
ஆன்லைன் விளம்பரம்
www. google.com/adsense இந்த இணையதளத்தில் பதிவு செய்து நீங்கள் ஆன்லைனில் விளம்பரம் செய்யலாம். உங்கள் விளம்பரத்தை எத்தனை பேர் பார்கின்றனர், விரும்புகின்றனர் என்பதை வைத்து பணம் வரும்.
கற்பித்தல்
நீங்கள் எதாவது ஒரு பாடத்தில் திறமையானவர்களாக இருந்தால் உங்களுக்கு கற்பிக்கும் அனுபவம் இருந்தால், www.2tion.net , www.tutorvista.com இந்த இணையதளங்களில் பதிவு செய்து ஆன்லைனில் பாடம் நடத்தலாம்.
ஆன்லைன் வேலை
www. odesk.com, www.elance.com. இந்த இணையதளங்களில் பதிவு செய்து ஆன்லைனில் வேலை செய்து பணம் பெறலாம். இதில் நீங்கள் உங்கள் திறமையை நிரூபிப்பதின் மூலம் நிறைய பணம் மற்றும் வாடிக்கையாளர்களை பெறலாம்
ஆன்லைன் ஷாப்
www.ebay.in, www.indiebazaar.com இது போன்ற ஆன்லைன் ஷாப்களை உருவாக்கி பொருட்களை விற்பனை செய்யலாம்.
பழைய பொருள் விற்பனை
www.olx.in, www.quickr.com & http://craigslist.co.in இந்த இணையதளங்களில் வீட்ல இருக்க பழைய பொருள்கள விற்பனை செய்யலாம்.
போட்டோ சேல்ஸ்
www.shutterstock. com, www.shutterpoint.com, www. istockphoto.com இந்த இணையதளங்களுக்கு நீங்க எடுத்த போட்டோவஅனுப்புங்க, உங்களோட போட்டோ சேல்ஸ்ல இருந்து உங்களுக்கு 15% -85% வரைக்கும் ராயல்ட்டி பணம் கொடுப்பாங்க.
மொபைல் அப்ளிகேசன்
ஸ்மார்ட்போன், டேப்லெட் போன்ற சாதனங்களுக்கு புது அப்ளிகேசன்கல உருவாக்கி நீங்க ஆன்லைன்ல விற்பனை செய்யலாம்.
புத்தகம்
உங்களுக்கு புத்தகம் எழுதி வெளியிடனும்னு ஆசை இருக்கா. அமேசான் நிறுவனம் இதற்க்கு ஒரு வழி சொல்றாங்க. அமேசான் நிறுவனத்தின் இலவச சேவையான கிண்டில் டைரக்ட் பப்ளிஸிங் ல நீங்க உங்களோட புத்தகத்த வெளியிடலாம். அவங்க உங்களுக்கு புத்தக விற்பனைல இருந்து ராயல்ட்டி பணம் கொடுப்பாங்க.