Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

04 March 2014

கிரான்ட்பாஸ் மஸ்ஜித் தாக்குதல்: பொலிசார் மீது விசாரணை இடம் பெறுகிறதா ?

Photoகிரான்ட்பாஸ் மஸ்ஜித் தாக்குதல்: பொலிசார் மீது விசாரணை இடம் பெறுகிறதா ?

grandpass-mosque முஜாஹித்: கிரான்ட்பாஸ் மஸ்ஜித் தாக்குதல் சம்பவத்தின் போது மஸ்ஜித் தாக்கப் படுவதை தவிர்பதற்கு நடவடிக்கை எடுக்க தவறிய 12 பொலிஸ் அதிகாரிகள் தற்காலிக பதவி நீக்கப் பட்டு அவர்கள் மீது ஒழுக்காற்று விசாரணைகள் மேற்கொள்ளப் படுவதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுரா சேனா நாயக்க தெரிவித்துள்ளாராம்

தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டபட்டுள்ளதாக தெரிவிக்கப் படுபவர்களில் ஒரு சப் இன்ஸ்பெக்டர் , ஒரு சார்ஜன்ட் உட்பட 10 கான்ஸ்டபிள்கள் உள்ளனராம் .

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத் தரணியுமான எம் .எம் . சுஹைர் கிரான்பாஸ் மஸ்ஜித் தாக்குதல் சம்பவம் தொடர்பாக எடுக்கப் பட்டுள்ள நடவடிக்கை பற்றி சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுரா சேனாநாயக்காவிடம் வினவியபோதே இதனை அவர் தெரிவித்துள்ளார் என்று தெரிவிக்கப் படுகிறது

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொழும்பு கிராண்ட்பாஸ் புதிய மஸ்ஜித் பெளத்த தீவிரவாதிகளினால் தாக்கப்பட்டது என்பது நினைவிருக்கும்

இது பற்றி அன்று அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் , இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை கிரான்ட்பாஸ் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவும் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் எனவும் அதன் மூலம் வழிபாட்டுத் தலங்கள் மீது நடாத்தப்படும் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும்வலியுறுத்தியிருந்தது

அதேவேளை அமைச்சர் ரிஷாத் கிரான்ட்பாஸ் சம்பவத்தில் கடமையை செய்யத் தவறிய பொலிஸார் மீது உடன் விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும்ன். அத்துடன் தாக்குதல் நடாத்தியவர்களை இனங்கண்டு தண்டிக்க வேண்டும் எனவும் பொலிசாரை அவர் கோரி யிருந்தார்.

தாக்குதல் சம்பவம் இடம்பெற்று ஆறு மாதங்களாகியுள்ள நிலையில் மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கான தேர்தல் பிரசாரங்கள் தீவிரப் பட்டுள்ள நிலையில் மேற்படி தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேவேளை இந்த சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க தவறிய பொலிசாரி தற்காலிக மாக பணி நீக்கப் பட்டு விசாரிக்கப் படுவதாக போலிசார் உத்திகபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

Popular Posts

FACEBOOK COMMENTS BOX