Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

26 September 2014

இஸ்லாத்தின் பார்வையில் கள்ளத்தொடர்பும் நவீன தொடர்பாடல் சாதனங்களும்

இஸ்லாத்தின் பார்வையில் கள்ளத்தொடர்பும் நவீன தொடர்பாடல் சாதனங்களும்
Unfaithful Love With Modern Communication Equipments and Solution From Islam.
திருமணம் மூலமல்லாமல் கள்ளத்தொடர்பு வைக்கும் ஆண்களாயினும், பெண்களாயினும் இஸ்லாமிய ஆட்சியில் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள். திருமணம் செய்யாத நிலையில், இது போல் விபச்சரம் செய்பவருக்கு நூறு கசையடிகளும் திருமணத்துக்குப்பின் விபச்சாரம் செய்பவருக்கு மரண தண்டனையும் இஸ்லாமிய ஆட்சியில் வழங்கப்படும்.
இஸ்லாமிய ஆட்சியில் நீங்கள் குறிப்பிடும் பெண் இரு வகையான தண்டனைக்கும் உரியவராகிறார். இஸ்லாமிய ஆட்சி இல்லாத நிலையில், அவளது கணவன் தன்னளவில் சரியான முடிவை எடுக்க வேண்டும். ஆணும் பெண்ணும் தனித்திருந்தால் அங்கே மூன்றாவதாக ஷைத்தான் இருப்பான் என்பது இஸ்லாத்தின் கோட்பாடு. திருமணம் செய்யத்தடுக்கப்பட்ட உறவினர்களைத் தவிர மற்ற பெண்களுடன் எந்த ஆணும் தனித்திருக்கக்கூடாதென்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.
‘இறைவன் என்ற ஒருவனைப்பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை, அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக்கொள்ளமாட்டேன் என வாதிடுவதானது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப்புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக்கொள்ளமாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்.
இப்படியான கருத்தையுடைய மனிதர்கள் ஆணும், பெண்ணுமாக தனிமையிலிருக்கும் போது நிச்சயமாக செய்தானின் உச்ச விளையாட்டு அங்கே தாண்டவமாடுகின்றது.
ஒரு காலத்தில் எங்கோ ஓரிடத்தில் கள்ளக்காதல் பற்றிய செய்திகள் வரும். இன்று அப்படியல்ல. கள்ளக்காதல் அதனால் ஏற்படும் கொலைகள், ஆட்கடத்தல், பணம்–நகை கொள்ளை போன்ற செய்திகள் முன்பை விட பன்மடங்கு அதிகமாக வெளி வருகின்றன. எமது பிரதேசங்களிலும் ஆகக்கூடியது என்று பார்க்கா விட்டாலும், ஆகக்குறைந்தது ஒரு சோடியாவது நீதியை தேடியவர்களாக அல்லது ஊர் மக்களால் பிடிக்கப்பட்டவர்களாக சமுதயத்துக்கு முன் நிறுத்தப்படுகின்றார்கள்.
இதற்கு முக்கிய காரணமாக அல்லாஹ்வின் மீது அவர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையின்மையுடன் சேர்ந்த பயமின்மையும், சமூகத்தில் இஸ்லாமிய விழிப்புணர்ச்சியின்மையுமே என்னால் பார்க்கப்படுகின்ற மிக முக்கிய காரணமாகும். அதனோடு  சமூகத்தில் நவீன தொடர்பாடல்களின் தாக்கத்தினையும் குறிப்பிடலாம். கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் ஈடுபடுவதால், பெண் தரப்புக்குடும்பமும் ஆண் தரப்புக்குடும்பமும் அவமானத்தில் தலை குனிகின்றன.
பல இடங்களில் கள்ளக்காதலனுடன் பெண் சென்று விடுவதால், குடும்பமே தற்கொலை செய்து கொள்வதும், ஆண்கள் கள்ளக்காதலில் சிக்கும் போது, அவனைச்சார்ந்த குடும்பம் சிதைவதும், இச்சமூகத்தில் நடந்த படி தான் உள்ளன.
இப்போது சமூகத்தில் அதிகமாக திருமணம் முடித்தவர்களே சமுதாயத்துக்கு முன் மக்களால் பிடிக்கப்பட்டு நீதிக்காக நிறுத்தப்படுகின்றனர். இதனைச் சற்று உதாரணத்துடன் உற்று நோக்குவோமானால், ஒரு பெண்ணின் கணவன் தகுதியற்றவனாக சதா சர்வ காலமும் பணம், பணமென்று அலைபவனாக இருக்கலாம். அல்லது எல்லா வசதி வந்த பின்னரும் அவனின் முணுமுணுப்புகள் பெண்ணின் சுயமரியாதைக்கெதிரான நடவடிக்கைகள், சந்தேகப்பார்வை பலவும் அவளை அன்றாடம் மனதளவில் கொல்லும் போது, அவள் அவனை எதிர்ப்பதாக நினைத்து அவனிடம் பெற முடியாத நிம்மதியைத்தரும் இன்னொரு துணையை நாடுகிறாள்.
