Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

03 September 2014

சமகால ஜமாத்துக்களும் அதன் பரவலும்

இன்று பரவலாக பல ஜமாத்துக்களும்,சமூக நலன்புரி இயக்கங்களும் கொள்கைகளும் வளர்ந்திருப்பதும் நாம் அறிந்த விடயமே. என்றாலும் இலங்கையை பொருத்த மட்டில் ஜமாத்தே இஸ்லாமி, இஹ்வனுள் முஸ்லிமீன், தவ்ஹீத்,தப்லீக் போன்ற சமூக பற்றுள்ள ஜமாத்துக்கள் குறிப்பிடத்தக்கதாகும்.

'மனிதர்களுக்கிடையில் ஏற்றத் தாழ்வில்லை. யாரும் யாருக்கும் உயர்ந்தவரும் இல்லை. தாழ்ந்தவரும் இல்லை. மேலும் படைக்கப் பட்ட உயிரினங்கள் பலவற்றை விடவும் மேன்மைப் படுத்தப் பட்டவர்கள் மனிதர்களே' எனவும் திருமறையும் நபி(ஸல்) அவர்களின் வாக்குகளும் தெளிவு படுத்துகின்றன.

நிச்சயமாக உங்கள் “உம்மத்து” - சமுதாயம் - (வேற்றுமை ஏதுமில்லா) ஒரே சமுதாயம் தான்; மேலும் நானே உங்கள் இறைவன். ஆகையால், என்னையே நீங்கள் வணங்குங்கள் (21:92)

எனினும் ஒரு சிலர் தன் கொள்கையை வளர்ப்பதட்காகவும்,ஆள் சேர்பதட்ககவும் செயல்படுவதை காணலாம். இருந்தாலும் இவ்வமைப்புக்கள் இஸ்லாத்திட்காக அளப் பெரிய பங்களிப்பும்,சேவையும் செய்வதை யாராலும்மறைக்க முடியாது. பாரிய சேவைகள் செய்து வரும் இவர்கள் ஒன்றாக சேர்ந்து செயட்படும்போது நாம் ஒன்று சேர்ந்து அன்னியர்கள்,அயலவர்கள் தீட்டும் திட்டத்திற்கு எதிராக செயல்பட மாத்திரமல்லாமல் ஒரு எடுத்துக் காட்டாகவும் இருக்கலாம்.அன்றியும், ஓர் உண்மையான நேரான சமூகத்தை கட்டியெழுப்பி உடைந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை புனர் நிர்மாணம் செய்ய முடியும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்;. அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும்,(தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்;. அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும்கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்;. எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள்,தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள். ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப்புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர் வழி காட்டினான்;. அவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான்.(Quraan)

சகோதரர்களே ! வாருங்கள்.... " நாம் ஏன் வெவ்வேறு படகில் பயணம் செய்ய வேண்டும் ஒரே கப்பலில் ஒன்றாக பயணம் செய்வோமே'' வெள்ளையன் கருப்பன் ,எஜமான் அடிமை,குளம் ,கோத்திரம் என்று வேறுபாடு காட்டாத முழு மனித சமூகத்திற்குரிய ஓர் ஒப்பற்ற பாதை இஸ்லாமே ! இதுவன்றி ஏன் நமக்குள் வேறுபாடு,வேற்றுமை என்று பிளவு பட வேண்டும். "கறுப்பரை விட வெள்ளையரோ, வெள்ளையரை விட கறுப்பரோ சிறந்தவரல்லர்; அரபியரை விட அரபியல்லாதவரோ, அரபியல்லாதவரை விட அரபியரோ சிறந்தவரல்லர். இறையச்சம் உடையவரே உங்களில் சிறந்தவர்". - நபிகள் நாயகம் (ஸல்)

அகீதா ,மத்காப் ,கொள்கை வெறியை தூக்கி எறிவோம் இஸ்லாத்திற்கு எதிரான சதிகளையும்,கிருமிகளையும் அழித்து ஒழிப்போம்; ஒன்று சேர்வோம் வாருங்கள்.

பிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் 'விடைபெறும்' ஹஜ்ஜின்போது (மக்களுக்கு உரையாற்றுகையில்) என்னிடம், 'மக்களை மெளனமாக இருக்கச் சொல்லுங்கள்' என்று கூறினார்கள். (அமைதி திரும்பிய பின்னர்) 'எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றொருவரின் பிடரியை வெட்டிக்கொள்ளும் இறைமறுப்பாளர்களாக மாறிவிடாதீர்கள் (ஒற்றுமையுடன் இருங்கள்)' என்றார்கள்.இந்த ஹதீஸை, நபி(ஸல்) அவர்களிடமிருந்து அபூ பக்ரா(ரலி) இப்னு அப்பாஸ்(ரலி) ஆகியோரும் அறிவித்தார்கள். 

ஒற்றுமை,சகோதரத்துவம்,நியாயம் வாழ்க ..! வளர்க ....! இஸ்லாம். கருத்தக்களையும்,சிந்தனைகளையும் வரவேற்கிறோம்.

Popular Posts

FACEBOOK COMMENTS BOX