Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

26 September 2014

ஆடை அணிந்தும் விபச்சாரியாக மாறும் பெண்கள்.

கட்டுரை இது. காலத்தின் முக்கியத்துவம் கருதி பிரசுரிக்கின்றோம்.
“ ஒரு ஆண் மகன் தேவையின்றி அந்நியப் பெண்களைப் பார்ப்பது கூடாதென்பது மார்க்கத்தின் கட்டளையாகும்.
மார்க்கம் எவ்வளவுதான் கட்டளையிட்டாலும், ஷைத்தான் மனிதனை வழி கெடுத்து அந்நியப் பெண்களை நோக்கச் செய்கிறான். பெண்ணாகிறவள் ஆணிற்கு கவர்ச்சியாகப் படைக்கப்பட்டிருக்கின்ற காரணத்தினால் மனிதன் ஷைத்தானின் சூழ்ச்சிக்குப் பலியாகி, அந்நியப் பெண்ணை அவள் வெளியில் நடமாடும்போது, ஆசையுடன் நோக்குகிறான்.

இதற்கு எந்தவொரு மனிதனும் விதிவிலக்குக் கிடையாது. ஆதம் (அலை) முதல் உலகத்தில் இறுதியாகத் தோன்றவிருக்கின்ற மனிதன் வரை இந்தச் சலனம் ஏற்படத்தான் செய்யும். இதை யாராவது மறுத்தால் அவர் இறைவன் ஏற்படுத்திய அடிப்படை விதியை மறுக்கிறார் என்றுதான் பொருள். இன்றைய நிலைமை மிக மோசமாகி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஆண்களை ஈர்க்கும் நிலைக்கு சில பெண்கள் ஆடை அணிந்து வெளியில் செல்கிறார்கள் . பாலியல் செயலுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். அல்லாஹ் நம் முஸ்லிம் பெண்களைக் காப்பாற்றுவானாக!
பெண்களின் ஆடையைப் பற்றி சொல்லும் முன் ஆடை என்றால் என்ன? என்று முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டும். நாம் ஏன் ஆடை உடுத்த வேண்டும்? பிறருடைய ஆபாசப் பார்வையிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆகும். ஆடை என்பது வெறும் உடலின் அந்தரங்க உறுப்புகளை மறைக்க வேண்டுமென்பதற்காக மட்டுமல்ல. ஒரு ஆணுக்கு, பெண்ணின் எந்த உறுப்புகள் எல்லாம் சபலத்தையும், காமத்தையும் கூட்டுமோ அதை மறைக்க வேண்டும். ஒரு பெண்ணுக்கு ஆணின் எந்த உறுப்புகள் மோகத்தை ஏற்படுத்துமோ அதை ஆணும் மறைக்க வேண்டுமென்பதை மறுத்துரைத்து விட முடியாது. ஏனென்றால், நம் பகுதிகளில் ஒரு பழமொழி உண்டு “தவறு செய்ய வாய்பில்லாத வரை எல்லோரும் ஒழுக்கமானவர்கள்தான்”
பெண்களின் உடலமைப்பானது ஆண்களின் உடலமைப்பை விட சற்று வித்தியாசமானது. ஆண்களை இலகுவில் கவர்ந்து ஈர்க்கக் கூடிய தன்மையுடையது. ஆனால், ஆண்களின் உடலமைப்பானது அவ்வாறன்று. ஆண்கள் அரை குறை ஆடையுடன் இருந்தால கூட, அதனைப் பெண்கள் அவ்வளவு அலட்டிக் கொள்ள மாட்டார்கள். ஆனால், பெண்களின் நிலை அவ்வாறன்று.
அதனால்தான் அல்லாஹ் ஆடையான வேலியை பெண்கள் மீது அதிகப் படியாக விதித்துள்ளான். இஸ்லாம் ஒரு சம்பூரண மார்க்கமாகும். அந்த மார்க்கத்தில் வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் இபாதத்தாக அமைந்துள்ளது. அத்தோடு ஒவ்வொரு விடயம் தொடர்பாகவும் சட்ட வரையறைகள் காணப்படுகின்றன.