இந்தப்புதிய உறவு இரகசியமாக நீடிக்கிறது. காலப்போக்கில் வெளிப்படும் போது எரிமலையாய் வெடித்து எரிமலைக்குழம்பு போகும் பாதையெல்லாம் பொசுக்குவது போல், அவர்கள் தொடர்பான அனைவரின் கௌரவமும் பொசுங்குகிறது.
சில நேரங்களில், சிலர் இதனை உணர்ந்து விலகுகிறார்கள். விலக இயலாதவர்கள் இடையூறாக இருக்கும் ஆணையோ பெண்ணையோ கொல்லுமளவுக்குக்கூட செல்ல எத்தனிக்கின்றனர்.
கண் நிறைந்த கணவன் தான். ஆனால், குழந்தைகள் படிப்புச்செலவு, குடும்பச்செலவுக்கு போதாத நிலை, இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழத்தெரியாத கணவனின் சம்பாத்யத்திற்கு ஈடு கொடுக்கத்தெரியாத நிலையில் பொருளாதாரம் சரிக்கட்ட சோரம் போகிறாள்.
நாலு பேரைப்போல் நாமும் வாழ வேண்டுமென்ற மட்டரகமான சிந்தனை அப்பெண்ணுக்குள் சாத்தானாக புகுந்து விடுகிறது. நுகர்வுக்கலாச்சாரம் படோடபமான வாழ்க்கை வாழ அவள் நினைக்கும் போது, அதற்காக வசதியான ஆணை அவன் அழகனோ, நோயாளியோ, கருப்போ, சிவப்போ அவளுக்குக்கவலையில்லை. அவனிடமுள்ள செல்வம் தான் அவளின் குறிக்கோள். அதனால் உறவில் நாட்டமில்லாமல் தான் கள்ளத்தொடர்பில் ஈடுபடுவாள். பல இடங்களில் கள்ளத்தொடர்புக்கு இது தான் பெருங்காரணமாகவுள்ளது.
இவர் யார்? அடிக்கடி வருகிறாரே? கேட்டால், தூரத்து உறவு என்பாள் சொந்தக்குடும்பத்திடமே! சில இடங்களில் கணவன் தன் வருமானத்திற்கும் மேலாக வீட்டில் சேரும் பொருட்களைப்பற்றி சந்தேகம் கொண்டு கேட்டாள். சீட்டுக்கட்டுகிறேன், சுய உதவிக்குழு எனச்சொல்லிப்பார்ப்பாள். அவை கணவனின் விசாரணைக்குட்படும் போது, சந்தேகம் அகலமாகும். அறிவுரை சொல்லிப்பார்ப்பான், அடித்தும் பார்ப்பான், அவளால் கணவனையும் இழக்க முடியாது, கள்ளக்காதலையும் மறுக்க இயலாமல் புழுங்குவாள். எல்லாம் பணக்கார வீட்டுப்பிள்ளைகள் போலவே தன் பிள்ளைகளும் வளர வேண்டுமென்ற நினைப்பால் வந்தது.
சகிப்புத்தன்மையுள்ளவன் பேரளவுக்கு கணவனாக அவனுக்குள்ளேயே மனம் புழுங்கிப் பைத்தியமாவான். அல்லது முரட்டுத்தனமுள்ளவன் குடும்ப வன்முறையில் ஈடுபடுவான். இன்னொரு நிலையுள்ள எதனையும் கண்டு மிரளும் மன நிலையுள்ள ஆண் குடும்பத்தை விட்டு விலகிச் செல்ல முற்படுவான். இது போன்ற ஆண்களால் அவளுக்கு கள்ளத்தனமானவன் தான் கதி என்றாகும்.
இன்னொரு சாரார் புடவை நகைகளுக்காக கணவன், பிள்ளைகள் வீட்டை விட்டுச்சென்றவுடன், தன் ஆசைக்கான பொருளை வாங்கித்தரும் பசையுள்ளவனைப் பிடித்துக்கொள்வது. அவனுடன் ஊர் சுற்றுவது. வீட்டிற்கு எல்லோரும் வரும் முன்பு வந்து விடுவது. இன்னொரு இரகம் ஒதுக்குப்புறமான வீடு, தனிமை, கணவன், பிள்ளைகள் அவரவர் வேலை பார்க்க வெளியே சென்றவுடன், பிற ஆண்களை வீட்டிற்கே வர வழைத்து கள்ள உறவு கொள்வது இவர்கள் வழக்கம்.
