கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானத்தைப் பற்றி நாளுக்கு நாள் வித்தியாசமான தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் மலேசிய விமானம் இந்தியப் பெருங்கடல் பகுதியில் விழுந்து நொறுங்கியது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இச்செய்தி கிட்டத்தட்ட 239 குடும்பங்களை மட்டும் அல்லாமல் உலக அளவில் அனைத்து நாட்டு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. கடந்த 8 ஆம் தேதி அன்று காணாமல் போன எம்ஹெச்370 பற்றிய தகவல்கள் இன்று வரை பட்டியல் இடப்பட்டுள்ளன.
மார்ச் 8:
12.41 மலேசிய விமானம் 239 பயணிகள் மற்றும் விமான பணியாளர்களுடன் கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு புறப்பட்டது.
1:07 "அக்ரோனிம் அகார்ஸ்" என்ற தகவல் பரிமாற்ற கருவி வழியே போயிங் ரக எம்ஹெச்379 விமானத்தின் கடைசி தகவல் பரிமாற்றம்
1:19 விமானி அறையில் இருந்து கடைசி தகவல் வந்தது "குட் நைட்" என்று. விமானம் மலேசிய வான்பரப்பில் இருந்து விலகி தாய்லாந்து வளைகுடா பகுதிக்கு மேலே வியட்நாம் நோக்கி பயணிக்கிறது.
1:21 ரேடார் தகவல் நிறுத்தப்பட்டுவிட்டது.
1:37 அதன்பின் வரவேண்டிய தகவல் வரவில்லை.
2:15 மலேசிய தீபகற்பத்திற்கு மேற்குப் பகுதியில் விமானம் ஒன்று பறப்பதை மலேசிய ராணுவ ரேடார் கருவி கண்டறிகிறது.
6:30 பீஜிங் நகருக்கு எம்ஹெச்370 விமானம் சென்று சேர்ந்திருக்க வேண்டும்.
7:39 மலேசிய விமானத்திற்கான தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளதாக சீனாவின் சின்குவா செய்தி கழகம் தகவல் வெளியிட்டது. விமானத்தில் முக்கால் வாசிப் பேர் சீன பயணிகள்.
8:11 மணி அளவில் விமானத்தில் இருந்து வந்த கடைசி சிக்னல் கண்டறியப்படுகிறது.
திருட்டு பாஸ்போர்ட்டில் இரு பயணிகள் விமானத்தில் சென்றது கண்டறியப்பட்டதால், தீவிரவாத செயல் நடைபெற்றிருக்க கூடும் என கருதப்பட்டது.
மார்ச் 9: தாய்லாந்தின் வளைகுடா பகுதியில் சில பொருட்கள் கிடப்பதை வியட்நாம் குழுவினர் கண்டுபிடித்தனர். ஆனால், எம்ஹெச்370 உடன் தொடர்பில்லாத பொருட்கள் அவை என தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்க போயிங் ரக விமான பிரதிநிதிகள் மலேசியாவிற்கு உதவிக்கு சென்றனர். விமானம் பாதை மாறி சென்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
மார்ச் 10: தெற்கு சீன கடல் வரை தேடுதல் பணியை மலேசிய அரசு விரிவுபடுத்தியது. ஹாங்காங் அருகே விமானத்தின் சிதைவடைந்த பொருட்கள் இருப்பதாக எழுந்த சந்தேகத்தை அடுத்து கப்பல்களையும் அனுப்பியது.
மார்ச் 11: வியட்நாம் கடற்கரை பகுதியில் விமான சிதைவு பொருட்கள் கிடக்கும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேடுதல் கிழக்கு நோக்கி விரிவுபடுத்தப்பட்டது. திருட்டு பாஸ்போர்ட்டில் பயணித்தவர்களால் தீவிரவாத செயல் நடக்கவில்லை என்று மலேசியா மற்றும் இண்டர்போல் அதிகாரிகள் கூறினர்.
மார்ச் 12: கடத்தல் நடந்திருக்கும் என்பதன் அடிப்படையில் குற்ற விசாரணை நடைபெறுவதாக மலேசியா கூறியது. ஆனால், கடைசி சிக்னலுக்கு அடுத்து விமானம் மேற்கு நோக்கிய திரும்பியது என்றும், மலேசிய அரசு தேடுதல் பணிக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும் வியட்நாம் கூறியது.
