்த சந்தையால், பட்ஜெட்டிற்குள் வீட்டை அலங்கரிப்பது என்பது கஷ்டமானதாக மாறியுள்ளது. அதனால் தம்மால் முடிந்த பொருட்களை வாங்கி, அதனை வைத்து வீட்டை மேம்படுத்தும் திட்டத்தை தீட்ட வேண்டும். இதன் மூலம் பட்ஜெட்டிற்குள் வீட்டை அழகாக மாற்றலாம். இப்போது வீட்டின் அழகை மேம்படுத்துவதற்கான சில முக்கியமான டிப்ஸ்களை பார்ப்போம்.
தேவையற்ற பொருட்கள்
வீட்டின் ஒவ்வொரு அறையில் இருக்கும் தேவையற்ற பொருட்களை நீக்கினால், நிறைய இட வசதிகள் கிடைக்கும். பணம் செலவாகாமல் வீடு அழகாக தெரிய வேண்டுமென்றால், இந்த மாற்றத்தை கொண்டு வாரவும்.
தளபாடம் மற்றும் தரை
தரை, தரைப்பலகைகள் மற்றும் தளபாடங்களை பாலிஷ் செய்து நன்றாக துடைக்க வேண்டும்.
விளக்குகள்
வீட்டில் இருக்கும் விளக்குகளை நவீன நிலை பொருத்திகளால் மாற்றலாம். இது வீட்டின் வெளிச்சம் மற்றும் அழகை உயர்த்தும். ஒவ்வொரு அறையில் எப்படி வெளிச்சம் வருகிறதோ அதை பொறுத்து தான் ஒருவரின் மனநிலை அமையும். ஒவ்வொரு அறையிலும் குறைந்தது மூன்று விளக்குகளாவது வைத்து, அதன் ஒளி முக்கோண வடிவில் வருமாறு செய்தால் நன்றாக இருக்கும்.
சுவர்
சுவற்றில் விரிசல் அல்லது பிளவு ஏற்பட்டு இருந்தால், அதை முதலில் கவனிக்க வேண்டும். அதற்கு சிமெண்ட் வைத்து பூசி அல்லது பெயிண்ட் அடித்து மறைத்து வீட்டை அழகாக்கவும்
கண்ணாடிகள்
வீட்டில் செய்யும் சிறு சிறு மாற்றங்கள் கூட மனதை நிறையச் செய்யும். அதனால் படைப்புத் திறனை உபயோகியுங்கள். குளியலறை கண்ணாடிகளை சுற்றி அலங்கார ஃப்ரேம் அல்லது அதன் விளிம்புகளில் வர்ணங்கள் பூசி அல்லது அழகுப்படுத்தலாம். மேலும் ஒவ்வொரு அறையிலும் நவீன மாற்றங்கள் செய்து வீட்டின் தோற்றத்தை மேம்படுத்துங்கள்.
சமையலறை
சமையலறை என்பது வீட்டிலுள்ள ஒரு முக்கிய அறை. சமையலறையை எப்போதும் சுத்தமாகவும், நவீனமாகவும் வைத்திருக்க வேண்டும். அதற்கு பழைய சாதனங்கள் மற்றும் உபயோகம் இல்லாமல் இருக்கும் சாதனங்களை தூக்கிப் போடவும். அதற்காக புத்தம் புதிய சாதனங்கள் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. யாராவது பயன்படுத்திய நல்ல நிலையில் இயங்கும் பொருட்களை கூட வாங்கலாம்.
பூந்தோட்டம்
வீட்டைச் சுற்றி இயற்கையான சூழலை உருவாக்க சிறிது நேரத்தை செலவிடுங்கள். அது வீட்டின் அழகை மேன்மேலும் அதிகரிக்கும். வீட்டை சுற்றி உள்ள இடங்களை மண்வெட்டியால் கொத்தி, அழகிய பூந்தோட்டங்களை உருவாக்கவும்.