இந்தத்தவறுக்கு தனிமை தான் பெரிய காரணம். விதவைகள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை வாழும் போது தனிமை அவர்களை வாட்டுகிறது. உடல் இரீதியான தொடர்புகளை விட, ஒரு ஆண் துணை தனக்கு தேவை என்று நினைக்கிறாள். சிலர் சில சமூகங்களில் விதவைத்திருமணம் மாறுபட்ட கோணத்தில் பார்க்கிறார்கள். இதனால், விதவை வெளிப்படையாக இல்லாமல் ஒரு இரகசிய வாழ்க்கைக்குத் தள்ளப்படுகிறாள். கூடவே அவளுக்குப் பிள்ளைகள் இருந்து விட்டால், கூடுதல் பாதுகாப்பாக கட்டாயம் ஒரு ஆண் துணை தேவை என்பதை உணருகிறாள். சில இடங்களில் பிள்ளைகள் அங்கீகரிக்கின்றன. சில இடங்களில் எதிர்க்கின்றன. ஒரு பெண் அந்நிய ஆடவருடன் எச்சரிக்கையுடன் பேசுவது முக்கியம். பேச்சிலேயே சந்தேகம் வந்தால் தவிர்க்க வேண்டும். இது ஆண்களுக்கும் அவ்வாறே பொருந்தும். எல்லாவற்றிற்கும் காரணம் மனம் தான்.
ஒரு பெண்ணின் மனம் ஒழுக்க நெறியோடு இருந்தால், எந்த ஆணும் அவளை நெருங்க இயலாது. தவறான பேச்சு, சமிக்ஞைகள், தேவையற்ற அரட்டை, மூன்றாம் நபரிடம் தன் குடும்ப நிலைகளைப்பகிர்ந்து கொள்வது முதலானவை நல்ல பெண்மணி தவிர்ப்பாள். நல்ல ஆணும் இது போன்ற இயல்புடனுள்ள பெண்களை விட்டு விலகியிருப்பார்கள். தவிர்ப்பார்கள்.
ஆனால், மனம் ஒரு குரங்கு என்பதால், தாவ நினைக்கும். அதைக்கட்டுப்படுத்த ஒரே வழி சுய கட்டுப்பாடு மட்டுமே. சிறு வயதில் மறைவான உறவுகளால் பாலியல் சீண்டலுக்குள்ளாகும் குழந்தைகள் அது சரியா? தவறா? சொந்தமான இவர் செய்ததையும் தாயிடம் தந்தையிடம் கூற முற்படும் போது, காது கொடுத்துக் கேட்க வேண்டும். தன் பிள்ளை தானே “அப்படிச் சொல்லாதே, வாயை மூடு! இத வேற யாரிடமும் சொல்லாதே”, என அதட்டக்கூடாது. குழந்தை சொன்னதைக் கேட்ட பின்பு பக்குவமாக எடுத்துச்சொல்லி சூழ்நிலைக்கேற்ப தீர்வு காண வேண்டும்.
ஏனெனில், பெரும்பாலான காதல் கத்தரிக்காயெல்லாம். ஒரு பெண் அல்லது ஆண் தங்களுக்குத் தங்கள் குடும்பத்தில் பாதுகாப்பில்லாதவர்களாக தங்கள் உணர்வைப்புரிந்து கொள்ளாதவர்களாக பெற்றோர் உள்ளனர் என நினைக்கும் போது, அதற்கு வடிகாலாகத்தான் மன ஆறுதல் தரும் மாற்றம் தேடும் நிலைக்குச் செல்கிறார்கள். இந்த வழி காதலாகிறது. மனம், மனத்திருப்தி, ஆறுதல், அன்பான உபசரிப்பு, தேவைகள், ஆடம்பரம், சொகுசு, அதிகமான உறவில் நாட்டம் அதற்கு வழியில்லாமை, சந்தேகம், அடி-உதைகள், பாதுகாப்பு, வசவுகள், நோயாளி, கணவன் மனைவி குடும்பச் சண்டை, உறவினர் கொடுமை, மகப்பேறின்மை என்பன பல காரணங்களில் ஏதேனும் ஒன்றுக்காக அது கிடைக்கும் இடத்திற்கு தங்களை ஆட்படுத்திக் கொள்கிறார்கள்.
