புதன்கிழமை அன்று உலக சிறுவர் தினம் நாட்டில் எல்லாப்பாகங்களிலும் உள்ள பாடசாலைகள் மற்றும் முன்பள்ளி பாடசாலைகள், பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் கொண்டாடப்பட்டது.
இதன் அடிப்படையில் சென்ற புதன்கிழமை (01.10.2014) தங்காலை 'அல்-ஹிக்மா'
பாலர் பாடசாலையில் ( AL-HIKMA NURSERY SCHOOL ) இவ்வருட சர்வதேச சிறுவர் தின நிகழ்வானது, பாடசாலையின் தலைமை ஆசிரியைகளான M.S.M.Safna and M.M.M.Zahara வழிகாட்டலில் பாடசாலை மாணவர்கள்
மற்றும் பெற்றோகளின் பங்களிப்புடன் சுற்றுலா ஏற்பாடுகள் சிறப்பாக
செய்திருந்தனர்
தங்காலை பிரதேசத்தில் (
தங்காலை முஸ்லிம் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில்
) முஸ்லிம் சிறுவர்களுக்கென இயங்கிவரும் இப்பாலர் பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர் குலாம், ஊழியர்களின் பங்களிப்புடன் இப்பாடசாலை பௌதீக அபிவிருத்தி மட்டுமல்ல கல்வித் தரத்திலும் உயர்வை கண்டு வருகின்றது.
இவ்வாறான சிறுவர் தினங்களை கொண்டாடுவதன் மூலமும், சிறுவர்களுக்கிடையே நல்லுறவுகள் ஏற்படுவதுடன், பெற்றோர்கள் மத்தியில் சிறுவர்கள் தொடர்பான விழிப்புணர்வுகளும் ஏற்படுகின்றது என தங்காலை முஸ்லிம் நலன்புரி
சங்கத்தின் ( TMWS ) தலைவர் M.M.Mowsook Moulana தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இச்சுற்றுலாவில் நலன்புரி சங்கத்தின் உறுப்பினர்களாகிய M.A.Abdur Raheem ,
M.N.M.Fazal மற்றும் பாலர் பாடசாலையின் ஆசிரியை M.S.M.Safna and M.M.M.Zahara ஆகியோருடன் அல்-ஹிக்மா பாலர் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர். “அல்ஹம்துலில்லாஹ்”