Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

22 February 2014

ශී‍්‍ර ලංකා මුදල් නෝට්ටු මුද්‍රණාලයෙන් මුදල් සොරා ගනී.

ශී‍්‍ර ලංකාවේ වලංගු මුදල් සහ විදේශවල වලංගු මුදල්ද මුද්‍රණය කරන බියගම පිහිටි මුද්‍රණාලයකින් රුපියල් පන්සියයේ මුදල් නෝට්ටු තොගයක් සොරකම් කළ පුද්ගලයෙකු කොළඹ අපරාධ කොට්ඨාසය අද (21) අත්අඩංගුවට ගත්තා. ආරක්ෂිත කැමරා 125 ක් තිබියදී මුද්‍රණාලයේ සේවකයෙකු තනිවම මෙම සොරකම සිදුකර ඇති අතර, මෙය නියම මුදල් නෝට්ටු මුද්‍රණයේදී ශී‍්‍ර ලංකාවේදී සිදුකළ පළමු සොරකම ලෙසයි සැලකෙන්නේ.

මෙම මුද්‍රණාලයේ පොදු රාජ්‍ය මණ්ඩලීය රාජ්‍ය නායක සමුළුව අනුස්මරණය සඳහා රුපියල් පන්සියේ නෝට්ටු මිලියන 05 ක් සහ සාමාන්‍ය පන්සීයේ නෝට්ටු මිලියන 45 ක් මුද්‍රණය කරන අවස්ථාවේදී අදාළ සොරකම සිදුව තිබෙනවා. එංගලන්තයෙන් ගෙන්වන විශේෂ කඩදාසී පත‍්‍රවල මෙවැනි මුදල් නෝට්ටු 45 ක් එකවර මුද්‍රණය කෙරෙනවා. මාස ගණනාවක සිට මෙම සොරකම සිදුව ඇත්තේ මුද්‍රණ කි‍්‍රයාවලියේ අවසාන අදියරේදීයි. එහිදී මුද්‍රණය නොවී ඇත්තේ මුදල් නෝට්ටුවේ අංකය පමණයි.

මෙවැනි පොදු රාජ්‍ය මණ්ඩල අනුස්මරණ පන්සීයේ නෝට්ටු මුද්‍රණ කඩදාසි 24 ක් සහ සාමාන්‍ය පන්සීයේ නෝට්ටු මුද්‍රණ කඩදාසි 39 ක් අවස්ථා දෙකකදී අතුරුදන් වී ඇති බව අදාළ මුද්‍රණ සමාගම අනාවරණ කර ගත්තා. එහෙත් දැන් හෙළි වී ඇත්තේ මාස ගණනාවක සිට හසු නොවී මෙම සොරකම විටින් විට සිදුකර ඇති බවයි. සැකකරු සිදුකර ඇත්තේ එම පත‍්‍ර ගෙන ගොස් විශේෂිත මුද්‍රා දෙකක් සකසා අදාළ මුදල් නෝට්ටුවල අංකය මුද්‍රණය කර බෙදාහැරීමයි. මෙම අංක මුද්‍රණය කරන සීල් දෙක නිපදවා ගෙන ඇත්තේ කිරිබත්ගොඩ ප‍්‍රදේශයේ ස්ථානයකින්. එක් මුද්‍රාවක් රතු පාට තීන්ත සහ අනෙක් මුද්‍රාව කළු පාට තීන්ත යොදා ප‍්‍රයෝජනයට ගෙන තිබෙනවා.

සැකකරු අත්අඩංගුවට ගෙන ඔහුගේ නිවස පරීක්ෂා කිරීමේදී රුපියල් දෙලක්ෂ 62,500 ක් වටිනා රුපියල් පන්සීයේ නෝට්ටු සොයා ගත්තා. පොලිස් මාධ්‍ය ප‍්‍රකාශක ජ්‍යෙෂ්ඨ පොලිස් අධිකාරී අජිත් රෝහණ පවසන්නේ මෙම සැකකරු මේ වනවිට රුපියල් ලක්ෂ 09 කට ආසන්න මුදල් තොගයක් සංසරණයට එක්කර ඇති බවයි.

මුද්‍රණ සමාගමේ ආරක්ෂක අංශ ප‍්‍රධානියා, ජ්‍යෙෂ්ඨ නියෝජ්‍ය පොලිස්පති අනුර සේනානායක මගින් කොළඹ අපරාධ කොට්ඨාසයට පැමිණිල්ල ඉදිරිපත් කිරීමත් සමගයි සැකකරු සොයා පරීක්ෂණ ආරම්භ වී ඇත්තේ. එම කොට්ඨාසයේ වැඩ බලන අධ්‍යක්ෂ සහකාර පොලිස් අධිකාරී නුවන් වැදිසිංහ, එහි ස්ථානාධිපති නෙවිල් සිල්වා, පොලිස් පරීක්ෂකවරුන් වන එරංග ප‍්‍රනාන්දු සහ රජීව හෙට්ටිආරච්චි මෙහෙයුමට සම්බන්ධ වී තිබෙනවා. පොලිස් සැරයන් රෝහණ, කොස්තාපල් පුෂ්පකුමාර යන අයද මෙහෙයුමට එක්වුණා.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=yVgnQ-BpXow

பாலர் கல்வியின் அவசியம் உணரப்பட வேண்டும்!

இன்று எங்கு பார்த்தாலும் மாணவர் முன்பள்ளி நிலையங்களுக்கான விளம்பரங்கள் கண்ணைப் பறிக்கின்ற அளவுக்கு பெரிய பெரிய விளம்பரப் பலகைகளாக வீதிகள் தோறும் தொங்கவிடப்பட்டு காட்சிப்படுத்தப்படுகின்றன. இக்காலங்களில் குறிப்பாக வருட இறுதியிலும் ஆரம்பத்திலும் காண்கின்றோம்.
பொதுவாக இன்று கிராமங்களில் கூட ஆரம்பிக்கப்படுகின்ற முன்பள்ளிக் கூடத்திலும் ஆங்கிலத்தில் வகுப்புக்கள் நடாத்தப்படும் என்கிற பிரச்சாரம் பலமாகவே இருக்கும். பெற்றோரும் ஏதோ பிள்ளை சிறு பராயத்தில் சில ஆங்கிலச் சொற்களை பயில்வது நல்லதுதானே என்கிற எண்ணத்தில் பணத்தை வாரியிறைக்கின்றனர். முன்பள்ளிகளில் போட்டி போட்டுக்கொண்டு சேர்க்கின்றனர்.
ஆனால் அங்கு யார் யாரால் பிள்ளை பராமரிக்கப்படுகிறது என்றெல்லாம் எதுவுமே பார்க்கமாட்டார்கள். பாடத்திட்டத்தை தாண்டி பயிற்சிக் கொப்பிகளும், புத்தகங்களும் வாங்கிக்கொடுத்து முதுகில் பாரிய சுமையுடன் அனுப்பும் பெற்றோர்கள் கூட இக்கல்வியின் பயன்பாடுகள் பற்றிய அறிவின்றிச் செயற்படுவதுதான் பரிதாபத்திற்குரியதாகும்.
இன்று முன்பள்ளி எனப்படுகின்ற பாலர் கல்வியின் அவசியம் குறித்து பல்வேறு மட்டங்களில் பேசப்பட்டாலும் அது முறைசார்ந்த அமைப்புக்கள் ஊடாக இன்னும் வந்து சேரவில்லை. பாடசாலைக்கு தரம் ஒன்றில் சேரும் பிள்ளையை கையாளுவதற்கான முன்னோடித் திட்டமாகவே இம் முன்பயிற்சி அமைகிறது. ‘இங்குள்ளவர்கள் இவ்விளம்பராயத்துப் பிள்ளைகளை கையாளுவதற்குரிய பயிற்சிகளோ, பாடத் திட்டங்களோ இன்றியும் காணப்படுகின்றனர். இது பிள்ளையின் ஆக்கவூக்கத்திறனை மழுங்கடிக்கச் செய்கின்ற ஒரு விடயமாகவும் கொள்ளப்படுகிறது.
ஒரு காலகட்டத்தில் இலங்கையின் நகரங்களில் மட்டுமே இயங்கிய இப்பாலர் பாடசாலைகள் இன்று அனைத்து இடங்களிலும் காணப்படுகின்றன. இது கல்வியின் தேவையும், அவசியமும் உணரப்பட்டுள்ளமையைத் தெளிவாக்கியுள்ளது. அதனால்தானோ என்னவோ முன்பள்ளி நிலையங்களின் அதிகரிப்பும் காணப்படுகிறது.
போதிய வளப் பற்றாக்குறையுடன் இவை நடாத்தப்படுவதும் பெரும் குறைபாடாகக் கொள்ளலாம். இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்து பெளதீக வளத்தைக் கொண்டு செயற்பாடுகளுடன் கூடிய கற்றலையே இந்நிலையங்கள் ஆற்றவேண்டும். அதனைவிடுத்து வளப்பற்றாக்குறையுடன் அமைந்த கற்றலானது மாணவர்களின் எதிர்காலத்தையே சூனியமாக்கிவிடும். இதனால் நேரடியான கண்காணிப்பும், பார்வையும் அவசியமாகும்.
கடந்தகாலங்களில் பாலர் பாடசாலைக்கான திட்டங்கள் அரசினால் தயாரிக்கப்பட்டு, அதன் முக்கியத்துவமும் உணர்த்தப்பட்டிருந்தன. கடந்த 1953 ஆம் ஆண்டில் பாலர் பாடசாலைக்கான, பாடத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இவை “வேலைக்குகந்த மகிழ்ச்சி நிறைந்த இடங்களாக” அமையவேண்டும் என இத்திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும் இத்திட்டத்தின் நோக்கம் சரியான முறையில் அமையப் பெறாததால் உரிய இலக்கை அடையவில்லை. தொடர்ந்து 1961 ஆண்டில் தேசிய கல்வி ஆணைக்குழு பேராசிரியர் ஜே. ஈ. ஜயசூரிய தலைமையில் முன்பள்ளிகளின் அவசியம் சம்பந்தமான கருத்துக்களை அன்று தெரிவித்திருந்தது.
4 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முன்பள்ளி நிலையங்கள் வீட்டுச் சூழலில் உருவாக்கப்படுவதுடன் பிள்ளைகளின் உடல், உள விருத்தியுடன், முதிய ஆசிரியர் ஒருவரின் கண்காணிப்புடனும், உள்ளூராட்சி மற்றும் கல்வித் திணைக்களத்தின் அனுசரணைகளுடனும் இருக்க வேண்டும் எனப்பட்டது. பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தான் இங்கு கற்பிக்க வேண்டும் எனப் பல சிபாரிசுகள் முன்வைக்கப்பட்டன. இருப்பினும் அத்திட்டம் அரசின் போதிய அனுசரணையின்றி சோபையிழந்து போயிற்று.
தொடர்ந்து 1972 ஆண்டில் அரசினால் வெளியிடப்பட்டிருந்த புதிய கல்விச் சீர்திருத்தத்தில் முன்பள்ளிக் கல்வியின் அவசியம் பற்றியும் கூறப்பட்டிருந்தது. இருப்பினும் அதில் அரசின் பொறுப்புக்கள் செல்வாக்குச் செலுத்தவில்லை. பின்னர் கொண்டுவரப்பட்ட போகொட பிரேமரத்னா தலைமையில் சீர் செய்யப்பட்ட (1979) தேசிய கல்வி ஆணைக்குழுவின் சிபாரிசுகளும் முன்பள்ளி சம்பந்தமான முக்கியத்துவத்தை வலியுறுத்தி இருந்தன.
அதேவேளை கடந்த காலத்தில் (1997) கொண்டுவரப்பட்ட பொதுக் கல்விச் சீர்திருத்தங்களில் முன்பள்ளி பற்றிய உள்ளடக்கம் மிகவும் பலமானதாக அமையப் பெற்றிருந்தமை விசேட அம்சமாகும். அதில் “3 - 5 வயதுக்கிடைப்பட்ட பிள்ளையின் முழு வளர்ச்சி முக்கியமானது. அதைக் கடந்த காலத்தைவிட கல்வியமைப்பில் கூடியளவு கவனம் ஈர்க்கும் விடயமாக பார்க்கவேண்டியுள்ளது.
தகுந்த வழிகாட்டலும், சிறந்த மேற்பார்வையும், அரசின் கட்டுப்பாடும் அமைகின்றபோது கூடிய பலனைத் தரும்” என்றும் கூறப்பட்டிருந்தது. அத்துடன் நாட்டின் பல பகுதிகளிலும் முன்பள்ளி நிலையங்கள் நடத்தப்பட்டாலும் அவை சிறந்த தரத்தில் காணப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி ஜனாதிபதி செயலணிக்குழு பின்வரும் சிபாரிசுகளையும் அப்போது செய்திருந்தது. அதாவது;
1. 3-5 வயதிற்கிடைப்பட்ட பிள்ளைகள் கூடியளவில் பங்குபற்றுவதற்கேற்ற வகையில் அதிக எண்ணிக்கையில் முன்பள்ளிகளை உருவாக்கி அவற்றிற்கு வேண்டிய வசதிகளை ஏற்படுத்துதல்,