ஆண்களும் பெண்களும் இது போன்ற சமயத்தில் சுற்றியிருக்கும் குடும்பத்தினர் பற்றியோ, எதிர்காலம் குறித்தோ, பழிகள் சூழும் என்பது குறித்தோ அவர்கள் கவலைப்படுவதில்லை. அவர்கள் தேவை தற்காலிக நிவாரணம். பின்னர் இதுவே சூழலைப் பொறுத்து நிரந்தரமாகின்றன. சிக்கல் உருவாகிறது.
இவ்வாறான, இஸ்லாத்தினால் வெறுக்கப்பட்ட கள்ள உறவுகளுக்கு நவீன தொடர்படல்கள் எந்த வகையில் தூண்டுதலாக இருக்கின்றன எனப்பார்ப்போமானால், செல்போன்கள் பயன்பாட்டிற்கு வருமுன் வீட்டில் கம்பி வட தொலைபேசி இணைப்பை வைத்திருப்போர் கூடுதல் கட்டணம் (பில்) வந்து விடுமோ என்றஞ்சி அவசியத் தேவைகளுக்காக மட்டுமே அதனைப்பயன்படுத்தி வந்தனர்.
செல்போன்கள் பயன்பாட்டிற்கு வந்ததற்குப் பின்னர், குடும்பத்தில் பெரியவர்கள் சிறியோர் உட்பட அனைவரும் இதனைப்பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். இதனால் குடும்ப வருமானத்தில் ஒரு கனிசமான தொகையை செல்போன் அட்டைகளுக்காகச் செலவிடும் போக்கு தற்போது அதிகரித்து விட்டது. அவசியமில்லாவிட்டாலும், ஆடம்பரத்திற்காக மனைவி, மக்களுக்கு விலையுயர்ந்த செல்போன்ளை வாங்கித்தரும் பழக்கம் இன்றைய சமூகத்தில் நாகரீகமாக கருதப்படுகிறது.
நவீன வசதிகளுடன் கூடிய செல்போன்களின் வரத்து சந்தைகளில் இன்றைக்கு அதிகரித்துள்ளதால், சமூகத்தின் அனைத்துத் தரப்பினரிடமும் இத்தகைய செல்போன்களுக்கு மவுசு கூடியுள்ளது. இவற்றிலிருக்கும் புளூடூத், காமிரா, இணையம் உள்ளிட்ட வசதிகளைப்பயன்படுத்தி, ஆபாசமான அருவருக்கத்தக்க காரியங்களைத் தங்களுக்கு மத்தியில் நமது இளைய தலைமுறையினர் பரிமாறிக்கொள்வதை நம்மால் காண முடிகிறது.
கள்ளத்தனமாக மணிக்கணக்கில் நமது இளைஞர்களும் இளம் பெண்களும் மாற்றார்களுடன் உரையாடும் போக்கு தற்போது செல்போன்கள் வாயிலாக அதிகரித்துள்ளது. இவ்வாறு தொடரும் செல்போன் உரையாடல்கள், இறுதியில் குடும்பத்தாரைப் பகைத்துக் கொண்டு வீட்டை விட்டு அந்நியர்களுடன் ஓடி விடும் அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது.
இது ஒரு புறமிருக்க,பொழுது போக்கு ஊடகம் எனப்படும் திரைப்படங்கள், தொலைக்காட்சி சேனல்கள் சமூகத்தை இன்னொரு வகையில் சீர்கேடு எனும் படு நாசக்குழியில் தள்ளிக்கொண்டிருக்கின்றன.
இன்றைக்கு வெளி வரும் திரைப்படங்களும், தொலைக்காட்சி நாடகத்தொடர்கள், நிகழ்ச்சிகள் அனைத்தும் தங்கு தடையற்ற முறை தவறிய ஆண்-பெண் கலப்புறவுக்கு சமூகத்தைத் தயார்படுத்தும் வகையில் தான் தயாரிக்கப்படுகின்றன.
நடன அரங்குகள் ( DANCE CLUB ) போன்றவை தலைநகர் கொழும்பைப் போன்ற பெரு நகரங்களில் மட்டும் தான் இருந்தன என்பதாக சில காலங்களுக்கு முன் வரை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இத்தகைய நடன அரங்குகளை நமது தொலைக்காட்சி சேனல்கள் தமது நிகழ்ச்சிகளின் வாயிலாக ஒவ்வொரு வீடுகளிலும் அரங்கேற்றி வருவதை இன்று நம்மால் காண முடிகிறது.
