Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

09 September 2014

கர்ப்பிணிப்பெண்கள் கவனிக்க வேண்டிய விடயங்கள்

* கர்ப்பிணி பெண்கள் தினசரி பசும்பாலில் நல்ல குங்குமப்பூ கலந்து அருந்தினால், சிகப்பான குழந்தை  பிறக்கும். மேலும் கர்ப்பிணி பெண்கள் தினசரி ஆரஞ்சுப் பழரசம் அருந்தினால் அழகான குழந்தை பிறக்கும்.

* ஒரு சிலருக்கு கர்ப்ப காலத்தின் ஆரம்பத்திலேயே மூச்சு வாங்கும் என்றாலும், பலருக்கு கர்ப்ப காலத்தின் பின் பகுதியில் இந்தச் சிரமம் இருக்கும். இதனால் குழந்தைக்கோ, தாய்க்கோ கெடுதல் நேராது.

* கர்ப்பிணிகள் இறுக்கமான காற்று புகாத ஆடைகளைத் தவிர்த்து,  தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். உள்ளாடைகளைக் கூட தொள தொளவென அணிவது சிறந்தது.

* மேடு பள்ளமாகவும், கடினமாகவும் உள்ள இடங்களில் இருத்தலும், படுத்தலும் கூடாது. மேல்நோக்கிப்படுத்தால் குழந்தையின் கழுத்தில் தொப்புள்கொடி சுற்றிக் கொள்ளும்.

* அதிக உஷ்ணமுள்ள பதார்த்தங்களை உண்ணக் கூடாது. உடம்பில் யாதொரு அடியும் படக்கூடாது. பயம் உண்டாகக் கூடிய இடங்களைப் பார்க்கக்  கூடாது. மிகக் கடுஞ் சொற்களைக் கேட்பது கூடாது. மிகவும் களைப்பைக் கொடுக்கக்கூடிய வாகனங்களில் செல்லக் கூடாது.

* வயிற்றில் கரு வளரும் போது கருக்காலத்தின் பின்பகுதியில் வயிறு முன் தள்ளியும் அந்தக்கூடுதல் எடையைத் தாங்க முடியாமல் தோள்பட்டைகள் பின் தள்ளியும் இருக்கும். இந்த நிலை கர்ப்பிணிகளுக்கு முதுகு வலியை உண்டாக்கும். இது ஹீல்ஸ் செருப்பு அணிவதால் வலிகூடும்.

* பணியிலிருக்கும் கர்ப்பிணிகள் கடுமையான உடல் உழைப்பு இல்லாத பட்சத்தில் கர்ப்ப காலம் முழுவதும் கூட பணி புரியலாம்.

* கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்கள் உடற்பயிற்சிப் பழக்கத்தை மாற்ற வேண்டிய அவசியமில்லை. கடினமான உடற்பயிற்சிகளை பண்ணக் கூடாது. நடைபயிற்சி மிக முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டும்.

* மயக்கம், படபடப்பு ஆகியவை கர்ப்பிணிகளுக்கு  சகஜம். அவர்களின் உடலில் ஏற்படும் இரத்த ஓட்ட வேறுபாடுதான் இதற்குக்காரணம்.

* அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் கர்ப்பிணிகளுக்கு வழக்கமாக ஏற்படுவதுதான். கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் வழக்கமான மற்றொரு பிரச்சனை நெஞ்செரிச்சல்.

விரிவடையும் கருப்பை வயிற்றை அழுத்துவதால் ஜீரணக்கோளாறுகள் உண்டாகும். இதனால் கருக்காலத்தின் பின்பகுதியில் நெஞ்செரிச்சல் ஏற்படும். சில பெண்களுக்கு மசக்கை காலத்தில் நெஞ்செரிச்சல் ஏற்படும்.

Popular Posts

FACEBOOK COMMENTS BOX