2. தகுந்த அதிகாரமுடையவர்களால் முன்பள்ளி ஆசிரியரின் தரம், பள்ளிவசதிகள், மேற்பார்வை போன்ற விடயங்களில் சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் முன்பள்ளிகளை ஒழுங்கமைத்தல்.
3. பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு, மற்றும் பொருத்தமான முகவர் நிலையங்களைச் சேர்ந்த இக் குறிப்பிடப்பட்ட துறையில் திறமை வாய்ந்தோரால் இம் முன்பள்ளிக்கான அடிப்படைப் பாடத்திட்டத்தை அமைத்தல், மாகாண அமைச்சுகளுக்கு இப்பாடத்திட்டத்தை கையளிக்கும் முன் தயாரிக்கப்பட்ட வழிகாட்டியை ஆதாரமாகக் கொண்டு முன்னோடிச் சோதனை நடாத்துதல் வேண்டும். எவ்வாறாயினும் இவ்வாறு தயாரிக்கப்பட்ட பாடத்திட்டம் ஓர் வழிகாட்டியாக மாத்திரம் அமையுமேயொழிய ஆசிரியர்களின் சுய ஆக்கங்களை மழுங்கடிப்பதாக அமையமாட்டாது.
4. கல்வி உயர்கல்வி அமைச்சு இம் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதோடு அவர்களுக்கு மாதிரி கற்பித்தலை விருத்தி செய்து கற்றலுக்கான பாடநூல்களையும் வழங்கவுள்ளது என்றும்,
5. ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் பிள்ளை வளர்ச்சிக்கான திணைக்களமும், பிள்ளைக் கல்வி நிலையம் ஒன்றும் நிறுவப்படவுள்ளது. இந்நிலையமானது பிள்ளை வளர்ச்சி பற்றிய அறிவையும், ஆய்வையும் நடத்தி ஓர் தகவல்களைப் பெறும் வங்கியை உருவாக்குவதோடு நடைமுறைப்படுத்தப்படும் முன்பள்ளிக்கான நிகழ்ச்சித் திட்டங்களை மதிப்பீடு செய்யும் எனவும் கூறப்பட்டுள்ளதையும் காணலாம்.
இவற்றின் அடிப்படையில் முன்பள்ளி நிலையங்கள் அமையப் பெற்று வந்தாலும் இங்கே அடிப்படையான அம்சங்கள் இன்றியும், முன்பள்ளிகளை தனிநபர்கள் தான் விரும்பியபடி நடாத்துவதால் பிள்ளையின் ஆரம்பப்படியிலேயே பிழைகள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் தோன்றுவதாக சில பெற்றோர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
பாடசாலைக் கல்விக்கான அத்திவாரமாக அமைவது இந்த முன்பள்ளிக் கல்வியாகும். பிள்ளையின் முழுமையான அபிவிருத்தியை முன்பள்ளிகளில் சமநிலை கொண்ட தரம் பேணும் தினச் செயற்பாடுகள் ஊடாக ஓழுங்கமைத்து நடைமுறைப்படுத்துதல் அவசியமாகும். கல்வி உளவியலாளர்களது கருத்தின்படி “மனித மூளையின் முக்கியமான வளர்ச்சிப் பருவமானது குழந்தை கருவிலிருந்து முதல் 5 வருடங்களில் தான் அமைந்துள்ளது.
குழந்தையின் உடல், உள சமூக அபிவிருத்தி, பெற்றோர் தமது பிள்ளையின் மீது காட்டுகின்ற கரிசனையில் தங்கியுள்ளது. அத்துடன் இவை பிள்ளையில் விருத்தியடைவதானது பெற்றோர் தகுந்த முறையில் கவனம் செலுத்தி பராமரிப்பதிலேயே தங்கியுள்ளது என கல்வி உளவியலாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இதன் அடிப்படையில் இப்பருவப் பிள்ளைகள் இந்நிலையங்களில் கல்வி பயில்கையில் இவர்களை கையாள்பவர்கள் “ஆரம்பப் பிள்ளைப் பருவ அபிவிருத்தி ஆசிரியர்கள்” என அழைக்கப்படுகின்றனர். இவ்வாறான ஆசிரியர்கள் இப் பிள்ளைகள் மீது காட்டுகின்ற செயற்பாடுகள் அமைதியானதும் உறுதியானதும், உயிர்த் துடிப்புள்ளதுமான விளையாட்டு அனுபவங்களைக் கொண்டு அமைதல் வேண்டும்.
பிள்ளையின் தசைநார், நுண்ணியக்க, பேரியக்க, அபிவிருத்திக்கு வலுவூட்டுவதற்கு உந்து சக்தியாக அமைதல் வேண்டும். அப்போதுதான் ஆரம்பக் கல்வியை பெறக் கூடியதான மனோநிலை, மனோ தைரியம், அப்பிள்ளையின் உளமதில் பதிய ஆரம்பிக்கும். ஆடல், பாடல், கதைகூறல், அறிந்து கொள்ளல், வரைதல், ஒட்டுதல், காட்சிப்படுத்தல் போன்ற இன்னோரன்ன செயற்பாடுகளினுடாக பிள்ளையினது விருத்தித் திறனை மேம்பாடடையச் செய்கின்றதாய் அமைதல் வேண்டும். இச் செயற்பாடுகள் உரிய நேரத்தை வரையறுத்து மாணவர்களுக்கு அலுப்பூட்டாத வண்ணம் அமைத்துக்கொள்ளல் அவசியமாகும்.
எனவே, இவ்வாறு பல்வேறு கோணத்தில் முக்கியத்துவம் பெற்ற ஆரம்பப் பருவப் பிள்ளைகளுக்கான இக் கல்வியானது முறையாக அமைந்த புகுநிலைக் கல்வியாக அமைதல் வேண்டும். இதற்கு கூடியளவு முக்கியத்துவம் கொடுத்து தங்களது பிள்ளைகளின் எதிர்காலம் வியாபித்து அமைவதற்கு ஏற்ற கல்விச் சூழலை வழங்கும் முன்பள்ளி நிலையங்களை பெற்றோர் நாடுதல் அவசியம் என்பதை அறிந்து கொள்வதுடன், இளமையிற் கல்வி சிலையில் எழுத்து என்பதற்கொப்ப தராதரமற்ற முன்பள்ளி நிலையங்களும் பயிற்சிகள் அற்ற நிலையில் உள்ள ஆசிரியர்களும் இம்மாணவர்களை கையாள்கின்ற போது பிள்ளையின் கல்விப்போக்கு வேறுவிதமாக அமைவதற்கு ஏதுவாக அமைந்துவிடுகிறது.
இந்த நிலையை இல்லாமல் செய்வதற்கும், பிள்ளைகள் ஒழுங்கு முறையில் செயற்படுவதற்கும் முக்கியத்துவம் மிக்கதான முன்பள்ளி பாடசாலைகள் சிறந்து விளங்குவதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளதா? என்பதையும் உரியவர்களும், பிள்ளைகளைப் பராமரிக்கின்ற அமைப்புக்களும் உரிய கவனமெடுத்து இக்காலங்களில் தொங்கவிடப்படுகின்ற முன்பள்ளிக்கான விளம்பரப் பதாகைகளில் மயங்கிடாது உரியவாறான வசதிகளும், வாய்ப்புக்களும் உள்ள இடங்களை தெரிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அமையப் பெறாத நிலையங்களை உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் இதனுடன் தொடர்புள்ள அரச அமைப்புக்கள் கண்காணித்துக் கொள்வதுடன், அறவிடும் பணம், சட்ட ரீதியான பதிவுகள், நிலையத்தின் சுற்றுப்புறச் சூழல் போன்ற பல விடயங்களில் கவனத்தை செலுத்துதலும் அவசியமாகும்.