நடன அரங்குகள் போன்ற ஆபாசக்கேளிக்கை மையங்கள் குறித்து கற்பனையில் கூட நினைத்துப்பார்த்திராத பாமர மக்களுக்கு நடனப்போட்டி என்ற பெயரில் சினிமாப்பாடல்களுக்கு அரைகுறை ஆடையுடன், பெண்னை ஆணுடன் ஆபாசமாக ஆட விட்டு புது வித ஆபாச இன்பத்தைப் பார்வையாளர்களுக்கு நமது தொலைக்காட்சிகள் வழங்கி வருகின்றன.
சுருங்கச்சொன்னால், ஆபாசமான விஷயங்களைக்காண்பது கண்கள் செய்யும் விபச்சாரம் என்பதாக நபி(ஸல்)அவர்கள் எச்சரித்துள்ள அந்தப் பாவத்தைச் செய்பவர்களாக சமூகத்தை இந்த தொலைக்காட்சிகள் மாற்றியிருக்கின்றன. குடும்ப உறவுகளை குலைக்கும் மெகா சீரியல்களும், அவ்வப்போது ஒளிபரப்பபடும் விளம்பரங்களும் காண்போர் மனங்களில் ஓர் எதிர்மறையான தாக்கத்தையே ஏற்படுத்தி வருகின்றன.
எனவே, பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சிறு வயது முதல் கூறி இந்தக்காதல் எனும் சீர்கேட்டில், பிள்ளைகள் விழுந்து விடாமல் பாதுகாக்க வேண்டும். ஆனால், மாணவ, மாணவியர் எப்படிக்காதலிக்க வேண்டுமென்ற கேடு கெட்ட கலாசாரத்தை தொலைக்காட்சிகள் கற்றுக்கொடுக்கின்ற போது, பெற்றோரும் சேர்ந்து கொண்டு தான் அதைப்பார்க்கின்றனர். விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் தேர்ச்சி பெறாமல் போவது ஒரு புறமிருக்க, யாருடனேனும் ஓடிப்போகும் போது, பெற்றோர்கள் அவமானப்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்குச்சென்று விடுகின்றனர்.
அத்துடன், சமுதாயத்தின் கழுகுப்பார்வைகளான இஸ்லாமிய விழிப்புணர்ச்சியும் சமூகக்கட்டுப்பாடுகளும் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன. ஆனால் இந்த வெட்கத்தடைகளையும், சமூகத்தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப்பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன.
ஆண், பெண் பிள்ளைகளுக்குச் செல்போன்கள் வழங்கினால், நாமே அவர்களை விபச்சாரத்திற்கு ஊக்குவித்தவர்களாவோம். வாலிப வயது ஆண், பெண் இரு பாலரும் செல்போன்களை செக்ஸ் போன்களாகத் தான் பயன்படுத்துகின்றனர். பிள்கைளுக்கு செல்போன் வாங்கிக்கொடுப்பதை நிறுத்தினால் பிப்வரி 14 உங்கள் பிள்ளையின் கற்பு பறி போகும் நாளாக மாறாமல் தடுக்கலாம்.
இந்த காதல் என்ற சீர்கேட்டால் சமூகத்தின் ஒழுக்கம் எனும் கட்டமைப்பே சீர் குலைந்து விட்டது. இதன் காரணமாக தற்காலத்தில் திருமணத்திற்கு முன் பெண்களுக்கு கன்னி பரிசோதனை (virgin test) நடத்தபடுகின்றது. இந்த காதல் சமூகத்தில் அவ்வளவு ஒழுக்கச்சீர்கேட்டை கொண்டு வந்துள்ளது.
இதனை பொதுவான பிரச்சனையாக நாங்கள் பார்ப்போமானால், ஆரோக்கியமான தாம்பத்ய வாழ்க்கை மூலம் நீடித்த ஆயுளைப் பெற முடியுமென்று சமீபத்திய ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. நம்பிக்கைக்குரிய ஒருவருடன் மட்டும் தொடர்ந்து தாம்பத்ய உறவில் ஈடுபட்டு வருவோருக்கே இது பொருந்துமாம். அதே சமயம், பல்வேறு பெண்களுடன் சகட்டு மேனிக்கு உறவு கொள்வோருக்கு இது சற்றும் பொருந்தாதென்று இத்தாலியைச்சேர்ந்த ஆய்வாளர் இமானுவேல் ஜனினி தெரிவித்துள்ளார்.
