Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

09 September 2014

சிலஆண்கள் தனது மனைவியரை கைவிடுவதற்கான காரணங்கள்

பொதுவாக ஆண்கள் எந்த ஒரு பச்சாதாபமின்றி சில அற்ப காரணங்களுக்காக பெண்களை கைவிடுவார்கள். அப்படி நடக்கும் பட்சத்தில் பெண்களுக்கு வாழ்க்கையை வழி நடத்த, அவர்கள் தனித்து போராட வேண்டியிருக்கும். முக்கியமாக, வளரும் நாடுகளில் பெண்கள் வாழ்வாதாரத்துக்கு பொருளாதார ரீதியாக கணவனை நம்பியிருப்பதால், கைவிடப்பட்ட நிலையில் பல கஷ்டங்களை சந்திக்க நேரிடும்.

 ஆண்கள் பெண்களை கைவிட பல காரணங்கள் உள்ளன. பெண்களின் மேல் ஈடுபாடு குறைதல், வேறு ஒரு பெண்ணின் மீது ஈடுபாடு அல்லது மீண்டும் காதலில் விழுதல் என சில உதாரணங்கள். அடக்கியாளுகின்ற பெண்கள், ஆண்களை கட்டுப்பாட்டில் வைக்க விரும்பும் பெண்கள் மற்றும் திருமணத்தை ஒரு பொருட்டாக மதிக்காத பெண்கள் இந்த நிலைக்கு ஆளாவது உண்டு.

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத பெண்களையும் ஆண்கள் கைவிட வாய்ப்புகள் அதிகம். பெண்கள் ஆண்களை புரிந்து கொள்ளாமல் அவர்களை அடக்கி ஆள முயற்சி செய்யும் போது திருமண பந்தம் உடைகிறது. இப்படிப்பட்ட உறவுகளில் கணவன் மனைவிக்கிடையே காதல் என்னும் உணர்வு கண்டிப்பாக இருக்காது.

 இப்படி இந்த உறவு தோல்வியடைவதால், ஒரு ஆண் இன்னொரு பெண்ணை தேடி போகும் சூழல் ஏற்படுகிறது. தங்களுக்கு திருமணம் ஆன போதும் கூட இன்னொரு பெண்களை தேடும் சுபாவம் உடையவர்கள் ஆண்கள். இப்படி அலைபாயும் குணத்தோடு இருக்கும் ஆண்களுக்கு மனைவியுடன் ஒத்துப்போகவில்லை என்றால் கேட்கவா வேண்டும்; உடனே மற்றொரு பெண்ணை தேடிக் கொள்வர். ஏன் இப்படி நடக்கிறது? இதை முழுமையாக அறிவோம்.

பொறாமை 
பெண் தன் கணவனை இழக்க, அவளின் பொறாமை குணம் கூட காரணமாக அமையலாம். தன் கணவன் மேல் அடிக்கடி சந்தேக்கப்பட்டு, இல்லாததை கற்பனை செய்து கொள்வார்கள். இத்தகைய செயல் கணவனையோ அல்லது காதலனையோ எரிச்சல் அடைய செய்து உறவையே முறியடிக்கச் செய்யும்.

உணர்வுகள்
 தன் உணர்வையும், கருத்தையும் புரிந்து கொள்ளாத மனைவியை கை விட்டு, தன்னை நன்கு புரிந்து தன் உணர்ச்சிக்கு மதிப்பளிக்கும் பெண்ணை நாடிச் செல்வர். தன் மீது மனதார நம்பிக்கை வைக்கும் ஒரு பெண்ணை தான் ஆண்கள் எப்பொழுதும் விரும்புவார்கள்.

மன தடுமாற்றம்
 ஒரு ஆண் மற்றொரு பெண்ணால் ஈர்க்கப்பட்டால் பழைய உறவை கைவிடலாம். ஒரு சிறு வயது பெண்ணையோ அல்லது கவர்ச்சிகரமான பெண்ணை பார்த்தாலோ மனதை பறி கொடுக்கும் நிலைமை வரலாம். மற்றொரு பெண்ணோடு புது உறவை வளர்க்க காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அப்படி பட்ட தருணத்தில் எந்த ஒரு ஐய உணர்வும் இல்லாமல் தன் மனைவியையோ அல்லது காதலியையோ அவர்கள் கைவிட கூடும்.

திருமணம்
 தன் திருமண வாழ்வை அலட்சியப்படுத்தும் பெண்களே கைவிடப்படுகின்றனர். ஒரு பெண் தன்னை, தன் அழகை மற்றும் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும். இவை அனைத்திலும் ஈடுபாடு இல்லாமல் இருந்தால், தன் கணவன் ஈர்ப்புத்தன்மையுள்ள மற்றொரு பெண்ணை நாடிச் செல்ல வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் திருமண வாழ்வை விளையாட்டாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

அடக்கியாளுகின்ற பெண்
அடக்கியாளுகின்ற பெண்களும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எப்பொழுதும் தன்னை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை ஆண்கள் விரும்ப மாட்டார்கள். இத்தகைய காரணத்தாலும் பெண்களை கை விடுகின்றனர்.

சுவாரசியம்
 பெண்கள் எப்போதும் சுவாரசியமாகவும் எழுச்சியுடனும் இருக்க வேண்டும். கணவனோ அல்லது காதலனோ பெண்களின் உரையாடலில், செய்யும் அனைத்து செயல்களிலும் ஈர்க்கப்பட வேண்டும்.

அறிவுள்ள பெண்கள் 
அமைதியான பெண்களும் கைவிடப்படுகின்றனர். ஒரு ஆண், பெண்கள் எப்போதும் கலகலவென்று சுவாரசியமாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். கவர்ச்சியான பெண்ணை விரும்பினாலும் அந்த பெண் அறிவுள்ளவளாக இருக்க எண்ணுவர்

புதுமைப் பெண்
 பெண்கள் அதிகமாக ஆண்களை நம்பி வாழ்வதையும் அவர்கள் விரும்ப மாட்டார்கள். முழுமையாக ஆண்களை நம்பி வாழும் பெண்களிடம் ஆண்கள் கோபத்தை வெளிக்காட்டுவார்கள். இன்றைய காலக்கட்டத்தில், பொருளாதார ரீதியாக பல பிரச்சனைகள் உள்ளதால், நிதி சுமையை சேர்ந்து சுமக்கும் பெண்களை தான் ஆண்கள் விரும்புகின்றனர்.

Popular Posts

FACEBOOK COMMENTS BOX