அந்த வகையில், உடை என்ற அம்சத்தை எடுத்துக்கொண்டால் அதிலும் சட்ட திட்டங்கள் காணப்படுகின்றன. ஆண், பெண் உடையமைப்பில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் வெவ்வேறுபட்ட சட்டங்களை இஸ்லாம் விதித்துள்ளது. எனினும், இன்றய நவீன உலகில் வாழ்கின்ற முஸ்லீம் சகோதரிகளின் உடை பல வகைகளில் காணப்படுகின்றது.
இஸ்லாத்தில் ஒரு பெண்மணி எவ்வாறு உடை அணிய வேண்டும் என்பதை தெளிவுபடுத்துவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.
ஆண்கள் குற்றம் புரிவதற்குக்கூட பெண்களின் இந்த முறையற்ற ஆடைக் கலாச்சாரமும் ஒரு காரணியாக அமைந்துள்ளது. பெண்கள் தமக்குத் தாமே அழிவையும், இழிவையும் தேடிக் கொள்பவர்காக இருப்பது வேடிக்கைக்குரியது. பாதுகாப்புக் கவசத்தையே துளையிட்டு உபயோகிப்பதாகவே இன்றைய முஸ்லிம் பெண்களின் நிலைமையும் உள்ளது.
அதாவது, சல்வார் என்பதுகூட ஒரு ஒழுக்கமான ஆடைதான். அதையே மிகவும் இறுக்கமாக இடுப்பு வரை பிளந்து காற்றில் பறக்க அணிகின்றனர். ஹபாயா என்பது கூட நவீன பெஷனாக மாறியுள்ளது. அதனையும் மிக இறுக்கமாக அணிந்து தலையை மட்டும் மெல்லிய துணியால் காயத்துக்கு போட்ட பெண்டேஜ் (bandage) மாதிரி சுற்றி மூடி விடுகின்றனர்.
மற்ற மறைக்க வேண்டிய பகுதிகளை மறைக்க மறந்து விடுகின்றனர். அல்லாஹ் இட்ட கட்டளையையும் வேண்டுமென்றே எமது பெண்கள் மறந்து விடுகின்றனர். இவர்களை விடவும் மிக மோசமானவர்கள்தான் இன்று ஹபாயா அணிந்து செல்லும் சில பெண்கள். ஏன் என்கிறீர்களா? இவர்கள் தாம் ஹபாயா அணியும் நோக்கத்தை மறந்து செயற்படுகின்றனர்.
ஏனெனில், இன்றும் சில சகோதரிகள் ஹபாயாவை அணிந்து கொண்டு தலையை மறைத்து ஒரு (ஹிஜாப் அல்லது பர்தா) அணியாமல் New Fashion என்று சொல்லிக்கொண்டு சோல் அணிகின்றார்கள். இங்கு அவர்களது மறைக்கப்பட வேண்டிய தலை முடி மற்றும் தாம் அணியும் ஆபரணங்கள் அனைத்தும் கவர்ச்சியாக வெளியில் தெரிகின்றன.
இது இஸ்லாமிய சட்ட விதிமுறையைக் குழி தோண்டிப் புதைப்பதாகவே அமைகின்றது. இவை மட்டுமல்லாது, இன்னும் சிலர் Open ஹபாயா என்று சொல்லிக்கொண்டு இரண்டு பக்கங்களாலும் கிழித்துக் கொண்டும், கணுக்கால் வெளியே தெரியக் கூடியவாறு கட்டையாகவும், கவர்ச்சியை வெளிக்காட்டக் கூடியவாறு பெற்றோரின் பராமரிப்பு இல்லாமலும், இஸ்லாமிய அறவின்மையினாலும்,பணத் திமிரின் காரணமாகவும் வீதிகளிலே அலைந்து திரிகின்றனர்.
ஆகவே, நம் பெண்கள் மாற்று மதத்தவர்களுக்கு ஒப்பாகவே இன்று தமது ஆடைக் கலாச்சாரத்தை மாற்றியமைத்து வருகின்றனர். இறையச்சத்தை விடவும், தனது மானத்தை விடவும் இவ்வுலக அலங்காரமும், அந்நிய மதத்தவரின் திருப்தியுமே இவர்களுக்கு மிகவும் மேலானதாகவும், விருப்பமானதாகவும் உள்ளது.