உறவு கொள்ளும் பெண் மீ்து மிகுந்த நம்பிக்கையும், பூரண திருப்தியும் வைத்திருக்கும் ஆண்களுக்கு செக்ஸ் வாழ்க்கை இனிதாக அமைகிறது. இப்படிப்பட்டோர் தொடர்ந்து செக்ஸ் வாழ்வில் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்களுக்கு இதயக்கோளாறுகள் வருவது குறைகிறது, வாழ் நாளும் நீடிக்க வாய்ப்பேற்படுகிறதென்றும் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
முறையான செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபட்டிருப்போருக்கு இதய நோய்கள் ஏற்படுவதில்லையென்பதால், மாரடைப்பு எட்டிப்பார்ப்பதில்லை. இதன் மூலம் தான் அவர்களுக்கு ஆரோக்கியமான உடல் நலமும், நீடித்த ஆயுளும் சாத்தியமாகிறதாம். செக்ஸ் உறவில் தொடர்ந்து அதிகளவில் ஈடுபடும் போது, ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரான் உற்பத்தி அதிகரிக்கிறது.
தொடர்ந்து அதிகரித்த அளவிலுமுள்ளது. இதன் மூலம் மன அழுத்தம் அவர்களுக்குக்குறைகிறது. இது உடலின் மெட்டபாலிசத்தை சிறப்பாக வைக்க உதவுகிறது. ஆண்களுக்கு செக்ஸ் உறவின் போது உற்பத்தியாகும் டெஸ்டோஸ்டிரான் மிகவும் நன்மை பயக்கக்கூடியது. தேவையில்லாத சர்க்கரையை அது குறைக்கிறது. இது இருதயத்திற்கு மிகவும் நல்லது. குறிப்பாக சர்க்கரை வியாதியுள்ளவர்கள் அதிகளவில் உடலுறவுகளில் ஈடுபடுவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.
அது அவர்களது சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது என்கிறார் ஒரு ஆய்வாளர். உடல் தேவைக்காக மட்டுமே, பல்வேறு பெண்களுடன் செக்ஸ் உறவு கொள்வோருக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறதாம். குறிப்பாக, கள்ளக்காதலில் ஈடுபடுவோருக்கு மன அழுத்தம் மிக அதிகமாக இருக்குமாம். யாருக்காவது தெரிந்து விடுமோ என்ற பயத்திலும், பதட்டத்திலும் இருப்பதால் அவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிப்பதோடு, இருதயக்கோளாறுகளும் சீக்கிரமே வந்து சேர்கிறதாம்.
கடைசியாக எமது மார்க்கத்தின் அடிப்படையில் அல்-குர்ஆன், ஹதீசை வைத்துப் பார்க்குமிடத்து, ஒரு முஸ்லிம் ஆண் நடத்தை கெட்ட விபச்சாரியைத்திருமணம் செய்யக்கூடாதென்றும் ஒரு முஸ்லிம் பெண் நடத்தை கெட்டவனைத்திருமணம் செய்யக் கூடாதென்று அல்-குா்ஆன் 24:3 வசனம் தடைவிதிக்கின்றது.
மேலும் நடத்தை கெட்ட பெண்கள் நன்னடத்தை கொண்ட ஆண்களுக்குத்தகுதியானவர்களில்லை என்றும் குா்ஆன் கூறுகிறது. மேலும், அல்-குா்ஆன் 24:26 வசனத்தில் ஆணோ பெண்ணோ தவறான நடத்தையுடையவராக இருந்து, திருந்தி விட்டால், திருந்தி அல்லாஹ்விடம் மன்னிப்புக்கேட்டு விட்டால், அவர்களை வாழ்க்கைத்துணையாக வைத்துக்கொள்வது சம்பந்தப்பட்டவரின் விருப்பத்தைப்பொறுத்ததாகும்.
அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து, தமது பாவங்களுக்கு மன்னிப்புத்தேடுவார்கள். அல்லாஹ்வைத்தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே, அவர்கள் நிலைத்திருக்கமாட்டார்கள். தமது இறைவனிடமிருந்து மன்னிப்பும், சொர்க்கச்சோலைகளுமே அவர்களின் கூலி. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (நன்கு) செயற்பட்டோரின் கூலி மிகவும் நல்லது.
மேலும், திருக்குர்ஆன் 3:135, 136 வசனத்தில் கணவனிருக்கும் போதும், ஒரு பெண் கள்ள உறவு வைத்திருந்தால், அவளுடன் கணவன் வாழக்கூடாது. அவளை விவாகரத்துச் செய்து விட வேண்டும். இந்தக்காரணத்துக்காக விவாகரத்து செய்யும் போது, அவர்களுக்கு எந்த இழப்பீட்டையும் கணவன் வழங்கத்தேவையில்லை.