21 February 2014

எங்கள் புதிய அழகான beta வடிவிலான வலைப்பகுதி இதோ வெளிவந்து விட்டது...


Please check it out our new website, which we created on sub-domain. Insha Allah We will have a own domain soon. 

நல்ல பல இஸ்லாமிய தகவல்களை பெற கீழ் உள்ள பக்கத்திற்கு சென்று லைக் பண்ணுங்கள் ....

உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ள்ளுங்கள் 


18 February 2014

සිංහල රාවයේ හිමිනම රක්ෂිත බන්ධනාගාරයට.

ගව ඝාතනයට විරෝධය පළ කරමින් සිංහල රාවය සංවිධානය කොළඹ - කොටුව දුම්රිපළ ඉදිරිපිට ඊයේ (18) පස්වරුවේ ආරම්භ කළ මාරාන්තික උපවාසය මේ වන විටත් ක‍්‍රියාත්මකයි. පසුගිය 9 වැනිදා ගව ඝාතනයට විරෝධය පළ කරමින් දළදා මාළිගාව අභියසින් සිංහල රාවය සංවිධානය ආරම්භ කළ පා ගමන කොළඹ කොටුවට ළඟා වුණේ 16 වැනිදායි. එදින සිට ඔවුන් කොටුව දුම්රියපළ ඉදිරිපිට උපවාසයක් ක‍්‍රියාත්මක කළ අතර එම උපවාසයයි ඊයේ පස්වරුවේ මාරාන්තික උපවාසයක් බවට පත් කළේ. ඒ අනුව සිංහල රාවය සංවිධානයේ හිමිවරුන් තුන් නමක් එම මාරාන්තික උපවාසයට එක්ව සිටිනවා. උන්වහන්සේලා සඳහන් කරන්නේ ගව ඝාතනය වැළැක්වීම සඳහා පනතක් ගෙන එන බවට රජයෙන් ලිඛිත පොරොන්දුවක් ලබාදුනහොත් උපවාසය අත්හිටුවන බවයි. 

කෙසේ වෙතත් ඊයේ (18) උපවාසය ක‍්‍රියාත්මක වන අතරතුර උණුසුම් තත්ත්වයක් මතු වුණා. ඒ,  එම සංවිධානයේ ඉල්ලීම් පිළිබඳව සළකා බලන බවට ජනාධිපති කාර්යාලයෙන් ලැබුණු ලිපියක්  උපවාසයේ නිරත හිමිවරුන් ප‍්‍රතික්ෂේප කිරීමත් සමගයි. 

එම අවස්ථාවේදී ස්වාමීන් වහන්සේ නමක් උපවාසය පැවැත්වෙන ස්ථානයේ තිබූ පෙට‍්‍රල් කෑන් එකක් අතට ගැනීමට උත්සාහ කර ඇති අතර පොලීසිය එය වලක්වා එය තම භාරයට ගෙන තිබෙනවා. එහිදී සිංහල රාවය සංවිධානයේ හිමි නමක් පොලීසිය අත්අඩංගුවට ගත්තා. පොලිස් මාධ්‍ය ප‍්‍රකාශක ජ්‍යෙෂ්ඨ පොලිස් අධිකාරී අජිත් රෝහණ කියා සිටියේ සියදිවි හානි කරගැනීමට උත්සාහ කිරීම හේතුවෙන් ඉන් වළක්වා ගැනීම සඳහා උන්වහන්සේ මෙලෙස පොලිස් භාරයට ගත් බවයි. අධිකරණයට ඉදිරිපත් කිරීමෙන් අනතුරුව එම හිමි නම මේ මස 21 වන දා දක්වා රක්ෂිත බන්ධනාගාර ගත කෙරුණු බව පොලිස් මාධ්‍ය ප‍්‍රකාශකවරයා සඳහන් කළා.

Update : Wednesday, 19 February 2014 - 7:46
-------------------------------------------
දිවි නසාගැනීමට තැත් කළ සිංහල රාවයේ හිමි නමක් අත්අඩංගුවට.

ගව ඝාතනයට විරෝධය පළ කරමින් සිංහල රාවය සංවිධානය කොළඹ - කොටුව දුම්රිපළ ඉදිරිපිට ආරම්භ කර ඇති උපවාසයේදී අද පස්වරුවේ උණුසුම් තත්ත්වයක් මතුවුණා. ඒ, එම සංවිධානයේ ඉල්ලීම් පිළිබඳව සළකා බලන බවට ජනාධිපති කාර්යාලයෙන් ලැබුණු ලිපියක්  උපවාසයේ නිරත හිමිවරුන් ප‍්‍රතික්ෂේප කිරීමත් සමගයි. අනතුරුව සිංහල රාවය සංවිධානයේ ස්වාමීන් වහන්සේලා තුන් නමක් මාරාන්තික උපවාසයක් ආරම්භ කළා.

පසුගිය 9 වැනිදා ගව ඝාතනයට විරෝධය පළ කරමින් දළදා මාළිගාව අභියසින් සිංහල රාවය සංවිධානය ආරම්භ කළ පා ගමන කොළඹ කොටුවට ළඟා වුණේ පෙරේදා දිනයේදියි. එදින සිට ඔවුන් කොටුව දුම්රියපළ ඉදිරිපිට උපවාසයක් ක‍්‍රියාත්මක කරනවා. ගව ඝාතනය වැළැක්වීම සඳහා පනතක් ගෙන එන බවට රජයෙන් ලිඛිත පොරොන්දුවක් ලබාදුනහොත් උපවාසය අත්හිටුවන බව සිංහල රාවය සංවිධානය අද (18) දහවල් හිරු ප‍්‍රවෘත්ති අංශයට ප‍්‍රකාශ කළා.

ඒ අනුව සිංහල රාවය සංවිධානයේ ඉල්ලීම් පිළිබඳව සළකා බලන බව පවසමින් ජනාධිපති අතිරේක ලේකම්වරයෙකුගේ අත්සනින් යුත් ලිපියක් අද පස්වරුවේ පොලීසිය විසින් රැගෙන විත් උපවාසයේ නිරත හිමිවරුන්ට භාරදී තිබෙනවා. එම අවස්ථාවේදී සිංහල රාවය සංවිධානයේ සභාපති පූජ්‍ය අක්මීමන දයාරතන හිමියන් එම ලිපිය ප‍්‍රතික්ෂේප කළා.

එම අවස්ථාවේදී ස්වාමීන් වහන්සේ නමක් උපවාසය පැවැත්වෙන ස්ථානයේ තිබූ පෙට‍්‍රල් කෑන් එකක් අතට ගැනීමට උත්සාහ කර ඇති අතර පොලීසිය එය වලක්වා එය තම භාරයට ගෙන තිබෙනවා.

අදාළ තත්ත්වයත් සමග කොළඹ කොටුව දුම්රියපළ ඉදිරිපිට  ඕල්කට් මාවතේ ගාලූ මුවදොර දෙසට වාහන ගමන් කරන මංතීරුව වසා දැමීමටද පොලීසිය පියවර ගත්තා. අනතුරුව මාධ්‍ය වෙත අදහස් දක්වමින් සිංහල රාවය සංවිධානයේ සභාපති පූජ්‍ය අක්මීමන දයාරතන හිමියන් කියා සිටියේ තම සංවිධානයේ සාමාජික ස්වාමීන් වහන්සේ නමක් පොලීසිය විසින් අත්අඩංගුවට ගෙන ඇති බවයි.

මේ පිළිබඳ හිරු ප‍්‍රවෘත්ති අංශය පොලිස් මාධ්‍ය ප‍්‍රකාශක ජ්‍යෙෂ්ඨ පොලිස් අධිකාරී අජිත් රෝහණගෙන් විමසීමක් කළා. ඔහු කියා සිටියේ සියදිවි නසාගැනීමට උත්සාහ කළ නිසා එම හිමි නම අත්අඩංගුවට ගත් බවයි.

මේ අතර ගව ඝාතනය නතර කරන ලෙස ඉල්ලා සිංහල රාවය සංවිධානයේ ස්වාමීන් වහන්සේලා තුන් නමක් මේ වනවිට කොළඹ - කොටුව දුම්රියපළ ඉදිරිපිට මාරාන්තික උපවාසයක් ආරම්භ කර තිබෙනවා. පූජ්‍ය වේරගොඩ සෝභිත,  පොළොන්නරුවේ සීලවිමල, මැඩිල්ලේ පඤ්ඤාලෝක යන ස්වාමීන් වහන්සේලා ඊට එක්ව සිටින බවයි සිංහල රාවය සංවිධානය ප‍්‍රකාශ කළේ.

