Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

03 September 2014

தப்லீஃக் ஜமாஅத்தைப் பற்றி?

தப்லீக் ஜமாஅத்தினர் சில நன்மையான காரியங்களைச் சிறப்பான முறையில் செய்து வருவதை யாரும் மறுக்க இயலாது. மக்களைத் தொழுகைக்கு அழைப்பது அதிகமான வணக்கங்கள் புரிவது பாவம் 

செய்துகொண்டிருந்தவர்களுக்கு சரியான பயிற்சி அளித்து அவர்களிடம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவது சில மார்க்க விஷயங்களைப் பிடிப்பாகவும் பேணுதலாகவும் இருப்பது இது போன்ற நல்ல விஷயங்களை இவர்களிடம் காண முடிகிறது. 

தப்லீக் என்பதன் அர்த்தம் தெறிந்து பேசனும்
 
முஹம்மது நபி (ஸல் ) சவூதி அராபியாவில் பிறந்து அங்கேயே வபாத்தாகிவிட்டார் அவர் உலகம் பூராவும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்யவில்லை சஹாபாக்கள் தாபயீன்கள் மற்றும் யார் யாருக்கு இஸ்லாம் தெறிந்ததோ அவரவர்கள் அதை அடுத்தவர்களுக்கு எடுத்து சொன்னார்கள் பயணம் செய்து பரப்பினார்கள் அப்படி தான் உலகம் முழுக்க இஸ்லாம் பரவியது அதற்க்குப்பெயர் தான் தப்லீக்

தப்லீக் ஜமாத் என்றால் என்ன?
தப்லீக் ஜமாத் என்பது மற்றவர்களை போல தொழுகையின் பக்கம் அழைப்பு கொடுத்து மற்றவர்களை போல நன்மையை எவி தீமையை தடுக்கும் கூட்டம் . மார்க்க கல்வியை கற்ப்பதற்க்காக 3 நாள் ,40 நாள் ,4 மாதம் என தன்னுடைய நேரத்தை ஒதுக்கிக் கொண்டு ஜமாத்தில் வெளிகிளம்பி செல்வார்கள் .

3 நாள் 40 நாள் என செல்லலாமா ?
3 ,40 நாட்கள் என மார் க்க கல்வியை கற்பத்ற்காக ஜமாத்தில் செல்லலாம் .
எவர் 40 நாள் கபடமற்ற உள்ளமின்றி அல்லாஹ்வை தியானிக்கிறார்களோ மனதில் உள்ள ஞானத்தின் ஊற்றுக்கள் வாயின்வழியாக வெளிபடும் .(அல் ஹதீஸ்)

பெண்களும் ஜமாத்தில் செல்லலாமா இதற்க்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டா ?
பெண்களும் ஜமாத்தில் செல்லலாம் ஆனால் தனக்கு மஹரமான ஆணின் துனையுடன் செல்லலாம் . மார்க்க கல்வியை கற்ப்பது ஒவ்வொரு ஆண் , பெண் மீதும் கட்டாய கடமையாகும் .(அல் ஹதீஸ்)

ஏன் தப்லீக்கிள் முதலில் முஸ்லீம் களிடத்தில் தாவா செய்கிறீர்கள் ?
முதலில் நம்முடைய சீர்திருத்தம் பிறகு தான் மற்றவர்களின் சீர்திருத்தம் . நாம் இஸ்லாமிய முறைபடி வாழ்ந்தால் தான் பிறரை இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு கொடுக்கமுடியும் . 


சஹாபாக்கள் கூறிகிறார் :
முதலில் நாங்கள் ஈமானை தான் கற்றுக்கொண்டோம் குர்ஆனை கற்பதற்க்கு முன்னால் .(அல் ஹதீஸ்)

நீங்கள் ஏன் ஜமாத்தில் குர்ஆன் ,ஹதீஸ்களை படிக்காமல் தாலீமை படிக்கிறீர்கள் ? அதில் நிரைய தவறுகள் இருக்கின்றதே அது உண்மையா?
தாலிம் அதில் குர்ஆன் வசணங்களும் இருக்கின்கிறது அதன் விளக்கங்களும் இருக்கிறது , ஹதீஸ்களும் இருக்கிறது அதன் விளக்கங்களும் இருக்கிறது மேலும் புஹாரி ,முஸ்லிம் ,திர்மிதி ,நஸயி, அபுதாவுத் இன்னும் ஏறாலமான ஹதீஸ்கள் கலந்து வருகின்றது .  தாலிம் விளங்கத்தில் சில தவறுகள் இருக்கலாம் ஏன்னென்று தெரியுமா ? தாலிமை எழுதியது மனிதன் தான் . தவறு இல்லாத புத்தகம் என்றால் அது அல்லாஹ்வால் இறக்கப்பட்ட குர்ஆன் மட்டுமே .தாலிமில் தவறுயிருந்தால் தவறை நிராகரித்துவிடலாம் , பிறதை எற்றுக்கொள்ளாம் .