நமது பெண்கள் தொழுகிறோம், நோன்பு பிடிக்கிறோம், ஸகாத், ஸதகா கொடுக்கிறோம், பிறருக்கு உதவி செய்கின்றோம், இததான் முஸ்லிம்களாகிய நாம் செய்ய வேண்டியது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆம், இவை அல்லாஹ்வின் கட்டளை என்பதால் செய்கிறோம்.
ஆனாலும், அல்லாஹ் தன் வேதத்தின் மூலமும் தன் தூதர் மூலமும் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டிய முறைகள், பேண வேண்டிய விடயங்கள், வரையறைகளையும் சேர்த்தே நம் மீது விதித்துள்ளான். அதனடிப்படையில் எமது ஆடை உள்ளதா? என்று சற்றேனும் சிந்தித்துப் பார்த்ததுண்டா? அந்நிய ஆண்களின் முன்னிலையில் முகம், முன் கையைத் தவிர மற்ற பகுதிகளை மறைக்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.
ஆனால், ஆடை விடயத்தில் தலை கீழாக இருக்கின்றது நம் பெண்களின் நிலைமை. இன்று நம் பெண்களை வீதிகளில் காணும்போது முஸ்லிம் பெண்களாகவே கருத முடியாதளவுக்கு அந்நிய மதக் கலாச்சாரத்தில் மூழ்கிப் போனவர்களாக அவர்களது ஆடை அவர்களைக் காட்டிக் கொடுக்கின்றன.
இஸ்லாம் மார்க்கம் மட்டும்தான் குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டங்களை போட்டுள்ளது, அதற்கான வரையறைகளை இட்டுள்ளது. நாமோ அதனைப் புறக்கணித்து, நம் இஷ்டப்படி மனம் போன போக்கிலேயே ஆடைகளை அணிகின்றோம்.
நமது இஸ்லாமியப் பெண்களிடமிருக்கும் இன்னுமொரு குறைபாடு வெளியே செல்லும்போதும், டியூசன், பாடசாலை என்று செல்லும்போதும், தமது மேனியில் நறுமணம் பூசி வருவதாகும். இது அதிகமாக டியூசன் செல்லும் இளம் மாணவிகளின் பழக்கத்தில் உள்ளது.
அடுத்து, இவ்வாறு எமது சில இஸ்லாமியப் பெண்கள் நடந்து கொள்வதற்கு அவர்களிடம் ஹயா”என்ற வெட்க உணர்வு அற்றுப் போயிருப்பதே காரணமாகும். அக்கால ஸஹாபாப் பெண்மணிகளின் இயல்பில் ஒரு துளிகூட இன்றைய பல பெண்களிடம் காணக் கிடைக்கவில்லை. நீரும் நெருப்பும் எவ்வாறு ஒன்று சேராதோ அது போன்றே அக்கால ஸஹாபா பெண்மணிகளினதும் இக்கால பெண்களுடைய விந்தையான செயல்களும் ஒன்று சேராது. இத்தனைக்கும் மத்தியில் இஸ்லாமிய தீபச் சுடரை தம் வாழ்வில் ஏற்று நடக்கும் பெண்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.
இவ்வாறான செயல் தவிர்க்கப்பட வேண்டும். இதனை நம் உயிரிலும் மேலான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெறுத்தொதுக்கியுள்ளார்கள் என்பதை பின்வரும் ஹதீஸ் தெளிவுறுத்துகின்றது.
“ ஒரு பெண் மணம் பூசி அதன் நறுமணத்தை மக்கள் நுகரும் வகையில், அவர்களைக் கடந்து செல்வார்களாயின், அவள் ஒரு விபச்சாரியாவாள். ” ”

Popular Posts

FACEBOOK COMMENTS BOX