கதவுகள்
அசிங்கமான அல்லது உபயோகிக்க கஷ்டமான அல்லது தேய்ந்து போன கதவுகளை காட்டிலும் ஒருவரை எரிச்சல் பட வைக்க வேறு ஒன்றும் தேவையில்லை. அதனால் கதவுகளுக்கு நன்றாக வர்ணம் பூசுங்கள். அதுவே வீட்டின் முதல் ஈர்ப்பாக அமையும். இன்னும் நவீனத்துவம் வேண்டும் என்று நினைத்தால், அதிக பளபளப்பு உடைய கருப்பு நிற வர்ணமும் நிக்கல் கைபிடிகளும் உபயோகியுங்கள்.
தரைவிரிப்பு
4:1 என்ற விகிதத்தில் அமோனியா மற்றும் தண்ணீரை ஒன்றாக கலந்து, அத்துடன் வினிகர் மற்றும் ஆக்ஸிஜன் கலந்த ப்ளீச்சிங் பௌடரை தலா ஒரு கப் சேர்க்கவும். இதனை வைத்து தரைவிரிப்புகளை சுத்தப்படுத்தினால், அதிலிருந்து வரும் துர்நாற்றம் அகலும். மேலும் இது தரை விரிப்புக்களை சுத்தமாக வைத்திருக்கும்.
தரை
சிறிது சிரத்தை எடுத்தால், குளியலறை மற்றும் சமையலறையின் தரை கற்களுக்கு அழகு சேர்க்கலாம். தரை கற்களின் மேல் பதிந்திருக்கும் சுண்ணாம்புக் கலவையை நன்றாக தேய்த்து எடுங்கள். பின் சிமெண்ட் பாலை கரைத்து கற்களின் இடைவெளியில் ஊற்றி, அது காய்ந்த பின் ஒரு மெல்லிய துணியை வைத்து துடைத்து எடுக்கவும். இதனால் தரை கற்கள் ஜொலிக்கப் போவது உறுதி.
சுவரொட்டி
ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பம் இருக்கும். அதனால் வீட்டை அலங்கரிக்கும் போது பொதுவாக அலங்கரிப்பதே நல்லது. சுவரொட்டி என்பது தனிப்பட்ட ரசனையை சார்ந்ததாகும். அனைவருக்கும் அது பிடிக்கும் என்று சொல்ல முடியாது. அதனால் வீட்டில் இருக்கும் சுவரொட்டிகளை நீக்கி பொதுவான நிறங்களில் வர்ணங்களை பூசவும்.
வர்ணப்பூச்சு
அனைத்து அறைகளுக்கும் பிடித்த நிறத்தில் பெயிண்ட் அடிப்பது என்பது அனைவராலும் முடிந்ததே. அப்படி செய்தால் வீட்டின் தோற்றம் வெகுவாக மாறும். அதிலும் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பிடித்த பொதுவான நிறத்தில் பெயிண்ட் அடிப்பதால், அறைகள் வெளிச்சம் பெற்று அழகு கூடும்.
சமயலறை அலமாரி
சமையலறையை புதிதான அறையாக மாற்ற, சமையலறை அலமாரிகளில் சிறிது மாற்றங்களை செய்யுங்கள். குறிப்பாக வர்ணம் பூசி பழைய அலமாரியை புதியதாக காட்டலாம்.
புல் தரை
வீட்டின் வெளியில் உள்ள புல் தரையில் வளர்ந்திருக்கும் புற்களையும், செடிகளையும் வீட்டிற்கு ஏற்ற படி வெட்டுங்கள். காய்ந்த நிலங்களில் புல் விதைகளை தூவுங்கள் மற்றும் வண்ணமயமான பூச்செடிகளை நட்டு வையுங்கள். பெரிய மரக்கிளைகள் அல்லது பெரிய மரங்களை அகற்றுங்கள். குறிப்பாக புற்களை வாரம் ஒருமுறை தேவையான அளவு வெட்ட வேண்டும்.