Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

30 September 2014

புலமைப் பரிசில் பரீட்சையில் தங்காலை முஸ்லிம் வித்தியாலய மாணவி மாவட்ட ரீதியில் இரண்டாம் இடம் ( தமிழ் மொழிப் பிரிவில் )

Congratulation & wish you all the best from ( Tangalle Muslim Welfare Society )

Grade 5 scholarship results has been released and Alhamdulillah. Tangalle Muslin Vidyaleya Student Miss S.L.S.Fathima Sujaida has got the highest marks of 165 and became 2nd in Tamil medium Distict rank in Hambantota District & First highest marks in Tangalle Muslin Vidyaleya

Alhamdulillah Realy so happy to Know that our muslim sisters and brothers achieving in educational fields. And We wish every student who passed this exam very well. All the very best for bright future.


இலங்கையில்  2014 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தங்காலை முஸ்லிம் வித்தியாலயத்திலிருந்து பரீட்சைக்கு தோற்றிய மாணவி S.L.S.பாத்திமா சுஜய்தா 165 புள்ளிகளைப் பெற்று தமிழ் மொழிப் பிரிவில் மாவட்ட ரீதியில் இரண்டாம் இடத்தையும், தங்காலை முஸ்லிம் வித்தியாலயத்தில் முதலாம் இடத்தையும் பெற்றுள்ளார். இவர் எம்.ல்.பாத்திமா மிப்ராவினதும், எஸ். எல். எம். சஹாப்தன் இனதும் முதல் புதல்வியாவார்.

S.L.S.பாத்திமா சுஜய்தா என்ற மாணவி தங்காலை அல்-ஹிக்மா பாலர் பாடசாலையிள் 2009 ஆம் ஆண்டு அவர்களின் ஆரம்ப கல்வியை கற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி இடம்பெற்ற ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைக்கு மூன்று இலட்சத்து 27,648 மாணவர்கள் தோற்றினர்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்று ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கும், தங்காலை பிரதேசத்திற்கும் பெருமையை தேடித்தந்த இவரை தங்காலை முஸ்லிம் நலன்புரி சங்கத்தின் ( TMWS ) தலைவர் அவரின் விட்டுக்குச் சென்று பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சித்திடையந்த மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் எமது பாராட்டுகள் உரித்தாகுக. இம்முறை போதிய பெறுபேறுகளைப் பெற முடியாதிருந்தபோதும் ஆர்வத்துடன் கற்கைச் செயற்பாடுகளில் ஈடுபட்ட ஏனைய மாணவர்களுக்கும் தங்காலை முஸ்லிம் நலன்புரி சங்கத்தின் ( TMWS ) சார்பாக எமது பாராட்டுக்கள்


ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஒரு சிலமாவட்டங்களுக்கான குறைந்தபட்ச புள்ளிகள்

மாத்தளை      159, 

காலி      159,

மாத்தறை      159,

ஹம்பாந்தோட்டை      155,

மன்னார்     157,

வவுனியா      158,

அம்பாறை      158, 

Popular Posts

FACEBOOK COMMENTS BOX