இன்னும், விரிவாகப்பார்ப்போமனல், இத்தகைய இழிவுகளிலிருந்து சமூகத்தைச் சீர்படுத்த இஸ்லாம் சில வழிகளை கற்றுத்தருகிறது. இறைவன் தன்னிடம் இவ்வாறு பிரார்த்தனை செய்யுமாறு குர்ஆனில் நமக்கு கற்றுத்தருகிறான். ‘(நபியே நீர் கூறும்) இருள் படரும் போது ஏற்படும் தீங்குகளை விட்டும், (இறைவா) உன்னிடம் (நான்)காவல் தேடுகிறேன். (சூரா அல் பலக்- 3) இதனை விவரித்து நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். சூரியன் மறையும் நேரம் வந்து விட்டால், உங்களின் சிறுவர்களை வீட்டிலிருந்து வெளியில் வராமல் தடுத்துக்கொள்ளுங்கள். அந்நேரத்தில், ஷைத்தான் வீதியில் சுற்றுகிறான். (அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி).ஆதாரம்:புகாரி, முஸ்லிம் )
எவ்வளவு உண்மை! ஷைத்தான் வருவதாக நபிகளார் கூறும் அந்த இருள் சூழ்ந்த வேளையில், தான் பாவமான அருவருக்கத்தக்க, தீய சிந்தனையைத்தூண்டக் கூடிய நாடகங்களும், நிகழ்ச்சிகளும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகின்றன.
இந்நேரங்களில், தங்களையும் தங்களது குடும்பத்தாரையும் ஷைத்தானிய சேனல்களிடமிருந்து தற்காத்துக்கொள்ளாமல் போனதால், அதன் கதாபாத்திரங்களில் ஒழுக்கம், சமுதாயக்கட்டுப்பாடு ஆகியவை காற்றில் பறக்க விடப்பட்டு, முறையற்ற ஆண்-பெண் கலப்புறவு தங்கு தடையின்றி, உள்ளூர் முதல் உலகளவில் அரங்கேறி வருகின்றது.
தொலைத்தொடர்புக்கான எளிய சாதனமாக பயன்பட்ட செல்போன்கள், இத்தகைய கள்ளத்தனங்களுக்கு தொடர்புகளை ஏற்படுத்தித்தரும் தரகு வேலை செய்பவையாக உருமாறியிருக்கின்றன. இதன் பின் விளைவுகள் என்னவாக இருக்கின்றன என்பதை தற்போது நாம் கண்டு வருகின்றோம்.
ஆகவே, நமது பெண்களின் வெளி உலகத்தொடர்புகள் எவ்வாறிருக்க வேண்டுமென்பதைக்குறித்தும், செல்போன், தொலைக்காட்சி சேனல்கள், திரைப்படங்கள், இணையதளம் போன்ற தகவல் தொடர்பு சாதனங்களை முறைப்படி கையாள்வதற்குரிய கீழ்க்காணும் சில ஆலோசனைகள் நமது குடும்பங்களில் செயற்படுத்த முயற்சிக்க வேண்டும்.
1. பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர், வேலையில்லா இளைஞர்கள், இளம் பெண்கள் (திருமணமான-திருமணமாகாத) ஆகிய தரப்பினரை செல்போன் பயன்படுத்துவதை குடும்ப பெரியவர்கள் கட்டாயம் அனுமதிக்க கூடாது. மேற்படி தரப்பினர் அவசியம் கருதி, வெளியே செல்லும் போது அவசரமாக குடும்பத்தாரைத் தொடர்பு கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டால், அருகிலுள்ள பொதுத் தொலைபேசி சேவை (பூத்களைப்பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும்)
2. குடும்பப்பெரியவர்கள், தொலைக்காட்சிகளில் திரைப்படங்கள், பாடல்கள், நடனப்போட்டிகள் போன்ற பாலுணர்வைத் தூண்டுபவற்றையும், குடும்ப உறவுகளைச் சீர்குலைக்கும் நாடக, நெடுந்தொடர்களையும் தமது குடும்பத்தினர் பார்ப்பதற்குத்தடை விதிக்க வேண்டும்.