Update : Tuesday, 18 February 2014 - 07:25
-------------------------------------------------
සිංහල රාවය උපවාසය නිසා කොටුව  ඕල්කට් මාවතේ කොටසක් වැසේ.

සිංහල රාවය සංවිධානයේ උපවාසය හේතුවෙන් කොළඹ කොටුව දුම්රියපළ ඉදිරිපිට  ඕල්කට් මාවතේ ගාලූ මුවදොර දෙසට වාහන ගමන් කරන මංතීරුව මේ වනවිට වසාදමා තිබෙනවා. ගව ඝාතනයට විරෝධය පළ කරමින් සිංහල රාවය සංවිධානය කොළඹ කොටුව දුම්රියපොල ඉදිරිපිට ආරම්භ කළ උපවාසය අද කි‍්‍රයාත්මක වන්නේ තුන්වන දිනටයි.  එහිදී එම සංවිධානය ගව ඝාතනය වැළැක්වීම සඳහා පනතක් ගෙන එන බවට ලිඛිත පොරොන්දුවක් රජයෙන් ඉල්ලා සිටියා. මීට ටික වේලාවකට පෙර ජනාධිපති ලේකම් කාර්යාලයෙන් ලිපියක් රැුගෙන නිලධාරියෙකු එම ස්ථානයට පැමිණ ඇතත් එය පිළිගත නොහැකි බව සිංහල රාවය සංවිධානයේ උපවාසයේ නිරත සාමාජිකයන් ප‍්‍රකාශ කළ බව  එම ස්ථානයේ සිටින හිරු වාර්තාකරු සඳහන් කළා. එම අවස්ථාවේදී ස්වාමීන් වහන්සේ නමක් උපවාසය පැවැත්වෙන ස්ථානයේ තිබූ පෙට‍්‍රල් කෑන් එකක් අතට ගැනීමට උත්සාහ කර ඇති අතර පොලීසිය එය වලක්වා එය තම භාරයට ගෙන තිබෙනවා. 

 Tuesday, 18 February 2014 - 05:00
----------------------------------------------------------
සිංහල රාවය ආණ්ඩුවෙන් ලිඛිත පොරොන්දුවක් ඉල්ලයි.

මෙරට ගව ඝාතනය වැළැක්වීම සඳහා පනතක් ගෙන එන බවට ලිඛිත පොරොන්දුවක් ලබා දිය යුතු බව සිංහල රාවය සංවිධානය පවසනවා. එහි සභාපති පූජ්‍ය අක්මීමන දයාරතන හිමියන් හිරු ප‍්‍රවෘත්ති අංශයට කියා සිටියේ ඒ සඳහා බලධාරීන්ට අද (18) පස්වරුව දක්වා කාලය ලබාදී ඇති බවයි. එසේ නොවුණහොත් තම සංවිධානයේ කි‍්‍රයාමාර්ග දැඩි කරන බව ද උන්වහන්සේ අප කළ විමසීමකදී සදහන් කළා.

ගව ඝාතනයට විරෝධය පළ කරමින් සිංහල රාවය සංවිධානය කොළඹ කොටුව දුම්රියපොල ඉදිරිපිට ආරම්භ කළ උපවාසය අද කි‍්‍රයාත්මක වන්නේ තුන්වන දිනටයි. පසුගිය 9 වැනිදා මහනුවර දළදා මාලිගාව අභියසින් ආරම්භ කළ පාගමන පෙරේදා දිනයේ කොළඹ කොටුව ප‍්‍රදේශයට ළඟා වුණා.

ගව ඝාතනය තහනම් කළ යුතු බවට සිංහල රාවය සංවිධානය සිදුකරන ඉල්ලීම සම්බන්ධයෙන් අප පුරාවිද්‍යා චක‍්‍රවර්තී, පාර්ලිමේන්තු මන්ත‍්‍රී පූජ්‍ය එල්ලාවල මේධානන්ද හිමියන්ගෙන් විමසීමක් කළා. උන්වහන්සේ කියා සිටියේ මෙම සංවිධානයේ ඉල්ලීම ප‍්‍රායෝගික එකක් නොවන බවයි.  

Update : Tuesday, 18 February 2014 - 12:37
---------------------------------------
සිය දිවි නසා ගන්නා බවට සිංහල රාවයෙන් ලිපියක්.  

ගව ඝාතනයට විරෝධය පළ කරමින් සිංහල රාවය සංවිධානය කොළඹ කොටුව දුම්රියපොල ඉදිරිපිට ආරම්භ කළ උපවාසය තවදුරටත් කි‍්‍රයාත්මකයි. පසුගිය 9 වැනිදා මහනුවර දළදා මාලිගාව අභියසින් ආරම්භ කළ පාගමන පෙරේදා (16) දිනයේ කොළඹ කොටුව ප‍්‍රදේශයට ළඟා වුණා. පසුව පෙරේදා සිට සිංහල රාවයේ භික්ෂූන් වහන්සේලා පිරිසක් දුම්රියපොළ ඉදිරිපිට උපවාසයක නිරත වනවා. ඊයේ පස්වරුවේ උන්වහන්සේලා දුම්රියපොළ ඉදිරිපිට මාර්ගයට පැමිණ විරෝධතාවයක ද නිරත වුණා. ඒ, බලධාරීන් තම කි‍්‍රයාමාර්ගය සම්බන්ධයෙන් අවධානය යොමු නොකිරීමට විරෝධය පළ කරමින්. එහිදී ජනාධිපති මහින්ද රාජපක්ෂ මහතා වෙත  භාර දෙන ලෙස එම ස්ථානයේ සිටි ජ්‍යෙෂ්ඨ පොලිස් නිලධාරියෙකු වෙත ලිපියක් ලබා දුන්නා. ඒ, තමන්ගේ ඉල්ලීම් අද (18) දිනය තුළ ඉටු නොවුණහොත් තවත් භික්ෂුවක් සිය දිවි නසා ගැනීමට සූදානම් බව දන්වමින්.


http://www.hirunews.lk/sinhala/77568

BUSINESS NEWS

செட்டியார் தெரு தங்கம்
கொழும்பு செட்டியார் தெருவில் இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, 

24 கரட் தங்கம், 46 ஆயிரம் 200 விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் நகைத்தங்கம் கூலியுடன் 47 ஆயிரத்து 600 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன் படி ஒரு கிராம் தங்கத்தின் விலை 5 ஆயிரத்து 950 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது..

வெள்ளி ஒரு தோளாவின் விலை 1400 ரூபாவாக விற்பனை செய்யப்படும் அதேவேளை ஒரு கிராம் வெள்ளியின் விலை 120 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.


மரக்கறி விலை நிலவரம்
புறக்கோட்டை நான்காம் குருக்குத் தெரு மொத்த விற்பனை விலைப் பட்டியலின் இன்றைய நிலவரம்.......

•    நுவரெலியா உருளைக்கிழங்கு கிலோ ஒன்று     75 ரூபாமுதல் 90
ரூபாவுக்கு விற்பனைசெய்யப்படுகிறது.
•    மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு கிலோ ஒன்று 55 ரூபாமுதல் 62
ரூபாவுக்கு விற்பனைசெய்யப்படுகிறது.
•    பாக்கிஸ்தான் உருளைக்கிழங்கு கிலோ ஒன்று     55 ரூபாமுதல் 60
ரூபாவுக்கு விற்பனைசெய்யப்படுகிறது.
•    இந்திய பெரிய வெங்காயம் கிலோ ஒன்று        55 ரூபாமுதல் 60 ரூபாவுக்கும்
•    இந்திய சிறிய வெங்காயம் கிலோ ஒன்று        65 ரூபாமுதல் 75 ரூபாவரையும்
•    வெள்ளை பூடு கிலோ ஒன்று                 140 ரூபாமுதல் 150 ரூபாவாக இன்றைய மொத்த சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.


மத்திய வங்கி நாணய மாற்றுவிகிதங்கள்
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 129 ரூபா 37 சதம் விற்பனை பெறுமதி 132 ரூபா 25 சதம்

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215 ரூபா 62 சதம் விற்பனை பெறுமதி 221 ரூபா 79 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 176 ரூபா 27 சதம் விற்பனை பெறுமதி 182 ரூபா  3 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 143 ரூபா 99 சதம். விற்பனை பெறுமதி 148 ரூபா 28 சதம்

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 117 ரூபா 47 சதம் விற்பனை பெறுமதி 121 ரூபா 45சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 116 ரூபா 38 சதம். விற்பனை பெறுமதி 120 ரூபா 70 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 102 ரூபா 8 சதம். விற்பனை பெறுமதி 105 ரூபா 42சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 26 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 30 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 11 சதம்.

பஹ்ரேன் தினார் 346 ரூபா 98, ஜோர்தான் தினார் 184 ரூபா 61 சதம், குவைட் தினார் 464 ரூபா 8 சதம்,  கட்டார் ரியால் 35 ரூபா 92 சதம், சவுதி அரேபிய ரியால் 34 ரூபா 88 சதம்.

ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 35 ரூபா 61 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

දිවි නසාගත් කුරුණෑගල සිසුවියගේ පාසලේ විදුහල්පති අත්අඩංගුවට.