மார்ச் 13: ரேடார் கருவி தொடர்பு துண்டிக்கப்பட்டு விமானம் பாதை மாறி சென்றதாக கிடைத்த தகவலை அடுத்து இந்திய பெருங்கடல் பகுதியில் இடிபாடுகள் குறித்து தேடுதல் பணி மாறியது. தென் சீன கடல் மற்றும் தாய்லாந்து வளைகுடா இடையே மிதக்கும் பொருட்கள் இருப்பதாக சீன செயற்கைக்கோள் புகைப்படங்கள் காட்டின. அவை விமான பாகங்கள் இல்லை என்று மலேசிய அரசு தெரிவித்தது.
மார்ச் 14: மலேசிய அரசு விமானிகள் மீது சந்தேக பார்வையை செலுத்தியது. அதேவேளையில், தேடுதல் பணியை பார்வையிடுவதற்காக பிரதமர் நஜீப் ரசாக் தனது கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளுக்கான பயணத்தை தள்ளி போட்டார்.
மார்ச் 15: ஆஸ்திரேலிய பகுதியை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் விமானம் சென்றதாக செயற்கைக்கோள் தகவல் பரிமாற்றங்கள் வழியே கண்டறியப்பட்டது. விமானிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டன. விமானம் உள்நோக்கத்துடன் திசை திருப்பப்பட்டு உள்ளது என்று புதிய தகவல் தெரிவிப்பதாக பிரதமர் நஜீப் தெரிவித்தார்.
மார்ச் 16: விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடனான கடைசி தொடர்பு துண்டிக்கப்பட்ட பின்பும் கிட்டத்தட்ட 7 மணிநேரம் விமானம் இயங்கியுள்ளதாக செயற்கைக்கோள் சிக்னல்கள் தெரிவித்தன.இதனால், தேடுதல் வேட்டை இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு மாற்றப்பட்டது.
மார்ச் 17: ஆஸ்திரேலியா , இந்திய பெருங்கடல் பகுதியில் தேடுதலை நடத்தியது. சட்ட அமலாக்க பிரிவினர் பல்வேறு கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டனர். விமானி தற்கொலை செய்து கொண்டது சாத்தியம் என்று அதிகாரிகள் விவாதித்தனர். விமான பொறியாளர் பயணம் பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மார்ச் 18: வளர்ச்சி அடைந்த விமான போக்குவரத்து வரலாற்றில் நீண்ட நாட்களாக கண்டறியப்பட இயலாத ஒன்றாக மாயமான மலேசிய விமான நிகழ்வு உள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் ஆஸ்திரேலியா உடன் அமெரிக்கா இணைந்து தேட தொடங்கியது.
மார்ச் 19: கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதியில் விமானியின் வீட்டில் இருந்த விமான இயக்கும் கருவியில் தகவல் நீக்கப்பட்டது தொடர்பான விசாரணையில் மலேசியாவுடன் அமெரிக்காவின் எப்.பி.ஐ. இணைந்தது.
மார்ச் 20: ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையில் பொருட்கள் கிடப்பது குறித்த செயற்கைக்கோள் புகைப்படங்களை தொடர்ந்து வான்வழி மற்றும் கடற்பரப்பு வழியேயான தேடுதல் பணி இந்திய பெருங்கடலின் உள்ளடங்கிய பகுதி நோக்கி நீண்டது. புகைப்படங்கள் மார்ச் 16 இல் எடுக்கப்பட்டு இருந்தது. 4 நாட்களை கடந்தும் தேடுதல் பணியினரால் எந்த சிதைவு பொருட்களையும் கண்டறிய முடியவில்லை.
மார்ச் 21: வான்வழியே ஆன அடுத்த நாளின் தேடுதலிலும் ஒன்றும் கிடைக்கவில்லை. ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்ட பின்பு விமானம் நிலையாக மற்றும் சீராக பயணித்துள்ளது என்பதை செயற்கைக்கோளின் இன்மார் சாட் (ஐசாட்) புகைப்பட ஆய்வு தெளிவுபடுத்தியுள்ளது.
