
இஸ்லாத்தின் நோக்கம் என்ன? ஹராமும் ஹலாலும் ஒன்றாகுமா?
முன்னர் 2005 இல் இலங்கைக்கு PJ வந்தபொழுது, காத்தான்குடியில் PJ பேசுவதற்கான மேடையை அமைத்தவர்கள், இரவிரவாக கஞ்சா அடித்துக் கொண்டே வேலை செய்தார்கள்.
உடனடியாக கொடுக்க காசு இல்லை என்பதற்காக தற்பொழுது வட்டியில் ஒரு பள்ளிவாசல் அமைத்து விட்டார்கள், அடுத்த கட்டமாக ஹஜ்ஜுப் பெருநாளைக்கு மாடு வாங்க பணம் போதாது என்று குறைந்த விலைக்கு கழுதையை வாங்கி குர்பானி கொடுப்பார்களோ?
இங்கிலாந்தின் வடக்கு லண்டனில் ஹரோ பகுதியில் இருக்கும் இலங்கை இஸ்லாமிய கலாச்சார நிலையம் மற்றும் பள்ளிவாசல் என்பவை, இங்கிலாந்தில் உள்ள ஒரு முக்கிய வங்கியில் வட்டிக்கு வாங்கப்பட்டுள்ளன. இதில் சம்மந்தப்பட்ட மற்றும் நிர்வாகத்தில் உள்ள அனைவருமே இலங்கை முஸ்லிம்கள் ஆவார்கள்.
£ 550 000.00 (ஐந்து லட்சத்து ஐம்பது ஆயிரம் இங்கிலாந்து பவுன்ஸ்) பெறுமதியான பணத்திற்கு பள்ளிவாசல் மற்றும் கலாச்சார நிலையம்* என்பவற்றை நிர்மாணிக்க, 13 வருடங்களில் திருப்பி செலுத்தும் படியாக வங்கியில் வட்டிக்குப் பணம் பெற்று, வட்டியுடன் மொத்தமாக £ 832 230.36 ( எட்டு லட்சத்து முப்பத்தி இரண்டாயிரம் ..... ) திருப்பி செலுத்தப்படவும் உடன்பாடாகியுள்ளது.
[ * இங்கிலாந்தில் பள்ளிவாசல் என்று அனுமதி பெறுவதை விட, கலாச்சார நிலையம் என்கின்ற பெயரில் ஆரம்பிப்பது இலகுவானது. ]
இதில் வட்டி மட்டும் £ 282 230.36 (இரண்டு லட்சத்து என்பத்தி இரண்டாயிரம் ..... ) ஆகும்.
அல்லாஹ்வை தொழுவதற்காக பள்ளிவாசல் வாங்க வட்டியா? இது ஹராம் என்று ஐரோப்பிய ஷரியா கவுன்சில் பத்வா அனுப்பியும் வைத்துள்ளது.
இங்கே இன்னொரு முக்கிய விடயம், இலங்கையில் உள்ள ஏழை முஸ்லிம் ஊர்களில் பயான் செய்வதற்காக திரும்பிக் கூட பார்க்காத VIP Five Star பணக்கார மெளலவிகள், லண்டன் லண்டன் என்று அடிக்கடி ஓசி டிக்கட்டில் பறந்து செல்வது, இந்த வட்டிப் பள்ளிவாசலுக்கே ஆகும்.
வட்டிக்கு பணம் எடுத்து பள்ளிவாசல் கட்டிய நிர்வாகிகள், தப்லீக், தவ்ஹீத், ஜமாத்தே இஸ்லாமி என்று எல்லா இயக்க மெளலவிகளையும் ஸ்பொன்சர் பண்ணி லண்டனுக்கு வரவழைப்பார்கள், இவர்களும் ஓசியில் லண்டன் சென்று, ஒரு நாலு பயான் ( இலங்கையில் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன பழைய ரெக்கோர்ட் தான்) பண்ணிவிட்டு, ஸம்மர் ஹொலிடேயை ஓசிக் காசில் ஜாலியாக என்ஜாய் பண்ணிவிட்டு, லண்டனில் யாரோ ஒரு பேமாளி நைட் ஷிப்ட் செய்து உழைத்த காசில் ஷொப்பிங் செய்துவிட்டு, எக்ஸ்ட்ரா கலக்ஸனும் பண்ணிக்கொண்டு ஹப்பியாக திரும்பி வருவார்கள்.