'முஃமீன்கள் அணைத்தையும் செவியேர்பார்கள் அதில் நல்லதை எடுத்து நடப்பார்கள் கெட்டதை விட்டுவிடுவார்கள்' .(அல் குர்ஆன்)

3 ,40 நாட்கள் ஜமாத்தில் செல்வதை என் அல்லாஹ்வுடைய பாதை என்கிறீர்கள் ?
3 ,40 நாட்கள் மார்க்க கல்வியை கற்க செல்கிறோம் .அப்படிதனே ,
'எவன் மார்க்க கல்வியை கற்க வீட்டை விட்டு வெளி கிளம்பி செல்கிறானோ அவன் வீடு திரும்பும் வரை அல்லாஹ்வுடைய பாதையில் இருக்கிறார்' .(அல் ஹதீஸ்)

ஒவ்வொரு இரண்டு நபர்களில் ஒரு நபர் அல்லாஹ்வின் பாதையில் புறப்பட வேண்டுமென்று ரஸூலுல்லாஹி ஸல் அவர்கள் பனூலிஹ்மான் கோத்தாரத்தாருக்குச் சொல்லி அனுப்பினார்கள் பிறகு உங்களில் எவர் அல்லாஹ்வின் பாதையில் புறப்பட்டவரின் குடும்பத்தார் மற்றும் உடைமைகளை அவர் இல்லாத சமயத்தில் நல்ல முறையில் கவனித்துக் பாதுகாத்துக கொண்டாரோ அவருக்கு அல்லாஹ்வின் பாதையில் புறப்பட்டவரின் கூலியில் பாதி கூலி கிடைக்கும் என்று ஊரில் தாங்கி விட்டவர்களிடம் கூறினார்கள் என ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரீ ரஸி அவர்கள் அறிவிக்கிறார்கள் (முஸ்லீம்)முன்தகப் அஹாதிஸ் பக்கம் 699

தொழுகையின் சிறப்பும் ! தப்லீக் தஃலீம் தொகுப்பும் !
தொழுகையானது இஸ்லாத்தின் இரண்டாவது தூணாகும். இதை விட்டவனுக்கும் இஸ்லாத்துக்கும் இடையில் எவ்வித தொடர்புமில்லை என்பதும் நபிமொழியாகும். தப்லீக் தஃலீம் தொகுப்பில் தொழுகைக்காக ஒரு தனிப் பகுதியே ஒதுக்கப் பட்டுள்ளது. இதில் தொழுகையின் சிறப்புகள், அதனால் கிடைக்கும் நன்மைகள், விடுவதால் ஏற்படும் தண்டணைகள் பற்றியெல்லாம் விலாவாரியாக விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன. இதை எவரும் மறுக்க முடியாது. 

அல்லாஹ்வின் கயிற்றை (அல் குர்ஆன் ) பலமாக பற்றிப்பிடித்துக் கொள்வோம் மாறாககொள்கை வளர வேண்டும், கோத்திரம் வளர வேண்டும் என்ற கோட்பாடை எரிந்து விட்டு இஸ்லாம் என்ற ஓர் இறைக் கொள்கையை வளர்ப்போமே..! 
இது ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு ஞாபகம் ஊட்டுவதன் மூலம் பிரயோசனம் பெற வேண்டும் எனற கூற்றுக்கேட்ப மாத்திரம் என்று எடுத்துக் கொள்ளவும் . கீழ் காட்டும் ஹதீத் நல்ல ஒரு எடுத்துக் காட்டாகும்:

பிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் 'விடைபெறும்' ஹஜ்ஜின்போது (மக்களுக்கு உரையாற்றுகையில்) என்னிடம், 'மக்களை மெளனமாக இருக்கச் சொல்லுங்கள்' என்று கூறினார்கள். (அமைதி திரும்பிய பின்னர்) 'எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றொருவரின் பிடரியை வெட்டிக்கொள்ளும் இறைமறுப்பாளர்களாக மாறிவிடாதீர்கள் (ஒற்றுமையுடன் இருங்கள்)' என்றார்கள்.இந்த ஹதீஸை, நபி(ஸல்) அவர்களிடமிருந்து அபூ பக்ரா(ரலி) இப்னு அப்பாஸ்(ரலி) ஆகியோரும் அறிவித்தார்கள். 

Popular Posts

FACEBOOK COMMENTS BOX