කුරුණෑගල - සර් ජෝන් කොතලාවල මහා විද්‍යාලයේ විදුහල්පති සමන් ඉන්ද්‍රරත්න ජාතික ළමාරක්ෂක අධිකාරියේ පොලිස් ඒකකය විසින් ඊයේ (18) පස්වරුවේ අත්අඩංගුවට ගත්තා. එම අධිකාරියේ සභාපතිනී අනෝමා දිසානායක කියා සිටියේ පසුගියදා ෆේස් බුක් සමාජ වෙබ් අඩවියේ පළවූ ඡායාරූපයක් සම්බන්ධයෙන් විදුහල්පතිවරයා කළ ප‍්‍රශ්න කිරීමක් හේතුවෙන් සිසුවියක සිය දිවි හානි කර ගත් සිද්ධියට අදාළව ඔහු අත්අඩංගුවට ගත් බවයි. ඒ සඳහා ළමාරක්ෂක අධිකාරියේ විශේෂ පොලිස් කණ්ඩායමක් කුරුණෑගලට ගොස් තිබුණා.

කුරුණෑගල - තෝරයාය ප‍්‍රදේශයේ පදිංචි වෙනුෂා නිමන්දි නැමැති 11 වන ශ්‍රේණියේ ඉගෙනුම ලැබූ මෙම ශිෂ්‍යාව ගෙළ වැළලාගෙන සිය දිවි නසා ගත්තේ පසුගිය 5 වනදායි. ෆේස්බුක් සමාජ ජාල වෙබ් අඩවියේ ඡායාරූප කිහිපයක් පළවීමෙන් පසු ඊට අදාළව විදුහල්පතිවරයා විසින් තමන්ට සිදුකළ අවවාදයක් නිසා මෙලෙස සිය දිවි නසා ගන්නා බව ඇය ලියා තිබූ ලිපියක සටහන් වී තිබුණා. දැරියගේ මරණයෙන් පසු ඇගේ දෙමාපියන් සහ ජෝන් කොතලාවල විද්‍යාලයේ තවත් සිසු දරුවන් දෙදෙනෙකුගේ මව්පියන් කුරුණෑගල මාළිගාපිටිය ඉදිරිපිට උපවාසයක ද නිරත වුණේ විදුහල්පතිවරයාට එරෙහිව නීතිය කි‍්‍රයාත්මක කරන ලෙස ඉල්ලමින්. 

Update : Wednesday, 19 February 2014 - 7:48
-----------------------------------------------
දිවි නසාගත් කුරුණෑගල සිසුවියගේ පාසලේ විදුහල්පති අත්අඩංගුවට.

කුරුණෑගල - සර් ජෝන් කොතලාවල මහා විද්‍යාලයේ විදුහල්පති සමන් ඉන්ද්‍රරත්න ජාතික ළමාරක්ෂක අධිකාරියේ පොලිස් ඒකකය විසින් අද පස්වරුවේ අත්අඩංගුවට ගත්තා. එම අධිකාරියේ සභාපතිනී අනෝමා දිසානායක කියා සිටියේ පසුගියදා ෆේස් බුක් සමාජ වෙබ් අඩවියේ පළවූ ඡුායාරූපයක් සම්බන්ධයෙන් විදුහල්පතිවරයා කළ ප‍්‍රශ්න කිරීමක් හේතුවෙන් සිසුවියක සිය දිවි හානි කර ගත් සිද්ධියට අදාළව ඔහු අත්අඩංගුවට ගත් බවයි. ඒ සඳහා ළමාරක්ෂක අධිකාරියේ විශේෂ පොලිස් කණ්ඩායමක් අද කුරුණෑගලට ගොස් තිබෙනවා.

ෆේස් බුක් නිසා මියගිය සිසුවිය ඉගෙනගත් පාසලේ විදුහල්පතිවරයා අත්අඩංගුවට ගැනීමට යයි

ෆේස් බුක් වෙබ් අඩවියේ පළවී තිබූ ඡායාරූපයක් සම්බන්ධයෙන් බැන වැදීම නිසා සිසුවියක් සිය දිවි නසාගැනීමේ සිද්ධිය සම්බන්ධයෙන් ඇය ඉගෙනුම ලැබූ පාසල වන කුරුණෑගල ජෝන් කොතලාවල විද්‍යාලයේ විදුහල්පතිවරයා අත්අඩංගුවට ගැනීම සදහා ජාතික ළමා රක්ෂණ අධිකාරිය පරීක්ෂණයක් ආරම්භ කර ඇත. 

මෙම විදුහල්පතිවරයා ඉතා පහත් අන්දමින් මෙම සිසුවියට බැණ වැදීම නිසා මෙම සිය දිවි නසාගැනීම සිදුව ඇති බවට මේ වන විට කළ පරීක්ෂණවලින්ද අනාවරණය වී ඇති අතර, ඒ අනුව ජාතික ළමාරක්ෂණ අධිකාරිය මෙම පරීක්ෂණය ආරම්භ  කර තිබෙනවා. 

ළමුන් කෲරත්වයට පත් කිරීම දණ්ඩනීති සංග‍්‍රහය අනුව වරදකි. 2006 වසරේ සංශෝධිත දණ්ඩනීති සංග‍්‍රය අනුවද මානසික හානි අපරාධ වරදකි. විදුහල්පතිවරයා පහත් වචනවලින් කතා කිරීම නිසා එම ළමයා කෲරත්වයට පත්ව ඇතැයිද සැලකේ. එම සිසුවිය ලියා තැබූ ලිපිය මරණාසන්න ප‍්‍රකාශයක් සේ සැලකිය හැකි බවත් ඒ අනුව පරීක්ෂණ පවත්වන බවත් ජාතික ළමාරක්ෂණ අධිකාරිය පවසනවා. මේ අනුව චෝදනා ඔප්පුවුවහොත් අදාල විදුහල්පතිවරයාට වසර දහයක සිර දඩුවම් නියමවීමේ හැකියාවක් පවතින බවද ජාතික ළමාරක්ෂණ අධිකාරිය පෙන්වාදෙනවා. 

මෙම විදුහල්පතිවරයාට විරුද්ධව මීට පෙරත් පැමිණිලි ලැබී ඇතැයි ජාතික ළමාරක්ෂණ අධිකාරියේ සභාපතිනිය සදහන් කළාය. 

‘‘විදුහල්පති සම්බන්ධයෙන් මීට පෙරත් පැමිණිලි ලැබී තිබෙනවා. ඒත් එක්වර ඇගිලි ගැසීම හොද නැති නිසා ඒ සම්බන්ධයෙන් කටයුතු කිරීමට වයඹ පළාත් අධ්‍යාපන අධ්‍යක්ෂවරයා වෙත පවරා තිබණා. ඒත් ඔහු ඒ සම්බන්ධයෙන් කිසිවක් කර නැහැ. දැන් ළමයෙක් මිය ගොස් තිබෙනවා. අපි තවත් බලා සිටියොත් මොනවායින් මොනවා වෙයිද දන්නෙ නැහැ’’ විදුහල්පතිවරයාට විරුද්ධව කටයුතු කිරීම සම්බන්ධයෙන් අදහස් දක්වමින් ජාතික ළමාරක්ෂණ අධිකාරියේ සභාපතිනි අනෝමා දිසානායක මහත්මිය සදහන් කලාය.


பேஸ்புக் சம்பவம் - பாடசாலை அதிபர் கைது 
பேஸ்புக் சம்பவம் தொடர்பில் குருணாகல் பாடசாலை ஒன்றின் மாணவி தற்கொலை செய்து கொண்ட விடயம் தொடர்பில் அந்த பாடசாலை அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குருணாகல் சேர் ஜோன் கொத்தலாவல பாடசாலையின் அதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள் காவல்துறையினருடன் இணைந்து நேற்று அந்த பாடசாலையின் அதிபரை கைது செய்தனர்

சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

http://www.hirunews.lk/sinhala/77640

வெற்றிக்குப் பத்து வழிகள்!

நீங்கள் எப்போது மரணிப்பீர்கள் என்று உங்களால் கூற முடியுமா? நிச்சயமாக உங்களால் முடியாது! அடுத்த ஆண்டு மரணிக்கலாம்; அடுத்த மாதம் அல்லது அடுத்த வாரம் அல்லது அடுத்த நிமிடம்கூட நீங்கள் மரணிக்கலாம். ஆகவே அதற்குமுன்
உங்கள் வாழ்வில் நீங்கள் என்ன அடைந்தீர்கள்?
உங்களின் கனவு மற்றும் இலட்சியம் என்ன?
உங்கள் வாழ்க்கைக்காக நீங்கள் போட்டுள்ள பெரிய திட்டம் என்ன?
உங்கள் மரணத்துக்குப் பின் நீங்கள் எப்படி நினைவுகொள்ளப் படுவீர்கள்?
ஒரு முஸ்லிமைப் பொருத்தவரை பிறந்தோம்; வாழ்ந்தோம்; மரணித்தோம் என்ற வகையில் இவ்வுலகில் வாழ முடியாது! அவ்வாறு எவ்வித இலட்சியமோ அதை அடைய முயற்சியோ இல்லாத வாழ்க்கை என்பது வீணானதுதான்!
மரணத்துக்குப் பின் என்ன? என்பதைக் குறித்துத் திட்டமிட்ட வாழ்வை எதிர்நோக்குவோர் மட்டுமே இவ்வுலகத்தின் முக்கியத்துவத்தை உணர முடியும். அவ்வாறான ஒரு திட்டமிடலோடு வாழ்பவர்களால் மட்டுமே இலட்சியத்தை அடைய முடியும்.
இவ்வுலகில் முஸ்லிம்களாக வாழ்பவர்கள், அவர்களின் இலட்சியமான சுவர்க்கத்தை அடையவும் மரணத்திற்குப்பின் ஈருலகிலும் நினைவுகூரப்படவும் எளிதான வழி உள்ளது. அதற்கு ஒவ்வொருவரும் தம் மரணத்திற்குமுன் கீழ்க்காணும் 10 விஷயங்களைச் செய்து முடித்து விட்டால் போதும்.

தயாரா நீங்கள்?