மார்ச் 22: மலேசியாவின் போக்குவரத்துத்துறை மந்திரி ஹிசாமுத்தீன் உசைன் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசும்போது, "மிதக்கும் பொருட்கள் குறித்த செயற்கைக்கோள் புகைப்படங்களை சீன தூதர் வைத்திருக்கிறார். அந்த பொருட்கள் தெற்கு பகுதியில் உள்ளன. அது குறித்து ஆய்வு மேற்கொள்ள அவர்கள் கப்பல்களை அனுப்புவார்கள்" என்று கூறினார். அவர், சூறாவளி வரும் வாய்ப்பு உள்ளதால் அந்த பகுதியில் நடைபெறும் தேடுதல் பணி மிக சவாலாக உள்ளது. மிதக்கும் பொருட்கள் கண்டறியப்பட்ட கடற்பகுதியில் கடுமையான நீரோட்டங்கள் உள்ளன. சூறாவளி எச்சரிக்கையும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. கிலியான் என்ற பருவகால சூறாவளி தாக்கும் அபாயம் உள்ளது என்றும் உசைன் தெரிவித்து இருந்தார். ஆஸ்திரேலியாவின் பிரதமர் வாரன் டிரஸ் கூறும்போது, தேடுதல் விமானங்கள் நவீன தொழில் நுட்பத்துடன் உள்ளன. அவற்றின் பணிகள் அனைத்தும் நேரடியாக பார்க்கும் வகையில் இருக்கும் என்றார். செயற்கைக்கோள் படத்தில் காணப்பட்ட பொருட்கள் இந்திய பெருங்கடலின் ஆழத்தில் போய் சேர்ந்திருக்கும் என்றும் அவர் எச்சரிக்கை செய்துள்ளார். இந்திய பெருங்கடல் பகுதியில் மற்றொரு சுற்று தேடுதல் பணியில் விமானங்கள் ஈடுபடு தொடங்கியுள்ளன. இரண்டு வாரங்களாக மாயமான விமானம் குறித்த சர்ச்சைக்கிடையே பணி தொடர்கிறது. இந்த பணிக்காக 6 விமானங்களை ஆஸ்திரேலியா அனுப்பியுள்ளது. அவை 5 மணி நேரத்தில் தேடுதலை நடத்தும் திறன் வாய்ந்த விமானங்கள் ஆகும்.
மார்ச் 23: மாயமான மலேசிய விமானம் குறித்து பிரான்ஸ் புதிய செயற்கைக்கோள் புகைப்படங்களை பெற்றுள்ளது.அந்த புகைப்படங்களில், இந்திய பெருங்கடல் பகுதியில் தேடுதல் பணி நடைபெறும் பகுதியில் மிதக்கும் பொருட்கள் கண்டறியப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. கடலின் தென் பகுதியில் அந்த செயலாற்றும் தன்மை கொண்ட பொருட்கள் கிடப்பதாக தெரிய வந்துள்ளது என்றும், சீன செயற்கைக்கோள் புதிதாக தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் மிக பெரிய பொருள் கிடப்பதாக புகைப்படத்தில் காட்டியது. இதனை தொடர்ந்து தேடுதல் பணியில் அதிகமான விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தேடுதல் நடைபெறும் பகுதி பெர்த்தில் இருந்து தென்மேற்கில் 1,550 மைல்கள் தொலைவில் இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ளது.
மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் இடையூறு ஏற்படும் வகையில் பலத்த காற்று மற்றும் அண்டார்டிகாவை சுற்றிலும் கிழக்கு நோக்கி அலைகள் நிற்காமல் வீசி செல்வதுமாக இருக்கிறது. ஆஸ்திரேலிய விமானங்கள் குறிப்பிட்ட பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது. அது வழக்கமாக பறக்க வேண்டிய ஆயிரம் மீட்டர் உயரத்திற்கு மாறாக மேகம் சூழ்ந்த காரணத்தால் 450 அடி உயரத்திற்கு பறக்கும் சூழல் உண்டாகி உள்ளது. சூரிய வெளிச்சம் குறைவானதால் நீரில் பொருட்கள் ஏதும் இருக்கிறதாக என்பதை காண்பது கடினமான பணியாக உள்ளது. மங்கிய வானம் மற்றும் மங்கிய நீர்பரப்பு ஒன்றுடன் ஒன்று இணைந்து தெளிவற்ற சூழலை தேடுதல் குழுவுக்கு ஏற்படுத்தியுள்ளது.