அத்துடன், இலங்கையில் உள்ள ஏழைகள், விதவைகள், அனாதைகளுக்கு உதவி செய்வதற்காக என்று சொல்லி, தனித்தனியாக நிறைய பணம் வசூல் செய்துகொண்டு வருவார்கள். இலங்கைக்கு வந்த பின்னர், இவர்கள் சொன்ன ஏழைகள், விதவைகள், அனாதைகள் எல்லாம் யார் என்று தேடித் பார்த்தால், எல்லாமே குறிப்பிட்ட மெளலவிதான். (அதாவது : மொத்தப் பணத்தையும் இவர்களே சுருட்டி விடுவார்கள்.)
இவர்களில் முக்கியமானவர்கள் ரிஸ்வி முப்தி, யூஸுப் முப்தி, அப்துல் ஹாலிக், ஹசன் பரீத், யஹியா மெளலவி, அகார் முகம்மது, ஹஜ்ஜுல் அக்பர், அப்துல் வதூத் ஜிப்ரி ஆகியோர் ஆவார்கள்.
(அளுத்கமை இனக்கலவரம் இடம்பெற்ற பொழுது ரிஸ்வி முப்தி லண்டனில் தான் இருந்தார்.)
இந்த பள்ளிவாசல் வாங்கப்பட்ட விதமும், வட்டி தொடர்பான விடயங்களும் இந்த Five Star மெளலவிமார்களுக்கு தனிப்பட்ட ரீதியிலும், பொதுவிலும், பல்வேறு வழிகளில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. எனினும், இவர்கள் யாரும் அது குறித்து எவ்வித கருத்துமே சொல்வதில்லை.
வட்டி ஹராம் என்று சொல்லிவிட்டால், லண்டனில் ஸம்மர் ஹொலிடே கிடைக்குமா? சுவர்க்கம் வேண்டாம், லண்டனில் ஸம்மர் ஹொலிடே போதும் என்பதே இந்த பூசாரிப் புரோகிதர்களின் வெளிச்சொல்லப் படாத நிலைப்பாடா?
பள்ளிவாசல் வட்டியில் வாங்கப் பட்டதற்கான வங்கி ஆவணங்கள் கீழே தரப்பட்டுள்ளன. லண்டனில் இருக்கும் இலங்கை முஸ்லிம்களின் நலன், நன்மதிப்பைக் கருத்தில் கொண்டு, வங்கியின் பெயர் விபரங்கள் மட்டும் மறைக்கப்பட்டுள்ளன. தேவை ஏற்பட்டால், அனைத்து விபரங்களும் முழுமையாக வெளியிடப்படும்.
இந்த உண்மைகள், ஆதாரங்கள் சவாலாக முன்வைக்கப்படுகின்றன. குறித்த பள்ளிவாசல் நிர்வாகம் இவற்றை இனிமேலும் பொய் என்று சொல்லமுடியுமா?
வட்டிக்கு கடன் வழங்கிய இங்கிலாந்து வங்கியின் பெயர், முகவரி, இலட்சினை, தொலைபேசி இலக்கம் என்பவை மறைக்கப்பட்டுள்ளன. சொத்தின் பெறுமதி, வட்டி, தவணை போன்ற விடயங்கள் இங்கே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.
குறித்த பள்ளிவாசல் வாங்கப்பட்ட விதம் இஸ்லாமிய அடிப்படைகளுக்கு முரணான, ஹராமான வட்டி முறையாகும் என்பதை தெளிவுபடுத்தி ஐரோப்பிய ஷரியா கவுன்சில் அனுப்பிவைத்த பத்வா