1. உங்கள் கடமைகளை நிறைவேற்றுங்கள்:-
முஸ்லிம்களாகிய நமக்குப் பல கட்டாயக் கடமைகள் உண்டு. உதாரணமாக, ஐவேளைத் தொழுகைகளை முறையாக நிறைவேற்றுதல், வாழ்வில் ஒருமுறையேனும் ஹஜ் நிறைவேற்றுதல், ரமலானில் ஒரு மாதகாலம் நோன்பு நோற்றல், ஜக்காத் கொடுத்தல், ஜமாஅத்தாக இருத்தல், தலைமைக்குக் கட்டுப்படல், அநீதியை எதிர்த்துப் போராடுதல் ஆகியன. ஹஜ்ஜைப் பொருத்தவரை பெரும்பாலான வசதியுள்ளவர்கள் நினைப்பதுபோல், “வயதான பின்னர் செய்வேன்” என்று தள்ளிப் போடாமல் ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கு விரைவான முக்கியத்துவம் கொடுங்கள். விட்டுப்போன தொழுகைகளுக்காகக் குற்றம் பிடிக்கப்படாமல் இருக்க, இயன்றவரை சுன்னத்-நஃபில் தொழுகைகளை அதிகப்படுத்துங்கள். அத்தோடு, “இனிமேல் எந்த ஒரு கடமையான தொழுகையையும் விட்டு விடமாட்டேன்” என்று இப்பொழுதே உறுதி மொழி எடுப்பதோடு, அதனை இந்நிமிடத்திலிருந்தே செயல்படுத்த ஆரம்பியுங்கள். “தொழாதவன் என்னைச் சார்ந்தவனல்லன்” என்பதும் “தொழாதவன் காஃபிராகி விட்டான்” என்பதும் “முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதவர்களுக்குமிடையிலான வித்தியாசம் தொழுகை” என்பதும் எம்பெருமானாரின் அமுதவாக்கு என்பதை எப்போதும் நினைவில் நிறுத்துங்கள்.

2. கனவை நனவாக்குங்கள்:-
நல்லவற்றுள் எதையாவது நீங்கள் செய்ய விரும்புகின்றீர்கள் எனில், அதனைப் பின்னர் என்று தள்ளிப்போடாமல் உடனே செய்ய துவங்குங்கள். சீனப்பெருஞ்சுவரை நடந்து கடக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?, பட்டதாரி ஆக வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?, டாக்டரேட் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? வழக்கறிஞராக வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? கலெக்டராக வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? புத்தகம் ஒன்று எழுத வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? சீன, ஜப்பானிய, அரபி மொழிகளைக் கற்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? எதுவாக இருந்தாலும் உடன் செயல்பாட்டில் இறங்குங்கள். ஒருபோதும் வாழ்வில் செய்யத் துடிக்கும் நல்ல விஷயங்களைத் தள்ளிப்போடாதீர்கள். கனவை நனவாக்குங்கள்!

3. பெற்றோர்களை மகிழ்வியுங்கள்:-
நம் பெற்றோர்களே நமக்கு எல்லாம்! நமது மரியாதைக்கும் அன்புக்கும் கீழ்படிதலுக்கும் அவர்கள் உரித்தானவர்கள். அவர்களுடன் தினசரி குறிப்பிட்ட நேரத்தைச் செலவழிக்க முயலுங்கள். அவர்களுக்குப் பெருமை சேர்க்க முயலுங்கள்; ஒருபோதும் அவர்களின் மனதை வேதனைப்படுத்தி விடாதீர்கள். ஒன்றை எப்போதும் நினைவில் வையுங்கள்: “பெற்றோர்களை நாம் மகிழ்ச்சியாக வைத்திருந்தால், அல்லாஹ்வும் நம்மை மகிழ்ச்சியாக வைத்திருப்பான். பெற்றோர்கள் நம் மீது கோபமாக இருந்தால், அல்லாஹ்வும் நம் மீது கோபமாகவே இருப்பான்” என்று இஸ்லாம் கற்பிக்கிறது. ஆகவே, அவர்கள் மரணிக்கும்முன், அவர்களுக்குப் பெருமை சேர்ப்பதோடு அவர்களை மகிழ்வாகவும் வைத்திருங்கள். அவர்களின் மரணத்திற்குப்பின் அவர்களை நினைவுகூருங்கள்; அவர்களுக்காகப் பிரார்த்தியுங்கள்; அவர்களின் இலட்சியம் அல்லது நிறைவேற்ற நினைத்து முடியாலாகி விட்ட கடமைகள் ஏதாவது இருப்பின் அதனை நிறைவேற்றுங்கள்.

4. உலகைப் பாருங்கள்:-
நீங்கள் இருக்கும் இருப்பிடத்தில் மட்டுமே உலகைக் காண்பதாக இதற்கு அர்த்தம் கொடுக்காதீர்கள். அல்லாஹ்வின் அற்புதமான படைப்புகளைக் கூர்ந்து கவனியுங்கள். இயன்றால் ஃபாலஸ்தீனத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா, எகிப்து, மக்கா போன்ற இஸ்லாமிய வரலாற்றை எடுத்தியம்பும் நாடுகளை வலம் வாருங்கள். குறைந்தபட்சம் உங்களைச் சுற்றியுள்ள கிராம, நகரங்களையாவது வலம் வாருங்கள். நிச்சயமாக, அது உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக இருப்பதோடு, அல்லாஹ்வின் படைப்புகளையும் அதில் உங்களின் பங்கையும் குறித்து உங்களுக்கு விளக்கித் தரும்.

5. இஸ்லாத்தைப் படியுங்கள்:-
அதற்கு உயிர் கொடுங்கள்! இந்த உலகில் நீங்கள் பிறந்ததற்கான காரணத்தையும் பிறப்பின் பயனை அடைவதற்கான வழிகளையும் அறிந்து கொள்ளாமல் நீங்கள் இந்த உலகத்தை விட்டுப் போய்விடக் கூடாது. அது பின்னர் உங்களுக்கே பேரழப்பாக முடியும். ஆகவே இஸ்லாத்தைப் படியுங்கள். இறைமறையைத் திறந்து அதனை அர்த்தத்துடன் படியுங்கள். எம்பெருமானாரின் வாழ்வைப் படியுங்கள். இஸ்லாம் என்றால் என்ன என்பதை நீங்கள் அறிந்து கொண்டீர்களா? என்பதை உறுதிபடுத்துங்கள். அதனை உங்கள் தினசரி வாழ்வில் நடைமுறைப் படுத்துங்கள். இது ஒன்று மட்டுமே உங்களுக்கு இவ்வுலகிலும் மறு உலகிலும் பாதுகாப்பாக இருக்கும்.

6. திருப்பிக் கொடுங்கள் :-
ஏதாவது வித்தியாசமானதாகவும் அற்புதமானதாகவும் செய்ய முயற்சி செய்யுங்கள். ஒரு அனாதையின் வாழ்வாதாரத்துக்கு உதவுதல், ஒரு மரத்தை நட்டு வளர்த்தல், ஏழைகளுக்கு உதவி செய்ய ஃபண்ட் ஒன்று துவங்குதல், ஏழைகளுக்கு உணவளித்தல், தேவையில் இருப்போருக்கு இரத்தம் வழங்குதல், குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் கற்றுக் கொடுத்தல், யாருடைய பிரச்சனைகளையாவது தீர்த்து வைத்தல், லைப்ரரி ஒன்று உருவாக்குதல், வசதியற்ற மாணாக்கருக்குக் கல்வி கற்க ஏற்பாடு செய்தல், வட்டியின்றித் தேவையுடையோருக்குக் கடனுதவி செய்யக் குழு ஏற்படுத்துதல், சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைக்கப் பயிற்சியளித்தல், குடிநீர் இல்லாத வீடுகளுக்குக் குடிநீர் கிடைக்க வசதி ஏற்படுத்துதல்….. இப்படி எதையாவது நீங்கள் மரணிக்கும் முன்னர் இவ்வுலகுக்குத் திருப்பிக் கொடுத்து விட்டுச் செல்லுங்கள். உங்களின் மரணத்துக்குப் பின்னர் நீங்கள் இவ்வுலகில் நேர்மறையாக நினைவுகூரப்படுவதற்கு இது உதவும். உங்களின் நற்செயல்கள் இவ்வுலகில் எத்தனை காலத்திற்கு நிலைநிற்கின்றதோ அத்தனை காலம்வரை உங்களுக்கான நன்மைகள் உங்கள் ஏட்டில் பதியப்பட்டுக் கொண்டே இருக்கும். உங்களின் சுயநலமற்ற செயல்பாடுகள் நாளை மறுமைநாள்வரை உங்களுக்குப் பயனுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுக் கொண்டே இருக்கும்.

7. திருமணம்:-
இது நபிவழியாகும். எனவே திருமணம் செய்வதன் மூலம் ஒரு நபிவழிக்கு உங்கள் மூலமாக உயிர் கொடுங்கள். உங்களின் கனவுகளையும் இலட்சியங்களையும் உயிர்கொடுக்க தோள்கொடுக்கத் தயாராகுபவரோடு அவற்றைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அவரைத் திருமணம் புரிந்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். அது உங்களுக்குப் பெருமை சேர்ப்பதோடு, நல்ல குழந்தைகளாக வளர்த்தால் அதற்காகவும் நீங்கள் நன்மை வழங்கப் படுவீர்கள். உங்களின் மரபுவழி நன்மைகளை வாழ வைப்பவர்களாகவும் தங்கள் நம்பிக்கையைச் செயல்படுத்துபவர்களாகவும் மனிதாபிமானத்தோடு இறைவனின் படைப்புகளைக் காணும் நல்ல மக்களாகவும் அவர்களை வளர்த்தெடுப்பது உங்களின் இலட்சியமாக இருக்கட்டும்.