மார்ச் 24: இன்று காலையில் சீன அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,இந்தியப் பெருங்கடலின் 120 கிலோமீட்டர் மேற்காக ஒரு சிறிய,சதுரமான வெள்ளை நிற பொருளை கண்டறிந்துள்ளதாக கூறியுள்ளது.அங்கு, ஆஸ்திரேலிய தேடுதல் வேட்டை ஏற்கனவே நடந்தது குறிப்பிடத்தக்கது. இதைப்பற்றி, சீனா அரசின் சின்குவா செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ள தகவலில் வெள்ளை நிறத்தில் சதுர வடிவிலான பொருளை சீன விமானம் இல்யூஷின்-76 கண்டுபிடித்து உள்ளது என தகவல் வெளியிட்டு உள்ளது. ஆஸ்திரேலிய விமானப்படை வேண்டுகோளின்படி, ஒரு ஆஸ்திரேலிய விமானி சீனாவின் தேடுதல் வேட்டையில் சேர்த்து கொள்ளப்பட்டு உள்ளார். இந்திய பெருங்கடலில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டவர்கள் வெள்ளை நிறத்தி லான இரண்டு பொருட்களை கண்டு பிடித்து உள்ளதாக அமெரிக்காவின் ஏ.பிசி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டு உள்ளது. இந்த பொருளானது 22.5 மீட்டர்க்கு 13 மீட்டர் என்ற அளவிற்குள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மார்ச் 25: கடந்த 17 நாட்களாக ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த மலேசிய விமான மாயத்தின் நித்திரையை இன்று மலேசிய பிரதமர் நஜீப் அதிகாரபூர்வமாக கலைத்துள்ளார். இந்தியப் பெருங்கடல் பகுதியில் மலேசிய விமானம் எம்ஹெச்370 விழுந்து நொறுங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது.அதில் பயணம் செய்த 5 இந்தியர்கள் உட்பட யாருமே உயிர் பிழைக்கவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும்,இறந்தவர்களின் உறவினர்களுக்கு தகவல் அளிக்கப் பட்டு இன்று அவர்கள் சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
Popular Posts
-
“சுதந்திரமாகப் பிறந்த மனிதன் சுதந்திரமாகவே வாழ வேண்டும்” எனும் கருத்தினை மனித சுதந்திரத்தைப் பற்றிக் கருத்து வெளியிட்ட தத்துவஞானியான ‘ஜீன்...
-
தொழுகையின் ஷர்த்துக்கள் என்ன? தொழுகையின் நிபந்தனைகள் 10 அவையாவன: 1. முஸ்லிமாக இருத்தல். 2. தம்யீஸ் எனப்படும் அறிவைப் பெறுதல். 3. ஜனாபத் ...
-
நாளைய தலைவர் நீங்கள் சிறந்த தலைவரின் செயற்பாடு... ஒரு குழுவின் தலைவர் அர்ப்பணிப்பு, முன்மாதிரிகை, விசுவாசம், நேர்மை, மனிதத்துவம...
-
பாங்கு (அதான்) என்றால் என்ன? தொழுகை நேரங்கள் வந்ததும் மக்களை தொழுகைக்காக அழைக்கும் அழைப்பை, அரபு மொழியில் ‘அதான்’ என்றும் பாரசீக மொழிய...
-
அகிலங்களைப்படைத்து வளர்த்து இரட்சிக்கின்ற அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்! அவன்தான் ஒவ்வொன்றுக்கும் ஒரு நிர்ணயத்தை ஏற்படுத்தி அதற்கு வழிகாட்டினா...
-
LED බල්බ නිෂ්පාදන පාඩම් මාලාව 1 මාසිකව අසීමිතව උපයන්න..අලුත් මගක්.. led bulbs sri lanka අන්තර්ජාලය තුලින් මාසිකව අසීමිතව උ...
-
மனிதன் உலகில் பிறந்தவுடன் அவனுக்கு மரணம் நிச்சயம் என்பது இறைவனால் வகுக்கப்பட்ட நியதி. ஜனாஸா என்றவுடனேயே நம் அனைவருக்கும் மனசுக்குள் ஒரு பதட்...
-
மஸ்ஜித்கள் பூமியில் அமைந்துள்ள அல்லாஹ்வின் இல்லங்களாகும் . அவனது அருளும் அமைதியும் இறங்கும் இடங்கள் அவை . மலக்குகள் தரிசனம் கொடு...
-
இவ்வுலகில் வாழக்கூடிய அனைத்து மனிதர்களும் பாகுபாடின்றி மரணத்தை சுவைத்தே தீர வேண்டும். ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரவேணடும். (3...
-
பிறப்பு முதல் நபித்துவம் வரை நபி முஹம்மத் (ஸல்) அவர்கள், நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் பரம்பரையில் பிறந்தவர்களாவர். இது பற்றி நபியவர்களே...