தொலைக்காட்சி சேனல்களை முற்றிலுமாக பார்க்கவே கூடாதென்பது இதன் பொருளல்ல. அறிவியல் கண்டுபிடிப்புகள், மருத்துவ உண்மைகள், வன விலங்குகள் மற்றும் பறவைகளின் வாழ்க்கை முறை பற்றிய தகவல்கள், சிறார்களுக்கு தெம்பையும் துணிவையும் ஊட்டும் (ADVENTURE- இடர்பாடான சூழ்நிலைகளில் பயணம் செய்யும்) நிகழ்ச்சிகள், ஏழை நாடுகள் மற்றும் போரினால் சீரழிந்து கிடக்கும் நாடுகளில் மக்கள் படும் விவரிக்க இயலாத ஏழ்மையையும் துன்பங்களையும் சித்தரிக்கும் (DOCUMENTARY) ஆவணப்படங்கள் போன்றவற்றைப் பார்க்கவும், அதிலிருந்து படிப்பினை பெறவும் இளைஞர்களையும், சிறுவர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும். இதற்கு அவர்கள் தயாராகாத பட்சத்தில் தொலைக்காட்சியை மூடி விடுவது சிறந்ததாகும்.
3. வீட்டில் இணையதள வசதியுள்ளவர்கள் அதனைப்பயன்படுத்துவோரை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். அவர்கள் எந்த மாதிரியான தளங்களில் தமது நேரங்களை செலவிடுகின்றனர்? அவை எப்படிப்பட்டதென்பதை கண்டறிந்து தீமையை விதைக்கும் தளமாகமிருந்தால், அவற்றைக் காணத்தடை விதிக்க வேண்டும். மேலும், சட்டிங் செய்பவர்களாக இருந்தால், அவர்கள் யாருடன் சட்டிங் செய்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
4. அருகிலுள்ள நகரங்களுக்குச்செல்வதாக இருந்தாலும், பெண்களைத்தனித்து  பயணம் செய்ய அனுமதிக்கக்கூடாது. அவ்வாறு செல்ல வேண்டிய அவசியமேற்பட்டால், திருமணம் செய்ய விலக்கப்பட்ட (மஹ்ரமான)வர்களோடு மட்டும் பயணிக்கச் செய்ய வேண்டும்.(கணவனோ அல்லது தந்தை, உடன்பிறந்த சகோதரர்களைத்துணைக்கு அழைத்துச் செல்வது சிறந்ததாகும்) சிறுவர்களை மட்டும் துணைக்கழைத்துச் செல்லும் பெண்களை தற்போது பேரூந்துகளில் அதிகமாகக் காண முடிகிறது.
அவ்வாறு சிறுவர்களோடு, பெண்கள் பயணிப்பதை ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது. சிறுவர்கள் துணையோடு பயணித்தல் என்பது தணித்துப் பயணிப்பதற்குச் சமமானதாகும்.
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். தனியாகப் பயணிப்பதில் ஏற்படும் அபாயம் குறித்து நான் அறிந்திருக்குமளவுக்கு மக்கள் அறிந்திருந்தால் ஒருவருமே இரவு தனியாகப் பயணம் செய்யமாட்டார்கள்.(அறிவிப்பவர்:இப்னு உமர் (ரலி), ஆதாரம்:புகாரி) பெண்கள் வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது, விலையுயர்ந்த நகைகள், ஆடைகள் அணிந்து செல்வதையும், மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மேக்கப் செய்து கொள்வதையும் வாசனைத்திரவியங்களைப் பயன்படுத்துவதையும் கட்டாயம் அனுமதிக்கக்கூடாது.
மேற்கூறப்பட்ட ஆலோசனைகளை குடும்பப் பெரியோர்கள் சிந்தித்து, சீர்தூக்கிப்பார்த்து அவற்றை தமது குடும்பத்தில் செயற்படுத்த முன் வர வேண்டும். இஸ்லாம் தகவல் தொடர்பு சாதனங்களுக்கெதிரான மார்க்கமல்ல. சாதாரணமாக கத்தியைக் கொண்டு காய்கறி, பழங்கள் போன்றவற்றையும் நறுக்கலாம்.
அதே கத்தியைக்கொண்டு ஆளையும் கொல்ல முடியும். யாரும் கத்தியைக்கொண்டு கொலை பதகத்தைச் செய்ய விரும்பமாட்டார்கள். இதைப்போலவே, தகவல் தொடர்பு சாதனங்களை ஆக்கபூர்வமான வழியில் இஸ்லாம் அனுமதித்துள்ள வகையில், ஆரோக்கியமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சுருங்கச்சொன்னால், அவற்றை இல்லாமல் ஆக்குவதை விட, இஸ்லாமிய மயமாக்கி விடுவதே, சாலச்சிறந்ததாகும்.
NOTE-
மேற்கூறப்பட்ட குர்ஆன் வசனங்களைச்சற்று ஆராய்ந்து, மனதில் கொண்டு நம்மை நாமே நரகத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ள முயல்வோமாக. இறைவன் நம் அணைவருக்கும் அருள் புரிவானாக.!

Popular Posts

FACEBOOK COMMENTS BOX