8. மன்னிப்பு கேளுங்கள்:-
உங்கள் வாழ்வில் நீங்கள் செய்த தவறுகளை நினைவு கூர்ந்து, உங்களைப் படைத்தவன் முன்னிலையில் சிரம்பணியுங்கள். ஒவ்வொரு இரவிலும் படுக்கைக்குச் செல்லும் முன், உங்கள் தவறுகளை நினைத்து மனம் வருந்தி மன்னிப்புக் கேளுங்கள். நீங்கள் யாருடைய மனதையாவது வேதனைப்படுத்தியுள்ளீர்களா? மக்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட நீங்கள் காரணமாக இருந்துள்ளீர்களா? யாருக்காவது தவறு இழைத்துள்ளீர்களா? இன்றே அதற்காக அவர்களிடம் மன்னிப்புக் கேளுங்கள். நினைவில் வையுங்கள்: நீங்கள் தவறிழைத்தவர்கள் உங்களை மன்னிக்கும்வரை, அல்லாஹ் உங்களை மன்னிப்பதில்லை! வருத்தங்களைப் பொறுத்துக் கொள்ளப் பழகுங்கள். முன்னர் உங்கள் வாழ்வில் மற்றவர்களால் உங்களுக்கு நடந்த தவறுகளையும் மீட்டிப் பார்த்து அவற்றைப் பொறுத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களின் பாவங்களை மன்னிக்க வேண்டுமெனில், நீங்கள் மற்றவர்களின் தவறுகளையும் மன்னிக்க வேண்டும் என்பதை நினைவில் நிறுத்துங்கள்.

9. கடன்களை அடையுங்கள்:-
நீங்கள் கடனாளி எனில், அது எத்துணைப் பெரிதாக இருந்தாலும் சிறிதாக இருந்தாலும் அவற்றைத் திருப்பிக் கொடுக்க இப்போதே திட்டமிடுங்கள். ஒரு நிமிடமும் இதற்காகத் தாமதிக்க வேண்டாம்! கடன் என்பது ஒரு வலி; அது ஒரு சுமையும் கூட! அதனை நிறைவேற்றவில்லையேல் அதற்காக மிகப்பெரிய பலனைத் திருப்பிக் கொடுக்க வேண்டியிருக்கும். நினைவில் வையுங்கள்: நீங்கள் ஹஜ் செய்திருந்தால்கூட, நீங்கள் யாருக்காவது கடனாளியாக இருந்தால் உங்கள் ஹஜ் ஏற்றுக் கொள்ளப் படாமல் போகலாம். எம்பெருமானார், கடனாளியின் ஜனாஸாவுக்குத் தொழ வைக்க முன்வராததை எப்போதும் நினைவில் வையுங்கள்.

10. முன்னுதாரண மனிதராகுங்கள்:-
ஆமாம்! உங்கள் குடும்பத்தினருக்கு, நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு, முஸ்லிம்களுக்கு, முஸ்லிமல்லாதோருக்கு என அனைவருக்குமாக நீங்கள் நல்ல குணங்களுக்குச் சொந்தகாரரான ஒரு முன்னுதாரண மனிதராகுங்கள். அனைவரும் மரியாதையுடன் பார்க்கும் படியான மனிதராகுங்கள். மனிதர்கள் தங்களின் தேவைகளுக்காக உங்கள் பக்கம் திரும்ப வைக்கும்படியான நல்ல மனிதராகுங்கள். உங்கள் மரணத்துக்குப் பின்னரும் நல்ல காரணத்திற்காக நீண்ட காலம் மக்கள் நினைவுகூரும்படியான நற்பண்புகளுக்குச் சொந்தக்காரராக மாறுங்கள்.
இந்தப் பத்து விஷயங்களையும் உங்கள் மரணத்துக்கு முன் செயல்படுத்துங்கள். இவ்வுலக வாழ்க்கை என்பது மிகக் குறுகியது; எனவே இவற்றை உடனடியாகச் செயல்படுத்த ஆரம்பியுங்கள். நேரத்தை ஒருபோதும் வீணாக்காதீர்கள். செய்யும் செயலை அர்த்தமுள்ளதாகவும் ஒருபோதும் வருத்தப்படுத்தாததாகவும் செய்யுங்கள். மிக முக்கியமாக, உங்கள் செயல்களை இவ்வுலகிலும் மறு உலகிலும் ஒன்று போல் வெற்றிக்குரியனவாகத் தேர்ந்து செய்யுங்கள்.
எனவே, வெற்றிக்கான இந்தப் படிகளை உங்கள் மரணத்துக்கு முன்னர் செயல்படுத்த இப்போது உங்கள் முறை!. இவற்றை இன்றே, இப்போதே ஆரம்பித்து வெற்றியாளர்களாகத் திகழுங்கள்.(நன்றி: www.therevival.co.uk என்ற ஆங்கிலத் தளத்தில் முஸ்லிம் சகோதரி ஒருவர் எழுதிய “Ten Things To Do Before You Die” என்ற கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டது.)

வட்டி சமுதாயத்தின் சாபக்கேடு! Interest

முன்னுரை:
சமீபத்தில் எத்தனையோ நாடுகள் பொருளாதாரத்தில் மாபெரும் வீழ்ச்சியைக் கண்டன. அவற்றுக்கு மூலகாரணம் வட்டியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கையேயாகும்.உலகின் மிகப்பிரபல்யமான சர்வதேச வர்த்தக நிறுவனங்கள் சின்னஞ்சிறிய அதிர்வுகளைக்கூட தாக்குப்பிடிக்க முடியாமல் முழுவதும் முடங்கிப்போயின, இதற்கு காரணம் வட்டி அடிப்படையிலான வர்த்தகமேயாகும். பல குடும்பங்கள் அழிந்து போனதற்கும் வட்டியே முதற்க் காரணமாகும். இஸ்லாம் வட்டியை முற்றாக தடை செய்கிறது. அவற்றை தெரிந்து கொண்டு நமது வாழ்வில் கடைபிடிப்பது அவசியமாகும்.

1. வட்டி என்றால் என்ன?
அசலுக்கு அதிகமாக வாங்கும் தொகையே வட்டி எனப்படும். இதை கீழ்காணும் குர்ஆன் வசனம் விளக்குகிறது. '...ஆயினும் நீங்கள் (வட்டி வாங்கியதைப் பற்றி) மனம் திருந்தி மீண்டு விட்டால், உங்கள் பொருளின் அசல் தொகை உங்களுக்கு உண்டு...' (அல்குர்ஆன் 2:279) இரட்டித்து அதிகரிப்பது வட்டியின் குணம். இதை அல்லாஹ் தனது திருமறையில் சொல்கிறான். 'ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்...' (அல்குர்ஆன் 3:130)

2. வட்டிக்கும் வியாபாரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு:-
வட்டியும் வியாபாரமும் வேறு வேறு என்பதை திருக்குர்ஆன் ஆணித்தரமாக கூறுகிறது. 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே காரணம்...' (அல்குர்ஆன் 2:275) வட்டிக்கும் வியாபாரத்திற்கும் மிக முக்கியமான வேறுபாடுகள் உள்ளன.
1. வியாபாரத்தில் பொருள்கள் கைமாறும் அதற்குரிய விலையும் கைமாறும். ஆனால் வட்டியில் பொருள்கள் கைமாறாது.
2. வியாபாரத்தில் பொருளும் விலையும் கைமாறியவுடன் அப்போதே அது முடிவுக்கு வந்து விடும். ஆனால் வட்டியில் குறிப்பிட்ட தவணைக்கு பிறகே முடிவுக்கு வரும்.
3. வியாபாரத்தில் பொருளுக்குரிய விலை கைமாறும், கூறுதல் தொகை கொடுக்கப்பட மாட்டாது. ஆனால் வட்டியில் அசலை விட கூடுதல் தொகை கொடுக்கப்படும்.

3. வட்டி ஒரு பெரும் பாவம் :-
'ஏழு பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன போது, 'சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே!' என்று அவர்களது தோழர்கள் கூறினார்கள். அப்போது,
'1.அல்லாஹ்வுக்கு இணை வைப்பது.
2.சூனியம்.
3.கொலை
4.வட்டி உண்பது
5.அனாதைகளின் சொத்தை உண்பது
6.போரில் புறமுதுகு காட்டுவது
7.அபலைப் பெண் மீது அவதூறு சொல்வது'
என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

4. வட்டி ஒரு கொடிய குற்றம் :-
'ஒரு திர்ஹம் வட்டி என்பது அல்லாஹ்விடத்தில் முப்பத்து ஆறு முறை விபச்சாரம் செய்த குற்றத்தை விட கொடியதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி), நூல்: தாரகுத்னீ)
மற்றொரு அறிவிப்பில், 'வட்டிக்கு 99 வாயில்கள் உள்ளன, அதில் மிகவும் தாழ்ந்தது (சிறியது), ஒருவன் தன் தாயோடு (ஜினா செய்ய) போவதைப் போன்றது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஒரு செயல் எந்த அளவுக்கு பாவமானது என்பதை தெரிந்து கொள்ள அதற்கு அளிக்கப்படும் தண்டனையை வைத்தே தெரிந்து கொள்ள முடியும். விபச்சாரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறுகிறது. விபச்சாரம் செய்யும் ஆண்களும் பெண்களும் நரகில் நிர்வாணமாக நெருப்பு மூட்டப்பட்ட, எளிதில் வெளிவர முடியாத அடுப்புக்குள் கிடப்பார்கள். வட்டி வாங்குவது விபச்சாரம் செய்வதை விட கொடியது என்றால் அதற்கான தண்டனை எத்தனை மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
விபச்சாரம் செய்பவனை சமுதாயம் இழிவாக பார்ப்பதைப் போன்று அல்லது அதை விட இழிவாக வட்டி வாங்குபவன் பார்க்கப்பட தகுதியானவன்.

5. அல்லாஹ்வால் சபிக்கப்பட்டவர்கள் :-
'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)

6. வட்டி வாங்கியோருக்கு தண்டனை: -
1. நிரந்தர நரகம்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். ஆற்றின் நடுவில் மற்றொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். ஆற்றில் உள்ளவர் வெளியேற முனையும்பொது அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றுகொண்டிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும்போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார். 'அவர் யார்,' என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) நான் கேட்டேன், அதற்கவர்கள் 'ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்.' எனக் கூறினார்கள். இதை சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 2085)
நிரந்தர நரகத்திற்குச் செல்பவர்கள் பட்டியலில் மூன்று பேர் இடம் பெறுகிறார்கள். 1.கொலையாளி, 2.காபிர்கள் 3.வட்டி உண்பவர்.
ஏனைய பாவங்களை அல்லாஹ் நாடினால் குறிப்பிட்ட காலம் தண்டனைக்குப் பிறகு நரகவாசிகளை மன்னித்து சொர்க்கத்தில் சேர்ப்பான்.

7. போர்ப் பிரகடணம்: -
வட்டி என்பது ஹராம் என்பதை ஒரு இஸ்லாமியன் தெரிந்து கொண்ட பின்பும் வட்டி வாங்குவதை விட வில்லையானால் அல்லாஹ்வும் அவனது தூதரும் அவனுக்கு எதிராக போர் பிரகடணம் செய்கிறார்கள் என்பதை அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்.
'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279)அல்லாஹ்வும் அவனது தூதரும் வட்டி வாங்குவோருக்கு எதிராக போர் செய்கிறார்கள் என்றால் அவனது நிலை இம்மையிலும் மறுமையிலும் மிக மோசமானதாக ஆகி விடும் என்பது பொருள். இன்னும் தெளிவாக சொல்வதானால் இம்மையிலும் மறுமையிலும் அவன் நாசமாகி விடுவான் என்பது பொருள்.

8. வட்டி வாங்குவோரின் அவல நிலை :-
1.மறுமையில் பைத்தியக்காரனாக எழுப்பப்படுவான்: 
'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்...' (அல்குர்ஆன் 2:275)

2. நபி (ஸல்) அவர்களின் சாபம்:
 'மேலும், வட்டி (வாங்கி) உண்பவனையும் வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்' (நூல்: புகாரி 5962)

3. அல்லாஹ்வின் சாபம்:-
'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)

4. போர் பிரகடணம் :-
'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279)

9. அடமானம்:-
அடமானம் இரண்டு வகைப்படும். அதில் ஒன்று, கடன் கொடுப்பவர் பெருமானமுள்ள பொருளை அதற்கு ஈடாக பெற்று கடன் கொடுப்பார். இரண்டாவது, பெருமானமுள்ள பொருளை பெற்றுக் கொண்டு கடன் கொடுப்பவர் வட்டியும் வாங்குவார்.
இரண்டாவது வகைதான் இப்போது நடைமுறையில் இருக்கும் முறையாகும். வங்கிகள், தனியார் நிதிநிறுவனங்கள் இம்முறையைத் தான் பின்பற்றுகின்றன.
முதல் முறை அடமானம் அனுமதிக்கப்பட்ட முறையாகும். இதற்கு கீழ்வரும் குர்ஆன் வசனமும் ஹதீஸும் ஆதாரமாகும்.
நீங்கள் பயணத்திலிருந்து (கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டு) எழுத்தாளனையும் (தோதையும்) பெறாவிட்டால் (கடன் பத்திரத்திற்குப் பதிலாக) நீங்கள் அடமானத்தைக் கைப்பற்றிக் (கொண்டு கடன் கொடுத்துக்) கொள்ளுங்கள்' (அல்குர்ஆன்)
நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு யூதனிடம் தம் உருக்குச் சட்டையை அடமானமாக கொடுத்து உணவுப் பொருட்களைக் கடனாகப் பெற்றார்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
வட்டி பெறப்படும் இரண்டாவது முறையான அடமானம் அனுமதிக்கப்படாத தடுக்கப்பட்ட முறையாகும். அடமானமாக அல்லது ஈடாக பெறப்பட்ட பொருளை உபயோகிப்பது கூட அனுமதிக்கப்பட வில்லை. அதற்கு செலவு செய்வதைப் பொருத்து உபயோகித்துக் கொள்ள சிலவற்றிற்கு அனுமதியுண்டு, என்கிற போது, கொடுத்த கடனுக்கு அடமானப் பொருளையும் அதே கடனுக்கு வட்டியும் வாங்குவது மனிதாபமானமற்ற கொடுஞ் செயலாகும்.
'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

10. ஒத்தி வட்டியா?:-
ஒத்தி என்பது ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்திற்காக வீட்டுச் சொந்தக்காரரிடம் கொடுத்து விட்டு, அவரது வீட்டில் இவர் குடியிருப்பார் அல்லது மற்றவருக்கு வாடகைக்கு விட்டு விடுவார். நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிந்ததும் பணம் திருப்பிச் செலுத்தப்படும், வீடும் வீட்டுச் சொந்தக்காரரிடம் ஒப்படைக்கப்படும்.
ஒத்தியில் ஈடாக கொடுக்கப்படும் வீட்டையோ கடையையோ, ஒத்தி வாங்கியவர் குடியிருக்கவோ வாடகைக்கு விடவோ முடியாது. அவ்வாறு செய்தால் அது வட்டியாகும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது.
'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

11. பேங்க்கில் பணம் போடலாமா?:-
வங்கியில் பணத்தை போட்டு வைப்பதையும் இரண்டு வகையாக பிரித்துக் கொள்ளலாம். முதலாவது, பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வங்கியை நாடுவது. இரண்டாவது, வட்டி மூலம் வருவாய் வருகிறது என்பதற்காக வங்கியில் பணத்தை போட்டு வைப்பது.
இரண்டு வகைகளிலும் வட்டி கொடுக்கப்படுகிறது என்றாலும் அதன் விகிதாச்சாரத்தில் ஏற்றக் தாழ்வுகள் இருக்கின்றன. முதலாவது வகையில் வட்டி விகிதம் குறைவு என்றாலும் பாதுகாப்பு கருதி வங்கிக் கணக்கில் பணத்தை வைக்கலாம். ஆனால் அதனால் கிடைக்கும் கூடுதல் தொகையான வட்டியை எடுக்கக் கூடாது.
இவ்விஷயத்தில் மார்க்க அறிஞர்களிடத்தில் மற்றொரு கருத்து நிலவுகிறது. அதாவது பணத்தை எடுத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் என்பது தான் அந்த கருத்து. ஆனால் வட்டியை வாங்குவோருக்கு கடும் எச்சரிக்கையை அல்லாஹ்வும் தூதரும் விடுத்திருக்கும் போது இந்த பலப்பரீட்சை தேவையற்றது என்பதால் தவிர்ந்து கொள்வது தான் சிறந்தது.
இரண்டாவது வகைக்கும் இது பொருந்தும்.

12. ஏலச்சீட்டு வட்டியாகுமா? -
ஏலச்சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் ஏலம் விடப்படும். அவசர தேவைக்காக பணம் தேவைப்படுபவர்கள், பண நெருக்கடியில் உள்ளவர்கள் ஏலம் எடுப்பார்கள். அதிகமாக குறைத்துக் கொண்டு ஏலம் கேட்பவர்களுக்கே அது கொடுக்கப்படும். எவ்வளவு தொகை குறைக்கப்பட்டதோ அந்த தொகை கழிவு எனப்படும், அது மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும்.
இது ஆதாரம் தேவைப்படாத அளவு முடிவு செய்யப்படத்தக்க விஷயம். சந்தேகமின்றி இது வட்டியே ஆகும்.

13. குலுக்கல் சீட்டு:-
குலுக்கல் சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் எல்லோரது பெயர்களையும் சீட்டில் எழுதி ஒருவரது பெயரை மட்டும் குலுக்கி எடுப்பார்கள். எவரது பெயர் குலுக்கி எடுக்கப்பட்டதோ அவருக்கு அந்த மாதத்திய தொகை வழங்கப்படும். அடுத்த மாத குலுக்கலில் இவரது பெயர் எழுதப்படாது.
அவரவருக்கு கிடைக்கும் தொகை சரிசமமாக கிடைக்கும் என்பதால் இது அனுமதிக்கப்பட்ட ஒன்றே.

14. தவணை முறையில் பொருள் வாங்குவது:-
கூடுதலாக வைத்து அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது தடுக்கப்பட்டது. இந்த முறையிலும் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, ஒரு பொருளுக்குரிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது அனுமதிக்கப்பட்ட ஒன்று.
இரண்டாவது, ஒரு பொருளுக்குறிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த விலையை விட.

15. வங்கியில் வேலை செய்வது :-
'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)

16. பகடி கூடுமா? :-
பகடி என்பது ஒருவருக்குச் சொந்தமான கடையில் மற்றவர் வாடகைக்கு இருப்பார். அந்தக் கடை மற்றவருக்கு தேவைப்படும் போது, வாடகைக்கு இருப்பவர் அவரிடமிருந்து பெரிய தொகையை கேட்டு வாங்கிக் கொள்வார். பகடி கொடுப்பதும் கூடாது, பகடி வாங்குவதும் கூடாது.

முடிவுரை :- பல நாடுகள் உலக வங்கியில் கடன் வாங்கிவிட்டு வட்டியை கட்டுவதற்கே நாட்டின் வருமானம் போதாதிருப்பதும், விலைவாசி ஏற்றத்திற்கும் வட்டியே அடிப்படைக் காரணம் என்பதை மறக்க முடியாது. வட்டியின் வாடை கூட நம்மீது வீசாதபடி நம்மை அல்லாஹ் காப்பாற்றுவானாக!

Popular Posts

FACEBOOK COMMENTS BOX